தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 பரப்புரைகள் முடிந்து விட்டன. நாளை வாக்குப் பதிவு. இந்த பரப்புரையில் சங்கிகளை ஒத்த அதிமுகவினரிடம் இருந்து எதிர்கொண்ட முதன்மையான ஒரு கேள்வி, “எங்களால் கருணாநிதியை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியும், உங்களால் எம்ஜிஆரை எதிர்த்துப் பேசி வாக்கு சேகரிக்க முடியுமா?” என்பது. உண்மை தான். நடைமுறையில் அப்படி ஒரு தடை இருக்கத்தான் செய்கிறது. எளிய மக்கள் மத்தியில் எம்ஜியாருக்கு இருக்கும் செல்வாக்கு அப்படி. கலைஞர் ஆட்சியையும் எம்ஜிஆர் ஆட்சியையும், நிர்வாக … நாறும் எம்.ஜி.ஆர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கருணாநிதி
சுடாத நெருப்பு இருக்க முடியுமா?
வணக்ககம் தோழர் முதலாளித்துவத்தை தான் எதிர்க்கிறோம் முதலாளிகளை அல்ல அதுபோல ஆளும் வர்க்கத்தை தான் எதிர்க்கிறோம் ஜெயலலிதாவையோ கலைஞரையோ அல்ல என்று நண்பர் ஒருவர் மார்க்சிய பாடம் எடுத்தார்.இந்த உதாரணம் என்னுடைய கேள்வியை சரியாக விளக்கத்தான். உண்மையில் முதலாளி வேறு ? முதலாளித்துவம் வேறுதானா ? ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து. வணக்கம் ராஜ்ரம்யா, முதலாளியும் முதலாளித்துவமும் வேறு வேறா? அப்படி இருக்க முடியாது. முதலாளித்துவம் என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது முதலாளியின் … சுடாத நெருப்பு இருக்க முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்
2011 தேர்தலின் போது எழுதப்பட்ட பதிவு இது. காலம் கடந்திருக்கிறது. ஆனால், நிலமை இன்னும் அது தானே. எனவே, மீள்பதிவு. ************************************************************ வந்துவிட்டது தேர்தல் திருவிழா. சோம்பிக்கிடந்த தமிழகம் உதறி எழுந்து திரிகிறது. எல்லா இடங்களிலும் அரசியல்(!) அலசி உலர்த்தப்படுகிறது. அணி மாற்றங்கள், கூட்டணிக் கணக்குகள், தொகுதி இழுபறிகள், வாக்காளர் புள்ளிவிபரங்கள், கட்சிக் கணிப்புகள் என எல்லோரும் தம் மனதுக்குகந்த கணக்குகளில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்து சென்ற இடைத்தேர்தல்களின் புண்ணியத்தில் … தேர்தல் சதுரங்கம்: காய் நகர்த்தும் கட்சிகள், வெட்டுப்படும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்
2009 ல் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பாசிச அரசால் கொல்லப்பட்டட்து அறிந்ததே. இது குறித்து ராஜபக்சே கூறிக் கொண்டிருந்தவை பொய் என்பதை சேனல் 4 நிறுவனம் அண்மையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கையை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று சில கட்சிகளும் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வேறு சில கட்சிகளும் குரல் … ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மே தினம் - முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலை நாட்டிக் கொண்ட நாள். எட்டு மணிநேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாக பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் … தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆட்டிய புயல், ஆடாத அரசு
கடந்த டிசம்பர் 30 ம் தேதி காலை புதுச்சேரி கடலூரைத் தாக்கிய தானே புயல் ஏறத்தாழ நாற்பது உயிர்களையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொருட்சேதங்களையும் ஏற்படுத்திவிட்டு வலுவிழந்திருக்கிறது. 90 முதல் 135 கிமி வேகத்தில் புயல் வீசியதாக அறிவித்திருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் அழிந்தன? யாயெல்லாம் எப்படியெல்லாம் பதிக்கப்பட்டார்கள்? என்னென சேதங்கள் எங்கெங்கு நிகழ்ந்திருக்கின்றன? யார் யாரெல்லாம் பதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்கள்? என்னென்ன பணிகள் நடந்திருக்கின்றன? போன்ற இன்னபிற விபரங்களை கடந்த ஒரு வாரமாக … ஆட்டிய புயல், ஆடாத அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கருணையினால் அல்ல!
முதல் பதிவு: வினவு
இவர்களின் சொத்துப் பட்டியல்களின் பின்னே சொத்தையாகிப் போன மக்கள்
அண்மையில் பிரதமரே வியந்து போனார் எனும் அடைமொழியோடு கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்ப சொத்துப் பட்டியல் என்று ஒன்று வெளியாகி உலாவந்து கொண்டிருக்கிறது. இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருக்கும் கருப்புப் பண பட்டியல் என்று அசாஞ்சே ஒரு பட்டியல் வெளியிட்டிருக்கிறார். பட்டியல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் ....... ? உழைத்த களைப்பும் வெளியேறிய வியர்வையும் ஒரு தேநீர் வேண்டும் என்று தொண்டையில் போராட்டம் நடத்த அனிச்சைச் செயலாய் சட்டைப்பையை தடவிப்பார்த்துவிட்டு … இவர்களின் சொத்துப் பட்டியல்களின் பின்னே சொத்தையாகிப் போன மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொன்னர் சங்கர் யாருக்காக?
அண்ணன்மார் கதை; சின்னண்ணன், பெரியண்னன் கதை என்றெல்லாம் அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை ஈரோடு நாமக்கல் கரூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஆகிய பகுதிகளில் குறிப்பாக வெள்ளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகளில் நாட்டார் கதையாகவும், நோம்பி காலங்களில் கிராமங்களில் போடும் தெருக்கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் இருக்கிறது. இப்படி ஒரு வரலாற்று பாரம்பரியமான அண்ணன்மார் கதை பொன்னர் சங்கர் கதையாக கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, கருணாநிதியின் அண்ணன்மார் கதையை தியாகராஜன் இயக்கி பிரசாந்த் … பொன்னர் சங்கர் யாருக்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேர்தலை புறக்கணிப்போம், புரட்சி செய்வோம்
மின்னூலாக(PDF) தரவிறக்க