அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ. கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு … மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கதை
மட்டக் குதிரை…!
வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது. “சனியன்…” மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து … மட்டக் குதிரை…!-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொன்னர் சங்கர் யாருக்காக?
அண்ணன்மார் கதை; சின்னண்ணன், பெரியண்னன் கதை என்றெல்லாம் அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை ஈரோடு நாமக்கல் கரூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஆகிய பகுதிகளில் குறிப்பாக வெள்ளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகளில் நாட்டார் கதையாகவும், நோம்பி காலங்களில் கிராமங்களில் போடும் தெருக்கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் இருக்கிறது. இப்படி ஒரு வரலாற்று பாரம்பரியமான அண்ணன்மார் கதை பொன்னர் சங்கர் கதையாக கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கருணாநிதியின் அண்ணன்மார் கதையை தியாகராஜன் இயக்கி பிரசாந்த் … பொன்னர் சங்கர் யாருக்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.