தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!

  மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது? நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது. இந்திய அரசு அவமதித்திருக்கிறது. குமுறிக் கொந்தளிக்கும் வண்ணம் தமிழகம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கலில் ஒருமுறை இருமுறையல்ல, நூறுமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதித் தீர்ப்பு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வஞ்சகத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கிறது மோடி அரசு. கர்நாடகத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் இதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் சில … தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்

காவிரி மீண்டும் சுற்றுக்கு வந்திருக்கிறது. எதை எப்போது கிளப்பிவிட்டு திசை திருப்பி தம்மை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் வியாதிகளுக்கும் முனைவர் பட்டம் தந்துவிடலாம். கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு குருதி அழுத்தத்தை எகிரவைத்த கணக்குகள் பேரங்கள் முடிந்து ஒரு ஓய்வு தேவைப்பட்டது. தமிழகத்தில் வரிசையாக கட்சிமாறிக்கொண்டிருந்த பலவீனத்திலிருந்து மீண்டு அதிமுக கூட்டங்களின் மூலம் பலம் காட்டிக்கொண்டிருந்ததை மறைத்து போக்குக்காட்ட கருணாநிதிக்கு மக்களை பேசவைக்க ஒரு பிரச்சனை தேவைப்பட்டது. அவ்வள‌வு தான் இவர் வழக்கம்போல் கடிதம் … காவிரிச் சிக்கலும், கருணா ஜெயாவின் விக்கலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.