முகம்மது தேன் குடித்த கதை

isl 55

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 56

நபியே உம் மனைவியரின் திருப்தியை நாடி அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? .. .. .. குரான் 66:1

 

இப்படி ஒரு வசனம் குரானில் உண்டு. அல்லா அனுமதித்த எதை முகம்மது தம் மனைவிகளின் விருப்பத்திற்காக விலக்கினார்? என்றொரு கேள்வியை எழுப்பினால் விடையாகக் கிடைப்பது தான் முகம்மது தேன் குடித்த கதை. அதாவது முகம்மது தன் பல மனைவியர்களின் வீட்டில் முறைவைத்து தங்கும் போது ஒரு மனைவியின் வீட்டில் தேன் குடிக்கிறார். இது ஏனைய மனைவியர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் இனிமேல் தேன் குடிக்க மாட்டேன் என்று அல்லாவின் பெயரால் சத்தியம் செய்து விடுகிறார். ஆனால் முகம்மது தேன் குடிக்கவில்லை என்று தெரிந்தால் உலகின் அனைத்து முஸ்லீம்களும் தேன் குடிப்பதை நிறுத்தி விடுவார்களே, அதனால் தான் அல்லா முகம்மதை கண்டித்து மீண்டும் தேன் குடிக்க வைத்தான். இது தான் அந்த தேன் குடித்த கதை என்று இப்பொழுது பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் இஸ்லாமிய பரப்புரையாளர்கள்.

 

இது மெய்தானா? இது முகம்மது தேன் குடித்ததை குறிப்பிடும் வசனங்கள் தாமா? இந்த தேன் குடித்த கதைக்குப் பின்னர் வக்கிரம் பிடித்த ஒரு வரலாறு மறைந்து கிடக்கிறது. இதை விரிவாகப் பார்க்கலாம். இந்த தேன் குடித்த கதை தொடர்பாக மேற்கண்ட வசனம் மட்டுமல்ல வேறு சில வசனங்களும் குரானில் இடம் பெற்றிருக்கின்றன.

 

நபியே உம்முடைய மனைவியரின் திருப்திகளை நீர் நாடி அல்லாஹ் உமக்கு ஹலாலாக்கியதை நீர் ஏன் ஹராமாக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன் மிகக் கிருபையுடையவன்.

 

உங்களுடைய சத்தியங்களை முறிப்பதை அல்லாஹ் உங்களுக்கு திட்டமாகக் கடமையாக்கி இருக்கிறான். அல்லாஹ் உங்களுடைய எஜமான் அவன் முற்றும் அறிந்தவன் ஞானமுள்ளவன்.

 

இன்னும் நபி, தம் மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அதனை அவர் அறிவித்து, அல்லாஹ் அவருக்கு வெளியாக்கிய போது, அவர் அதில் சிலதை அறிவித்தும் மற்றும் சிலதை புறக்கணித்தும் விட்டார். அவர் அதனை அவருக்கு அறிவித்த போது இதனை உமக்கு அறிவித்தவர் யார்? என்று அவர் கேட்டார் முற்றும் அறிந்தவனும் தெரிந்தவனாகிய அல்லாஹ் எனக்கு அறிவித்தான் என்று அவர் கூறினார்.

 

நீங்கள் இருவரும் அல்லாஹ்வின்பால் மீண்டால் ஏனெனில் உங்களிருவருடைய இதயங்களும் அவ்வேளையில் திட்டமாக சாய்ந்து விட்டன; நீங்கள் இருவரும் எதிராக உதவி செய்து கொண்டால், அப்போது நிச்சயமாக அல்லாஹ் அவருடைய உதவியாளனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரீலும் முஃமின்களில் ஷாலிஹானவர்கள் அவருக்கு உதவியாளர்களாவார்கள். அதற்குப் பின்னும் மலக்குகள் உதவியாளர்களாவார்கள்.

 

அவர் உங்களை தலாக் சொல்லி விட்டால் உங்களை விடச் சிறந்த முஸ்லிம்களான, முஃமினான, வழிபட்டு நடப்பவர்களான, தவ்பாச் செய்பவர்களான, வணங்குபவர்கலான, நோன்பு நோற்பவர்களான, கன்னிமை கழிந்தவர் இன்னும் கன்னிப் பெண்டிர் இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு பகரமாக மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.

குரான் அத்தியாயம் 66 தஹ்ரீம் வசனங்கள் ஒன்றிலிருந்து ஐந்து வரை

 

முதல் வசனத்திற்குப் பிந்திய நான்கு வசனங்களும் இஸ்லாமிய பரப்புரையாளர்கள் கூறும் தேன் குடித்த கதைக்கு பொருந்துகிறதா? வெகு சாதாரணமான நிகழ்வான முகம்மது தேன் குடித்தததை, முகம்மதுக்கு எதிராக நீங்கள் சதி செய்து விட்டீர்கள் என்றும், இருவரும் அல்லாவிடம் மன்னிப்பு கேழுங்கள் என்றும், முகம்மதுக்கு உதவி செய்ய அல்லாவும், வானவர்களும் இன்னும் ஏராளமானவர்களும் இருக்கிறார்கள் என்றும், உங்களை விவாகரத்து செய்து விட்டால் உங்களுக்குப் பதிலாக சிறந்த மனைவியர்கள் முகம்மதுவுக்கு கிடைப்பார்கள் என்றெல்லாம் முகம்மதின் மனைவியர்களை அல்லா மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? இது மட்டுமா? எந்த முக்கியத்துவமும் இல்லாத இந்த தேன் குடித்த கதையால் சஞ்சலத்துக்கு உள்ளான முகம்மது தன்னுடைய அனைத்து மனைவிகளையுமே ஒட்டுமொத்தமாக விவாகரத்து செய்து விடும் அளவுக்கு சென்றார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மைதான் என்பதை ஒரு ஹதீஸ் உறுதி செய்கிறது.

 

ஒரு நாள் காலை நபி அவர்களுடைய துணைவியர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அருகில் அவரவர் குடும்பத்தினரும் இருந்தனர். .. .. .. உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, தங்கள் துணைவியரை விவாக ரத்துச் செய்துவிட்டிர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், இல்லை. ஆனால், ஒரு மாத காலம் நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்து விட்டேன் என்று பதிலளித்தார்கள். அங்கு நபி அவர்கள் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு தம் துணைவியரிடம் சென்றார்கள்.

புஹாரி 5203

 

ஒரு மனைவியின் வீட்டில் தேன் குடித்தது இவ்வளவு பெரிய பிரச்சனை ஆகுமா? ஒட்டு மொத்தமாக அத்தனை மனைவியர்களையும் விவாகரத்து செய்து விடுமளவுக்கு தேன் குடித்தது அவ்வளவு பெரிய குற்றச் செயலா? தன்னுடைய நெருங்கிய நண்பரும், மாமனாருமாகிய உமர் கேட்கும் போது விவாகரத்து செய்யவில்லை. ஒரு மாத காலம் அனைத்து மனைவியர்களை விட்டும் விலகி இருக்கப் போகிறேன் என்று கூறி 29 நாட்கள் விலகி இருக்கும் அளவுக்கு தேன் குடித்தது ஒரு மன்னனை கலங்க வைக்குமா? நிச்சயம் இருக்காது. குரானின் அந்த வசனங்களும், புஹாரியின் இந்த ஹதீஸும் தெட்டத் தெளிவாக அது தேன் குடித்த கதையல்ல வேறு எதுவோ ஒன்று அதில் மறைந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. அது என்ன? இந்த தேடலை முகம்மதின் பிரியத்திற்குறிய மனைவி ஆய்ஷா அறிவித்த இரண்டு ஹதீஸ்களிலிருந்து தொடங்கலாம்.

 

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம், அவர்களது தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் தங்கி விடுவார்கள். நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். தேன் சாப்பிட்ட பின் நம்மவரில் எவரிடம் நபி அவர்கள் முதலில் வருவார்களோ, அவர், நபி அவர்களிடம் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா உங்களிடமிருந்து பிசினின் துர்வாடை வருகிறதே என்று கூறி விட வேண்டும். வழக்கம்போல ஸைனப்பின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டு விட்டு நபி அவர்கள் வந்த போது நாங்கள் பேசி வைத்த பிரகாரம் கூறியதற்கு அவர்கள் இல்லை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் தேன் குடித்தேன். நான் ஒரு போதும் அதைக் குடிக்க மாட்டேன், நான் சத்தியமும் செய்து விட்டேன் என்று கூறிவிட்டு இது குறித்து எவரிடமும் தெரிவித்து விடாதே என்று கூறினார்கள்.

புஹாரி 4912

 

இது ஒரு ஹதீஸ். இன்னொரு ஹதீஸையும் பார்க்கலாம்.

 

அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவைகளாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி அவர்கள் தம் துணைவியாரிடம் செல்வார்கள்: அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு தம் துணைவியால் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் அவர்களிடம் நபி அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்து விட்டார்கள். ஆகவே நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கிளாள் என்றும் அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் அல்லாஹ்வின் மீதாணையாக இதை நிறுத்துவதற்காக ஒரு தந்திரம் செய்வோம் என்று கூறிக் கொண்டு நபி அவர்களின் துணைவியரில் சவ்தா பிந்த் ஸம்ஆவிடம் நபி அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள் .. .. ..

புஹாரி 5268

 

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் கூறப்பட்ட நிகழ்வு ஒன்று தான், அறிவித்தவரும் ஒருவர் தான். ஆனால், அதில் ஈடுபட்ட மனைவியரில் மட்டும் ஆள்மாறாட்டம். முகம்மது தேன் குடித்தது யார் வீட்டில்? ஜைனப் வீட்டிலா? ஹப்ஸா வீட்டிலா? அல்லா எச்சரித்த இரண்டு மனைவியர்கள் யாவர்? ஒருவர் ஆய்ஷா இன்னொருவர் யார்? ஹப்ஸாவா? சவ்தாவா? ஆய்ஷாவும் ஹப்ஸாவுமா? ஆய்ஷாவும் சவ்தாவுமா? எந்த ஆய்ஷாவை ஆறு வயதிலேயே இவரைத் திருமணம் செய்து கொண்டால் இல்லறம் குறித்த அறிவிப்புகளை தெளிவாகவும் துல்லியமாகவும் அறிவிப்பார்கள் என்று கண்டு பிடித்து முகம்மது திருமணம் செய்து கொண்டதாக மதவாதிகள் கூறுகிறார்களோ, அந்த ஆய்ஷா தான் இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த குழப்பத்தை இன்னொரு ஹதீஸ் தெளிவிக்கிறது.

 

.. .. .. அப்போது நான் அவர்களிடம், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே நபி அவர்களுடைய துணைவியரில், நபியவர்களைச் சங்கடப் படுத்தும் வகையில் கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர் என்று பதிலளித்தார்கள் .. .. .. அதற்கு நான், அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர் அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை-ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே என்று சொன்னேன். பிறகு நான் புறப்பட்டு, நபி அவர்களின் மற்றொரு துணைவியாரான உம்மு சலமாவிடம் அறிவுரை கூறச்சென்றேன். ஏனெனில், அவர் என்  உறவினராவார். இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, கத்தாபின் புதல்வரே உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள் என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக உம்மு சல்மா தம் பேச்சால் என்னை ஒரு பிடி பிடித்து விட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி கோப உணர்ச்சியை உடைத்தெறிந்து விட்டார் .. .. ..

புஹாரி 4913

 

இந்த ஹதீஸ் இரண்டு விபரங்களைத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ளது. ஒன்று, எந்த இருவர் என்பதற்கு ஆய்ஷாவும் ஹப்ஸாவும் என்பது. அடுத்தது, இந்த விவகாரத்தில் உமர் முகம்மதுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து முகம்மதின் ஒவ்வொரு மனைவியராக சந்தித்து அறிவுரை கூறி எச்சரிக்கிறார். ஆனால் உம்மு சலமா உமர் வாயடைத்துப் போகும் அளவுக்கு அவரை கேள்விகளால் திணறடித்து விடுகிறார். உமரால் பேச முடியாமல் போகும் அளவுக்கு தேன் குடித்ததில் அத்தனை பெரிய விவகாரம் என்ன இருந்து விட முடியும்? ஆக ஒன்று தெளிவாய் புரிகிறது. ஹதீஸ்களும் குரான் வசனங்களும் நடந்த ஏதோ ஒன்றை மறைத்து தேன் குடித்தார் என்று பூசி மெழுகுகின்றன. இது தேன் குடித்த கதையல்ல என்பது தெளிவாகி விட்டது. என்ன நடந்தது என்று எப்படி அறிந்து கொள்வது? இஸ்லாமிய மதவாதிகள் ஒருபோதும் இதற்கு பதில் கூறப் போவதில்லை. குரான் வசனங்களிலும், ஆதாரபூர்வமானவை என்று மதவாதிகள் நீட்டி முழக்கும் ஹதீஸ் தொகுப்புகளிலும் தலைகீழாக நின்று தேடினாலும் இதற்கான விபரம் கிடைக்கப் போவதில்லை. அப்படியானால் எப்படி அதை தெரிந்து கொள்வது? எதில் இதற்கு விளக்கங்கள் கிடைக்கும்?

 

இப்ன் ஸாத் என்பவர் எழுதிய தபாக்கத் எனும் நூலை முகம்மது மஹ்தவி தம்ஹானி என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதில் 223ம் பக்கத்தில் முகம்மது என்ன தேனைக் குடித்தார் எனும் விபரம் கிடைக்கிறது.

 

நபி, ஒவ்வொரு மனைவியின் வீட்டிற்கும் தினமும் செல்லும் வழக்கமுடையவர். அவ்வாறு அன்று ஹப்ஸாவின் வீட்டிற்கு வரும் முறை, ஹப்ஸாவிடம், உனது தந்தையார் உமர் கத்தாப் உன்னை பார்க்க விரும்புகிறார் என்று கூறுகிறார் முகம்மது. ஹப்ஸாவும், நபியின் ஆணையை ஏற்று தந்தையை காணச் சென்று விடுகிறார். இதற்கிடையில் அடிமைப் பெண் மரியத்துல் கிப்தியாவுடன் கலவியில் ஈடுபட்டு விடுகிறார். சற்று விரைவாகவே வீடு திரும்பிய ஹப்ஸா நடந்த நிகழ்ச்சியை அறிந்து கோபமடைகிறார். அவர் நபியிடம் கூறுகிறார், “அல்லாஹ்வின் தூதரே, என் வீட்டிலா இதைச் செய்தீர்கள் அதுவும் என்னுடன் (இருக்க வேண்டிய) முறையில்?”  என்று கோபப்பட ஹப்ஸாவை சமாதானம் செய்ய, வேறு வழியின்றி அல்லாஹ்வால் ஹலால் ஆக்கப்பட்ட மரியத்துல் கிப்தியா இனி தனக்கு ஹராம் எனக் கூறி ஹப்ஸாவை சமாதானம் செய்கிறார். அதற்கு ஹஃப்ஸா அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறினால் தவிர என்னால் ஏற்க முடியாது என்கிறார். வேறு வழியின்றி இனி மரியத்துல் கிப்தியாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுகிறார். இந் நிகழ்சியை யாரிடமும் கூறக்கூடாது எனவும் கூறுகிறார். ஆனால் ஹப்ஸா, தன் தோழியான ஆயிஷாவிடம் கூற விஷயம் வெளியாகிறது.

 

ஆக முகம்மது குடித்த தேன் மரியத்துல் கிப்தியா. இப்போது குரான் வசனங்கள் ஹதீஸ்கள் ஆகியவை கூறும் செய்திகளை தொகுத்துப் பாருங்கள். அவை மரியத்துல் கிப்தியவை உறுதி செய்கின்றன. அசிங்கமான வக்கிரமான இந்த வரலாற்றை மறைப்பதற்காகத் தான், தேன் கதையை புனைந்து பரப்பியிருக்கிறார்கள். மட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் தொகுப்பு என்று கூறும் தொகுப்புகளின் லட்சணம் இப்படி உண்மையை மறைப்பதற்குத் தான் உதவியிருக்கிறது. அதனால் தான் மதவாதிகள் ஆதரபூர்வ தொகுப்புகள் என்று கூறப்படும் ஆறு தொகுப்புகளுக்கு [ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும் எனும் தலைப்பில் பார்க்க] முந்திய தொகுப்புகளான தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களின் முகம்மதின் வரலாறு எதையும் ஏற்க மறுக்கிறார்கள்.

 

முப்பத்து ஒன்று அதிகாரபூர்வ மனைவிகள், அதற்குமேல் அடிமைப் பெண்கள், வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அதன் பிறகும் தொடரும் இது போன்ற வக்கிரங்கள். உலகில் பிறக்கும் அத்தனை மனிதர்களுக்கும் முன் மாதிரி என்று விதந்து போற்றப்படும் ஓர் ஆறாம் நூற்றாண்டு மனிதனின் ஆளுமைகள் அவ்வாறான போற்றுதல்களுக்கு கொஞ்சமாவது தகுதியைக் கொண்டிருக்கின்றனவா என்பதை முஸ்லீம்கள் சிந்திக்கட்டும்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

55. முகம்மதும் ஆய்ஷாவும்

54. முகம்மது ஏன் அத்தனை பெண்களை மணந்து கொண்டார்

53. முகம்மதின் மக்கா வாழ்வும் அவரின் புலப்பெயர்வும்

52.  தன்னுடன் தானேமுரண்பட்ட முகம்மது

51. முகம்மது நல்லவரா? கெட்டவரா?

50. முகம்மது அனுப்பிய கடிதங்கள் மதமா? ஆட்சியா?

49. முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

48. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2

47. முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1

46. இஸ்லாமியப் பொருளாதாரம்: ஜக்காத் எனும் மாயை

45. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 2. குற்றவியல் சட்டம்

44. அல்லாவின் சட்டங்கள் எக்காலத்துக்கும்  பொருத்தமானவைகளா? 1. மணச்சட்டம்

43. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 3

42. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 2

41. அல்லாவும் அவன் அடிமைகளின் அடிமையும் 1

40. அல்லாவின் பார்வையில் பெண்கள் 5. ஆணாதிக்கம்

39. அல்லாவின் பார்வையில் பெண்கள் 4. மஹ்ர் மணக்கொடை

38. அல்லாவின் பார்வையில் பெண்கள் 3. விவாகரத்து

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 2

M_Id_230158_FP

உணர்வு இதழ் வெளியிட்டு வரும் கற்பனை உரையாடல் தொடரின் இரண்டாவது பகுதியில் அவர்கள் செய்திருப்பது கருத்து பயங்கரவாதம். அந்த கற்பனை உரையாடலை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் தன்னிடம் விவாதம் செய்ய வந்திருக்கும் முஸ்லீமைப் பார்த்துக் கேட்கிறார் நீங்கள் எங்கே தீவிரவாத முகாம் வைத்திருக்கிறீர்கள் என்று. அதாவது இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று பார்ப்பனிய மயமான அரசும், ஊடகங்களும் பரப்பி வைத்திருக்கிறதே ஒரு கருத்து; அதே கருத்தில் நின்று அந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கேட்கிறாராம். அதற்கு அந்த முஸ்லீம் அமைதியாக அவர்களின் ஆன்மீக இயக்கம் பற்றி விளக்குகிறாராம். இதில் போகிறபோக்கில் நாங்களும் சில முகாம் நடத்துகிறோம் என்று கம்யூனிஸ்ட் கூறுவது போலவும், படித்து முடித்து விட்டு எரித்துவிடும் நோக்கில் தாக்குதல் திட்டங்கள் அடங்கிய ரகசிய புத்தகங்களை படிப்பது போலவும் கூறிச் சென்றிருக்கிறார்கள். தெளிவாகச் சொன்னால், இஸ்லாமியர்களாகிய நாங்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்லர். கம்யூனிஸ்டுகள் தான் அவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் தான் என்ன வேலை செய்கிறார்கள் என்று சொல்வதற்கு கூட தயங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்வது தான் உணர்வு கும்பலின் அந்த கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியின் நோக்கம். இது தான் கருத்து பயங்கரவாதம் என்பது. அதாவது, தனக்கு நன்கு தெரிந்த ஒரு செய்தியை, அதற்கு எதிர்மறையாக திரித்து – அப்போது தான் தன்னை நம்பியிருக்கும் அணியினரை கம்யூனிசத்தின் பக்கம் சாய்ந்து விடாமல் தக்கவைக்க முடியும் என்பதற்காக – பரப்பியிருக்கிறார்கள்.

 

அன்றிலிருந்து இன்றுவரை, அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அரசு எந்திரம் பார்ப்பனியமய மாக்கப்படுவதற்கு எதிராகவும் அனைத்து தளங்களிலும் புரட்சிககர கம்யூனிஸ்டுகள் போராடி வந்திருக்கிறார்கள். அரசு பயங்கரவாதத்தின் ஒரு பகுதி செயல் திட்டம் தான் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக, வெடிகுண்டு வைப்பவர்களாக சித்தரித்து வெகு மக்கள் மத்தியில் பரப்பி வைத்திருப்பது. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்தியச் சூழலில் இஸ்லாம் எனும் மதம் குறித்த, முஸ்லீம்கள் குறித்த பார்ப்பன பாசிசங்களின் பார்வையை விளங்க வேண்டும்.

 

இந்தியாவில் பார்ப்பன பாசிசங்கள் தாம் குண்டு வெடிப்பை நிகழ்த்துகின்றன என்பதற்கு அசீமானந்தா தொடங்கி ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும் எந்த இடத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அரசும், ஊடகங்களும் உடனே மொழிவது இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களத்தான். இது ஏன்? ஏன் இந்த அரசும் ஊடகங்களும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கின்றன? இதனால் அவைகளுக்கு கிடைக்கும் லாபம் என்ன? பல இஸ்லாமிய இளைஞர்கள் இது போன்ற செயல்களெல்லாம் பாபரி பள்ளிவாசல் இடித்து தகர்க்கப்பட்டதற்கு பிறகான நிகழ்வுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும், விருத்த சேதனம் செய்தும் இருந்தான். அன்றைய பிரதமர் நேரு வானொலியில் காந்தியைக் கொன்றது முஸ்லீம் அல்ல, இந்து தான் என அறிவித்திருக்காவிட்டால், 2002ல் குஜராத்தில் நடந்ததைப் போல் திட்டமிட்ட படுகொலைகள் நாடுமுழுதும் நடந்து முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். பாபரி பள்ளிவாசல் பிரச்சனைகூட அண்மையில் ஏற்பட்ட பிரச்சனையில்லை. நாற்பதுகளின் தொடக்கத்தில் தொழுகை நடந்து கொண்டிருந்த பள்ளியில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக ராமர் பொம்மை வைக்கப்பட்டு, அந்தப் பிரச்சனை ஊதிப் பெருக்கப்பட்டது. இவைகளையெல்லாம் வெறும் மதமோதல்கள் என்றா நினைக்கிறீர்கள் முஸ்லீம்களே,

 

இந்தியாவில் பௌத்தம், சமணம், சாங்கியம் என பல மதங்களும் கொள்கைகளும் மேலோங்கி இருந்தன. இவைகளையெல்லாம் நேர்மையற்ற வழிகளில் தனது அரசியல் மேலாதிக்கத்திற்காக சிதைத்திருக்கிறது பார்ப்பனிய மதம். ஈராயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை தீண்டாமை அடிமைகளாக அடக்கியாண்டு கொண்டிருந்தது. ஆங்கிலேயர் வரவு, பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு தம் மீது திரும்பி விடக்கூடாது என்பதற்காக இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்களை கொண்டு வர வைத்தது. இதனால் தம்முடைய அரசியல் மேலாதிக்கம் குலைந்து விடக் கூடாது என்பதற்காக பார்ப்பனியம் அதுவரை தீண்டத்தகாதவர்களாக சேரிகளில் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் இந்துவாக அடையாளம் காட்டி பெரும்பான்மை காட்டிக் கொள்ளும் உத்தியை கையாண்டது. ஆனால் யார் தம்மை இதுகாறும் இழிவுபடுத்தி வைத்திருந்தார்களோ அந்த பார்பனர்களின் பின்னே இந்துவாக அணிதிரள முடியுமா அம்மக்களால்? இதற்கு பயன்பட்டது தான் பொது எதிரியை கட்டியமைக்கும் உத்தி.

 

இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பான்மையினர் இன்று இந்துக்களாக கருதப்படுகின்ற உழைக்கும் மக்கள். அரசியல் பலத்துடன் அவர்களை ஒடுக்கிக் கொண்டிருந்தவர்கள் பார்ப்பனிய சிறுபான்மையினர். இவர்களுக்கு வெளியே முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும். கிருஸ்தவர்கள் இந்துக்களின் பொது எதிரியாக காட்ட முடியாத அளவுக்கு சிறுபான்மையினராக இருந்தனர். முஸ்லீம்களோ ஒதுக்கித்தள்ள முடியாத அளவுக்கு கணிசமாக தொகையினராக இருந்தனர். இவர்களை பொது எதிரியாக கட்டமைத்தால் பார்ப்பனியத்துக்கு கடினமான போட்டியை ஏற்படுத்துவர். அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தாக் கூடும். இந்த நிலையில் தான் ஆர்.எஸ்.எஸ் முன்னோடியான சாவர்கர் இஸ்லாமியர்களை தனிநாடு கொடுத்து ஒதுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். கவனிக்கவும் முஸ்லீம்களே, பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை முகம்மது அலி ஜின்னாவால் கொண்டு வரப்பட்டதல்ல. ஜின்னா கோரிய சமஸ்டி கோரிக்கையை காங்கிரஸ் பிடிவாதமாக ஏற்க மறுத்ததால் வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஜின்னா முன்னெடுத்தார். இந்த அடிப்படையில் தான் இந்தியாவில் மேற்கிலும், கிழக்கிலும் இருந்த முஸ்லீம்களில் பெரும்பான்மையினரை பாகிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக ஆக்கி விட்டு மீதமுள்ள முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டி சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை கொண்டிருந்த அனைவரையும் இந்துக்களாக ஒருங்கிணைக்கும் வேலையை செய்தார்கள்.

 

இந்திய முஸ்லீம்களை பிளவுபடுத்த வேண்டுமென்றால் அரசு எந்திரத்தை பார்ப்பனமயமாக்கி வைத்திருக்கும் சூழலில் வெகு எளிதாக செய்துவிட முடியும். ஆனால், இந்திய ஆளும் வர்க்கம் ஒருபோதும் அதை செய்யவில்லை. மாறாக, கவனத்துடன் அதை தவிர்த்தும் வந்திருக்கிறது. ஏற்கனவே, பல குழுக்களாக பிளவுபட்டு இருந்த முஸ்லீம்களை (தமிழ்நாட்டில் இருக்கும் ஜாக் கிலிருந்து பிரிந்த குழுக்களை குறிப்பிடவில்லை. இந்தியா முழுவதும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட கலாச்சாரங்களுடன் தனித்தனி தீவுகளாக வாழ்ந்து கொண்டிருந்த உழைக்கும் மக்களாகிய முஸ்லீம்களைக் குறிப்பிடுகிறேன்) ஒன்றிணைக்க முடிந்தால், அவர்களை இஸ்லாமிய மத உணர்வுடனேயே எப்போதும் இருத்தி வைக்க முடிந்தால்; அதைக் காட்டி ஆண்டாண்டு காலமாய் தம்மால் தீண்டத்தகாதோராய் ஒதுக்கி வைத்திருந்தவர்களையே ஒருங்கிணைத்து தம் ஆயுதமாய் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்துடன் தான் அன்றிலிருந்து இன்றுவரை அரசு எந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத்தான் வெடிகுண்டு கலாச்சாரத்தை இஸ்லாமியர்கள் மீது திணித்து இந்துக்களின் பொது எதிரியாகவும், இந்திய அளவில் பயங்கரவாதிகளாகவும் கட்டமைத்து கட்டிக் காத்து வருகிறது.

 

1992ல் பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்டது என்பது மேற்கண்ட நிகழ்ச்சி நிரலுக்கு மட்டும் உட்பட்டதல்ல. கிட்டத்தட்ட பெரிய எதிர்க்கட்சிகளே இல்லை எனும் நிலையில் இருந்த காங்கிரசுக்கு எதிராக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கட்சியாக இருந்தது பா.ஜ.க. பாபரி பள்ளிவாசல் இடிப்பை பயன்படுத்தி காங்கிரஸ் செயல்பட்டிருந்தால் பா.ஜ.க எனும் கட்சியையே இல்லாமல் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறன்றி பாபரி பள்ளிவாசல் இடிப்பு விசயத்தில் அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் பா.ஜ.க வுக்கு செய்தது. ஏன்? மக்களை மறுகாலனியாக நுகத்தடிக்குள் சிக்க வைக்கும் டங்கல், காட் ஒப்பந்தங்கள் பாரளுமன்றத்துக்கூட தெரியாமல் கொல்லைப்புறமாக இந்தியாவுக்குள் நுழைந்த நேரம் அது. இதிலிருந்து வெற்றிகரமாக மக்களை திசை திருப்ப கிடைத்த வாய்ப்பு தான் பாபரி பள்ளிவாசல் இடிப்பு. மக்களை மதவாத சாக்கடையில் தள்ளிவிட்டுத்தான் ஏகாதிபத்தியங்கள் இந்தியாவின் மீது ஆக்டபஸ் போல கவிந்து கிடக்கின்றன.

 

பார்ப்பன பயங்கரவாதிகளின் இந்த திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி முஸ்லீம்கள் வர்க்க அடிப்படையில் மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, பாட்டாளிகளாக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம். இதற்கான கதவை அடைத்து அந்த பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு உதவும் வேலையை செய்வது தான் தவ்ஹீத் என்ற பெயரில் இருக்கும் பல வண்ண அமைப்புகளின் நோக்கமாக இருக்கிறது. இது இந்திய நிலமை என்றால் சர்வதேச நிலமையும் இதில் செயல்படுகிறது.

 

ஜிஹாத் என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தாலிபான், ஐ.எஸ் உள்ளிட்ட பல அமைப்புகள் இன்று பயங்கரவாத குழுக்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாளொரு காணொளி வெளிவந்து உலக மக்களிடம் வெறுப்பையும், அதேநேரம் அமெரிக்க ஏகாதிபத்தியம் அவைகளை தாக்கி அழிக்கும் சர்வதேச கடமையையும் இந்த அமைப்புகள் சம்பாதிருக்கின்றன. ஆனால், இந்த அமைப்புகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக உருவாக்கப்பட்டவை என்பதும், அந்த நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, அல்லது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் சிந்திக்கும் திறனுள்ள அனைவருக்கும் தெரிந்தது தான். அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்குமான பனிப்போர் காலகட்டத்தில் பரவிவரும் சோசலிச மக்கள் நல அரசுகளை கலைக்கவும், ரஷ்யாவைத் தோற்கடிக்கவும் பல்வேறு உத்திகளைக் கையாண்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதிர்ப்புரட்சி சதிகள் மூலம் ஆட்சிகளைக் கவிழ்ப்பதும், தலைவர்களைக் கொல்வதுமான உத்தி என்றால், அரபு நாடுகளுக்கு இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் உத்தியைக் கையாண்டது. இதன் தொடர்ச்சியாக தூய இஸ்லாமியவாதம் பேசும் பல குழுக்களை கட்டியமைத்து சோசலிச மக்கள் நல அரசுகளுக்கு எதிரான சதிகளில் இறக்கியது அமெரிக்கா. ஈரானில் மன்னர் ஷா வை தன் கைப்பாவையாக அதிகாரத்தில் அமர வைத்ததும், ஆப்கானில் மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவரும், அதிபருமான‌ நூர் முகம்மது தரக்கி சுட்டுக் கொல்லப்பட்டதும் இவ்வாறு தான். பனிப்போர் முடிந்து தேவை தீர்ந்ததும் இக்குழுக்களில் பல சிதைந்தும், இணைந்துமாய் மதவாதம் பேசிக் கொண்டிருக்கின்றன. அன்று தன் வணிக நலன்களுக்கு தடையாய் இருந்த ஒட்டாமன் பேரரசை (உஸ்மானிய பேரரசு) வீழ்த்த மதப் போர்வையில் சிலுவைப் போர்களை நடத்தியது முதலாளித்துவம். இன்றும் அதே கதை தான், தன்னுடைய ஒற்றைத் துருவ மேலாதிக்கத்துக்கும், எண்ணெய் மேலாதிக்கத்துக்கும் எதிராக இருக்கும் நாடுகளை வீழ்த்த இன்று அக்குழுக்கள் அந்தந்த நாடுகளில் தூய இஸ்லாமியவாதம் பேசி உள்நாட்டுப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். அந்த முகாந்திரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு அந்தந்த நாடுகளின் அரசுக்கு எதிராக குண்டு வீசுகிறது. எங்கெங்கெல்லாம் அமெரிக்காவுக்கு எதிராக குரல் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் புதிது புதிதாய் தூய இஸ்லாமியவாதம் பேசும் குழுக்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. சிரியாவுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு புதிதாக முளைத்தது இப்படித்தான். இது தான் சர்வதேச அளவில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் கதை.

 

இதன் பின்னாலிருக்கும் அரசியலை உருவி விட்டு மதப்பிரச்சனையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பம். அந்த விருப்பத்தை சற்றும் பிசகாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன இங்கிருக்கும் இஸ்லாமிய மதவாத அமைப்புகள். சிந்தித்துப் பாருங்கள் இஸ்லாமிய சகோதரர்களே! அமெரிக்காவின் கோரப்பிடிக்குள் சிக்காத நாடுகள் சொற்பம் எனும் நிலையில், ஊடகங்கள் முதல் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை மீறி செயல்பட முடியாத நிலையில், இந்திய அரசு எந்திரமே பார்ப்பனமயமாகியிருக்கும் நிலையில், வெறும் மதவாதம் பேசி இதை உங்களால் எதிர் கொள்ள முடியுமா?

 

முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் என்று பார்ப்பது யார்? புரட்டுத்தனமான ஓட்டரசியல் கட்சிகளா? புரட்சிகர கம்யூனிச அமைப்புகளா? இந்தப் பிரச்சனையில் எங்களின் சரியான நிலைபாட்டை எல்லாவித ஊடகங்களிலும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறோமே; இது அந்த உணர்வு கும்பலுக்கோ, அந்த கற்பனை உரையாடலை எழுதிய ஃபாசிலுக்கோ, வெளியிட அனுமதித்த பி.ஜேவுக்கோ தெரியாதா? தெரியாது என்றால்; தெரிந்து கொள்ளாமல் எழுதியது எந்த விதத்தில் சரி? இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் கூறி சமாளிக்க முடியாமல் இஸ்லாத்தைப் பற்றி தெரியாமல் எப்படி எழுதலாம் என்று எகிறி குதிக்கும் இந்த கும்பல், எதையும் அறிந்து கொள்ளாமல் எப்படி எல்லாம் தெரிந்தது போல் எழுதினார்கள்? தெரியும் என்றால் தெரிந்து கொண்டே ஏன் மறைத்து திரித்து எழுதினார்கள்? விடை எளிமையானது தான்.

 

உணர்வு கும்பலின் நோக்கம், தன்னை நம்பியிருக்கும் அணிகளுக்கு சமூக அரசியல் பயிற்சியளிப்பதோ, மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி தேடுவதோ அல்ல. வெறுமனே மதவாதம் பேசி மக்களை ஏமாற்றி, நடப்பு பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புவதன் மூலம் இந்திய அளவில் பார்ப்பன பாசிசங்களுக்கும், சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் தொண்டூழியம் செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை. இஸ்லாமியர்கள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சனை என்ன? அதிலிருந்து எப்படி விடுபடுவது? எனும் எண்ணம் உணர்வு கும்பலுக்கு இருந்திருந்தால் இந்தப் பின்னணியை அலசியிருப்பார்கள், இதில் எந்த அமைப்பு தமக்கு உதவி செய்யும்? எந்த அமைப்பு தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? என்று பரிசீலித்துப் பார்த்திருப்பார்கள். நேரடியாக பார்ப்பன பாசிசத்தை ஆதரிக்கும் ஜெயாவுடனும், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து குலாவிய தி.மு.க வுடனும் மாறி மாறி கூட்டு வைத்துக் கொண்டு அதையே முஸ்லீம்களுக்கான நன்மையாக பசப்பித் திரிகிறார்களே, அந்த அ.தி.மு.கவும், தி.மு.கவும் இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் என்ற எண்ணம் கொண்டவர்களா இல்லையா? அவர்களுடன் கூட்டு வைக்கத் தயங்காத உணர்வு கும்பல்; பார்பன பாசிசங்களையும், ஏகாதிபத்தியங்களையும் விரட்டியடித்து உழைக்கும் மக்கள் சம வாய்ப்புகளோடும் வசதிகளோடும் வாழவைக்கத் துடிக்கும் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களின் மீது ‘தீவிரவாத முகாம் எங்கு நடத்துகிறீர்கள்?’ என்று கேட்பது போல் கற்பனை உரையாடலை அமைத்துப் பரப்புகிறார்கள் என்றால், இதன் மர்மம் என்ன? கம்யூனிச ஒளி முஸ்லீம்கள் மீது படர்ந்து விடக் கூடாது என்பதில், பார்ப்பன பாசிசங்களைப் போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் போல் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா? மக்களை வாட்டி வதைக்கும் நடப்பு பிரச்சனைகளை தீர்க்க வழி காணாமல் ‘இஸ்லாம் இனிய மார்க்கம் கேள்வி பதில்’ நிகழ்சிகளிலேயே காலத்திற்கும் மதி மயங்கிக் கிடப்பார்கள் முஸ்லீம்கள் என்று உணர்வு கும்பல் கனவு கண்டால், இனி அது பலிக்கப் போவதில்லை.

 ara paya

கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியில் மேற்கண்டது தான் முக்கிய அம்சம் என்றாலும், வேறு சில ‘பில்ட் அப்’ களையும் செய்திருக்கிறார்கள். அவைகளையும் பார்க்கலாம். “எங்க மார்க்கம் பொய் சொல்ல அனுமதிப்பதில்லை” என்று போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்கள். இதுவே ஒரு பொய் தான். ஒரு ஹதீஸைப் பார்க்கலாம்,

 

நபி அவர்கள், கஅப் இப்னு அஷ்ரபைக் கொல்வது யார்? எனக் கேட்டார்கள். முகம்மத் இப்னு மஸ்லமா, நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? என்று நபி அவர்களிடம் கேட்க, அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள் என்று கேட்க, நபி அவர்கள் அனுமதித்து விட்டேன் என்று பதிலளித்தார்கள். புஹாரி 3032

 

அதாவது, தனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று தன் சீடரிடம் சொல்கிறார் முகம்மது. அதற்கு அந்தச் சீடர், அப்படியானால் பொய்யாக உங்கள் மீது குறை சொல்லி நடிக்க எனக்கு அனுமதியளியுங்கள் என்று கேட்கிறார். முகம்மது அவருக்கு அனுமதியளிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் பொய் சொல்ல அனுமதி அளிக்கிறார். ஹதீஸில் தெளிவாக இப்படி பொய் சொல்வதற்கு அனுமதியளித்திருக்க இந்த மதத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் பொய் சொல்வதற்கு எங்கள் மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

அடுத்ததாக அந்த கற்பனை உரையாடலில் அப்பாவியாக, “.. .. மூட நம்பிக்கையை வளர்க்கிறார்கள் என்று எடுத்துச் சொன்னால் அது பாசிசமா?” என்று கேட்கிறார்கள். எது மூட நம்பிக்கை, பகிரங்கமாக விபச்சாரம் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. திருடிக் கொண்டு ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. வட்டி வாங்கிக் கொண்டு ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கொலை செய்தவன், கொடும்பாதகன் என எவனும் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவ்வளவு ஏன்? ஐவேளை தொழுகை செய்யாத, நோன்பு வைக்காத, ஜக்காத் கொடுக்காத இன்னும் இஸ்லாம் கூறும் நடைமுறைகள் எதையும் செய்யாத எவனும் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் தர்ஹாவுக்கு சென்றால் மட்டும் அவன் இஸ்லாத்தில் இருக்கக் கூடாது என்பதில் ஏதாவது நேர்மை இருக்கிறதா? தர்ஹாவுக்கு செல்வதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தாருங்கள் என்று இவர்கள் ஜெயலலிதாவிடம் கேட்கலாம், அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் என்னைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள் என்று முஹைதீன் அப்துல் காதிர் ஜெய்லானியை கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட வேண்டும் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆனால், இதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலைப் புரிந்து கொள்ள, இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை முஸ்லீம்களுக்கும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

 

இஸ்லாம் என்பது அல்லா வழங்கி முகம்மது ஏற்படுத்தியது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லா என்பது முகம்மதுவின் கற்பனை என்பது வேறு விசயம். முகம்மது இஸ்லாம் எனும் மதத்தை ஏற்படுத்தவே இல்லை என்பதும் வேறு விசயம். ஆனால் முகம்மது கூறியது தான் இந்த உணர்வு கும்பல் கூறிக் கொண்டிருக்கும் இஸ்லாமா? நிச்சயம் இல்லை. முகம்மதின் கடைசிக் காலத்தில் இருந்து முகம்மது ஏற்படுத்திய அதிகாரத்தில் அமர்வது யார்? எனும் போட்டி தொடங்குகிறது. இதில் முகம்மதின் மருமகன் அலி தான் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று ஒரு குழு போராடுகிறது. ஆனால் அந்தக் குழு ஓரம் கட்டப்பட்டு அபூபக்கர் ஆட்சியில் அமர்கிறார். பின்னர் உமர், உஸ்மான் வந்து சென்ற பின் நான்காவதாகத்தான் அலி ஆட்சியில் அமர முடிந்தது. பின் அலி கொல்லப்பட்ட பிறகு அலிக்கு ஆதரவான குழு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. இது தான் ஷியா, சன்னி பிரிவின் தொடக்கம் இதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஹதீஸ்கள் தொகுக்கப்படுகின்றன. தொகுக்கப்படும் ஹதீஸ்களில் கூட அலி பற்றிய எதிர்மறையான செய்திகளுக்கு முக்கியத்துவமும், அலி குழுவினர் கூறும் ஹதீஸ்கள் புறக்கணிக்கப்படுவதும் நடக்கிறது. இதனால் தான் ஷியா பிரிவினர் தங்களுக்கென்று தனியான ஹதீஸ் தொகுப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் ஆட்சியதிகாரத்தில் சன்னிகளே ஆதிக்கம் செலுத்தியதால் இஸ்லாம் என்றாலே சன்னிகள் தான் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஷியாக்கள் ஈரான், ஈராக் பகுதிகளில் சுருங்கிப் போயினர். இந்த ஷியாக்காளின் கலாச்சாரம் தான் தர்ஹா கலாச்சாரம். இது இந்தியாவில் பரவிய போது எளிமையான இந்த வடிவம் சன்னி பிரிவினர்களாக இருந்தாலும் இஸ்லாமிய உழைக்கும் மக்களை தொற்றிக் கொண்டது. ஆனால் இதை அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்று கூறி அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று விலக்குகிறார்கள். ஆட்சியதிகாரத்தில் யார் இருப்பது? என்பதற்கும் தர்ஹாவாதிகள் முஸ்லீம்களல்ல என்பதற்கும் பொருள் வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்த நுண்ணரசியல் விசயத்தை தான் இஸ்லாத்தில் மாற்றுமத கலாச்சாரம் நுழைந்து விட்ட்து என்றும் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்தால் நாங்கள் பாசிசம் செய்கிறோமா? என்று கேள்வியெழுப்பியும் மடைமாற்றுகிறார்கள். மட்டுமல்லாமல், இதன் மூலம் அவர்களின் பாசிச நடவடிக்கைகளையும் மறைத்துக் கொள்கிறார்கள்.

 

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தோழர் துராப்ஷாவுக்கு நிகழ்ந்தது இவர்களின் பாசிச முகத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு. தஜ்ஜால் என்பவர் எழுதிய “லூத் ஒரு லூஸு” எனும் கட்டுரையை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார் என்பதற்காக அவர் முஸ்லீம் அல்ல என்று திருட்டுத்தனமாக ஃபத்வா கொடுத்து அவரை தொழில் நடத்த விடாமல் அடித்து விரட்டி, மனைவியை விவாகரத்து கோரும் அளவுக்கு மிரட்டிய இவர்கள் நடவடிக்கை பாசிசமில்லாமல் வேறென்ன? தஞ்சை மிமிசல் அருகே தோழர் ஃபாத்திமா தன் குடும்ப நண்பருடன் பேருந்தில் பயணம் செய்ததற்காக ரவுடிகளைத் திரட்டி வந்து பேருந்தை நடுவழியில் நிருத்தி தகாத வார்த்தைகளால் அர்சித்து மிரட்டியது பாசிசமில்லாமல் வேறென்ன? இதுமட்டுமா? முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஊர்கள் அனைத்திலும் அன்னிய ஆடவருடன் பேசினார், சிரித்தார், செல்போனில் பேசினார் என்று பொருந்தாக் காரணங்களைக் கூறி பெண்களைத் தாக்கியுள்ளனர். இதில் கொலைகளும் அடக்கம். இதற்கெல்லாம் இந்தக் கும்பல்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புர்கா போடாமல் வெளியில் வந்தாள் என்ற ஒரே காரணத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் பாசிச நடவடிக்கைகள் இல்லையா? கலாச்சார போலீசாக வேடம் போட்டு பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது தொடங்கி, கல்லூரிகளில் படிக்கக்கூடாது என்பது வரை பல கூடாதுகளை பட்டியலிட்டு பிரசுரமாக அடித்து வினியோகித்திருக்கிறார்கள். இவைகளெல்லாம் பாசிசமாக தெரியவில்லையா? இவைகளுக்கு என்ன பதில் கூறும் உணர்வு கும்பல்? இவைகளில் சில நாங்கள் நடத்தியவையல்ல என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அனைவரும் நேற்றுவரை ஒன்றாக இருந்தவர்கள் என்பதும் அந்தந்த நிலைபாடுகளில் இவர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

அடுத்து கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியில் முத்தாய்ப்பாக அவர்கள் கூறியிருப்பது நக்சலைட், மாவோயிஸ்ட் போல இவர்களும் தீவிரவாதக் குழு தான் என்றும், இரகசியமாக புத்தகங்கள் வெளியிட்டுப் படித்து எரித்து விடுகிறார்கள் என்றும் மேலெழுந்தவாரியாக எழுதியிருக்கிறார்கள். இப்படி எழுதியிருப்பதன் மூலம் இரண்டு விசயங்களை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஒன்று கம்யூனிசம் குறித்து ஒரு சுக்கும் இந்தக் கும்பலுக்கு தெரியாது. இரண்டு, அரசு எந்திரம் முஸ்லீம்கள் மீது திணித்திருக்கும் தீவிரவாத முத்திரையை அகற்ற அரசே முதல் பயங்கரவாதி என்று அம்பலமாக்கிவரும் புரட்சிகர கம்யூனிஸ்ட்களை ஏனைய ஓட்டுக் கட்சிகளைப் போல இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக கருத்து பயங்கரவாதம் செய்யும் இந்த உணர்வு கும்பல்; அதே அரசு எந்திரம் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் மீது திணிக்க நினைக்கும் தீவிரவாத முத்திரையை ஏற்று அதை தன் அணிகளிடம் பரப்புரை செய்கிறார்கள். தெளிவாக சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு தெள்ளெனப் புரியும் உணர்வு கும்பல் போன்ற மதவாத அமைப்புகளின் அரசியல் பாத்திரம் என்ன என்பது. சந்தேகத்துக்கு இடமின்றி அது அரசு எந்திரத்திற்கு அதாவது பார்ப்பன பயங்கரவாதத்துக்கு துணை போவதையும், உதவி செய்வதையும் தவிர வேறொன்றுமில்லை.

 

புரட்சிகர கம்யூனிஸ்டுகள் ஏன் இரகசியமாக செயல்பட வேண்டும்?

இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் எந்த அளவுக்கு வெளிப்படையாக செயல்பட வேண்டிய தேவை இருக்கிறதோ, அதே அளவுக்கு இரகசியமாக செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்டுகளின் நோக்கம் ஓட்டுச் சாக்கடையில் ஐக்கியமாகி, ஓட்டுப் பொறுக்கி அரசியல் எத்துவானிகளிடம் பலத்தைக் காட்டி சில்லரை லாபங்களை, சீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதல்ல. அரசு என்பதன் முழுமையான பொருளை உணர்ந்து, சமூக மாற்றங்களை வரலாற்று ரீதியிலும், இயங்கியல் ரீதியிலும் ஆராய்ந்து, அரசு என்பது ஒரு வர்க்கத்தில் சார்பில் பிற வர்க்கங்களை அடக்கியாளும் அமைப்பு என்பதால் அதை மக்கள் பலத்தால் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அமர வைப்பது. இந்த நோக்கத்தை வெளிப்படையாக மட்டும்இருந்து செயல்படுத்திவிட முடியுமா? அரசு தன்னை எதிர்ப்போரை என்ன செய்யும் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஹதீஸ்களில் தேடிப் பார்க்கட்டும். முகம்மது, தன்னுடைய ஆட்சிக்கு எதிராக சதி செய்தார்கள் என்று கூறி 600 க்கும் மேற்பட்டவர்கள் தலையை வெட்டி வீசிய கதை கிடைக்கும். என்றால் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அரசைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்களா? இல்லை. சுவரொட்டி ஒட்டியதற்கு கூட குண்டர் சட்டம் பாய்ந்த கொடுமையையும் கூட எதிர் கொண்டு நிற்கிறார்கள். ஆளும் வர்கங்களின் தடைகள் அனைத்தையும் தாண்டி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் தங்களுடைய நடவடிக்கைகள் அரசுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான். இதைத் தான் இரகசிய நடவடிக்கை, தீவிரவாத நடவடிக்கை என்று அவதூறு செய்கின்றன ஆளும் வர்க்கங்கள். அதனால் தான் தீவிரவாத முத்திரை குத்திடத் துடிக்கிறது. ஆளும் வர்க்கங்களின் அந்த துடிப்பைத்தான் உணர்வு கும்பல் செயல்படுத்தியிருக்கிறது.

 

அரசின், ஆளும் வர்க்கங்களின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், பார்ப்பன பாசிசத்தின் நோக்கங்கள் வேறு வேறு அல்ல. ஒன்றுதான். அது உழைக்கும் மக்களை அவர்களின் மேய்யான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பி மறக்கடித்து அவர்களை ஒட்டச் சுரண்டி வாழ விடாமல் செய்வது. உணர்வு கும்பல் உள்ளிட்ட மதவாதம் பேசும் அமைப்புகளின் நோக்கமும் அதுவே தான். எல்லா விசயங்களையும் கடவுளிடம் முறையிட முடியுமா? முறையிட்டு தீர்த்துக் கொள்ள முடியுமா? சாக்கடை அடைப்பை சரி செய் என்று கடவுளிடம் வேண்டி விட்டு சும்மா இருந்து விடுவீர்களா? அடைப்பை சரி செய்யாதவரை நாற்றம் இருக்கத்தானே செய்யும். நீங்கள் இறங்கி சரி செய்யாத வரை பிரச்சனை தீராது. இந்த உலகில் மதம் தவிர்த்த வேறு பிரச்ச்னைகளே இல்லையா? உலகம் இரண்டாக பிரிந்திருக்கிறது. ஒன்று சுரண்டும் வர்க்கம், மற்றது சுரண்டப்படும் வர்க்கம். ஒன்றுக்கொன்று தீராப் பகைமை கொண்ட இந்த இரண்டு வர்க்கங்களில் நீங்கள் எந்தப் பக்கம்? நீங்கள் சுரண்டும் வர்க்கம் என்றால் தோற்கடிக்கப்பட்டே தீருவீர்கள், நீங்கள் சுரண்டப்படும் வர்க்கம் என்றால் உங்களை சுரண்டுபவர்களை எதிர்த்துப் போராடாமல் உங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. இதில் உங்கள் பங்களிப்பு என்ன? என்பது மட்டுமே கேள்வி. நீங்கள் அல்லாவை நம்பிக்கொள்ளுங்கள், தொழுது கொள்ளுங்கள், நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் அதில் பிரச்சனை ஒன்றுமில்லை. உங்கள் சமூக வாழ்க்கைக்காக என்ன செய்யப் போகிறீர்கள்? அது மட்டுமே கேள்வி. உங்கள் பதில் என்ன?

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22

 

நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

 

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை!

 

நூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் இவை குறித்து கூறுவதென்ன? நங்கூரக் கல் நங்கூரக் கல்லல்ல என ஒப்புக் கொள்கிறார். கப்பலில் அளவுகள் பைபிளில் இருப்பவை எனவே நாங்கள் அதை ஏற்பதில்லை என்கிறார். டேவிட் ஃபசோல்ட் மீண்டும் மாறிவிட்டார் என்கிறார், (ஃபசோல்ட் மட்டுமல்ல, அது கப்பலல்ல என்று கூறிய அறிவியலாளர்களின் பட்டியலே இருக்கிறது என்பதை நண்பர் தன்னுடைய வசதிக்காக மறந்துவிட்டார்) ஊழிப் பெருவெள்ளம் ஏற்பட்டதை நம்ப வேண்டும் என்கிறார். இது தான் இஹ்சாஸ் கூறியிருப்பது. பின் எப்படி கப்பல் உண்மை என்கிறார். ஒரு கேள்வி கேட்டிருக்கிறார், பின் எப்படி அந்தக் கப்பல் அவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும்? ஐயா! அது கப்பலே இல்லை என்பதற்குத்தான் இவ்வளவு ஆதாரங்களையும் தந்திருக்கிறேன். இதை அந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை படித்துப் பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும். தேவை கருதி அந்த பின்னூட்ட விபரங்களை சுருக்கமாக பார்க்கலாம்.

 

1960ல் ஜார்ஜ் வன்டேமன், டான் லாவரிட்ஜ் எனும் இரு அறிவியலாளர்கள் ராணுவ அனுமதியுடன் அந்த இடத்தை ஆராய்ந்தனர். கப்பல் வடிவிலான அந்த இடத்தை தோண்டியும், டைனமேட்கள் கொண்டு வெடித்தும் பார்த்துவிட்டு, அந்த இடத்தின் வடிவம் கப்பல் போல இருக்கிறதேயன்றி கப்பல் ஒன்றுமில்லை என்று அறிவித்தனர் என்று கட்டுரையிலேயே குறிப்பிட்டிருக்கிறேன். இது போன்ற பல ஆய்வாளர்கள் அங்கு கப்பல் என்று குறிப்பிடத்தகுத்ததாக ஒன்றுமில்லை என பதிவு செய்திருக்கிறார்கள். அனால் நண்பர் இஹ்சாஸ் அவ்வளவு உயரத்துக்கு அந்தக் கப்பல் எப்படி சென்றிருக்க முடியும் என்று கேட்கிறார். முதலில் அது கப்பல் தான் என்பதை உறுதிப்படுத்துங்கள் பின் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்.

 

நண்பர் இஹ்சாஸ் கப்பல் உண்மை என்பதற்கு எந்தவிதமான தரவுகளையும் முன்வைக்கவில்லை என்றாலும் அந்த பதிவின் பின்னூட்டங்களில் சலாஹுத்தீன் என்பவருடன் நடந்த விவாதத்தை சுருக்கி தருகிறேன். அது, நூஹின் கப்பல் எந்த அளவுக்கு புராணப் புரட்டாக இருக்கிறது என்பதை காண்பவர்களுக்கு தூலமாக உணர்த்தும்.

 

அனேக கிருஸ்தவ தளங்களில் மரப்பலகையும் ஆணியும் கண்டுபிடித்ததாக அளந்திருக்கிறார்கள். ஆனால் அங்கு பலகையோ ஆணியோ அல்லது உலோகங்களோ காணப்படவில்லை என்பதே உண்மை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டதாக நீங்களும் நம்பினால் அந்த கிருஸ்தவ தளங்களில் ஆதாரங்களை கேட்டுப் பாருங்கள், அப்போது உண்மை உங்களுக்கே புரியவரும்.

அலுமினியமும், டைட்டானியமும் காணப்பட்டதாக இவர்கள் கூறுவது ஒன்றே போதும் அதை பொய் என்று நிரூபிக்க, காரணம், டைட்டானியம் 1791ல் வில்லியம் கிரிகோரால் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம். அலுமினியமோ ஹான்ஸ் கிரிஸ்டியன் என்பவரால் 1825ல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

 

பைபிளில் கப்பல் தங்கிய இடம் அராராத் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது, குரானில் ஜூதிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அராராத் மலையும் ஜூதி மலையும் வேறு வேறு மலைகள். ஜூதி மலை அர்மீனிய எல்லையில் இருக்கிறது. இப்போது கப்பல் தங்கிய இடமாக எதை கருதுவது? அராராத்தா? ஜூதியா? அராராத்திற்கு அருகிலேயே ஜூதி என்றொரு மலை இருக்க, மலைக்கு ஜபல் என்ற சொல்லும் இருந்திருக்க எந்த இடத்தில் கப்பல் தரை தட்டியது என்பதை தெரிவிக்க குழப்பமே ஏற்படாமல் ஜூதி எனும் சொல்லை தேர்ந்தெடுத்த அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு என்னே தீர்க்கதரிசனம். ஜூதி என்ற சொல்லே மலையையும் குறிக்கும் என்பதால் இதுவரை மொழிபெயர்த்தவர்கள் ஜூதி மலை என்று மொழிபெயர்த்துவிட்டார்கள். நீங்கள் அப்படியில்லை என்கிறீர்கள். இரண்டில் எதை சரி என்பது. ஒன்று செய்யுங்கள் ஜபல் அல் நூர் என்பதுபோல் ஜூதி அல் உஹத் என்பது போன்று ஒரு சொல்லை மேற்கோள் காட்டமுடியுமா?

 

உலகின் பல பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப்பெருக்கின் அடையாளங்கள் இருக்கின்றன. சிசிலியில், சிவாலிக் பகுதிகளில் வெள்ளத்தின் அடையாளங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் நோவாவின் பெருவெள்ளத்தோடு தொடர்புடையனவா? அந்தப்பெருவெள்ளம் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கா? உலகம் முழுமைக்குமா? இந்தக்கதையின் படி வெள்ளம் உலகம் முழுமைக்கும் தான். இல்லையென்றால் அனைத்து மிருகங்களிலும் பறவைகளிலும் புள்ளினங்களிலும் சதைசதையாக ஏற்றிக்கொள்ளச் சொல்லவேண்டிய அவசியமென்ன? உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே மாதிரியான விலங்குகள் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் அந்தந்தப் பகுதிக்கேயான சிறப்பு விலங்குகளாக இருக்கும். ஒரு பகுதியை மட்டும் அழிக்க நினைத்த இறைவன் அந்தப்பகுதிக்கான சிறப்பு விலங்கை மட்டும் ஏற்றிக்கொள்ளச்சொல்லாமல் விலங்குகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஜோடியை ஏற்றிக்கொள்ளச்சொல்வானேன்? இந்த ஒவ்வொன்றிலிருந்தும் எனும் சொல்லுக்கான பொருளை நூஹ் சரியாக புரிந்து கொள்ளவில்லையா அல்லது அந்தச்சொல்லுக்கு (மின் குல்லின்) அந்தப்பகுதியின் சிற்ப்பு விலங்கை குறிக்கும் பொருள் இருக்கிறதா என்பதை நீங்கள் தான் அருஞ்சொற்பொருள் கண்டு விளக்கவேண்டும். அந்தப்பகுதியில் இருக்கும் ஆனால் ஏனைய பகுதிகளில் இல்லாதா விலங்குகளை மட்டும் ஏற்றச்சொல்லியிருந்தால் போதுமானதல்லவா? ஏன் எல்லாவற்றிலும் ஜோடி ஜோடியாக என்று சொல்லவேண்டும்? அல்லது அந்தப்பகுதியில் இருந்த விலங்குகள் வேறு எந்தப்பகுதியிலுமே இருந்திராத அதிசய விலங்குகளாக இருந்தன என்பதற்கு குரானில் வசனம் ஏதேனும் இருக்கிறதா?

 

இன்றைய அராராத் மலையின் உயரம் நான் கூற வேண்டிய அவசியமின்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வளவு உய்ரத்திலுள்ள மலையில் கப்பல் தங்கவேண்டுமென்றால் அந்த உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்திருக்கவேண்டும். கடல் மட்டத்தில் ஒரு சில மீட்டர்கள் கூடினாலே பாதி உலகம் காணாமல் போய்விடும் தெரியுமா உங்களுக்கு? மலை உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது உண்மை, எல்லா மிருகங்களையும் ஏற்றிக்கொள்ளச்சொன்னது உண்மை ஆனாலும் வெள்ளம் ஒரு பகுதில் மட்டும் தான், எங்கோ இடிக்கிறது அல்லவா? எவெரெஸ்ட் உயரத்திற்கு வெள்ளம் வரவில்லை என்றாலும் அராராத் அளவிற்கு வந்திருக்கிறது, சரிதானே இப்போது அராராத்தை விட உயரமான இமயமலை, ஆல்ப்ஸ்மலை, ராக்கி மலை, கிளிமஞ்சாரோ போன்ற சில உயரமான மலைகளை தவிர ஏனைய பகுதிகள் மூழ்கியிருக்கும் சரிதானே. அப்போது இதுபோன்ற வெகுசில மலைகளின் உயரத்தில் தங்கியிருந்த மக்களை தவிர ஏனையவர்களெல்லாம் அழிந்திருப்பார்கள் அப்படித்தானே. இப்படிப்பட்ட வெள்ளத்தை உலகம் முழுமைக்கும் வந்த வெள்ளமாக சொல்வது பொருத்தமாக இருக்குமா? இல்லை மொசபட்டோமியா பகுதிக்கு மட்டும் வந்த வெள்ளம் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா?

 

ராண் யாட் கண்டெடுத்ததாக சொல்லப்படும் மட்கிப்போன பலகையில் இருந்த கார்பனின் அளவு அவர் கொடுத்திருக்கும் இரண்டு பரிசோதனை கூடங்களின் அளவும் மாறுபாடாக இருக்கிறது. ஒன்றில் 1.88 விழுக்காடு மற்றொன்றில் 4.95 விழுக்காடு. மேலும் இந்த அளவு கார்பன் தான் அந்த பகுதியெங்கும் அதாவது அந்த மலைப்பகுதி முழுவதும் கிடைக்கிறது என்பதை முனைவர் பௌம் கார்ட்னெர் சோதனை செய்து காட்டியிருக்கிறார். எனவே ரான் யாட் கண்டெடுத்ததாக குறிப்பிடப்படுவது மரமல்ல. இன்னும் அந்த மலை எரிமலை குளம்புகளாலானது, எனவே மாங்கனீஸ் போன்ற வேதிப்பொருட்கள் கலந்திருக்கும் இதைத்தான் உலோகமாகவும் காட்டுகிறார்.

 

கல்லாய்ச்சமைந்த மரம் என ரான் யாட் காட்டுவதும் கல்மரமல்ல. இதுவரை உலகில் கண்டெடுக்கப்பட்ட எந்த கல்லாய்ச் சமைந்த மரத்தின் வகையிலும் சாராமலிருக்கிறது. முக்கியமான விசயம் என்னவென்றால் கல்லாய் மாறிய மரம் எனக் காட்டப்படும் ஒன்றில் வளர்வளையங்கள் காணப்படவில்லை. எந்த மரத்துண்டிலும் வளர்ச்சியை குறிக்கும் வரைகள் காணப்படும், கல்லாய் சமைந்த மரத்திலும் இவ்வரைகள் மாறுவதில்லை. ஆனால் இவ்வாறான வரைகள் எதுவும் கண்டெடுக்கப்பட்ட அதில் காணப்படவில்லை. இதுவரை 200 கல்லாய்ச் சமைந்த மரங்களை கண்டெடுத்திருக்கிறார்கள். அனைத்தும் இன்றைய மரவகைகளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன, ஆனால் இதில் மட்டும் எந்த தொடர்பையும் காணமுடியவில்லை. ஏன்? ஆக சாதாரணமாக மலைப்பகுதிகளில் காணப்படும் எடை குறைந்த கூடிய கற்களை மரம் என்றும் கல்லாய்ப் போன மரம் என்றும் காட்டியிருக்கிறார்.

 

ரான் யாட்டுடன் ஜி பி ஆர் (தரை துளைக்கும் ரேடார்) பணியில் ஈடுபட்டிருந்த டாம் ஃபென்னர் கூறுகிறார், “பலமுறை நாங்கள் பரிசோதனை செய்தும் ஒவ்வொறு முறையும் வேறுவேறான முடிவுகளே கிடைத்தன, ஒரே மாதிரியான முடிவு திரும்பவும் கிடைக்கவில்லை எனவே ஒன்றரை நாளில் ரேடார் பணியை நாங்கள் முடித்துக்கொண்டோம்” என்று. மேலும் அதே இடங்களில் முனைவர் பௌம் கார்ட்னெர் மூலக்கூறு அதிர்வு கருவியை கொண்டு சோதித்துப்பார்த்துவிட்டு “மனித கரங்களினால் பணியப்பட்ட எதுவும் இங்கு இருப்பதற்கு 10விழுக்காடிற்கும் குறைவான வாய்ப்பே இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

 

1959ல் அந்த இடம் நோவாவின் கப்பலாக அறியப்பட்டதிலிருந்து அங்கு ஆய்வுகளைச் செய்த பலர் இங்கு நோவாவின் கப்பல் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் வன்டேமன்

டான் லாவரிட்ஜ்

டேவிட் மெர்லிங்

டேவிட் ஃபசோல்டு

டாம் ஃபென்னர்

பௌம் கார்ட்னெர்

ஜான் மோரிஸ்

ஹெரால்ட் கஃபின்

இன்னும் பலர். இதன் பிறகும் அங்கு நோவாவின் கப்பல் இருப்பதாக நம்பத்தான் முடியும், ஏற்கமுடியாது.

 

ஆக மிகத்தெளிவாக அங்கு கப்பலோ படகோ அல்லது அது போன்ற எதுவுமே இல்லை என்பது மட்டுமல்லாமல் அவ்வாறு கூறுபவர்களெல்லாம் தங்கள் மதவாத பொய்களை நிலை நிறுத்துவதற்காக மூளையை மூடிக் கொண்டு முனங்கிக் கொண்டிருப்பவர்களே என்பதும் உறுதி.

 

நண்பர் இஹ்சாஸின் பதிவில் இன்னொரு அம்சமும் இருக்கிறது. அதாவது நூஹ் என்பவர் 950 ஆண்டுகள் பூமியில் வாழ்ந்தார் என்று குரான் கூறுகிறது. இவ்வளவு நீண்ட காலம் மனிதன் பூமியில் வாழ்வதாக இருந்தால் அதுவரை மனித உடலின் வேதிப்பொருட்கள் தாக்குப்பிடிக்காது எனக் குறிப்பிட்டிருந்தேன். இதற்கு பதில் கூறுவதாக நினைத்துக் கொண்டு நண்பர் இஹ்சாஸ் \\\இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். கடவுள் அதீத சக்தி வாய்ந்தவன். இதுவெல்லாம் அவனுக்கு சிரமமானதல்ல என்பதுதான் எமது நிலை. இது தவறு என்பதற்கு முன் கடவுள் இல்லை என்று ஒரு முடிவுக்கு வர வேண்டும். அது வரை இது தவறாகாது. இதுபோல் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதுதான் பதில்/// கடவுள் இல்லை எனும் அறுதியிலிருந்து தான் நான் வாதிட்டுக் கொண்டிருக்கிறேன். இது வெறும் வாதமல்ல. முடிந்தால் நான் ஏற்கனவே பலரிடம் கடவுளின் இருப்பை மறுத்து கூறியவற்றை மீண்டும் இங்கே கூறுகிறேன். நண்பர் இஹ்சாஸுக்கு திறனிருந்தால் இவைகளுக்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.

 

கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள்:

1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

 

கடவுள் இல்லை என்பதற்கு வரலாற்றுரீதியான காரணங்கள்:

1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.

2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

 

கடவுள் இல்லை என்பதற்கு சமூக ரீதியான காரணங்கள்:

1. கடவுளின் தகுதிகள் கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.

2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

 

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 18

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 19

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 20

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 21

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

நுழைவாயில்

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 2

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

முன்குறிப்பு: இத்தொடரின் கடந்த கட்டுரையில் நண்பர் அம்பலப்படுத்துவதாக கூறியிருந்தார். இதுவரை செய்யவில்லை, அவரின் அம்பலப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன், எனக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அம்பலப்படுத்துவதாக(!) கருதிக்கொண்டு ஒரு பதிவிட்டிருக்கிறார்.  அம்பலப்படுத்தல் என்றால் என்ன?  எனக்கு எதிராக எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்?  அம்பலப்படுத்தல் என்றால் நான் வெளிப்படுத்தாமல் மறைத்த ஒன்றை அவர் வெளிப்படுத்தி நான் அதை மறைத்திருக்கிறேன் என்பதை விளக்கினால் அது அம்பலப்படுத்தலாக கொள்ளப்படும்.  அவர் அழைத்ததை நான் மறைக்கவில்லை. அவருக்கு நான் பதிலளித்து விட்டதையும் குறிப்பிட்டிருக்கிறேன். மீண்டும், மீண்டும் அவர் அழைக்கவே அதற்கு பதிலளிக்காமல், வெளியிடாமல், கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டேன் என்பதையும் மறைக்கவில்லை, வெளிப்படையாக கூறியிருக்கிறேன். இப்போது நண்பர் அந்த மின்னஞ்சல் செய்திகளை பதிவாக இட்டிருக்கிறார். இதில் எதை நான் மறைத்திருக்கிறேன், எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருக்கும் இன்னொன்று, அவர் தொடர்ச்சியாக இப்படி அழைத்ததன் விளைவாகவே கடந்த பதிவை நேரடி விவாதம் குறித்து எழுதியிருப்பதாகவும், அது அவர் அழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறல்ல, நண்பர் எந்த வரிசையில் எனக்கான மறுப்பை எழுதியிருக்கிறாரோ அந்த வரிசையிலேயே நான் இத்தொடரை எழுதி வருகிறேன். அந்த வரிசையில் அவர் எழுதிய நேரடி விவாதம் தொடர்பான இடுகை வந்ததால் அதற்கு பதிலெழுதியிருந்தேனேயன்றி, நண்பர் அழைத்திருக்கிறார் என்பதால் வரிசை மீறி அதை எடுத்துக் கொள்ளவில்லை.

இப்போது மட்டும் இதை வரிசை மீறி விளக்கமளிப்பதேன் என்றால், அதில் தனிப்பதிவாக இடுவதற்கான விசயம் ஒன்றும் இல்லை என்பதால் முன்குறிப்பாக தெரிவித்திருக்கிறேன், அவ்வளவு தான்.

 ****************************************

என்னுடைய ’இஸ்லாமே கற்பனைகளின் களம் 2’ பதிவில் இஸ்லாமியர்கள் மத அடிப்படையில் ஒன்றிணைவது எப்படி இந்துப் பாசிசங்களுக்கு உதவுகிறது என்பதை விரிவாக விளக்கியிருந்தேன்.  இதற்கு பதில் தருவதாக இருந்தால், நான் கூறியது தவறு என்பதை விளக்கி சரியானதாக அவர் கருதுவதை கூற வேண்டும். இதை நண்பர் செய்திருக்கிறாரா? குறைந்த பட்சம் நான் கூறியிருப்பதை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூட இல்லை. மாறாக மேலோட்டமாக எனக்கு நானே முரண்படுவதாக காட்டிக் கொண்டு, உளறுகிறேன்,  லாஜிக் இல்லை, பல்டி அடிக்கிறார், சுயநினைவோடுதான் எழுதினாரா? என்றெல்லாம் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.  ஆனாலும் பதிலெழுதுவதாய் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதால் இரண்டு கேள்விகளையும் கேட்டு வைத்திருக்கிறார்.

\\எதிரி இருந்தால்அழிக்குமே தவிர ஆக்காது! இஸ்லாமியர்கள் ஒண்றினைந்தால் அதைக்காட்டி இந்துக்களும்ஒண்றினந்த்துவிடுவார்களாம். இன்று இஸ்லாமியர்கள்ஒண்றினைந்திருக்கின்றனர்  அதனால் இந்துக்கள்ஒண்றிணைந்துவிட்டனரா?//\\பார்ப்பனியம் அனைத்து உழைக்கும் மக்களுக்கு  விரோதி என்பதால்இஸ்லாமியர்கள் மத ரீதியில் ஒண்றினைவது கூடாது என்கிறார்.பார்ப்பனியத்தை  ஒழிக்க வேண்டும் என்றால்அதற்கு எதிரியாகவிருப்பவர்கள்ஒன்று கூடினால்தான் முடியும் இதனால்  இஸ்லாமியர்கள் ஒன்று கூடுவது அவசியம்//

பார்ப்பனிய பாசிசங்கள் என்றும் ஒடுக்கப்பட்டவர்களை தங்களோடு உள்ளவர்களாய் கருதுவதில்லை. ஒடுக்கப்பட்டவர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாகவே வைத்திருக்கிறார்கள்.  அதேநேரம் அடிமைகளாய் வைத்திருப்பவர்களையே தேவைப்பட்ட இடங்களில் தங்கள் இராணுவமாகவும் பயன்படுத்துகிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று?  அவர்களை இந்து எனும் மதத்திற்குள் ஒன்றிணைத்து வைத்திருப்பதால். அடிமைகளாக்கி ஒடுக்கப்பட்டிருப்பவர்கள் அவர்களுக்கு எதிராக அல்லவா கிளர்ந்தெழ வேண்டும். அதற்காகத்தான் காலம்தோறும் எதிரிகளை உருவாக்கி வருகிறர்கள். சாங்கியம், பௌத்தம் தொடங்கி இஸ்லாம் ஈறாக எதிரிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்த எதிரிகளைக் காட்டியே இந்து ஒற்றுமையை கட்டிக் காக்கிறார்கள்.  இந்துப்பாசிசங்கள் இஸ்லாத்திற்கு எதிராக எப்படி பரப்புரை செய்கிறார்கள் என்பதை கவனித்துப்பார்த்தால் இது எளிதாக விளங்கும்.  இன்றுவரை ஒடுக்கப்பட்டவர்கள் தங்களை இந்து என கருதிக் கொள்வதுதான் பார்ப்பனியத்தின் முதன்மையான பலமாக இருக்கிறது.  அவர்கள் தங்களை இந்துவாக கருதிக் கொண்டிருக்கும்வரை பார்ப்பனியத்தை வீழ்த்துவது கடினம்.

இந்தியாவில் சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் பார்ப்பனியம் வெகு எளிதாக இஸ்லாமியர்களை பிளவுபடுத்திவிட முடியும். இஸ்லாமியர்களில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு சலுகைகள் அளித்து மற்றவர்களை ஒடுக்குவதை தொடர்ந்து செய்து வந்தால் இஸ்லாமியர்கள் வெகு எளிதாக பிரிந்துவிடுவார்கள்.  ஆனால் கவனமாக அவ்வாறு செய்யாமல் தவிர்த்து வருகிறது பார்ப்பனியம்.  பண்டைய இந்தியாவில் சிறுபான்மையினர் என்று ஒதுக்கமுடியாத அளவில் இஸ்லாமியர்கள் இருந்தார்கள். இதை வெகு தந்திரமாக பிரித்தாண்டார்கள். கவனிக்க, பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை முதலில் முஸ்லீம்களிடமிருந்து எழவில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் தான் முதலில் இந்த திட்டத்தை முன்மொழிந்து பரப்பினார்கள். தந்திரமாக பெருவாரியான முஸ்லீம்களை தனிநாடாக பிரித்துவிட்டு இந்திய முஸ்லீம்களை ஒன்றிணைத்திருக்கிறார்கள்.

இவர்களை தனிப்பட்ட மதத்திற்கு எதிரானவர்களாக கருதமுடியாது. அனைத்து மதங்களிலும் இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரானவர்கள்.  மத அடிப்படையில் இந்து, முஸ்லீம், கிருஸ்தவன் என்று பிரிந்து ஒன்றிணைவது அந்த பாசிசங்களுக்கு ஆதரவாகவும், சொந்த வர்க்க நலனுக்கு எதிராகவும் அமைகிறது.  மலம் அள்ளும் ஒரு ஒடுக்கப்பட்டவனும், மகிந்திராக்களும் இந்து எனும் அடிப்படையில் ஒன்றாகிவிட முடியுமா? ஒரு ஏழை சுமைதூக்கும் தொழிலாளியும் பால் தினகரன்களும் கிருஸ்தவன் எனும் அடிப்படையில் ஒன்றாகிவிடமுடியுமா? அதுபோல் தான் முஸ்லீம்களும். உழைக்கும் வர்க்கமாக இவர்கள் ஒன்றிணைய வேண்டும், மத அடிப்படையில் ஒன்றிணைய ஒன்றிணைய அது பார்ப்பனிய பசிசங்களுக்குத்தான் உதவுமேயன்றி ஒருபோதும் சொந்த வர்க்கத்திற்கு உதவியாய் இருக்காது.  பாட்டாளி வர்க்கத்திற்கு சொந்த மதத்திலிருக்கும் ஆளும்வர்க்கம் எதிரானது தான். இதை புரிந்து கொள்ளாதவரை பாட்டாளிவர்க்கம் பயன்படுத்தப்படுமேயன்றி பலன் பெறாது.

மத பரப்புரை நிகழ்சிகள் ஒருவித ஹீரோயிஸ மனப்பான்மையாகவே அமைகின்றன.  ஒரு அமைப்பின் பிரபலமான தலைவர் ஒருவரின் நிகழ்சிக்கும் அதே அமைப்பின் பிரபலமில்லாத ஒருவரின் நிகழ்ச்சிக்கும் மக்களின் ஆர்வம் ஒரேபோல் இருப்பதில்லை. இது ஏன் என்பதை சிந்தித்தால் மத பரப்புரை நிகழ்சிகளின் உள்ளீடு என்ன என்பது எளிதில் புரிந்து போகும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கூட மக்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை நுழைவாயில் பகுதியிலும் எளிதாக காட்டியிருக்கிறேன். \\ இந்து மதத்தில் அதன் ஆன்மீக சாரங்களை யாரும் வாழ்க்கை நெறியாக கொள்வதில்லை. கிருஸ்துவத்திலும் கூட ஆன்மீகத்தையும் சமூகத்தையும் பிரித்துப்பார்க்கும் போக்கு வெளிப்படுகிறது, ஆனால் இஸ்லாத்திலோ அதை பின்பற்றுபவர்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது//  இந்நிலை ஆய்வு நோக்கிலிருந்து சரி தவறுகளை உள்வசமாய் பரிசீலித்து பெறப்பட்ட முடிவு அல்ல. நெகிழ்வுத்தன்மையுடன் ஆன்மீகத்தை அணுகுவது போல் காட்டிக் கொள்வது இந்து மதத்தை பின்பற்றும் சாதாரண மக்களிடம் எப்படி இயல்பாக இருக்கிறதோ, அதுபோலவே உறுதித்தன்மையுடன் இருப்பது போல் காட்டிக் கொள்வது சாதாரண முஸ்லீம்களிடம் இயல்பாக இருக்கிறது.  மதவிவகாரங்களைக் கடந்து செல்வது ஒரு இந்துவுக்கு சாதாரணமாக இருப்பது போல் முஸ்லீம்களுக்கு இல்லை என்பது நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தின் இறுக்கத்தில் இருக்கிறது. இதை இஸ்லாம் உண்மையானது என்பதால் தான் கேட்டவுடன் ஈர்க்கிறது என்று மொழிபெயர்க்க முடியாது.  ஏனென்றால் கேட்கப்படும் எல்லோரையும் அது ஈர்ப்பதில்லை.  இதை முஸ்லீம்களுக்கு மதத்தின் மீதுள்ள ஆர்வம் என்றோ, இஸ்லாத்தின் உண்மையான தன்மையின் சான்று என்றோ கூறமுடியாது. அது முஸ்லீம்களுக்கு கற்பிக்கப்பட்ட வடிவத்தை மட்டுமே காட்டுகிறது.  இந்த வடிவம் இஸ்லாத்தின் உண்மைத்தன்மையல்ல என்பதை விளக்குவதற்கே என்னுடைய தொடரை (இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே) எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இஸ்லாம் முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது.  ஏனென்றால் இஸ்லாம் என்பது  வணிகர்களின் நிர்வாகத்தை நாடோடி, விவசாய, வணிக அரபுக் குலங்களின் பொதுவான நிர்வாகமாக வளர்த்தெடுக்கும் ஒரு முயற்சியாக தோன்றியது தான்.  இதை தொடரின் இறுதிப் பகுதியில் நான் விளக்கவிருக்கிறேன்.  முதலாளித்துவம் ஒட்டுமொத்த மனித இனத்தை எவ்வாறு பாதிக்கிறது, மக்களைச் சுரண்டி ஒருபக்கம் குவிக்கிறது என்பது பலவாறாக உலகில் விளக்கப்பட்டுள்ளது.  மட்டுமல்லாது உலக மக்கள் வரலாறு சமூக காலகட்டங்களின் வழியாக எப்படி கடந்து வந்துள்ளது என்பதெல்லாம் மக்கள் முன் ஆய்வுரைகளாக உள்ளன. அவைகளை விளக்கினால் அது தனி தலைப்பாக நீண்டு செல்லும்.  முதலாளித்துவத்தின் ஆன்மாவான லாபக்கோட்பாட்டை இஸ்லாம் ஆதரிக்கிறது என்பதால், மக்களின் மனங்களை முதலாளித்துவம் கட்டமைத்திருக்கும் சுய உதவிக் குழுக்கள் எப்படி கட்டுப்படுத்த விரும்புகிறதோ அதே விதத்தில் தான் இஸ்லாமும் மக்களின் மனங்களை கட்டுப்படுத்த விரும்புகிறது என்பதால் முதலாளித்துவத்தின் கொடுமைகளை மக்களிடமிருந்து இஸ்லாத்தால் நீக்க முடியாது. இது போராட்டங்களோடும், வெற்று கோசங்களோடும் முடிந்துவிடும் விசயமல்ல. எனவே இஸ்லாத்தின் இறுக்கங்களை உடைத்து முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்க அடிப்படையில் அணிதிரட்ட வேண்டியது அவசியமாகிறது. (இது எல்லா மதங்களுக்கும் பொருந்துவது)

நண்பர் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய இறையியல் குறித்து நான் கூறுவதாக கூறிக் கொண்டிருக்கிறார். ஒன்று விளங்கவில்லை என்றால் மீண்டும் கேட்கலாம். தவறில்லை. ஆனால், நான் விளக்கமளித்த பிறகும் அதையே தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால் அதை பிடிவாதம் என்று தான் வகைப்படுத்த முடியும். \\ அரபு தேசியவாதம், அரபு மார்க்ஸியம் என்று இஸ்லாமிய இறையியலை விட்டுக்கொடுக்காமல் தத்துவம் பேசியவர்களெல்லாம் இன்றைய நிதிமூலதனத்தின் முன் முனை மழுங்கிய வாளாக செயலற்றிருக்கிறார்கள்//  இது தான் நான் நுழைவாயில் பகுதியில் எழுதியிருக்கும் வாக்கியம்.  இதில் அரபு தேசியவாதம், அரபு மார்க்சியம் இவையிரண்டும் இஸ்லாமிய இறையியல் என்று நான் எங்கே குறிப்பிட்டிருக்கிறேன். இஸ்லாமிய இறையியலை அதாவது இஸ்லாத்திலிருக்கும் கடவுள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்காமல், சமூகத்திற்கு மார்க்சியக் கொள்கைகளையும், ஆன்மீகத்திற்கு இஸ்லாமிய கடவுட் கொள்கையையும் கலந்து அரபு மார்க்சியம் என்று தனி கோட்பாடு ஒன்றை உருவாக்கினார்கள். சில காலம் இது செல்வாக்கிலும் இருந்தது. ஆனாலும் அது முதலாளித்துவத்தின் நிதி மூலதனத்தின் முன்னால் செயலற்றதாகிவிட்டது. இது தான் இந்த வாக்கியத்தின் பொருள் என்பது, தமிழ் தெரிந்த யாருக்கும் எளிதில் விளங்கும். இதைத்தான் என்னுடைய முந்தைய பதிவிலும் சுட்டிக் காட்டியிருந்தேன் \\ அரபுலக மண்ணில் ஆன்மீகத்திற்கு இஸ்லாமும் சமூகத்திற்கு மார்க்ஸியமும் என்று இரணடையும் இணைத்து, கடவுட் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் மார்க்ஸிய தத்துவங்களை இஸ்லாத்துடன் இணைத்து உருவானது தான் அரபு மார்க்ஸியம்// ஆனால் நண்பர் மீண்டும் தன்னுடைய பதிவில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், \\ இவர் இஸ்லாமிய இறையியலாக அரபு தேசியவாதம்,அரபு மார்க்ஸியம் போன்றவற்றை குறிப்பிட்டார். அதை தவறு என்று கூறியதற்கு அவர் அளிக்கும் சமாளிப்பு பதில்தான் இது// \\ அரபு மார்க்ஸியம், தேசியவாதம் என்பன இஸ்லாமிய இறையியல் என்று தெளிவாகவே குறிப்பிடுகிறார்// மேற்குறிப்பிட்ட அந்த வாக்கியம் எப்படி அவர் கூறும் பொருளில் இருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.  அல்லது இதில் அவர் வறட்டு பிடிவாதம் பிடித்ததை ஒப்புக்கொள்ள வேண்டும்.

நுழைவாயில் பகுதியில் நான் ஒரு வேண்டுகோளை வைத்திருந்தேன்.  அதாவது இந்தத்தொடரை முன்முடிவுகளுடன் அணுகாதீர்கள் என்று. ஒருவரின் முன்முடிவு என்பதற்கும், அவரின் நிலைப்பாடு என்பதற்கும் ஒரு வித்தியாசமும் இல்லையா? நண்பருக்கு மெய்யாகவே இரண்டு சொற்களுக்கும் இடையே பொருள் வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை என்றால், நல்ல தமிழாசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.  இந்த தொடரில் எனக்கு ஒரு நிலைபாடு இருக்கிறது, நண்பருக்கு ஒரு நிலைபாடு இருக்கிறது. இருவரும் அவரவர் நிலைபாடுகளில் நின்று தான் எழுதிக் கொண்டிருக்கிறோம். அந்த நிலைபாட்டை விட்டுவிட்டு விவாதம் செய்யுங்கள் என்று சொன்னது யார்? நண்பர் இப்படி எழுதியிருக்கிறார், \\ இஸ்லாம் சரியானது என்று நம்பாமல் அதைப்பற்றி எழுத வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பது என்பது அறிவுடமையா? சந்தேகத்தில் இருந்தால் அது சரி என்று எந்தவகையில் ஒருவர் வாதிட முன் வருவார்// இஸ்லாத்தை மறுப்பது என்னுடைய நிலைப்பாடு, அதேநேரம் எந்த பரிசீலனையும் இல்லாமல் விமர்சனமாக வைக்கப்படுவது அனைத்தும் தவறானது என்று நான் முடிவு செய்ய இயலுமா? இது என்னுடைய கருத்து அதற்கு எதிராக வைக்கப்படுவது மாற்றுக் கருத்து எனும் அடிப்படையில் தான் என்னுடைய வாதங்கள் அமைந்திருக்கும்.  ஆனால் நண்பரின் வாதங்களைப் பார்த்தால், \\ உளறிக் கொட்டுகிறார், அறிவில்லாமல் எழுதியிருக்கிறார், சமாளிக்கிறார், சுயநினைவோடு இருந்தாரா? மூடிக் கொண்டு போகவேண்டும், தைரியமில்லாத கோழைகள்// இப்படிப் போகும். இவ்வாறு எப்போது ஒருவரால் எழுதமுடியும். எங்கு விமர்சனம், மாற்றுக் கருத்து எனும் எண்ணம் இல்லாமல் தன்னுடைய நிலைப்பாட்டுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அது தவறாக மட்டுமே இருக்கமுடியும் என்ற முன்முடிவு இருக்கும் இடத்தில் தான் இதுபோன்ற சொல்லாடல்கள் பிறக்க முடியும்.  ஒருவேளை என்னுடைய வாதங்கள் நண்பருக்கு உளறலாக தெரிந்தால், அது என்ன விதத்தில் உளறலாக இருக்கிறது என்பதை விளக்க வேண்டுமேயல்லாமல், உளறல் என்று எழுதக்கூடாது. இது போன்றவைகளெல்லாம் கண்ணியமாக, அழகான முறையில் விவாதம் செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டியது.

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 8

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 8

நான் ஏன் பிஜேவுடன் நேரடிவிவாதம் செய்ய விரும்பவில்லை?
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்
எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

இது இரண்டாவது சுற்று மறுப்பு. இதில் நண்பர் நேரடி விவாதத்திற்கு நான் ஏன் ஆயத்தமாக இல்லை என்பதை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்து பலமுறை விளக்கமளித்த பின்பும், மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. எனவே, காத்திரமான பதில்களோ, மறுப்புகளோ முன்வைக்காத பட்சத்தில் இனி இந்தத் தலைப்பை எடுத்துக் கொள்வதில்லை என முடிவு செய்திருக்கிறேன். ஆகவே கடைசியாக மீண்டும்.

அதற்கு முன்னால் சில விளக்கங்களையும் அளிக்க வேண்டியதிருக்கிறது. நண்பர் இஹ்சாஸ் நான் கடைசி இரண்டு முறையாக என்னுடைய பதிவுகளை முறைப்படி அவரிடம் அவரது தளத்தில் தெரிவிக்கவில்லை என்றொரு குற்றச்சாட்டை வைத்திருந்தார். அது தவறான குற்றச்சாட்டு. நான் எப்போதும் போல் அவருடைய தளத்தில் அதை தெரிவிக்க முயன்றேன். ஆனால் அவருடைய தளத்தில் அது பின்னுட்டமாக ஏற்கப்படவில்லை. பலமுறை முயன்றும் அதுதான் நிலை என்பதால் விட்டுவிட்டேன். இப்படி ஒரு குற்றச்சாட்டு எழக்கூடும் என எதிர்பார்த்ததால் அதை படமாகவும் எடுத்து வைத்திருக்கிறேன். இதோ,

 

அடுத்து, நண்பர் இஹ்சாஸ் முதலில் அவருடைய கட்டுரையிலும், பிறகு இங்கு பின்னூட்டமாகவும், பின்னர் கூகிள் அரட்டையிலும் நேரடி விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதற்கு முறைப்படி நான் பின்னுட்டத்திலும், மின்னஞ்சலிலும், அரட்டையிலும் பதில் கூறினேன். ஆனாலும் அவர் தொடர்ந்து நேரடி விவாதத்திற்கு நீங்கள் வர மறுப்பதற்கான காரணங்களை எல்லாம் வீரியமான பதில்கள் மூலம் தகர்த்து விட்டதாகவும், எனவே நேரடி விவாதத்திற்கு வந்தே தீரவேண்டும் என்றும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருந்தார். அதன் பிறகு அவருக்கு இது குறித்து நான் பதில் கூறுவதை நிறுத்தி விட்டேன். அதன் பின்னர் என்னை அம்பலப்படுத்தப் போவதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கும் நான் பதிலளிக்கவில்லை. இயன்றால் அவர் அம்பலப்படுத்தலாம், நானும் காத்திருக்கிறேன், அவரின் அம்பலப்படுத்தலுக்காக.

நண்பர் இஹ்சாஸ் முதலில் ஒரு தளத்தை நடத்தி வந்தார். அதில் தன்னுடைய மின்னஞ்சல் யாரோ சிலரால் முடக்கப்பட்டு விட்டதாகவும், அதை தொடர்ந்து பயன்படுத்த இயலாததால் வேறொரு மின்னஞ்சலை ஏற்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது அவருடைய (பழைய) தளமே முடக்கப்பட்டு விட்டதாகவும் தொடர்ந்து பயன்படுத்த இயலாததால் வேறொரு தளத்தில் எழுதுவதாகவும் குறிப்பிட்டு அதே பெயரில் வேறொரு தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறார். மட்டுமல்லாது “இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் தொடருக்கு தான் மறுப்பெழுதப் போவதில்லை என்றும் அவருக்கான என்னுடைய மறுப்பை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். ஆனாலும் அவருடைய இரண்டு தளங்களும் தொடர்ந்து இயக்கத்தில் தான் இருக்கின்றன, யாரும் முடக்கவில்லை. இவைகளையெல்லாம் ஏன் அவர் செய்திருக்கிறார் என்பது தெளிவாக புரியவில்லை என்றாலும், வெளிப்படுத்திவிடுவது நல்லது என்பதால் ஒரு தகவலாக தெரிவித்துக் கொள்கிறேன். மட்டுமல்லாது அவருடைய மறுப்புகள் அனைத்திற்கும் வழக்கம்போல் நான் விளக்கமளிப்பேன் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அவருடைய கட்டுரைகளில் பல இடங்களில் இறைவன் இருக்கிறானா எனும் தலைப்பில் விவாதம் செய்துவிட்டு அதன் பிறகே விமர்சனங்களைச் செய்ய வேண்டும் எனும் பொருளில் குறிப்பிட்டிருக்கிறார். நான் செய்யும் யூகம் சரியாக இருக்கும் பட்சத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் இறைவன் இருக்கிறானா எனும் தலைப்பில் விவாதம் செய்தது நண்பர் இஹ்சாஸாகத்தான் இருக்க வேண்டும். என்னுடைய இந்த யூகம் தவறாகவும் இருக்கலாம். இதை எங்கனமேனும் நான் அறிந்துவிடக் கூடும் என்பதால் தானோ என்னவோ தன்னுடைய மின்னஞ்சல் முகவரி முடக்கப்பட்டு விட்டதாக அறிவித்துக் கொண்டார், இன்னும் அவருடைய பழைய மறுப்புகளுக்கு நான் பதிலளிக்கக் கூடாது எனும் எண்ணத்தில் தளமே முடக்கப்பட்டுவிட்டதாக அறிவித்துக் கொண்டார்.  ஒருவேளை என்னுடைய இந்த யூகங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் என்னை நேரடி விவாதத்திற்கு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருப்பதற்கான எதிர்வினையாக அவரை எழுத்து விவாதம் செய்ய வருமாறு அழைக்கிறேன். இது பிடிவாதமல்ல, ஓர் எதிர்வினை அவ்வளவே, ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் அவரின் வசதிகளை, விருப்பத்தைச் சார்ந்தது.

இஸ்லாத்தை விமர்சித்து நான் தொடர்கட்டுரைகள் எழுதுகிறேன். இதில் ஏற்பில்லாத யாரும் இக் கட்டுரைகளை மறுத்து தங்கள் விமர்சனங்களை, எதிர்வினைகளை எடுத்துவைக்கலாம். அப்படி எதிர்வினை புரிபவர்களை குறிப்பிட்ட ஒரு வடிவத்தில் தான் நீங்கள் உங்கள் மறுப்புகளை கூறவேண்டும் அப்போது தான் நான் அதற்கு பதிலளிப்பேன் என்று கூறுவது சரியாக இருக்குமா? நான் எனக்கு வசதியான ஒரு வடிவத்தில் எழுத்து வடிவத்தில் என்னுடைய விமர்சனங்களை வைக்கிறேன். இதற்க்கு மறுப்பு தெரிவிக்க விரும்புபவர்கள் எந்த வடிவத்திலும் அதை தெரிவிக்கலாம், மேடைப் பேச்சாக தெரிவிக்கலாம், எழுத்தில் தெரிவிக்கலாம், – கடிதம் எழுதலாம், மின்னஞ்சலில் தெரிவிக்கலாம் – நேரடியாக என்னிடம் கூறலாம், அவரவர்களுக்கு எப்படி வசதிப்படுகிறதோ அதன்படி அவர்கள் தெரிவிப்பார்கள். அது என்னுடைய கவனத்திற்கு வரும் போது என்னுடைய வசதிப்படி அவர்களுக்கு பதிலளிப்பேன். இதில் முக்கியமானது கேள்விக்கு என்ன பதில், விமர்சனத்திற்கு என்ன விளக்கம் என்பதுதான். மாறாக என்ன வடிவத்தில் அந்த பதில் அல்லது விளக்கம் இருக்கிறது என்பதல்ல. எனவே இவர்கள் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும் என அழைப்பது அடிப்படையிலேயே தவறானது.

இனி நண்பரின் மறுப்புகளுக்குள் கடப்போம். இஸ்லாமியர்களின் சமூகப் பங்களிப்பை அதிகப்படுவதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் “இஸ்லாம் கற்பனைக் கோட்டைகளின் விரிசல்கள் வழியே” எனும் தொடரில் இதுவரை நான் அவ்வாறான கட்டுரைகள் எதையும் எழுதாமல் இஸ்லாத்தை விமர்சிப்பதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன் என்பதாக தன் மறுப்பை தொடங்குகிறார். \\ இன்னும் சொல்லப்போனால் அது பற்றி இதுவரை வாய்கூட திறக்கவில்லை// என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இது சரியா? நான் அந்தத் தொடரின் நுழைவாயில் பகுதியிலேயே தெளிவாக இப்படி குறிப்பிட்டிருக்கிறேன். \\ தங்களின் பிரச்சனைகள் இந்த உலகிலிருந்தே எழுந்து வருபவைகள். சிலர் கொழுக்க நினைப்பதாலேயே தமக்கு பிரச்சனைகள் வருகின்றன என்பதும், தம்முடைய உழைப்பு முழுவதும் தமக்கு கிடைப்பதில்லை என்பதும் அவர்களுக்கு தெரியாமலேயே போய்விடுகிறது. அப்படி தெரியவிடாமல் செய்வதில் கடவுள் நம்பிக்கை பெரும்பங்கு வகிக்கிறது என்பதையும் அவர்கள் உணர்வதில்லை ….. அதற்கு அவர்களின் மத நம்பிக்கையை மதப்பிடிப்பை கேள்விக்குள்ளாக்குவது முன்நிபந்தனையாகிறது// எனவே எது முன்நிபந்தனையாக இருக்கிறதோ அதையே தற்போது செய்து கொண்டிருக்கிறேன். உழைக்கும் மக்களாய் தாங்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் இந்த உலகிலிருந்து கிளைத்து வருபவை என்பதை உணர்ந்து வீரியமாய் போராட வரவேண்டுமானால்; இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நானே காரணம் எனும் கடவுளின் கூற்றை மறுத்தாக வேண்டும். ஏனென்றால் இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இன்னொரு பக்கம், இந்தத் தொடருக்கு வெளியே நான் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் மக்களுக்கு போராடவேண்டிய அவசியத்தை, அவசரத்தை உணர்த்தும் வண்ணமே அமைந்திருக்கிறது. இந்தக் கட்டுரைகள் இஸ்லாமியர்களையும் உள்ள‌டக்கியே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே நான் வாய் திறக்கவில்லை என்று கூறமுடியாது. மட்டுமல்லாது, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கென நான் வாய்திறந்தவைகள் கீழே சுட்டிகளாக கொடுக்கப்பட்டிருக்கின்றன.

முதலில் நேரடியாக வருகிறேன் என்றும், பின்னர் முடியாது என்றும் கூறியது ஏன்? காலம் கடந்த ஞானமா? என்கிறார். ஆம். அதில் தவறென்ன இருக்கிறது. முதலில் உத்தேசித்த ஒன்று இறுதி இலக்கிற்கு மாற்றமாக போகும் என பின்னர் உணர்ந்தால் முன்னர் அறிவித்ததிலிருந்து மாறிக் கொள்வதில் தவறொன்றுமில்லை. நான் எழுதும் அனைத்திற்கும் பதிலளிக்கப் போகிறேன் என முன்னர் தொடங்கிவிட்டு பின்னர் மறுப்புக்கு மட்டும் மறுப்பு என பின்னர் நண்பர் மாறிக் கொள்ள‌வில்லையா, அந்த வகையிலான காலம் கடந்த ஞானம் தான். அடுத்து வடிவம் குறித்தும் பேசியிருக்கிறார். வடிவம் முதன்மையானதல்ல, பதிலே முதன்மையானது. அதனால் தான் எனக்கு வசதியான வடிவத்தில் பதிலலிக்கிறேன். ஆனால் அவர்களுக்கு வடிவமே முதன்மையானதாக இருக்கிறது, அதனால் தான் நேரடியிலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து சில அழகிய பதில்களையும் அபத்தங்களையும் பார்க்கலாம்.

1. உடனுக்குடன் பதில் கூற வேண்டிய தேவை இருப்பதால் துல்லியமான தெளிவான வாதங்களை வைக்க வியலாமல் போகலாம். இது நேரடியில் உள்ள குறைபாடு. நண்பரின் அழகிய பதிலோ, ஐந்தோ பத்தோ நிமிடங்கள் பதில் கூறுவதற்கு அவகாசம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொள்லலாமே என்பது. ஆக நேரடியில் குறை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறார் கூடவே அதை சரி செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது என்கிறார். ஐந்தோ பத்தோ நிமிடங்கள் எடுத்துக் கொண்டு பதில் கூறினால் அது விவாதமாக இருக்குமா? சரி அதற்கும் கூடுதலாக அவகாசம் தேவைப்பட்டால், எடுத்துக் காட்டாக அவர்கள் ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள் என்று கொள்வோம் அதற்கு இன்னொரு ஹதீஸையே பதிலாக கூறினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆனால் அது முஸ்லிமிலா, புஹாரியிலா, திர்மிதியிலா எதில் இருக்கிறது என்று நினைவில் இல்லை. தேடிப்பார்த்துத்தான் கூறவேண்டும். இதற்கு நேரடியில் வசதி இருக்கிறதா? அப்படியே கூறினாலும் கண்ணுறுபவர்கள் மீது கூறப்படும் பதில் தாக்கம் செலுத்துமா? பதில் கூற எடுத்துக் கொள்ளும் நேரம் தாக்கம் செலுத்துமா?

2. நம்பிக்கையோடு ஊடாடி நிற்கும் ஒன்றில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டு வர முடியாது எனவே குறுகிய காலத்தில் முடிந்துவிடும் என்பதால் நேரடி சிறந்தது என்று கூறமுடியாது காலம் நீண்டாலும் அனைத்து தளங்களிலும் ஊடுருவி செய்யப்படும் விவாதமே சிறந்ததாக இருக்கும் அதற்கு நேரடி சிறந்ததல்ல. நண்பரின் அழகிய பதிலோ, பிரச்சனையை தீர்ப்பதற்கு பல ஆண்டுகள் கழிந்தாலும் கழியுமே தவிர கொள்கை சரியா தவறா என்பதற்கு நீண்ட நாள் தேவைப்படாது என்பது. இங்கு பிரச்சனையே கொள்கை சரியா தவறா என்பது தான். கொள்கையின் அடிப்படையில் பிரச்சனை ஏற்படும் போது பிரச்சனையும் கொள்கையும் வேறு வேறு என்றாகுமா? மீளாய்வுக்கு ஆயத்தமாக இருக்கும் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுக்கு குறைந்த காலம் தேவைப்படும். நேரடிக்கு ஆயத்தமாக இருப்பவர்களுக்கு மீளாய்வு இருக்கிறதா? எனும் கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் இஸ்லாத்திலேயே மீளாய்வுக்கு இடமில்லை. இஸ்லாமே அனைத்தையும் விட சிறப்பானது என்று மாளா நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கூறுகிறார்கள் கொள்கை சரியா தவறா என்பதற்கு நீண்ட நாள் தேவைப்படாது என்று. பிரச்சனையை விட கொள்கையே ஆழமானது. எடுத்துக்காட்டாக குடிக்கும் பானத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை தொடர்ந்து குடிக்காதே என்று நடைமுறை சார்ந்து பிரச்சனையை எளிதாக புரியவைத்து விடலாம். ஆனால் ஒரு சிறகில் நஞ்சும் மறு சிறகில் அதை தீர்க்கும் மருந்தும் இருக்கிறது எனவே பானத்தில் ஈ விழுந்தால் அதை நன்றாக அந்த பானத்திற்குள் அமுக்கி எடுத்துப் போட்டு விட்டு குடியுங்கள் எனும் ஹதீஸை தவறு என எப்படி புரியவைப்பது?

3. இதுவரை அவர்கள் நடத்திய விவாதத்தில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை, எனவே நேரடியே சிறந்தது என்று கூற முடியாது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ இங்கு நடந்த எழுத்து விவாதத்திலும் முடிவு எட்டப்படவில்லையே என்பது. இந்த தளத்தில் சில விவாதஙக்ள் நடந்துள்ளன. அவைகளை படித்துப் பார்க்கும் எவரும் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும், எழுப்பப்டும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திசை திருப்பி, சுற்றி வளைத்து, அவதூறு கூறி விலகி ஓடியவர்கள், குழப்பம் ஏற்படுத்தி தொடரமுடியாமல் செய்தவர்கள் யார்? என்பது. இதற்கு அவர்கள் கூறிய சாக்குப் போக்கு தான் மூன்றாம்வர் எழுதுகிறார், வேறொருவர் விவாதிக்கிறார் என்பது. அதையே நண்பரும் கூறியிருக்கிறார். விவாதத்தில் நேர்மை இல்லாவிட்டால் எங்கும் முடிவை எட்டமுடியாது, நேரடியாக இருந்தாலும் எழுத்து விவாதமாக இருந்தாலும்.

4. வெளியில் விமர்சனம் செய்வதற்கு முன்னால் எங்களிடம் விவாதம் செய்ய வரட்டும் என பிஜே தள‌த்தில் இருக்கிறது, இது தவறானது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ விவரம் தெரியாத மக்களிடம் செய்வதை விட எங்களிடம் செய்யுங்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது என்பது. விவாதம் செய்ய முஸ்லீம்கள் தயாராக இருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் தயாராக இல்லையா? விவாதம் இங்கு பிரச்சனையல்ல. நேரடியாக என்று வடிவத்தை முதன்மைப்படுத்துவது தான் பிரச்சனை. மட்டுமல்லாது பிஜே தளத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது \\ விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும்// இதன் பொருள் என்ன? வெளியில் அதாவது வேறு ஊடகங்களில் வேறு வடிவங்களில் விமர்சிப்பதற்கு முன்னால் இவர்களிடம் விவாதம் செய்திருக்க வேண்டும் என்பது தான். அதிலும், பொதுவாக முஸ்லீம்கள் விவாதம் செய்ய முன்வராத போது என்று எழுதி எந்த வடிவத்திலும் விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பது போல் எழுதிவிட்டு அடுத்த வரியிலேயே பகிரங்க விவாதம் என்று நேரடியை குறிப்பிடுவது எழுத்துச் சித்து.

5. நாங்கள் வென்றுவிட்டோம் என மிகைப்படுத்தி கூறுவது, விளம்பர, வியாபார நோக்கங்களுக்காக தான் நேரடிகள் நடத்தப்படுகின்றன. நண்பரின் அழகிய பதிலோ வெல்லாமல் வென்று விட்டோம் என்று கூற முடியாது, வியாபார நோக்கம் இல்லை என்பது. திகவுடன் நடந்த விவாதத்தை எடுத்துக் கொள்வோம். அறிவியலை முன்னறிவிப்பு செய்திருக்கிறது என்று கூறப்படும் வசனங்கள் எல்லாம் வெகு சாதாரணமாக இருக்கின்றன, அறிவியல் விளக்கங்கள் வந்த பின் அவற்றை அந்த வசனங்களில் ஏற்றிக் கூறுகிறீகள் என்பது திக வினரின் ஒரு குற்றச்சாட்டு. ஆனால் பிஜேவினரோ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது, இந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினார்களேயன்றி திகவினரின் குற்றச்சாட்டை கண்டு கொள்ளவே இல்லை. இதை எப்படி வெற்றி என்று கொள்ள முடியும்? நண்பர் வியாபார நோக்கமல்ல என்கிறார் ஒரு ரியால் பெறாத சிடியை 20 ரியாலுக்கு விற்பது தான் செலவை ஈடுகட்டுவது போல. சாப்பாடு போட்டு தங்க வைத்தோம் என்று வீர வசனம் பேசிய தார்மீகத்தை வளைகுடா நாடுகளிலும், இலங்கையிலும் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கில் சிடி விற்று வந்த காசில் ஈடுகட்டிக் கொண்டார்கள் போலும்.

6. மத அமைப்புகளுடன் விவாதம் செய்வதைவிட உழைக்கும் மக்களிடம் நேரடியாக அவர்களின் வாழ்வியல் நிகழ்ச்சிகளுனூடாக விவாதம் செய்து அம்பலப்படுத்துவதே அவசியமாய் இருக்கிறது. இதற்கு நண்பரின் அழகிய பதிலோ இணைய விவாதத்தை விட நேரடி விவாதமே பொருளாதார ரீதியிலும் உழைக்கும் மக்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பது. இங்கு இணைய விவாதம் சுட்டப்படவே இல்லை, மத அமைப்புகளிடம் நேரடி விவாதம் செய்வதைவிட உழைக்கும் மக்களிடம் நேரடியாக பேசி அவர்களின் நம்பிக்கைகளின் பிடி வாழ்வோடு எவ்வாறு முரண்பாடாக இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவதே சிறப்பானது. அதை தொடராக செய்து வருகிறோம்.

இங்கு எது அபத்தமாக இருக்கிறது எது அழகிய பதிலாக இருக்கிறது என்பதை நண்பரே தீர்மானிக்கட்டும். ஆனாலும் அவைகளை தீர்மானிப்பதற்கு முன்னால் எழுத்து விவாதமே சிறந்தது என்பதற்கு முன்வைக்கப்பட்டு நண்பரால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டவைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளட்டும். \\ தான் நிற்கும் நிலை சரியானதா? தவறானதா? எனும் மீளாய்வுக்கு அப்பாற்பட்டு அது வெல்ல வேண்டும் என்பதே தேவையானது என ஒருவன் நினைத்துவிட்டால் அவனிடம் நேர்மையை எதிர்பார்க்கமுடியாது, அது இணையத்தில் என்றாலும், நேரடியாக என்றாலும் ஒன்றுதான். இதில் முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டியது விவாத நேர்மைதானேயன்றி இணையமா? நேரடியா என்பதல்ல// \\ நேரடியாக விவாதிப்பது அந்த நேரத்தில் நினைவில் இருக்கும் விவரங்கள், குறிப்புகள், சான்றுகள், உணர்ச்சிகள் இவைகளின் அடிப்படையிலேயே இருக்கும். இணையத்தில் புதிதாக குறிப்புகளை விவரங்களை சான்றுகளை தேடித்தேடி சரியான திசையில் விவாதத்தை நடத்தமுடியும். மட்டுமன்றி நடத்தும் விவாதத்தில் உணர்ச்சிக் கலப்பின்றி நிதானமாகவும் அறிவார்த்தமாகவும் விவாதிக்க முடியும். நேரடி விவாதத்தில் பலம் பலவீனங்களைக் குறிப்பறிந்து, பலமான இடங்களைத் தவிர்த்தும் பலவீனமான இடங்களை விரித்தும் விவாதத்தின் போக்கை மாற்ற முடியும். அதாவது எடுத்துக்கொண்ட தலைப்பின் விவரங்களைவிட செயல்படுத்தும் உத்தி அதிகப்பங்காற்றும். அவ்வாறில்லாமல் இணைய விவாதத்தில் ஏனைய எதுவும் முக்கியப்படுத்தப்படாமல் எடுத்துக்கொண்ட தலைப்பிலான விவரங்கள் மட்டுமே விவாதத்தை நகர்த்தும்//

இதில் இன்னொரு முக்கியமான விடயமும் இருக்கிறது. என்னுடைய தொடர் குறித்த தகவலை பிஜேவின் தள‌த்திற்கு எடுத்துச் சொன்னவரின் கோரிக்கையே நேரடி விவாதத்திற்கு மறுத்துவிட்ட நிலையில் அவரின் கட்டுரைகளுக்கு பதிலளியுங்கள் என்பது தான். பதிலளிப்பது குறித்து எதுவும் கூறாத பிஜே நேரடியாக வரட்டும் என்கிறார். ஏன்? திக வின் கட்டுரைக்கு மாய்ந்து மாய்ந்து உணர்வில் 17 வாரங்களுக்கு எழுதித்தள்ளிய அவர்கள் இப்போது மட்டும் நேரடி எனும் ஒற்றை திரையில் மறைந்து கொள்வதேன்? எத்தனை முறை விளக்கினாலும் நேரடி நேரடி என்று கூப்பாடு போடும் ரசிகமணிகளுக்கு எதிராக எழுத்தில் பதில் கூறட்டும் என நான் கேட்பதில் ஒன்றும் தவறில்லை.

\\ விமர்சனத்தை எதிர்த்துவளர்வதென்றால் அதை ஒதுக்குவது என்பதல்ல! தன்னை நோக்கிவரும் விமர்சனத்தை எதிர்கொண்டு எந்த விமர்சனமும் சரியல்ல என்று நிரூபிப்பதுதான்// இப்படியும் நண்பர் எழுதியிருக்கிறார். வள்ர்ச்சி என்றால் என்ன என்பதே நண்பருக்கு விளங்கவில்லை. இஸ்லாத்திற்கு வளர்ச்சி இருக்கிறதா? எந்த மாற்றத்திற்கு அவசியப்படாமல் 1400 ஆண்டுகளுக்கு முன்பே முடிக்கப்பட்டு விட்ட ஒன்றில் என்ன வளர்ச்சி? எந்த விமர்சனம் என்றாலும் அது தவறு என்று நிரூபிப்பார்களாம். அதாவது விமர்சனம் எழுவதற்கு முன்பே அது தவறாகத்தான் இருக்க முடியும் என்று தீர்மானிக்கப்பட்டு விடுகிறது என்றால் அது தேக்கமாகத்தான் இருக்க முடியும் வளர்ச்சியாக இருக்க முடியாது.

\\ பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.

தவறாக இருப்பின் மாற்றிக்கொள்வதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஒரு விடயம் தனக்கு பிடிக்காவிடின் மற்றவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது அறியாமை//

இதில் நான் கூறவருவது என்ன என்பதை நண்பர் விளங்கிக் கொண்டாரா என்பதே புரியவில்லை. நான் குறிப்பிடும் தொனி என்ன? கோழைத்தனமானது, அறிவில்லாமல் இருக்கிறார்கள், முட்டாள்தனமாக உளறுகிறார்கள் என்பதுபோல் எழுதுவதெல்லாம் பிஜேவுடைய பாணி. நாம் ஒரு கருத்தைக் கூறுகிறோம், அதற்கு எதிராக அவர்கள் ஒரு கருத்தைக் கூறுகிறார்கள் எனும் பார்வையே அங்கு இருப்பதில்லை. நாம் மட்டுமே சரியாக கூறுகிறோம் மற்றவர்களெல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் எனும் தரத்தில் தான் அவருடைய நடை இருக்கும். அதே போன்றதொரு நடை நண்பரிடத்திலும் தென்படுகிறது அதை மாற்றிக் கொள்ளலாம் என நான் கேட்டுக் கொண்டால் தனக்குப் பிடிக்காவிட்டால் அதை மாற்றக் கோருவது அறியாமை என்கிறார். இதோ இந்தப் பதிவிலும் கூட நண்பர் இப்படி எழுதியிருக்கிறார், \\ முடியாவிட்டால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்// இது போன்று எழுதுவதையெல்லாம் தங்களின் அடிப்படை உரிமை என்று கருதுகிறாரா நண்பர். என்றால் வெளிப்படையாக அதை தெரிவிக்கட்டும், நானும் அந்த நாராச நடைக்கு மாறிக் கொள்கிறேன்.

தீவுத்திடல் மாநாடு: தவறான திசை நோக்கி

பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்

இதுவரை


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7


 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌


செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௩

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௩

இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

இந்தப்பகுதியை, இந்தத்தொடரை வாசிக்கவிருக்கும் முஸ்லீமல்லாதவர்களுக்கு, இஸ்லாம் குறித்த போதிய அறிமுகமில்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் என்னுடைய பார்வையில் அறிமுகம் செய்யும் விதமாக அமைத்திருந்தேன். நான் இஸ்லாத்தை அறிமுகம் செய்ததில் பொருட்பிழை ஏதுமில்லை என்பதை நண்பரின் பதிவு அறிவிக்கிறது. ஆனால் அதை செய்தவிதத்தில் அவருக்கு பேதமிருக்கிறது. அப்படி பேதமிருப்பதாய் அவர் கருதும் இரண்டு இடங்களை குறிப்பிட்டு தம் பதிவை தயாரித்திருக்கிறார்.

 

முதல் பேதமாய் நண்பர் குறிப்பது, சைத்தான் என்பவன் மனிதனின் எதிரி தானேயன்றி ஆண்டவனின் எதிரியல்ல என்பதை. அதற்கு ஆதாரமாக நண்பர் எடுத்துவைத்திருப்பது “சைத்தான் உங்களுக்கு எதிரி” என்று ஆண்டவன் மனிதனுக்கு கூறும் ஒரு குரான் வசனம். தன்னுடைய படைப்பாகிய மனிதனிடம், யார் தான் அறிவுறுத்தியபடி நடக்கவேண்டும் என விரும்புகிறானோ அத்தகைய மனிதனிடம், யாரை தன்னுடைய பிரதிநிதியாக படைத்திருக்கிறானோ அத்தகைய‌ மனிதனிடம் ஆண்டவன் கூறுகிறான் சைத்தான் உனக்கு எதிரி என்று. என்றால் ஆண்டவனுக்கு சைத்தானுடனான உறவு என்ன? தன்னுடைய நண்பனை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? தன்னுடைய எதிரியை உனக்கு எதிரி என மனிதனுக்கு அறிவிக்க முடியுமா? இந்த இடத்தில் எல்லாமே ஆண்டவனின் படைப்புகள் எனும் சமன்பாட்டைக் கொண்டுவரவேண்டாம். ஏனென்றால் மலக்குகளும், மனிதனும், மரக்கட்டையும் மூன்றுமே ஆண்டவனின் படைப்பு தான். ஆனால் கொண்டிருக்கும் உறவில் மூன்றின் மதிப்பும் வேறுவேறுதான். எனவே உனக்கு எதிரி என சைத்தானை மனிதனுக்கு ஆண்டவன் காட்டுகிறானென்றால் அதில் உட்கிடக்கையாக இருப்பது தனக்கு எதிரி என்பதுதான்.

 

ஒருவனுக்கு எதிரி என யாரைக் கூறமுடியும்? யார் எதிராக செயல்படுகிறானோ அவனைத்தான் ஒருவனுக்கு எதிரி என்று கூறமுடியும். அந்த வகையில் சைத்தான் மனிதனுக்கு எதிராக செயல்படுகிறானா? இறைவனுக்கு எதிராக செயல்படுகிறானா? மனிதனுக்கு எதிராக செயல்படுகிறான் என்றால் மனிதனை துன்பப்படுத்த முயலவேண்டும், மனிதனுக்கு இன்னல்களை ஏற்படுத்த வேண்டும், மனிதனை நிர்மூலமாக்க வேண்டும். ஆனால் சைத்தான் இவைகளைச் செய்வதில்லை, மாறாக மனிதனுக்கு இன்பங்களைக் காட்டுவதன் மூலம், சொகுசுகளை காட்டுவதன் மூலம், இன்னும் பல்வேறு உத்திகள் மூலம் இறைவனின் நினைப்பை மனிதனிடமிருந்து நீக்க முயல்கிறான். ஆக சைத்தான் மனிதனிடம் செயல்படுகிறான் ஆனால் ஆண்டவனுக்கு எதிராக செயல்படுகிறான். மறுபக்கம் ஆண்டவனோ என் சொல்லைக் கேட்டால் உனக்கு மிட்டாய் தருவேன், சைத்தான் சொல்லைக் கேட்டல் பிரம்படி தருவேன் என்கிறான். என்றால் யாருக்கு யார் எதிரி?

 

சைத்தான் மனிதனை ஆண்டவனின் திசையிலிருந்து திருப்புகிறான், அதாவது மனிதனிடம் தான் செயல்படுகிறான் என்றாலும் அது விளைவுதான், வினையல்ல. வினை என்பது சைத்தான் ஆண்டவனை எதிர்த்தது தான். ஆண்டவனின் சொல்லுக்கு கீழ்படிய மறுத்து எதிர்த்து நின்ற வினையின் விளைவு தான் மனிதனை திசைமாற்றும் சைத்தானின் முயற்சி. மனிதனைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக சைத்தான் ஆண்டவனை எதிர்க்கவில்லை. ஆண்டவனை எதிர்த்ததால்தான் மனிதனைக் கெடுக்கிறான். எனவே சைத்தானின் நோக்கம் ஆண்டவனை எதிர்த்தது தானேயன்றி, மனிதனைக் கெடுப்பதல்ல. எனவே சைத்தான் ஆண்டவனின் எதிரி என்பதே சரி, மனிதனின் எதிரி என்பது மாத்திரைக் குறைவுதான்.

 

தர்க்கரீதியான(!) ஒன்றையும் இதில் இணைத்திருக்கிறார். அதாவது சைத்தான் மனிதனின் மனதைத்தான் கெடுத்தானாம் மார்க்கத்தைக் கெடுக்கவில்லையாம். மார்க்கம் என்பதென்ன தனியொரு பொருளா? (இங்கு மார்க்கம் என்று அவரது சொல்லாகவே கையாண்டிருக்கிறேன். மதமா மார்க்கமா என்பதை பின்னர் விளக்குகிறேன்) மனிதர்க‌ளை நீக்கிவிட்டால் மார்க்கம் என்பதை எப்படி வரையறுப்பது? மனிதர்களின் மனதிலிருந்து பிரித்து தனித்த ஒன்றாக மார்க்கத்தை அடையாளப்படுத்த முடியாது. எனவே மார்க்கத்தைக் கெடுத்தான் என்பதும், மனதைக் கெடுத்தான் என்பதும் ஒன்றுதான் மாறுபட்டதல்ல. முன்னவர்களின் மன‌திலிருக்கும் மார்க்கத்தைக் கெடுத்து அதையே பின்னவர்களுக்கு அழகாகக் காட்டியதால்தான் அதையே அவர்களும் பின்பற்றும்படியாகிறது. இதில் தர்க்கவியல் குறை ஒன்றுமில்லை.

 

இரண்டாவதாக‌, இஸ்லாத்தை இதுவரை யாரும் ஆதாரபூர்வமாக யாரும் விமர்சித்ததில்லை என்கிறார். குரானிலேயே இதற்குமேல் தர்க்கிக்க வேண்டாம் விட்டுவிடுங்கள் எனும் பொருளுள்ள வசனங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்து மீறிப்போகும்போது தாக்குதலில் இறங்குவதற்கு அண்மைக்காலம் வரை எடுத்துக்காட்டுகள் உண்டு. இங்கும் கூட கம்யூனிச அவதூறுகளை கூறியிருக்கிறீர்கள். கொலை, கொலை என்று அலறியவர்களே நாங்கள் காசுக்காகத்தான் அவயமிட்டோம் என ஒதுங்கிவிட்டார்கள், நீங்களோ இன்னும் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு கம்யூனிசம் குறித்த விமர்சனம் இருந்தால் தனித்தொடராக வெளியிடலாம், நான் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் தெளிவுபடுத்த ஆயத்தமாக இருக்கிறேன். அப்புறம் இஸ்லாத்தில் மாற்றம் செய்ய தேவையிருக்காது என கூறியிருக்கிறீர்கள். அதை உங்கள் நம்பிக்கை என நகர்ந்துவிடலாம். ஆனால் போகிறபோக்கில், \\தவறு எனில் மாற்றுவோம்// என்று கூறியிருக்கிறீர்களே. என்ன விசமம் இது. இஸ்லாத்தில் எந்த ஒன்றையும் கூட்டவோ குறைக்கவோ யாருக்கு அதிகாரம் இருக்கிறது? பொருட்பிழையில்லாமல் சொற்பிழைகளையே பெரும்பேதமாய் பதிவெழுதி எனக்கு விளக்கம் கூறிவிட்டு, இஸ்லாத்தின் அடிமடியிலேயே கைவைத்துவிட்டீர்களே. பலே, பலே.

 

எண்ணைக் கொப்பரை என்பது நரகத்தைக் குறிக்கும் ஒரு குறியீடு அவ்வளவு தான், நேரடியாக நெருப்பில் வாட்டுவது என்றாலும் எண்ணெய் தடவி ஓவனில் வைத்தாலும் அதில் பொருட்பிழை ஒன்றுமில்லை. இந்தப் பதிவில் கூட மிட்டாய், பிரம்படி என்று சொர்க்கம், நரகத்தை குறியீட்டால் குறித்திருக்கிறேன்.

 

அடுத்து, இஸ்லாத்தை விமர்சித்ததற்காக இன்னலுக்கு ஆளான சிலரை நான் என்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் குறித்த குறிப்புகளை இணையத்தில் தேடித்தந்திருக்கிறீர்கள். இறுதியாக \\உண்மயை மக்கள் மத்தியில் போட்டு உடைக்கும் போது இவர் குறிப்பிட்ட தடங்கள் வருவது இயல்பே// என்று ஒப்புதல் தந்திருக்கிறீர்கள். ஆனால் நான் குறிப்பிட்டிருந்ததற்கும் நீங்கள் இயல்பு என்பதற்கும் இடையில் கொஞ்சம் வித்தியாசமிருக்கிறது. ஏனைய மதங்களைப் பொருத்தவரை மதத்திற்குள் இருந்து கொண்டே அந்த மதக்கொள்கைகளை விமர்சிக்க முடியும், விமர்சித்திருக்கிறார்கள். அதை அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் விளக்கமாக கருதியிருக்கிறார்களேய‌ன்றி புறக்கணித்ததில்லை. ஆனால் ஆப்ரஹாமிய மதங்களில் அது இயலாது. அதிலும் குறிப்பாக இஸ்லாத்தில் முடியவே முடியாது. ஒரு அரசு இருந்து மதக் கொள்கைகளுக்கு எதிரானவரை தடுப்பது தண்டிப்பது என்பது வேறு, மக்களே புறக்கணிப்பது என்பது வேறு. அதுவரை நெருங்கிய உறவினர்களாக நண்பர்களாக இருந்தாலும் இஸ்லாத்தை விமர்சித்துவிட்டால் அடுத்த கணமே அங்கு ஒரு விலக்கம் வந்து உட்கார்ந்து கொள்ளும். ஏனென்றால் இஸ்லாத்தில் கடமை தான் இருக்கிறதேயன்றி, விமர்சிக்கும் உரிமையில்லை. இதுதான் துன்புறுத்தல் வரை கொண்டு சேர்க்கிறது. தக்கலை கவிஞர் ரசூல், மைலாஞ்சி கவிதைத்தொகுப்பில் ஏன் பெண் நபி இல்லை என்று கேட்டு கவிதை வெளியிட்டதற்காக, கவிதையை நீக்கி மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள் மறுத்ததால் ஊர் விலக்கம் செய்யப்பட்டர். ஆண்டுகள் பல கடந்தும் அவரால் வீட்டுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில் தாகத்திற்கு மோர் வாங்கி குடிக்கமுடியாது. \\இவ்வாறு அறியாமையினால் ஓரிரு இடங்களில் நடப்பதை எடுத்து காட்டுவது சரியானது அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்// சரிதான், அப்படி எடுத்துக்கொள்லலாம். ஆனால், இதை இயல்பு என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?

 

இதுவரை

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௨

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம்.

 

கடந்த ஓராண்டாக “இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் தொடர் செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பரவலாக கவனம் பெற்ற தொடராக இருந்துவருகிறது. இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை. இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது என்றால் அது மிகையான கூற்றல்ல‌.

 

இந்நிலையில் நண்பர் சலாஹுத்தீன் என்பவர் தன்னுடைய தளத்தில் இத்தொடருக்கு மறுப்பு எழுதுவதாக என்னிடம் தெரிவித்தார். அவர் எழுதிய ஓரிரு பகுதிகளில் நானும் சென்று என்னுடைய விளக்கங்களை பின்னூட்டமாக வைத்தேன். (அதை இங்கு காணலாம்)பின்னர் அவர் தன் தொடரை நிறுத்திவிட்டு என்னிடம் விவாதிக்க விரும்புவதாகத்தெரிவித்தார். அந்த விவாதமும் இடையில் நின்றுபோனது. இந்த விவாதம் நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பின் கீழ் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது முஹ‌ம்மது இஹ்சாஸ் என்பவர் இஸ்லாம் குறித்த தொடருக்கு மறுப்பு எழுதுவதற்கென்றே தனியாக ஒரு தளத்தை தொடங்கி, முறைப்படி எனக்கு அறிவிக்கவும் செய்திருக்கிறார். இதுவரை அவர் நான்கு பகுதிகளை எழுதியுள்ளார். தொடக்கத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை காரணம், அத்தொடர் தொடருமா என்பதில் எனக்கிருந்த ஐயம் தான். ஆனால் மறுப்புகளை எழுத அவர் எடுத்துக்கொள்ளும் முனைப்பு அத்தொடர் தொடர்ந்து வெளிவரும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது. எனவே அந்த மறுப்பிற்கான விளக்கத்தை அளிக்கவேண்டிய தேவை எழுகிறது. மட்டுமல்லாது, இஸ்லாம் குறித்த தொடரின் கடந்த பதிவுகளை மேலதிக விளக்கங்களுடன் கூர் தீட்டவும் பயன்படும் என்பதாலும் இது இன்றியமையாததாகிறது. நண்பர் முஹம்மது இஹ்சாஸ் தன் தொடரை தொடரும் வரை இதுவும் தொடராக வெளிவரும். தொடக்கத்தில் அவருடைய தளத்திலேயே பின்னூட்டமாக பதிவு செய்யலாம் என எண்ணினேன். ஆனால், இஸ்லாம் குறித்த தொடரை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு அதன் மறுப்பையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாலும் இத்தொடரை தொடங்குகிறேன்.

 

தோழமையுடன்

செங்கொடி

 

இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௧

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

தம்முடைய முதல் பதிவை நேரடி விவாதம் பற்றிய சுட்டலுடன் தொடங்கியுள்ளார். அதுகுறித்த விளக்கத்துடனே நானும் தொடங்குகிறேன்.

 

“இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் இந்தத்தொடர், பிஜேவுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதல்ல. நிகழ் உலகின் சுரண்டல்களுக்கு எதிராக, அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியுமா எனும் எண்ணத்தில், அனைத்து மதங்களுமே வர்க்கச் சுரண்டல்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என்றாலும், நான் பிறந்த மதம் எனும் அடிப்படையில் இஸ்லாமிய புனிதங்களுக்கு எதிராக உண்மைகளைப் பேசுவதனூடாக சமூகப் போராட்டங்களுக்கு பயணப்படவைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான்.

 

இந்தத்தொடரைத் தொடங்கியது முதலே பிஜே அவர்களுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ளுங்கள் என்று குறைவாகவும் கூடுதலாகவும் பல வடிவங்களில் எதிர்வினைகள் வந்தன. அதில் சில கட்டுரைகள் கடந்தபின் நண்பர் அப்துல் லத்தீப் சென்னையில் நடக்கும் விவாதத்தில் நீங்களும் பங்குகொள்ள முடியுமா என கேட்டிருந்தார். அதற்கு நான் சாத்தியமில்லை என்றும் எழுத்தில் தயார் என்றும் பதிலிறுத்திருந்தேன். இதன்பிறகே ‘இனிமை’ என்பவர் செங்கொடி தளத்திற்கான சுட்டியை இணைத்து, இதற்கு நீங்கள் பதிலளிக்க முடியுமா என பிஜேவிடம் கேட்கிறார். அவர் தன் கடிதத்தை இப்படித் தொடங்குகிறார்,

 

“தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்று இருந்தாலும் இதற்குப் பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்”

 

இதுதான் அவரது கடிதத்தின் முக்கியப் பகுதி. அதாவது நான் நேரடி விவாதத்திற்கு வரமுடியாது என மறுத்துவிட்ட நிலையில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே அவரது கடிதத்தின் நோக்கம். மேலதிக விபரமாக நேரடி விவாதத்திற்கு அழைத்து, மறுத்த விபரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதற்குப் பதிலளித்த பிஜே அவர்கள், கடிதத்தின் நோக்கமான பதிலளிப்பது என்பதை கவனமாக தவிர்த்துவிட்டு, நேரடி விவாதத்திற்கு வரச்சொல்லுங்கள் நாம் தயார் என பதிலளித்திருந்தார். எழுத்தில் தயார் நேரடியாக இயலாது என்பது என் நிலை, எழுத்தில் இயலாது நேரடியாக தயார் என்பது அவர் நிலை. யாருக்கு எதில் வசதிப்படுகிறதோ அதில் பதிலளிப்பது எனும் யதார்த்தமான நிலைக்கான அவர் பதிலின் தொனி எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு \\ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது// இதுபோன்ற அணுகுமுறையின் விளைவாகவும், தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் மின்னஞ்சல்களின் விளைவாகவும் நேரடி விவாதத்திற்கு மறுப்பது என்னுடைய வசதியை அனுசரித்துத்தனேயன்றி பயத்தினால் அல்ல என்பதை வெளிக்காட்டவேண்டி நேரடி விவாதத்திற்கு சம்மதித்தேன்.

 

ஆனால் எந்த நோக்கத்திற்காக நான் எழுதத்தொடங்கினேனோ அந்த நோக்கத்திற்கு நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே பொருத்தமானது என்பதோடு மட்டுமல்லாது, நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே சிறந்ததாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னுடைய அந்த உணர்தலை வெளிப்படுத்தும் விதமாகவும், எப்போது விவாதம் செய்யப்போகிறீர்கள் என தொடர்ந்துகொண்டே இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் நான் ஏன் பிஜேவுடன் நேரடி விவாதம் செய்யவேண்டும் எனும் இடுகையாக வெளியிட்டேன். என்னுடைய இந்த முடிவை தோழர்கள் சிலரும் மீளாய்வு செய்யுமாறு கேட்கிறார்கள். எது நோக்கத்திற்கு சரியானது? எது சிறப்பானது? என்பதில் நான் நின்றுகொண்டிருப்பதால் வடிவத்திற்கு முதன்மையளிக்கவில்லை.

 

காலத்துக்கு காலம் இஸ்லாம் மட்டுமே அனைவராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக நண்பர் கூறுவது தவறு. உலகின் விமர்சனமின்றி கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று எதுவுமில்லை. அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டே வருகிறது. ஆனால் விமர்சனத்தை எதிர்த்து வளர்வது சரியான வளர்ச்சியல்ல. விமர்சனத்தை உள்வாங்கி அலசிப் பார்த்து தன்னுள் தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்வதே சரியான வளர்ச்சி.

 

பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.

 

%d bloggers like this: