தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA), குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகத்தில் (Advisory Board) நேர்நின்று வாதிடுவது எனக்குப் புதிதன்று. நேற்று கறுப்பர் கூட்டம் தோழர்கள் நாத்திகன் சுரேந்திரனுக்காகவும், செந்தில்வாசனுக்காகவும் வாதிடச் சென்றேன். அவர்களைப் புழல் சிறையிலிருந்து அழைத்து வருவார்கள் என்று வழக்கறிஞர் துரை அருண் சொல்லியிருந்தார். ஆனால் கொரோனா அச்சத்தைக் காட்டி அவர்களைக் கொண்டுவரவில்லை. காணொலி வாயிலாக அவர்கள் முறையிட்டிருக்கக் கூடும். சிறையில் அவர்களிடம் கடுமையான கெடுபிடி காட்டப்படுவதாகத் தெரிந்து கொண்டேன். … கறுப்பர் கூட்டமும் குண்டர் சட்டமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கருப்பர் கூட்டம்
இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்
கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் வலைக்காட்சியில், முன்னர் வெளியிடப்பட்டிருந்த கந்த சஷ்டி கவசத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டு குதித்துக் கொண்டிருக்கிறது சங்கிகள் கூட்டம். காவல்துறையிடம் முறையீடு அளிக்கப்பட்டு அந்த வலைக்காட்சியின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது சங்கிகளே நமக்கு தங்கக் காம்பளத்தில் வைத்து அளித்திருக்கும் வாய்ப்பு. முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் இந்த வழக்கில் இணைந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி பெயர்ப்பு ஆபாசம் என்றால், அதற்காக அந்த வலைக்காட்ட்சி தடை செய்யப்படலாம் என்றால், அதற்காக … இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.