ஒரு தோழரின் கரு மாற்றம்

கடந்த இரண்டு நாட்களாக என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் அவதூறாகவும் இழிவாகவும் செ.கார்கி எனும் முனைவர் செ கார்த்திகேயன் என்பவர் எழுதி வருகிறார். மட்டுமல்லாமல் தோழர் தமிழச்சி குறித்தும், சாரதா அவர்கள் குறித்தும் கூட கீழ்த்தரமாக பதிவிட்டு வருகிறார். செ.கார்கி என்பவர் முகநூலிலும், கீற்று தளத்திலும் தொடர்ச்சியாக எழுதி வருபவர்.  மார்க்சிய பார்வையில் நிகழ்வுகளை எழுதுபவர் எனும் அடிப்படையில் அவர் கட்டுரைகளை படித்திருக்கிறேன். முகநூல் பதிவுகளில் தொடர்ந்திருக்கிறேன். வெகு சில பதிவுகளில் பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். இவை தவிர … ஒரு தோழரின் கரு மாற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் நான்

தோழர்களுக்கு, நண்பர்களுக்கு வணக்கம். கடந்த 20 நாட்களாக பதிவு எதையும் நான் வெளியிடவில்லை. ஏன் என்று சிலர் செல்லிடப்பேசியிலும், பகிரியிலும் (வாட்ஸாப்) கேட்டிருந்தனர். நான் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணி பழுதாகி விட்டது. நான் தொடக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணியை ஸ்டெர்லைட் போராட்ட வழக்கின் போது காவல்துறையினர் எடுத்துச் சென்று வழக்கில் சேர்த்து விட்டனர். இன்றுவரை அது கையில் கிடைக்கவில்லை. அதன் பிறகு அரசு தந்த மடிக்கணிணியைத் தான் பயன்படுத்தி வந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அந்த மடிக்கணிணி … மீண்டும் நான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு

முன்னுரை பழைய பொய்களை மீண்டும் மீண்டும் உலவ விட்டால் நடப்பு உண்மைகளை மறைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு புதுமொழிக்கு உள்ளகம் வேண்டுமென்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” எனும் நூலை எடுப்பாய் காட்டலாம். தலைப்பே கதை சொல்கிறது. ஹிட்லர் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரையிலும், இன்னும் எத்தனை பேர் வர இருக்கிறார்களோ அவர்கள் வரையிலும் கம்யூனிசத்தை அவதூறு செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு பஞ்சம் படுகொலை போன்ற சொற்களைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. அவ்வளவு … சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!

வால்கா புதிய மனித சமுதாயத்தின் முகத்தில் தன்னை கழுவிக் கொண்டது.   பூமிப்பந்து முதன் முதலாய் மனிதப் பண்பின் உச்சத்தில் தன்னை தழுவிக் கொண்டது. அன்றலர்ந்த மலர்களுக்கு தன்னிலும் மென்மையான இதயங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பரந்து விரிந்த வானம் சோசலிசத்தின் உள்ளடக்கத்தில் தன்னை உணர்ந்து கொண்டது. அலைஓயா கடல்கள் கம்யூனிச பொதுஉழைப்பின் மனதாழம் பார்த்து வியந்தது! சுரண்டலின் நகங்களால் அவமானக் கீறலோடு அலைந்த காற்றுக்கு வரலாற்றில் முதலாய் மனித சுவாசத்தின் மதிப்பு கிடைத்தது! இயற்கையின் மகிழ்ச்சியாய் … மனித குலத்தின் ஆகப் பெருங்கனவை நனவாக்கிய நாள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்

நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட … முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தலை புறக்கணிப்போம், புரட்சி செய்வோம்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

உங்களுக்கெல்லாம் எண்ணெய்த்தோலரைத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத்தெரியாது ஆனால் அவரைப்பற்றி பேசாமலோ, அவரைப்பார்க்காமலோ யாரும் இருக்க முடியாது, ஏன் அவர் வரலைன்னா அன்னைக்கு குழம்பு ஆகாதுன்னா பார்த்துக்குங்களேன் இந்தக்கிராமத்தில். அது என்ன எண்ணைத்தோலர்ன்னு கேக்குறீங்களா? நீங்களெல்லாம்  எண்ணை எங்க போய் வாங்குவீங்க? கடையிலதானே, அங்க போய் கோல்டு வின்னர், உஷா சன் பிளவர்ன்னு கேட்டு வாங்குவீங்க, ஆனா 100 மி.லி கேட்டா கிடைக்குமா? ஆனா எங்க எண்ணெய்த் தோலர்  எங்க வீட்டுக்கே வந்து எண்ணெய் கொடுப்பார். 100 … தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் முகவுரை

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி ௨ முகவுரை சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் உன்னதத் தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கிய தலைவரான மாவோ அவர்களின் நூறாவது ஜனன தினமாகிய 1993 டிசம்பர் 26ம் தேதியை நினைவு கூறுமுகமாக மாவோவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் உங்களுக்குத்தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். மாவோவை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய வெளியீடுகள் பெருமளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள போதிலும் தமிழில் அவ்வாறான வெளியீடுகள் வந்தனவா என்பது கேள்விக்குறியே. தேசியப்பத்திரிக்கைகள் என்று கூறிக்கொள்ளும் … ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் முகவுரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்

கம்யூனிசம் என்றாலே ஏகாதிபத்திய எடுபிடிகளுக்கும், மதவாதிகளுக்கும்  வேப்பங்காயாய் கசக்கிறது. ரஷ்யாவிலும் சீனாவிலும் புரட்சியை சாதிப்பதற்கும் சமத்துவத்தை கொண்டுவருவதற்கும் கண்ட இழப்புகளும் அதைக்கண்டு கலங்காத லட்சிய வேகமும் சாதாரணமானவையல்ல. அவர்கள் மீது தூற்றப்படும் அவதூறுகளும் கட்டப்படும் கட்டுக்கதைகளும் கொஞ்சமல்ல. அன்றிலிருந்து இன்றுவரை இது தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவை அத்தனையும் மீறித்தான் மக்கள் மத்தியில் கம்யூனிசம் வேர்விட்டுக்கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய சுரண்டலின் வேகமும் தீவிரமும் மக்களை கம்யூனிசத்தை நோக்கி திருப்பியுள்ள‌து. முதலாளியம் வீழ்ந்தே தீரும், கம்யூனிசம் நிச்சயம் வெல்லும். இது வெற்று முழக்கமல்ல … ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.