1991க்கு பிறகு காவிரி நீரை முன்வைத்து தற்போது மீண்டும் கும்பல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 60 பேரூந்துகள் வரை எரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். உடமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் காவிரி ஆற்று நீர் பாங்கீட்டு பிரச்சனையை முன்வைத்து நடக்கிறது என்பதைத் தவிர இவைகளுக்கும் காவிரி ஆற்று நீர் பங்கீட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. நீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கனத்த இதயத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட காவிரி நீர் தமிழகத்தை நோக்கி துள்ளலுடன் வந்து சேர்ந்தது. தண்ணீர் … காவிரி: தண்ணீரையும் தாண்டி .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கர்நாடகம்
வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்
சில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது. காவிரி … வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜனநாயகத்தின் அம்மணமும் கன்னடக் கோவணமும்
சில வாரங்களுக்கு முன்பிருந்தே கன்னட எதியூரப்பா கோவில் கோவிலாக சுற்றிவரத்தொடங்கினார். பாஜக பக்தர்களிடம் கேட்டால், அக்டோபர் மாதம் வந்தாலே அது எதியூரப்பாவைப் பிடித்து ஆட்டும் என்று கடந்த நிகழ்வுகளை அள்ளி வீசுகிறார்கள். 2007 அக்டோபரில் மஜத கட்சி ஆட்சி மாற்றத்திற்கு சம்மதிக்காததால் ஆட்சியை இழந்தார். 2008 அக்டோபரில் த்லைமையிலிருந்து அவரை நீக்கவேண்டும் என்று பிரச்சனை கிளம்பியது. 2009 அக்டோபரில் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கிக்கொண்டு கண்ணீர்விட்டு கதறும் நிலைக்குப் போனார். 2010 அக்டோபரில் அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது … ஜனநாயகத்தின் அம்மணமும் கன்னடக் கோவணமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.