கலவர (வி)நாயகன் = வில்லன்

இந்தியாவெங்கும் நகரங்களிலும், கிராமங்களிலும் விநாயக பொம்மைகளை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து கடலில் வீசி வருகின்றனர்(!). இதே விதமாக மதிமாறனும் விநாயக மதிப்பீட்டை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து வீசி இருக்கிறார். கேட்டுப் பாருங்கள்.

 

 

அஸ்ஸாம் ஆட்டங்கள்

நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆளாளுக்கு முகாம்களுக்கு சென்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்கள், எல்லாம் சரியாகிவிட்டது என்று அறிவித்தார்கள். ஆனாலும் அஸ்ஸாம் அவ்வப்போது எரிந்துகொண்டே இருக்கிறது. குழு மோதலாக தொடங்கி, இனக் கலவரமாக மாறி உயிருக்கும் உடமைகளுக்கும் பேரிழப்பாக தொடர்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசே ஆட்சியில் இருந்தாலும் ஒன்றை ஒன்று மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக் கொள்கின்றன. நாட்டில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் வாயில் நுழையாத ஏதாவது இஸ்லாமிய அமைப்பை காரணமாகக் கூறும் பாஜக, அதே போல் இந்தக் கலவரத்தையும் வங்க தேச ஊடுறுவல் காரணம் என்று அலறியது. செய்தி ஊடகங்கள் வழக்கம் போலவே எங்கு தொடங்கியது? எப்படி தொடங்கியது? இனக்கலவரத்திற்கான பின்னணி என்ன? யார் தூண்டியது? யார் தாங்கி நிற்பது? என்பது போன்ற எந்த விபரங்களும் இல்லாமல் வெறுமனே இழப்புகளையும், பாதிப்புகளையும் பெரிதுபடுத்திக் காட்டியும், உப்புச் சப்பற்ற கேள்விகளைக் கொண்டு பேட்டிகள் எடுத்துக் காட்டியும் தங்கள் வியாபார நோக்கை உறுதிப்படுத்திக் கொண்டன.

 

இந்தக் கலவரம் இப்போது புதியதாக தொடங்கி ஒன்றல்ல, ஏற்கனவே சில முறைகள் இது போன்ற கலவரங்கள் இந்தப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. அதாவது, இந்தக் கலவரம் இரண்டு சமுதாயத்தினரிடையேயான மோதலோ, ஊடுருவல் பிரச்சனையோ, தீவிரவாதக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கையோ அல்ல. மாறாக இக்கலவரத்தின் வேர்கள் தேசியப் பிரச்சனைக்குள் ஆழ்ந்திருக்கின்றன.

 

இந்தியா எனும் எல்லைக்குள் இருப்பவர்கள் பெருமையுடனும் பூரிப்புடனும் அச்சொல்லை உச்சரித்துக் கொண்டிருப்பதாக யாருக்கேனும் எண்ணமிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தியா எனும் நிலப்பரப்போடு மரபு கலாச்சார ரீதியாகவோ, இயற்கையான புவி அமைப்பு ரீதியாகவோ தொடர்பே இல்லாத மக்கள், பல காலமாக வெள்ளையர்கள் காலனியாக பிடித்து வைத்திருந்தார்கள் எனும் ஒரே காரணத்திற்காக இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரிகளைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் பீரங்கிகளுக்கு எதிராக கல் வீசுவது பொழுதுபோக்கிற்காக அல்ல. அது போலத்தான் வட கிழக்கு மாநிலங்களும். வடகிழக்கு மாநிலங்களிலும், நேபாளத்திலும் வாழும் போடோக்கள் இந்திய அரசை எதிர்த்து 80களில் உபேந்திரநாத் பிரம்மா தலைமையில் போராடத் தொடங்கினர். அனைத்து போடோ இன மக்களையும் உள்ளடக்கிய தேசியப் போராட்டமாக வளர்ந்திருக்க வேண்டிய இது இந்திய அரசியல் பெருச்சாளிகளால் வன்முறைக் கும்பலாக உருமாறியது.

 

அந்தப் பகுதியின் பழங்குடியினரான போடோக்கள் முன்னர் ‘பாத்தூயிசம்’ என்னும் மூதாதையர் வழிபாட்டு முறையை பின்பற்றினர். ஆனால் அந்த மூதாதை வழிபாட்டை பார்ப்பனிய பாசிசங்கள் இந்துத்துவத் திணிப்பால் இடம்மாற்றி விட்டன. இன்று போடோக்கள் பெரும்பான்மையினர் இந்து(!)க்களே. பார்ப்பனீயம் எப்போதுமே எதிரியை உருவகப்படுத்திக் காட்டுவதன் மூலமே பழங்குடிகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும் தம்முடைய பட்டிக்குள் அடைத்து வந்திருக்கிறது, அந்த வகையில் அந்தப் பகுதியிலுள்ள முஸ்லீம்கள் எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டார்கள்.

 

அதுவரை வங்காளிகளாக இருந்தவர்கள், காலனியாதிக்க பிரித்தாளும் சூழ்ச்சியினால் மத அடிப்படையில் கிழக்கு மேற்கு மாநிலங்களாக பிரிக்கப்பட்டு பின்னர் இந்தியா பாகிஸ்தானாக மாறி பின்பு வங்கதேசிகள் எனும் தனி தேசியமாக ஆக்கப்பட்டார்கள். இன்றைய உலகமய சூழலில் ஒப்பீட்டளவில் வங்க தேசத்தைவிட சற்று மேம்பட்டிருந்த இந்தியாவிற்குள் அவர்கள் எல்லை கடந்து ஊடுருவினார்கள். இதை தங்களுக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்ட இந்துத்துவவாதிகள் அனைத்து இஸ்லாமியர்களையுமே ‘வங்கதேச வந்தேறிகள்’ என்று கூறி போடோக்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமான இனப்பகையாக மாற்றினார்கள். இந்தியாவோடு கலாச்சார ரீதியாக தொடர்பு கொண்டிருந்த வங்காள முஸ்லீம்கள் அன்னியர்களாகவும், கலாச்சார தொடர்பற்ற போடோக்கள் இந்தியர்களாகவும் உருமாறிய கதை இது தான்.

 

இதையே வேறொரு கோணத்தில் காங்கிரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. சட்டவிரோத குடியேற்ற சட்டம் ஒன்றை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு சில சலுகைகளை கொடுத்ததன் மூலம் அவர்களை தனது வாக்கு வங்கியாக தக்க வைத்துக் கொண்டது. மற்றொருபுறம் வடகிழக்கு மாநில மக்கள் உணர்வு ரீதியாக இந்தியாவுடன் ஒன்றவே இல்லை. அதனால் அன்றிலிருந்து இன்றுவரை இராணுவத்தின் பலத்தைக் கொண்டே அவர்களை இந்தியர்களாக இருத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அரசுக்கு விரோதமாக மக்கள் கிளர்ந்தெழும் போது அதை நீர்த்துப் போகவைக்க அரசுகள் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று தேசிய இனப் பிரச்சனைகளை விசிறி விடுவது. அந்த வகையில் அந்தப் பகுதிகளில் இந்திய இராணுவம் நிகழ்த்திவரும் அடக்குமுறைகளை மறைக்கவும் தேசிய முரண்பாடுகள் உயிர்ப்புடன் வைக்கப்பட்டிருக்கின்றன.

 

ஆனால் இவைகலையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் யாரோ இரண்டு குழுக்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டது தான் கலவரத்துக்கான காரணம் என்றால் அதைவிட அபத்தம் வேறொன்று இருக்க முடியாது. இஸ்லாமியர்கள் இதை மதத்திற்கு எதிரான அநீதியாக பிரச்சனையாக உருமாற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபக்கம், அதிகார வர்க்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனோநிலையை நாட்டின் அனைத்துப் பகுதி மக்களிடமும் வதந்திகள் மூலம் நுணுக்கமாக ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பிற பகுதிகளில் இருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களிடம் எந்நேரமும் இஸ்லாமியர்களால் தாக்கப்படக்கூடும் எனும் பொய்ச்செய்தியை பரப்புவதன் மூலம் பல பலன்களை அடைந்திருக்கின்றன. அமைச்சர்கள் இரயில் நிலையத்திற்கே சென்று திரும்புமாறு கோரிக்கை விடுப்பதன் மூலம் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்ட பணிப்பாதிப்பை சரிக்கட்ட முயலும் அதேநேரம் தங்களை மக்களுக்காக செயல்படுபவர்கள் போல காட்டிக் கொள்வது. இஸ்லாமியர்களால் தாக்கப்படுவோம் எனும் அச்ச உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் மெய்யான காரணங்களிலிருந்து மக்களை திசை திருப்புவது. வதந்தியை பரப்பினார்கள் என்று சமூகத் தளங்களை முடக்குவதன் மூலம் பின்னர் நிரந்தரமாக இணையத் தடை ஏற்படுத்துவதற்கு முன்னோட்டம் பார்ப்பது என்று பல பலன்களை ஆளும் வர்க்கங்கள் அடைந்திருக்கின்றன.சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு இந்த உண்மைகள் தெள்ளென விளங்கும்.

 

ஆளும் அதிகார வர்க்கங்கள் தங்கள் நலனை சாதித்துக் கொள்வதற்கு எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கின்றன என்பது ஏறகனவே பலமுறை நிருவப்பட்டிருக்கிறது. இனிமேலும் மக்கள் இதை உணராமலிருக்க முடியாது. இன மோதல்கள் தொடங்கி மத மோதல்கள் வரை தங்களைப் பிரிக்கும் அனைத்து பேதங்களையும் கடந்து வர்க்க அடிப்படையில் ஒன்றிணவதைத் தவிர இவைகளை முறியடிப்பதற்கும் முன்னேறுவதற்கும் வேறுவழியில்லை. 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மியான்மர்: கலவரமும் நிலவரமும்

அண்மையில் செய்தி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டவைகளில் மியான்மரின் வங்காள முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறிப்பிடத்தக்கது. ஆனால் அது குறித்த விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் நண்பர் இக்பால் செல்வன் தன்னுடைய கோடங்கி தளத்தில் எழுதிய இந்தக் கட்டுரை வரலாற்றுத் தகவல்களுடன் கிடைத்தது. அந்தக் கட்டுரையை செங்கொடி வாசகர்களுக்கும் தருவது பொருத்தமாக இருக்கும் என்பதால் இந்த மீள் பதிவு.

உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் நடத்தும் கலவரங்கள், உழைக்கும் மக்களே இரண்டு பிரிவாக பிரிந்து ஒன்றை ஒன்று எதிர்த்து புரியும் கலவரங்கள், தேசிய இனப் பிரச்சனைகள் போன்றவை எல்லாம் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உருவாக்கப்படுபவைகளே. கலவரம் என்றதும் இழப்புகளை மையப்படுத்திப் பார்க்காமல் அதில் ஒழிந்திருக்கும் ஆளும் வர்க்கங்களின் நலன், உழைக்கும் மக்களுக்கு எதிரான தன்மைகள் போன்றவற்றை சரியாக அடையாளம் கண்டு அம்பலப்படுத்துவதே சரியான, அவசியமான பணி.

***************************************

 
பர்மா என அறியப்படும் மியன்மார் நாடு மிக அண்மையில் தான் மக்களாட்சி முறைக்குத் திரும்பியுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக இராணுவ ஆட்சியில் சிக்கித் தவித்த மியன்மார் கொஞ்சம் கொஞ்சமாக மக்களாட்சிக்கு திரும்பி வந்தது. இதற்காகப் பெரிதும் போராடியவர் ஆங்க் சாங்க் சூ கி ஆவார். உலக நாடுகளில் எழுந்துள்ள சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிரான ஒரு சூழலும், அழுத்தமும் கூட இதற்கு ஒரு காரணமாகும். இந்த நிலையில் உலகமே கூர்மையாக மியன்மாரை அவதானித்து வந்த நிலையில் ஏற்பட்ட சோகமே ரொகிங்கியா கலவரம். 
 
ரொகிங்கியா : ரொகிங்கியா எனப்படும் இஸ்லாமிய வங்காளி மொழி பேசும் மக்கள் சுமார் 800, 000 பேர் வரை மியன்மாரின் மேற்கு மாநிலமான அரக்கான் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். ரொகிங்கியாக்கள் ஏனைய நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களிடம் இருந்து தனித்துவமானவர்கள். பல நிலைகளில் ரொகிங்கியாக்கள் காலம் காலமாக வாழ்ந்து வருவதாகக் கூறினாலும். 1950-களுக்கு முன்னர் ரொகிங்கியாக்கள் மிகவும் சிறிய இனமாகவே இருந்தனர். பெரும்பாலானோர் வங்கதேசத்தில் இருந்து கூலிகளாக மியன்மாரில் வேலை செய்தவர்களே ஆவார்கள். 
 
மியன்மாரின் இதரப் பகுதிகளில் இந்திய முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள், சீன முஸ்லிம்கள் ரங்கூன் போன்ற நகரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இவர்கள் யாவரும் ஆங்கிலேயேர் காலத்தில் இங்குக் குடியேறியவர்கள். அத்தோடு மட்டுமில்லாமல் ரங்கூன், மண்டலாய் போன்ற பகுதிகளில் சில பர்மிய முஸ்லிம்கள் சில நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இவர்களையும் ரொகிங்கியாக்களையும் பெரிதும் குழப்பிக் கொள்பவர்களும் உண்டு. ரங்கூன் பகுதிகளில் முஸ்லிம்களைப் போலவே தமிழர்களும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்களே. ஆனால் பெரும்பாலானோர் மியன்மாரிய விடுதலைக்குப் பின்னர் வெளியேற்றப் பட்டு விட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே மியன்மார் குடியுரிமை வழங்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள். 
 
ரொகிங்கியாக்கள் பெரிதும் வியாபாரம் போன்ற தொழில்களில் ஈடுபடுவதில்லை. பலர் நினைப்பது போல முகாலய மன்னர் காலத்தில் குடியேறிய வியாபாரிகளின் வழி வந்தவர்களும் அல்ல இவர்கள். வங்கதேசத்தின் சித்தங்காங்க எல்லைப் பிரதேச வழியாகக் கூலி வேலைக்குச் சென்றவர்களே ரொகிங்கியாக்கள். 1950-களுக்குப் பின் பல ஆயிரம் வங்காளி முஸ்லிம்கள் கள்ளத் தனமாக மியன்மாரில் குடியேறத் தொடங்கினார்கள். வங்கதேச விடுதலைப் போர் காலங்களில் மேலும் ஆயிரம் ஆயிரம் வங்காளி முஸ்லிம்கள் மியன்மாருக்குள் நுழைந்து அங்கேயே குடியேறி விட்டனர். 
 
ரொகிங்கியாவின் வரலாறு : ரொகிங்கியா என்ற வார்த்தை பெரும்பாலும் 1990-களிலேயே பத்திரிக்கைகளில் இடம் பெறத் தொடங்கின. ரொகிங்கியாக்களைப் பற்றி ஆய்வில் ஈடுபடத் தொடங்கிய கின் மாங்க சா என்பவர் பல அதிர்ச்சித் தகவல்களையும், ஆச்சர்யமான விடயங்களையும் கண்டறிந்தார். ரொகிங்கியா என்ற வார்த்தை மியன்மாரின் அராக்கன் மொழி வார்த்தையே அல்ல. அராக்கன் மாநிலத்தில் பேசப்படும் எந்தவொரு மொழியிலும் ரொகிங்கியா என்ற வார்த்தை இடம்பெற்றதே இல்லை. அதனால் வங்காள மொழியில் இந்தச் சொல்லை தேடிய போதும் அப்படி ஒரு சொல் இடம்பெறவே இல்லை. ஆகவே அவர் பல இலக்கியங்கள், ஆவணங்களில் தேடிய போதும் ஏமாற்றமே மிஞ்சியது. பிரித்தானிய ஆட்சியின் போது மியன்மார் குறித்துப் பல நூல்களை எழுதிய மோரிஸ் காலிஸ் ரொகிங்கியா என்ற சொல்லை எங்கும் குறிப்பிடவே இல்லை. 
 
பர்மாவில் 1921-ம் ஆண்டு எடுக்கப் பட்ட மக்கள் தொகைக் கணிப்பின் போது பர்மாவில் வாழ்ந்த இனங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அவற்றில் கூட ரொகிங்கியா என்ற சொல் இடம்பெறவே இல்லை. ஆர்.பி. ஸ்மார்ட் என்பவரால் கொகுக்கப் பட்ட பர்மா கெஸ்ட்டிலும் இவர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. 
 
முஜாஹித்கள் : 
 
1950களில் வங்கதேச எல்லைப் புறக் காடுகளில் முஜாஹித்கள் எனப்படும் தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வந்தது. இவர்களின் தலைவனாக மிர் காசிம் என்னும் வங்காள மொழி பேசுபவன் செயல்பட்டு வந்தான். அராக்கான் மாநிலத்தின் வடப் பகுதிகளைக் கைப்பற்றிக் கிழக்குப் பாகிஸ்தானில் இணைக்க வேண்டும் எனச் செயல் பட்டு வந்தான். இந்த இயக்கத்தில் இருந்த உறுப்பினர்கள் அனைவருமே வங்காளத்தில் இருந்து சட்ட விரோதமாக அராக்கான் மாநிலத்தில் இடம் பெயர்ந்து வந்தவர்களே. காஸிமின் குழுவில் இருந்தவர்கள் பலர் பாகிஸ்தானில் சென்று பயிற்சியும் பெற்று வந்தார்கள். இந்த நிலையில் காஸிமை பிடிக்க மியன்மாரிய அரசு பரிசு அறிவித்தது. இருந்த போதும் அவன் பிடிப்படவில்லை. இந்த நிலையில் மியன்மாரிய இராணுவம் முஜாஹிதுகளைத் தோற்கடித்தது. இதனால் காஸிம் கிழக்கு பாகிஸ்தானாக அறியப்பட்ட வங்கதேசத்துக்கு ஓடிப் போனான். அங்கு அவன் ஆள் தெரியாத நபரால் காக்ஸ் பஜாரில் வைத்துக் கொல்லப்பட்டான். பல முஜாஹித்கள் அரசுப் படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களை ரொகிங்கியாக்கள் என அறிவித்துக் கொண்டனர். 
 
1960-களில் யு நூ அதிபராகத் தேர்தலில் வெற்றிப் பெற்றதும் மியன்மாரிய இனங்களுக்குத் தனிமாநிலங்களை உருவாக்கத் திட்டமிட்டார். இதன் அடிப்படையில் மியன்மாரின் ராக்கின் இன மக்கள் வாழும் அராக்கன் மாநிலம் உருவானது. இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளிகள் தமக்கும் தனி மாநிலம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஆனால் அவர்கள் யாவரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதால் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 
 
 
போலி வரலாறு : 
 
இந்த நிலையில் அராக்கனில் வாழ்ந்த வங்காளி முஸ்லிம்கள் போலி வரலாற்றுத் தகவல்களை வெளியிடத் தொடங்கினார்கள். அதன் படி அரபு வணிகர்கள் வந்த கப்பல் அராக்கனில் மூழ்கிவிட அங்கிருந்து தப்பி வந்து அவர்கள் அராக்கானில் குடியேறி பர்மிய பெண்களை மணந்தத்தாகவும், அவர்களே ரொகிங்கியாக்கள் எனக் கதைக் கட்டி விட ஆரம்பித்தார்கள். பல வரலாற்று ஆய்வாளர்கள் முஸ்லிம்களின் இந்தக் கூற்றை மறுத்தும் வந்தனர். 
 
ஆனால் ம்ராக் யூ அரசர்களின் படையில் சில முஸ்லிம் போர்வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் பர்மிய பெண்களை மணந்து வாழ்ந்தார்கள். அவர்களின் வாரிசுகள் சிலர் இன்றளவும் அராக்கன் மாநிலத்தில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கை சில நூறே ஆகும். இவர்களின் தோற்றமும், மொழியும் அராக்கானில் வாழும் ரக்கீங்களை ஒத்து இருக்கும். ஆனால் மியன்மாருக்கு வெளியே இருப்பவர்கள் இவர்களையும் ரொகிங்கியாக்களையும் குழப்பிக் கொள்பவர்கள் மிக அதிகம். 
 
வங்காளிகளின் வருகை : 
 
இரண்டாம் உலக யுத்த காலங்களில் ஜப்பானை படைகள் பொழிந்த குண்டு மழைகளுக்கு அஞ்சிய பர்மிய ராக்கீன் இன மக்கள் வங்கதேசத்துக்கு அருகே உள்ள கிராமங்களில் இருந்து வெளியேறி அராக்கான் மாநிலத்தில் உள்ள நகரப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளாக இக்கிராமங்கள் மாறிப் போனது. இதனால் இப்பகுதிகள் ருவாகாங்க் என்றழைக்கப்பட்டன. ருவாகாங்க் என்றால் பழைய கிராமங்கள் அல்லது ஆள் இல்லாத கிராமங்கள் என்று அர்த்தப்படும். இந்த நிலையில் வங்காளத்தில் இருந்து குடியேறிய கூலித் தொழிலாளர்களும், சட்ட விரோத குடியேறிகளும் இந்தக் கிராமங்களில் குடியேறி வாழத் தொடங்கினார்கள். இந்த நிலையில் அராக்கான் பகுதிகளில் உள்ள நகரங்களுக்குக் கூலி வேலை செய்யப் போகும் வங்காளிகள் தாம் எங்கிருந்து வருகின்றனர் எனக் கேட்கும் கேள்விகளுக்குத் தாம் ருவாகாங்க காஜா எனச் சொல்வார்களாம். அதாவது ருவாகாங்கில் இருந்து வருகின்றோம் என, அவர்களுக்குத் தெரியாது ருவாகாங்க் என்றாலே பழைய கிராமங்கள் என்று அர்த்தமாகும். இதுவே காலப் போக்கில் ரொகிங்கியாக்கள் என்ற சொல்லாக மருவியது. 
 
ஆனால் 1960-களில் தமக்கான வரலாறுகளாகப் பொய்களைப் புனைய தொடங்கிய பல இஸ்லாமியர்கள் தாம் 9-ம் நூற்றாண்டில் இருந்தே வாழ்ந்து வருவதாகக் கதைக் கட்ட ஆரம்பித்தனர். 
 
முகாலயர்களின் வாரிசுகள் : 
 
ரொகிங்கியாக்களில் சிலர் தாம் முகாலயர்களின் வாரிசு என அறிவித்துக் கொண்டார்கள். ஆனாலும் அதுவும் உண்மை இல்லை என்பதைப் பர்மிய வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஷா சுஜா என்னும் இளவரசன் இருந்தான். ஔரங்கசீப்பின் இளைய தம்பியான இவன் அரசராக முயன்றான், ஆனால் அம்முயற்சி தோல்வி காணவே உயிருக்கு அஞ்சி அராக்கானில் ஆட்சி செய்த சண்ட துத்தம்மா என்னும் மன்னனிடம் அடைக்கலம் புகுந்தான். 1660-களில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மன்னன், பின்னர் அவனின் மகளை மனைவியாக்கிக் கொள்ள ஆசைப்பட்டுப் பெண் கேட்க போனான். ஆனால் இதனைச் சம்மதிக்க மறுத்துவிட்டான் ஷா சுஜா. இதனால் கோபமுற்ற மன்னன் சண்ட துத்தம்மா அனைத்து முகாலயர்களிலும் வெட்டிப் போடும் படி உத்தரவிட்டான். அதன் படி அனைவரும் கொல்லப்பட்டனர். இதனைக் கேள்வியுற்ற முகாலய மன்னர்கள் சண்ட துத்தம்மாவிடம் போர் தொடுத்து வந்தனர். இதனால் அராக்கான் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தாங்கோங்க் பகுதியை முகாலயரிடம் இழந்துவிட்டான். இன்றளவும் சித்தாங்கோங்க் வங்கதேசத்தின் ஒரு பகுதியாகவே இருக்கின்றது. ஆனால் அங்கு வாழும் பெரும்பான்மையினர் பர்மிய மொழி பேசும் பௌத்தர்களாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆகவே பாரசீக மொழி பேசிய முகாலயர்களின் வாரிசுகள் தான் ரொகிங்கியாக்கள் என விடப்பட்ட கதையும் ஒரு புனைவே என்பது உண்மையாகிவிட்டது. ஏனெனில் ரொகிங்கியாக்கள் உருவத்தால் கருப்பானவர்கள், வங்காள மொழி பேசக் கூடியவர்கள். ஆனால் முகாலயர்களோ துருக்கிய இனத்தைச் சார்ந்தவர்கள் வெள்ளை நிறமானவர்கள், பாரசீக மொழி பேசக் கூடியவர்கள். அத்தோடு அவர்கள் யாவரும் அராக்கான் மன்னனால் கொலை செய்யப்பட்டு விட்டதாகவே வரலாறு கூறுகின்றது. 
 
பர்மிய மொழிய தெரியாத ரொகிங்கியாக்கள் : 
 
பர்மாவில் குடியேறிய இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் பலர் ரங்கூனில் வாழ்கின்றார்கள். இவர்கள் சரளமாகப் பர்மிய மொழி பேசக் கூடியவர்கள். பர்மிய அரசவையில் போர் வீரர்களாக இருந்த சில முஸ்லிம்கள் பர்மியர்களோடு கலப்புற்று பர்மிய மொழி பேசி அராக்கன் உட்படச் சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய தமிழர்கள், தெலுங்கர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலாய் முஸ்லிம்கள் போன்றோரும் பர்மிய மொழியே பேசி வருகின்றார்கள். 17-ம் நூற்றாண்டில் பர்மாவில் குடியேறிய போர்த்துகேசிய கத்தோலிக்கர்களும் சிரியம் என்ற நகரில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களும் பர்மிய மொழியே பேசி வருகின்றார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களாகக் கூறிக் கொள்ளும் ரொகிங்கியாக்கள் பலருக்கு சுத்தமாகப் பர்மிய மொழியோ, அராக்கனிய மொழியோ பேசத் தெரியாது. உடை, நடை, பாவனைகள், உணவு பழக்க வழக்கம், உருவ ஒற்றுமை எனப் பலவற்றிலும் ரொகிங்கியாக்கள் பர்மியர்களோடு ஒத்துப் போவதே இல்லை. சில நூறு ஆண்டுகளுக்கு முன் வந்த தமிழர்களே பர்மிய மொழி சரளமாகப் பேசும் போது ஏன் இவர்களால் பேச முடியவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும் ? 
 
ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்த கதை : 
 
ஏழாம் நூற்றாண்டில் கப்பலில் வந்த அரபு வாணிகர்களின் கப்பல் உடைந்து, அவர்கள் தப்பி வந்து அராக்கானில் இருந்த ம்ராக் யூ மன்னராட்சிக் காலத்தில் குடியேறியவர்களே இந்த ரொகிங்கியாக்கள் எனக் கூறப்படுகின்றது. ஆனால் இதுவும் உண்மையல்ல ! ஏழாம் நூற்றாண்டில் ம்ராக் யூ மன்னர்களே ஆட்சி செய்யவில்லை ! மாறாகத் தன்யாவட்டி மன்னர்களே அப்போது ஆட்சியில் இருந்தனர். தன்யாவட்டி மன்னர் காலத்தில் பர்மாவில் முஸ்லிம்கள் இருந்தமைக்கான ஆதாரங்களோ, எந்தவிதக் குறிப்புகளுமோ இல்லவே இல்லை. அக்காலத்தில் வேறு மதம் இருந்தது எனில் அது இந்து மதம் மட்டுமே எனப் பர்மிய வரலாறுகள் கூறுகின்றன. 
 
கம்யூனிஸ்ட்களின் சதி வேலை : 
 
1950-களில் முஜாஹித்களோடு தொடர்பு வைத்திருந்த செஞ்சட்டை கம்யூனிஸ்ட் போராளிகளே ரொகிங்கியா என்ற வார்த்தையை முஜாஹித்களைக் குறிப்பிட பயன்படுத்தியதாக யு தாங்க் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றார். ஆனால் அதன் சரியான அர்த்தம் என்னவெனத் தெரியாது என அவர் கூறுகின்றார். செஞ்சட்டை கம்யூனிஸ்ட்கள் முஜாஹித்களுக்குப் பர்மிய குடியுரிமையைக் கள்ளத் தனமாகப் பெற்றுக் கொடுக்கவும் முயன்றுள்ளனர் என அவர் கூறுகின்றார். 
 
ரொகிங்கியாக்களின் எதிர்காலம் : 
 
இது போன்ற இனக்கலவரங்கள் பல முறை கடந்த பதினைந்து ஆண்டுகளில் நடந்துள்ளன. ஆனால் அப்போது எல்லாம் இவற்றை இவ்வளவு பெரிதாக ஊடகங்கள் கூறவில்லை. ஆனால் தற்போது ஜனநாயக ஆட்சியைத் தழுவ நினைக்கும் மியன்மாரில் பிரச்சனைகளை உண்டுப் பண்ணவும், சீனச் சார்பு நிலையில் இருந்து அமெரிக்கச் சார்பு நிலைக்கு மாறி வரும் மியன்மார் மீது அழுத்தங்களைக் கொடுக்கவே இப்படியான கலவரங்கள் தூண்டப்பட்டு, அவற்றைப் பற்றிய பல அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாகப் பாகிஸ்தானை மையமாக வைத்துச் செயல்படும் இணையத் தளங்கள், செய்தி ஊடகங்கள் பல தான் இந்தச் செய்திகள் பலவற்றை வெளியிட்டு பரப்பி வருகின்றனர். இதே போன்ற கலவரங்கள் நைஜீரியாவிலும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஊடகங்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனெனில் அங்குப் பாதிக்கப்படுவது கறுப்பின கிருத்தவர்கள் என்பதால். 
 
அதே போல ரொகிங்கியாக்களைப் பர்மிய முஸ்லிம்களோடு குழப்பிக் கொள்வதும், சட்ட விரோதமாகக் குடியேறி ரொகிங்கியாக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டதை ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பர்மாவில் புறக்கணிக்கப்படுவதாகச் செய்திப் பரப்பி வருவதும், அண்மையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் பர்மிய ராணுவம் 20,000 முஸ்லிம்களைக் கொன்று விட்டதாகவும் போலிச் செய்திகள் பலவற்றை இணையத் தளங்களில் உலவ விட்டுள்ளனர். இவை யாவும் மிகைப்படுத்த பட்ட செய்திகளே ஆகும். 
 
அண்மையக் கலவரம் ஏற்படப் புத்த பிக்குகள் கேக் சாப்பிட்ட கதையும் இப்படியான ஒரு மிகைப்படுத்தலே. உண்மையில் பர்மிய இளம் பெண்ணை சில ரொகிங்கியாக்கள் கடத்தி கற்பழித்துக் கொன்று விட்டனர். இதனால் எழுந்த பிரச்சனையே இந்தக் கலவரம். முதலில் அராக்கனிய மக்களின் வீடுகளுக்குத் தீ வைத்தவர்களும் ரொகிங்கியாக்கள் தான். இவற்றில் 20 ,000 பேர் இறந்ததாகக் கூறப்படுவதும் மிகைப்படுத்த பட்டவையே. இந்தக் கலவரத்தில் இறந்தவர்கள் 50 பேர் ஆவார்கள். இவற்றில் இருசாராரும் அடங்குவார்கள். அதே போலக் கலவரங்களைப் பெரிதுப் படுத்தியதில் பாகிஸ்தானிய உளவுத் துறைக்கும் சம்பந்தம் இருப்பதாகவும், கலவரங்களை ஏற்படுத்திய 20 பேரை மியன்மார் அரசு கைது செய்துள்ளது. தற்போது கலவரங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
சட்ட விரோதமாகக் குடியேறும் எந்தவொரு மக்களையும் எந்தவொரு அரசும் குடியுரிமை வழங்கிவிடாது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சில காரியங்களைச் செய்யலாம். சட்டத்துக்கு உட்பட்டு குடியேறிய மலையகத் தமிழர்கள் விடயத்தில் இந்திய – இலங்கை அரசு செய்தது போல ! மியன்மார் அரசும் – வங்கதேச அரசும் ஒப்பந்தம் ஒன்று போட்டு ரொகிங்கியாக்களில் ஒரு பகுதியினருக்கு மியன்மார் குடியுரிமையும், ஒரு பகுதியினருக்கு வங்கதேச குடியுரிமையும் வழங்கலாம். இன்னும் ஒரு பகுதியினரை இதர முஸ்லிம் நாடுகள் அகதிகளாக ஏற்றுக் குடியுரிமை வழங்க முன்வரலாம். ரொகிங்கியாக்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் எனினும் அவர்களுக்கு எதிரான மனித உரிமைக் குற்றங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ரொகிங்கியாக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மியன்மார், வங்கதேசம் மற்றும் சர்வதேச சமூகத்துக்கு முழுப் பொறுப்புகள் உள்ளன. இந்த இனக்கலவரங்களை முடிவுக்கு கொண்டு வர செயல்பட்ட மியன்மாரிய அரசும், பாதுகாப்பு படைகளும் பாராட்டப் படவேண்டியவையே. ரொகிங்கியாக்கள் – ரக்கீன் மக்களுக்குள் இடையிலான பிணக்குகளுக்கு மதச் சாயல் பூசப்படுவதும், தீவிரவாதங்களை வளர்க்க முனைவரும் கண்டிக்கப்பட வேண்டியவையே. 
 
பர்மிய வரலாறு, ரொகிங்கியா பற்றிய தகவல்களைத் தொகுத்து அளிப்பதில் உதவியாக இருந்த பர்மிய வலைப்பதிவர்களுக்கும், வங்கதேச தோழர்களுக்கும் எனது நன்றிகள் ! 
 
உதவியவை : 
 
  • விக்கிபீடியா 
  • See Bertil Lintner, Chronology of the Events. In: du, Sonderbeilage, Heft 11, 1993; and compare also withMartin Smith, Burma’s Muslim Borderland: Sold Down the River. In: CS Quarterly, 13(4), p. 28 
  • See Maurice Collis in collaboration with San Shwe Bu, Arakan’s Place in the Civilization of the Bay. In:Journal of Burma Research Society, vol. XXIII, p. 493 
  • U Khaing Saw Htwan, A New History of Rakhaing (Arakan). (in Burmese), pp. 68-69 
  • U Thaung is a famous journalist and author well known under his pseudonym name Aung Bala. He wasowner, publisher and chief editor of the then most modern newspaper in Burmese language, “The Kyemon(Mirror) Daily” until the newspaper was nationalized. He was arrested and detained for 4 years without anytrial and released in 1967. Now he lives in Florida, U.S.A. as an exiled opposition 
  • அலர்ட் நியூஸ் 
  • கார்டியன் நியுஸ் 
  • மியன்மார் லைஃ ப்ளாக் 
  • பாலிசி மைக் 
  • பர்மா நெட் 

முதல் பதிவு: கோடங்கி

சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு

கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர்.  சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர்.  காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள்.  பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள்.  அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா?

செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் நெடுந்தொலைவிலிருந்து வந்து செய்வதறியாது பதைத்து நிற்கிறோம் என்று கூறவைத்து, கலவரத்தின் பாதிப்பாக காட்சிப்படுத்துகிறார்கள்.

ஆனால், அங்கு நடந்திருப்பது திட்டமிடப்பட்ட போலிமோதல் (என்கவுண்டர்) கொலைகள்.  வழக்கமான போலிமோதல்களில் குறிப்பிட்ட ஒருவரோ, பலரோ கொல்லப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பார்கள். பரமக்குடியில் குறிப்பாக யார் என்பது முடிவு செய்யப்படவில்லை, அவ்வளவு தான் வித்தியாசம்.

கடந்த சில ஆண்டுகளாகவே இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்ட நாள் இம்மானுவேல் சேகரன் குருபூஜையாக தாழ்த்தப்பட்ட மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இதுபோன்ற குருபூஜைகள் சாதிவெறிக்கு எதிரான போராட்ட குணத்தை கூர்தீட்டும் என்றோ,  ஆதிக்க சாதியினரை கேள்விக்கு உள்ளக்கும் என்றோ கூறிவிட முடியாது.  ஒருவகையில் பார்ப்பனிய பண்பாட்டு விழுமியங்களுடன் நடக்கும் இதுபோன்ற குருபூஜைகள் அவர்களை இன்னும் சாதிய அமைப்புகளுக்குள் கண்டுண்டு கிடக்கச் செய்யவே உதவும். என்றாலும்,  முத்துராமலிங்கத்தின் குருபூஜை அரசு மதிப்புடன், குறிப்பிட்ட நாட்களுக்கு விடுமுறை அறிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் அரசே ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதிவெறிக்கு குறியடையாளமான முத்துராமலிங்கத்தின் குருபூஜையே அந்தப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களின் பதைப்பையும், பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல் ஆண்டுதோறும் நடந்து கொண்டிருக்க; சாதிவெறி ஆதிக்கத்திற்கு எதிராக போராடி அந்த சாதி வெறியர்களாலேயே கொலையுண்டு போன இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அதே போல் ஏன் கொண்டாடக் கூடாது எனும் எதிர்ப்புணர்ச்சியின் காரணமாகவே இம்மானுவேல் சேகரன் குருபூஜை நடத்தப்படுகிறது.

ஒரு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றாலே அதற்கு தகுந்த பாதுகாப்பளிப்பது அரசின் வேலை.  சாதிவெறியின் அடையாளமான பசும்பொன் குருபூஜைக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்யும் அரசு, குறிப்பாகச் சொன்னால், ஓட்டுப் பொறுக்க உதவும் என்பதால் படம்காட்ட வரும் அத்தனை ஓட்டுப் பொறுக்கி தலைவர்களையும் ஒரே நேரத்தில் வந்தால் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று தனித்தனியாக நேரம் ஒதுக்கிக் கொடுத்து படம் காட்டச் சொல்லும் அரசு, வழிநெடுக தாழ்த்தப்பட்டவர்கள் மீது தேவர் சாதிவெறியர்களின் சீண்டலை கண்டும் காணாமல் இருக்கும் அரசும் காவல் துறையும் ஜான் பாண்டியனை மட்டும் ஏன் கைது செய்து வரவிடாமல் தடுக்க வேண்டும்?

சட்டம் ஒழுங்கு பூச்சாண்டி காட்டி இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை தடுத்து நிறுத்த வேண்டும். அதை முத்தராமலிங்கத்தின் குருபூஜைக்கு இணையாக வளரவிடக் கூடாது என்பது தான் தமிழக அரசின் நோக்கமாக இருக்கிறது.  அதிமுக தேவர்சாதி ஆதரவுக் கட்சி என்பது அனைவரும் அறிந்தது தான். ஊழலுக்காக நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு ஓபியை முதல்வராக்கியபோது, “நான் வேறொரு சமுதாயத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் தேவர் சமுதாயம் மீது நான் எவ்வளவு பற்றுக் கொண்டிருக்கிறேன் என்பதற்கு ஓபியை முதல்வராக்கியதே சான்று” என்று வெளிப்படையாக அறிவித்தார் ஜெயா.  ஓட்டுப் பொறுக்கி அரசியல் என்பதைத்தாண்டி சட்டமன்றத்திலேயே தன்னை ’பாப்பாத்தி’ என்று அறிவித்த ஜெயா, இயல்பாகவே ஆதிக்க சாதியின் மீது விருப்பும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வெறுப்பும் கொண்டவராகவே தன்னை எப்போதும் வெளிக்காட்டியிருக்கிறார். மட்டுமல்லாது, கடந்த தேர்தலில் தேவர்சாதியின் ஒரு பிரிவினர் திமுகவை ஆதரித்ததும், அவர்களை மீண்டும் அதிமுக வாக்குவங்கியாக தக்கவைத்துக் கொள்ளும் தேவையும் சேர்ந்துகொள்ள, கலவரபயத்தை விதைத்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி படிப்படியாக இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை இல்லாமல் செய்துவிட வேண்டும் எனும் நோக்கிலேயே இந்த போலிமோதல் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ஜான் பாண்டியனை இரண்டு நாள் ஏன் தடுத்து வைத்திருந்தீர்கள்? ஏன் எந்த நீதிமன்றத்திலும் நேர்நிருத்தவில்லை? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.  இப்போது, பரமக்குடி பகுதியில் ஒரு சிறுவன் சிலரால் கொல்லப்பட்டதற்கு ஆறுதல் தெரிவிக்க ஜான் பாண்டியன் அந்த வீட்டுக்குச் சென்றால் பதட்டம் ஏற்படும் கலவரம் வரும் என்று காரணம் கூறுகிறார்கள். இப்போது மட்டும் என்ன நடந்திருக்கிறது?  ஜான் பாண்டியனை கைது செய்தால் சாலை மறியல் உள்ளிட்ட பிரச்சனைகள் எழும் என்று காவல் துறைக்கு தெரியாதா?

ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பரமக்குடி பகுதியில் மூவாயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டதற்காக சாலை மறியல் செய்ததோ இருநூறு பேர்.  இவர்களை காவல் துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஒரு வாரமாக அங்கு காவல்துறை செய்தது என்ன? கூட்டம் கட்டுக்கு அடக்கவில்லை என்றால், எச்சரிக்கப்படும், தடியடி நடத்தப்படும்,  கண்ணீர்புகை குண்டுகள் வீசப்படும், ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படும், அதையும் மீறினால் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் பேரில் கால்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்போதும் கலையவில்லை என்றால் வேறுவழியில்லாமல் மரண நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும்.  இப்போது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலையவில்லை என்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்கிறார்கள்.  கொல்லப்பட்ட அனைவரும் மார்பிலும் தலையிலும் குண்டு தாக்கி இறந்திருக்கிறார்கள்.

ஒரு வாரத்திற்கு முன்பே ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். முதலில் அமைதியாக சாலை மறியல் மட்டுமே நடந்திருக்கிறது. என்றால் அதை கலவரமாக மாற்றி துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு கொண்டு சென்றது யார்? அப்போது காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது?  மாவட்ட ஆட்சியரிடம் துப்பாக்கிச் சூடு நடத்த முறைப்படி அனுமதி பெறப்படவில்லை என்பதும் தெரிகிறது. மேலே இருக்கும் படம் கற்களை குவித்து வைத்துக் கொண்டு காவல்துறையினர் வாய்ப்புக்கு காத்திருந்ததை தெளிவாகக் காட்டுகிறது.    என்றால் இது திட்டமிடப்பட்ட போலிமோதல் கொலைகள் தான் என்பதற்கு இதற்கு மேலும் சான்றுகள் வேண்டுமோ?

 காஷ்மீரிலும், வடமேற்கு மாநிலங்களிலும் எப்படி மக்களைக் கொல்கிறதோ அதுபோலவே இங்கும் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கூறப்படும் காரணங்கள் வேறு, நடத்தப்பட்ட நாடகங்கள் வேறு. அங்கு அது தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இங்கு கலவரத்தை தடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.  எங்கும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக காட்டிக் கொண்டே அரசால் மக்களை கொன்று குவிக்க முடிகிறது, அதுவும் வேறு வழியில்லாமல்தான் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது என்று காட்டிவிட்டால் போதும், மக்களின் ஆதரவும் கிடைத்துவிடும் என்று தான் அரசுகள் எண்ணுகின்றன. அன்று மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது ஊர்வலம் நடத்தியவர்கள் பெண் காவலாளியை மானபங்கப் படுத்த முயன்றார்கள் என்று கூறப்பட்டது. இன்றும் காவல்துறை உயரதிகாரிகள் காயம்பட்டார்கள் என்று கூறப்படுகிறது. தங்கள் மீது கல்லெறி நடந்துவிட்டாலோ, காயம்பட்டுவிட்டாலோ, மக்கள் மந்தைகளைப் போல் சுட்டு வீழ்த்தப்படுவார்கள் என்றால் காவல்துறையை வெறிகொண்ட விலங்குகள் என்று கூறுவது எப்படி தவறாக இருக்க முடியும்? எப்போதுமே பிரச்சனையை திசை திருப்புவதே அதை நீர்த்துப் போகச் செய்வதற்கான உத்தியாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஜான் பாண்டியன் தியாகியா? அரசியல் தலைவரா? ரவுடியா? என்பது இங்கே பிரச்சனை அல்ல. திட்டமிட்டு மக்களை காவல்துறை படுகொலை செய்திருக்கிறது என்பதே இங்கு முதன்மையாக பேசப்பட வேண்டியது.

ஆனால் எந்த ஓட்டுக்கட்சியும் இது குறித்து பேச மறுக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டிருக்கிறது, துப்பாக்கிச் சூடு நடத்தாமலேயே கலவரத்தை அடக்கியிருக்க முடியும், இழப்பீட்டுத்தொகையை இன்னும் அதிகரித்துத் தரவேண்டும்,  விசாரணைக் கமிசன் போதாது சிபிஐ விசாரணை வேண்டும். சட்டசபையில் விவாதிக்க வேண்டும், தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் இதுபோன்ற ஓலங்களைத்தான் எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் ஒச்சமிட்டுக் கொண்டிருக்கின்றன.  இன்னும் இரண்டு மாதகால முடிவில் அல்லது நீட்டப்படும் காலங்களின் முடிவில் விசாரணை அறிக்கை எப்படி இருக்கும் என்பதோ, அதன் பரிந்துரைகளுக்கு அரசு என்ன மதிப்பளிக்கும் என்பதோ யாருக்குமே தெரியாத ஒன்றல்ல.  கயர்லாஞ்சிகளும், திண்ணியங்களும், இரட்டைக் குவளைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலம் ஒடுக்கப்பட்டுக் கிடந்தவர்கள் சிறு அளவில் எதிர்ப்பைக் காட்டினாலும் இது தான் நடக்கும் என்று அரசு துப்பாக்கியை உயர்த்திக் காட்டுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  இன்னும் எத்தனை காலம்தான் இந்த ஓட்டுக் கட்சிகளின் ஒட்டப்பட்ட வாலாக இருப்பது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் முடிவு செய்தாக வேண்டிய காலம் இது. 

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இங்கிலாந்து கலவரம்: இழக்கவும், வெல்லவும் எதுவும் இல்லை

“இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்கள் எழுச்சி கொள்கின்றனர். எல்லோரும் பொறுமை இழந்து விட்டார்கள். யாரிடமும் இழப்பதற்கு எதுவும் இல்லை.” – லண்டன் கலவரத்தை நேரில் பார்த்த சிலரின் கருத்துக்கள்.
லண்டன் நகருக்கு வெளியே டோட்டன்ஹம் பகுதியில், பொலிஸ் ஒரு இளைஞனை சந்தேகித்திற்கிடமான வகையில் சுட்டுக் கொண்டது. வழக்கம் போலவே, “போலிசை தாக்குவதற்கு எத்தனித்த நபரை, தற்பாதுகாப்புக்காக சுட்டதாக” பிரிட்டிஷ் பொலிஸ் தெரிவித்ததை யாரும் நம்பவில்லை. பொலிஸ் அராஜகத்திற்கு எதிர்வினையாக, அடித்தட்டு மக்களின் அராஜகம் வெடித்துக் கிளம்பியது. கும்பல் கும்பலாக கிளம்பிய இளைஞர்கள், வர்த்தக ஸ்தாபனங்களை அடித்து நொறுக்கினார்கள். கடைகளை சூறையாடினார்கள். லண்டன் நகரில் மட்டும் நின்று விடாது, பேர்மிங்ஹாம் போன்ற பல நகரங்களுக்கு கலவரத்தீ பரவியது. கலவரத்தில் வெள்ளையினத்தவர், கறுப்பினத்தவர் எல்லோரும் ஈடுபட்டனர். ஏழ்மை மட்டுமே இனவேற்றுமை கடந்து அவர்களை ஒன்று சேர்த்தது. “லண்டனில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள், போலீசுடன் மோதுவதை விட, கொள்ளையடிப்பது இலகுவானது என்று கருதுகிறார்கள் ….” இவ்வாறு தெரிவித்தார் ஒரு ஊடகவியலாளர். அவர் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் கலவரம் பற்றி தமக்குத் தெரிந்த காரணங்களைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசும், வலதுசாரி ஊடகங்களும் கலவரத்தில் ஈடுபடுவோர் குறித்து ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளன. “சமூகவிரோதிகள்!”. “கொள்ளையடிப்பது, திருடுவது சமூகவிரோதிகளின் செயல். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டித்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்.” என்று அரசு கூறி வருகின்றது. பொதுமக்களில் ஒரு பகுதி இதனை ஆதரிக்கின்றது.
அரசியல் மயப்படுத்தப் படாத மக்கள் எழுச்சி எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு லண்டன் கலவரம் ஒரு உதாரணம். கலகக்காரரின் அறியாமையை பூர்ஷுவா வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. கலவரத்தில் ஈடுபட்டோர், காப்பரேட் நிறுவனங்களின் சூப்பர் மார்க்கெட்டுகள், ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள், போன்றவற்றை உடைத்து சூறையாடினார்கள். பெரும் முதலாளிகளை பாதித்த கலவரம் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப் பட்டது. பெரும் வணிக நிறுவனங்களின் காட்சியறைகள் நிறைந்திருக்கும் லண்டன் மத்தி, விரைவிலேயே பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆரம்பத்தில் கலவரத்தில் ஈடுபட்டோரின் தார்மீகக் கோபம், பெரும் வணிக நிறுவனங்கள் மேல் தான் குவிந்திருந்தது. நாள் தோறும் கண்கவர் விளம்பரங்கள் மூலம், பாவனையாளர்களை சுண்டி இழுக்கும் நிறுவனங்கள், தமது பொருட்களை வாங்குவதற்கு வசதியற்ற மக்கள் இருப்பதை மறந்து விடுகின்றனர். “பணமிருப்பவனுக்கு விற்கிறோம். இல்லாதவன் மூடிக் கொண்டு படுக்க வேண்டியது தானே…” என்று திமிராக பதிலளிப்பார்கள்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை, ஒரு ஊடகவியலாளர் எகத்தாளமாக குறிப்பிட்டார்: “முன்பு மக்களிடம் பணம் இருந்தது. கடைகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. தற்போது கடைகளில் பொருட்கள் நிறைந்துள்ளன. ஆனால் மக்களிடம் வாங்குவதற்கு பணமில்லை.” ஆனால்…. இங்கிலாந்து, “பொருளாதாரத்தை நிர்வகிக்க தெரியாத கிழக்கு ஐரோப்பிய நாடு அல்லவே?” பணக்கார மேற்குலகை சேர்ந்த இங்கிலாந்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்தோம்? இந்தியா போன்ற வறிய நாடுகளில் இருந்தெல்லாம், கையிலே பணமில்லாமல் வந்து குடியேறும் தற்குறியைக் கூட பணக்காரனாக்கும் நாடல்லவா? அத்தகைய சொர்க்கபுரியில் கலவரமென்றால் நம்பக் கூடியதாகவா இருக்கின்றது? இங்கிலாந்தில் கணிசமான ஏழை மக்கள், சேரிகள் போன்ற குடியிருப்புகளில் விளிம்புநிலையில் வாழ்வதாக கூறினால், நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருக்கும். நான் முன்னர் கூறிய படி, ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த அரசியலைப் பேசுவார்கள். உங்களுக்குத் தெரிந்த, இங்கிலாந்தில் வாழும் தமிழ் நண்பரைக் கேட்டுப் பாருங்கள். வெள்ளையின வறிய மக்கள் குறித்த பொதுவான கருத்து இவ்வாறு இருக்கும். “இங்கிலாந்தின் வெள்ளையின குடிமக்கள் பலர் உழைத்து வாழ விரும்பாத சோம்பேறிகள். அரசு வழங்கும் உபகாரச் சம்பளத்தில், இலவச சலுகைகளை பெற்றுக் கொண்டு சொகுசாக வாழ்கின்றவர்கள்.”

 

பூர்வீக ஆங்கிலேயர்களையும், பன்னாட்டுக் குடிவரவாளர்களையும் பிரித்து வைப்பதில், அரசு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. பெரிய வர்த்தக நிறுவனங்களை நெருங்க முடியாத கலவரக்காரர்கள், தமது பிரதேசத்தில் உள்ள சிறு வணிகர்களின் வியாபார நிலையங்களை தாக்குகின்றனர். அநேகமாக, இங்கிலாந்தின் சிறுவணிகர் குழாம் பன்னாட்டுக் குடியேறிகளைக் கொண்டது. அவர்கள், தமது சமூகத்தினருக்கான பலசரக்குக் கடைகள், உணவுச்சாலைகள் மட்டுமல்லாது, நடைபாதையோர பெட்டிக்கடைகள் கூட வைத்திருக்கின்றனர். குறிப்பாக இந்தியர்கள், இலங்கையர்கள் சிறு வணிகத் துறையில் கொடி கட்டிப் பறக்கின்றனர். பேர்மிங்ஹாம் பகுதியில் சீக்கியர்கள் தமது வியாபார நிறுவனங்களையும், குருத்வாராக்களையும் தாமே பாதுகாக்கின்றனர். ஹாக்கி, கிரிக்கெட் பேட், வாள்கள் சகிதம் சீக்கிய தொண்டர் படைகள் காவலுக்கு நிற்கின்றன. இந்த தொண்டர் படை, கலவரக்காரர்களை அண்ட விடாமல் விரட்டி அடிப்பதை, பொலிஸ் வேடிக்கை பார்க்கின்றது. “பிரிட்டன் எமது தாயகம். நாங்கள் எங்கள் ஏரியாக்களை பாதுகாக்கிறோம்…” என்று கூறும் சீக்கியரின் “நாட்டுப் பற்றை” ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. துருக்கியரும் தமது வியாபார நிறுவனங்களை தாமே பாதுகாக்கின்றனர். “நாங்கள் துருக்கியர்கள். எங்களிடம் வாலாட்ட முடியாது…” என்று தேசியவாதப் பெருமிதத்துடன் கூறுகின்றனர். போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தோரும், கொள்ளையடிக்க வருவோரை தாமே அடித்து விரட்டுகின்றனர். “எங்களுக்கு அடைக்கலமளித்து முன்னேற வைத்த பிரிட்டனுக்கு விசுவாசமாக இருப்போம்” என்கின்றனர். தமிழ் சமூகத்தை சேர்ந்த வணிகர்கள் மட்டும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். நகைக்கடை உட்பட பல தமிழ்க்கடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. “மத்திய லண்டனையும், பெரிய வணிக நிறுவனங்களையும் பாதுகாக்கும் பொலிஸ், இந்தப்பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை…” என்று குறைப்படுகின்றனர். சீக்கியரைப் போல, துருக்கியரைப் போல, அடியாட்களை வைத்து வர்த்தகத்தை பாதுகாக்க முடியாத கையறு நிலையில் தமிழ் சமூகம் உள்ளது. “ரோம் நகரம் பற்றியெரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததாக…” வரலாறு கூறுகின்றது. லண்டன் நகரம் பற்றியெரியும் பொழுது, தமிழர்கள் கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதை, லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

லண்டனில் மட்டுமல்லாது, இங்கிலாந்தின் பிற நகரங்களிலும் வேலையற்ற ஏழை மக்கள் பெருகி வருகின்றனர். வெள்ளயினத்தை சேர்ந்த ஏழைகள் பெரும்பான்மையாக இருப்பதாக தோன்றினாலும், வெளிநாட்டுக் குடிவரவாளர்கள் மத்தியிலும் ஏழைகள் பெருகி வருகின்றனர். என்ன வித்தியாசம் என்றால், வெள்ளையின ஏழைகள், வேலை கிடைக்காத பட்சத்தில், சமூகநலக் கொடுப்பனவுகளில் வாழ்வதை தமது உரிமையாக கருதுகின்றனர். மாறாக, குடிவரவாளர்கள் சூழ்நிலை காரணமாக கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை சம்பளத்தை விட குறைவாக கொடுத்தாலும், தினசரி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டாலும், சலிக்காமல் சம்மதிக்கின்றனர். அநேகமாக அவர்களின் சொந்த இனத்தை சேர்ந்த முதலாளிகள் தான் அவர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். வெள்ளயினத்தவர்களை அவ்வாறு சுரண்டுவதற்கு வாய்ப்பில்லை. அரசும், தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க இயலாவிட்டால், சமூகநலக் கொடுப்பனவுகளை வழங்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். முன்பெல்லாம் இது அரசின் கடமையாக கருதப்பட்டது. சோஷலிச நாடுகளின் மறைவுக்குப் பின்னர், உலகம் மாறிவிட்டது. மித மிஞ்சிய தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதும், வேலையற்றோரின் அடிப்படை தேவைகளை புறக்கணிப்பதும் வாடிக்கையாகி விட்டது. இரு வருடங்களுக்கு முந்திய பொருளாதார நெருக்கடி, பிரிட்டனை வெகுவாக பாதித்துள்ளது. அரசும், பெரும் முதலாளிகளும் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தாலும், நாட்டில் நிலைமை இன்னும் சீரடையவில்லை. உழைக்கும் மக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அரசின் திட்டங்கள், பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப் படாமையை சுட்டிக் காட்டுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் தான், உயர்கல்விக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் இனி பணக்கார வீட்டுப் பிள்ளைகள் மட்டுமே உயர்கல்வி கற்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள், அரசின் கொள்கையை எதிர்த்து கலகம் செய்தனர். அதிகார மையத்திற்கு எதிரான மாணவர்களின் கலகக்குரல்கள், வெளி உலகத்தை எட்டவில்லை. அவர்களும் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி, நாசம் விளைவித்திருந்தால், சர்வதேச ஊடகங்களின் கவனம் அங்கே குவிந்திருக்கும்.

பிரிட்டிஷ் அரசின் உழைக்கும் மக்கள் மீதான அடுத்த தாக்குதல் அண்மைய கலவரத்தை தூண்டி விட்டது. இது வரை காலமும், விளிம்பு நிலை மக்களை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சமூகநலக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளன. “சும்மா இருக்க பணம் கிடைப்பதால், மக்கள் வேலைக்கு போக மறுக்கிறார்கள்…” என்று தீவிர வலதுசாரிகள் செய்து வந்த பிரச்சாரத்தை அரசு கொள்கையாக வரித்துக் கொண்டது. முந்தைய சோஷலிச நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கும் அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டது. (கவனிக்கவும்: சோஷலிச நாடுகளில் மக்களுக்கு சிறந்த வசதிகள் செய்யப்பட்டிருந்ததை முதலாளித்துவவாதிகள் இந்த இடத்தில் ஒத்துக் கொள்கின்றனர்.) ஆனால், சோஷலிச நாடுகளில் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில், வேலை வாய்ப்பை உருவாக்குவது தனியார் நிறுவனங்களின் கடமை. முதலாளிகள் தமக்குத் தேவையான அளவு தொழிலாளர்களை மட்டும் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். எஞ்சியவர்களை “வேலையற்றோர் படையில்” சேர்த்து விடுகின்றனர். வேலையற்றோர் படைக்கு வேதனம் வழங்குவது மட்டுமே அரசின் கடமையாகின்றது.

அரசோ பட்ஜெட்டில் செலவினைக் குறைப்பு என்ற பெயரில், சலுகைகளை குறைத்து வருகின்றது. வேலையில்லாமல் உதவித்தொகை பெறுவோர், கிடைக்கும் வேலையை செய்யுமாறு கட்டாயப்படுத்தப் படலாம். ஒருவர் முன்பு பொறியியலாளராக வேலை செய்திருந்தாலும், இப்போது தெருக்கூட்டும் வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டும். “விபச்சாரத்தை தவிர எல்லாவிதமான தொழிலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப் படலாம்…” என்று சட்டம் கூறுகின்றது. அதனை ஏற்றுக் கொள்ளா விட்டால், உதவித் தொகை நிறுத்தப்படும். இவ்வாறு எத்தனையோ காரணங்களை காட்டி, உதவித் தொகை நிறுத்தப் படுகின்றது. அரசு பணம் கொடுக்கா விட்டால், மக்கள் எவ்வாறு வாழுவது? அது அரசின் கவலை அல்ல. இதனால் அரசு மறைமுகமாக தெரிவிப்பது: “வேலயில்லா விட்டால், பிச்சை எடுத்தோ அல்லது திருடியோ வாழப் பழகிக் கொள்ளுங்கள்.” இங்கிலாந்தில் கலவரத்தில் ஈடுபட்டோரும் அதைத் தான் செய்கின்றனர். அவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமேயில்லை. தாங்கள் வறுமையில் வாழ்கையில், இன்னொரு கூட்டம் வசதியாக வாழ்வதை கண்கூடாகக் காண்கின்றனர். இல்லாதவன் இருக்கிறவனிடம் இருந்து செல்வத்தை பறித்தெடுக்கிறான். இதிலே வேதனை என்னவென்றால், தமது எதிரி யாரென்று தெளிவற்ற கலகக்காரர்கள், தம்மைப் போன்ற உழைக்கும் மக்களின் சொத்துகளையும் கொள்ளையடிக்கின்றனர். சிறு வணிகர்கள் தாக்கப்படுவதும் இவ்வாறு தான். சில இடங்களில் சாதாரண உழைக்கும் மக்களின் வீடுகளில் கூட திருடி இருக்கிறார்கள். அவர்களின் கார்களை கொளுத்தி இருக்கிறார்கள். பொதுப் போக்குவரத்து பேரூந்துகள் கூட எரிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். அரசியல் உணர்வு பெற்றோர், சரியான இலக்குகளை காண்பிப்பது அவசியம். அரசியலற்ற உதிரிப் பாட்டாளிகளின், தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் எதிரிக்கே சாதகமாக அமைந்து விடுகின்றது. உழைக்கும் மக்களை கூறு போட வழி வகுத்து விடுகின்றது. சில நேரம், உழைக்கும் வர்க்கத்தை இனரீதியாக பிரித்து வைக்கவும், அரசியலற்ற அராஜக செயல்கள் உதவுகின்றன.

பிரித்தானியாவின் இடதுசாரிகள் இங்கிலாந்தின் கலவரங்களை ஆதரித்தாலும், அவர்களது நிலைப்பாடு சிலநேரம் அவர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட சாதாரண உழைக்கும் மக்களிடம், இந்த செய்தியை எவ்வாறு கொண்டு செல்ல முடியும்? தனது வீட்டின், கடையின் உடமைகளை பறிகொடுத்த சாமானியர்கள் கூட, அரசு கலவரத்தை அடக்க வேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள். இடதுசாரிகள் தமது எதிர்ப்பியக்கத்தை வளர்க்காமல், பிற சக்திகளின் போராட்டங்களின் நிழலில் தங்கியிருந்த தவறை உணர்கின்றனர். உதாரணத்திற்கு, ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள் என்பதற்காக, மத அடிப்படைவாத ஹிஸ்புல்லாவையும், தேசியவாத புலிகளையும் ஆதரித்து வந்துள்ளனர். வர்க்கப்போராட்டத்திற்கு முற்றிலும் மாறான கொள்கைகளைக் கொண்ட இது போன்ற சக்திகளின் போராட்டம், எந்தளவு இடதுசாரிகளுக்கு உதவியுள்ளது? ஏகாதிபத்தியத்தின் பலமும் குறையவில்லை. இடதுசாரிகளுக்கான ஆதரவும் அதிகரிக்கவில்லை.
இங்கிலாந்தில் வெடித்துள்ள கலவரம், பிற நாடுகளிலும் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. இது முழுவதும் பாட்டாளி மக்களின் எழுச்சியாக கருத முடியாது. சில சமூகவிரோத சக்திகளும் கலவரத்தின் பின்னணியில் இருப்பதை மறுக்க முடியாது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலும் மக்கள் புரட்சிக்கு தயாராகத் தான் இருக்கிறார்கள். அதனை சரியாக இனங் கண்டு வளர்த்தெடுப்பதில் இடதுசாரிகள் காட்டும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்த வெற்றிடத்தை வலதுசாரிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்திய சிறுவணிகர்களின் வியாபாரங்களை பொலிஸ் பாதுகாக்க தவறியதும் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம். வெளிநாட்டு குடிவரவாளர்களின் நிறுவனங்களை தானே கொள்ளையடிக்கிறார்கள், என்று அலட்சிய மனப்பான்மை ஒரு காரணம். அவர்கள் தமது வியாபாரத்தை பாதுகாப்பது என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்தால், சூறையாட வருவோர் அவர்களையும் தாக்குவார்கள். (அவ்வாறான சம்பவம் ஒன்றில் மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.) பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்திற்கு எதிரான வெள்ளையின ஏழைகளின் கோபம், வெளிநாட்டவர் மீதும் திரும்பலாம். இது ஏற்கனவே வெள்ளையின உதிரிப்பாட்டாளிகளின் ஆதரவைப் பெற்றுள்ள தீவிர வலதுசாரிகளின் கரத்தை பலப்படுத்தும். அதைத் தான் அரசும் எதிர்பார்க்கின்றது. இதனை தடுத்து நிறுத்துவதும், பல்வேறு இனங்களை சேர்ந்த உழைக்கும் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றிணைப்பதும், இடதுசாரிகள் முன்னால் உள்ள இமாலயப் பணியாகும்.
முதல் பதிவு: கலையகம்

ராமனா? பாபரா? நாட்டை இடித்தவன் யாரெனச் சொல்

அயோத்தி தீர்ப்பு வெறும் இடப்பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையிலான பிரச்சனையோ அல்ல. மக்களின் உயிரோடும் உடமைகளோடும் தொடர்புடையது எனவே தான் நீதிபதிகள் இடத்தைப் பிரித்துக்கொடுத்தி தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்பன பாசிச கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு சப்பைக்கட்டு கட்டும் இந்துவெறியர்களுக்கு இதைச் சொல்லிக்கொள்கிறோம். தானும் இந்து என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இதை படித்துப்பார்த்துக் கொள்ளட்டும்.

நீளமான இக்குறிப்புகளை தேடி எடுத்து ஒருங்கே தொகுத்து டிவிட்டரிலும் கூகுளிலும் உலவவிட்டு சாதனை படைத்திருக்கும் தோழர் மணி, தோழர் ஏழரை ஆகியோருக்கு மிக்க நன்றி

சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.

உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும், செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்.

னது பலவீனத்தை தோல்வியை தடுமாற்றத்தை பாபர் போல வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை.

டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது.

இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்.

மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார்

திரேதா யுகம் முடிவுக்கு வந்தது கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம், ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி.

பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்.

ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்.

அவனை அவனது சகோதர சகோதரிகளான லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு.

வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை

சீதை கடத்தப்பட்ட கதை: இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்தது, வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது # நாகார்ஜூனா

கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றைய அயோத்தி கங்கைகரையில் இருந்தது என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்.

தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ நதிக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்.

அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி.

அந்த காடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில் சிக்கவில்லை

இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology – Areview 1979-80 page 76, 77 – cofirms the research-done by BB Lal, KN Thetchikth

சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆய்வு வேறு முடிவை தந்தது

விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.

ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை

12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 கோயில் என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை, ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.

கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமரகோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை

இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை

எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பேட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா, எர்நாக், சான்சி, பாம்ரா, நாச்னா போன்றஇடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார். இல்லையா?

பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான், அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் (எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து) ராமன் தூக்கப்பட்டார்

ராமர் கோவில் இடித்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராம சரித்மானஸ் என்ற அவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை?
இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரியர் கோபால் கேட்கிறார்.

பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாக தனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்

அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜித்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை. பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூனோ ஒரு அகதியாக திரிந்தான்.

18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மரபு தான் செல்வாக்கில் இருந்த்து. இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது.

குவாலியரில் கோவில் சிற்பங்களை ரசித்ததை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர், ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா. அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்

அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி

பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை

1845 ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை


1856
னவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது

இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர். மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்

வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்தது டல்ஹவுசியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்தது பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மன்னன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்.

அவனது நான்கு மனைவிகளில் மூவர் சரண்டைய நான்காவது ராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்.

பீகாரின் எளிய தாழ்த்தப்பட்டகுடும்பத்தில் அழகாக பிறந்த ஒரே குற்றத்துக்காக கட்டாத வரிக்கு பதிலாக பெண்ணையே மனைவியாக்கி கொண்டிருந்தான் அந்தமன்னன்

அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில் ஒருத்தியாக கூட ஏற்கவில்லை. ஆனால் அவத் இன் மானத்தை காப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்

ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய் கலகத்தின் கதாநாயகிகள். ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடு போர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலை காத்தார்கள்

அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல் செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும் ஆதரவு அளித்தான். அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத்க்கு வந்தார் பாளையக்கார்ர்களின் கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய் கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா

ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். கைதாகி சிறையிலிடப்படுகிறார்.

ஆயுதங்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து மக்கள் ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார் மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றிய மௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது வயது 71

அகமது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய் கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதி உள்ளார்

அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின் உதவிக்கு நன்றி பாராட்டுகிறார். மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோ கலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்

ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள் செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ் Defence of Lucknow (1858 edition) இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்க விரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர் தாசுக்கு பாபர் மசூதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம் தோன்றியது

முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்த முசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்ததை பூசாரியின் நடைமுறைகள் காட்டுகின்றன

கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒரு வாளும் பட்டாடையும், சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்த ஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி

னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் முதன்முதலாக பாபர்மசூதி கட்ட யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர்
இன்று மட்டுமா வரலாற்றை திரிக்கிறார்கள்

ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும் போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் என நிபந்தனை விதித்தார்கள். 1859 இலிருந்து இது நடைமுறைக்கு வந்தது.

ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு கிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமி. பிரிட்டிசாரின் தயவில் பிறந்த அவதார புருசன்

1885 ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்ட அனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ண சாஸ்திரியின் சிவில் கோர்ட்டில் .எண் 61/280 பதிவு செய்கிறார் படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால் இடத்தை ஊர்ஜிதம் செய்தார்

அவுத் மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங் என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் .பூரேர் 1889 ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது. ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் இப்ராகிம் லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது கல்வெட்டில் உள்ள செய்தி

ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால் கொல்லப்படுகிறார். பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதை தொடர்ந்தார்

இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்ய முடியாமல் மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்கு கன்னம் வைக்க கலவரத்திற்கு தேதி குறித்தார்கள்

1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில் ராம ராக்ச திரிபாதி (பக்.60) குறிப்பிடுகிறார்

அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டி விடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றை இடித்தனர் இந்துமத வெறியர்கள்

லவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிட காண்டிராக்டு விட்டதற்கு ஆதாரம் உள்ளது

1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும் லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்

இதற்கு காரணமான கேகே நய்யர் கூட இந்த அற்புதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படி செய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்ற மறுத்துவிட்டார் இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரை எம்பி ஆக்கியது

அகற்ற வாய்ப்பு இருந்ததை அன்றைய காங்கிரசு மா செயலர் அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்

சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர். ஏற்கெனவே 1949டிச23 மசூதிக்கு பூட்டு

உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளை சூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள். டிச291949ல் பைசாபாத்அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் சொத்தின் ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்து. அவர் இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்

இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந்நியமனம் நடந்தது. இதன்படி சொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தை அனுபவிக்கலாம்
ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை

ஜன61950ல் சூட் நம்பர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கை சிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றி இந்துக்கள்வழிபாடு செய்வதற்கு

அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.உபி அரசு சார்பில் ஆசரான பைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலை வைக்கப்பட்டதையும் மசூதியின் நீண்ட கால அனுபவ பாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும் அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர் சிலைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கிறார். மார்ச் 51ல் ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச ..12கீழ் வந்தது

ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும் நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத் துவங்கி அக்7,1984இல் அயோத்தி வந்தது மசூதி பூட்டை உடைத்து ராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே (பூட்ட உடை) முழக்கம்ஆனது

அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளி போட்டார்கள். மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில் பூட்டு உடைபடும் என்றனர் விஇப

டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள் நீதிபதிகள் கத்திவு அகர்வால் முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர் பைசாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே சந்தித்து கோவிலை பூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்

உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது 2 வயது) முன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்க தடையை நீக்ககோருகிறார்

முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவை காரண‌மாக நிராகரிக்கிறார். இம்மனு மேல்முறையீட்டுக்காக மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப் 1,1986 அன்று விசாரணைக்கு வருகிறது. அன்று மாலையே பூட்டை திறந்துவிடும்படி உத்தரவிட்டார்

உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம் அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்தது நீதித்துறை வரலாற்றில் விசித்திரம்தான்

தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தை பாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை 35 ஆண்டுகளாக இந்துக்களை கைதிகள் போல இருந்துள்ளனர் என்றும்
பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாது. முசுலீம்கள் ஏற்கெனவே வருவது இல்லை. பூட்டை திறந்தால் மாத்திரம் எப்படி பிரச்சினை வரும் என்றும் தீர்ப்பளித்த பாண்டே, பிரதிவாதியாக சேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடி செய்து பிப் 1,1986, 4.40க்கு உத்தரவிட 5.20க்கு அமலானது

பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூட தகாது என பகடி செய்தார். சட்டம் ஒழுங்கு பாதிக்கபடாது என்றார் அல்லவா லவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்தது

1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்ய முசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின் குலக்கொழுந்து 1986 சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்க அனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேரு போன்ற கூட்டாளிகளிடம்

முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது என சொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவே ஒத்துக்கொண்டது நவ9,1989இல் 25 கோடியில் கோவில் கட்ட அலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4ல் கட்டநடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது

எம்கே நாராயணன், பூட்டாசிங், தவாண் போன்றோர் விஇப உடன் இது சம்பந்தாக பேசி உள்ளனர். செங்கற்களுக்கு வரும்வழியில் பாதுகாப்பு வழங்க,அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசு சம்மதித்தது. ஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் ல்க்னோ பெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்தது. பகல்பூரின் கார்லிபிளவர் செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ் அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாது என்றார் பாட்னா விமான நிலையத்தில் தானே அடிக்கல் நாட்ட வரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார் ராஜீவ். நவ 3 முதல் பிளாட் 586ல்

முசுலீம்களின் அடக்கதலத்தின் மீது காவிகொடி பறக்கவிட்டு இடத்தை தேர்வு செய்தார்கள். அன்றுதான் ராஜீவ பைசாபாத்தில் தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்

ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார். ஜிகாத் என்ற பெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்த பொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு முசுலீம் ஓட்டுக்களை இழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.

மானஸாரா என்ற இந்துகட்டடகலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின் 3 வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வு செய்ய கூடாது என உள்ளது. ஆனால் தற்போது அடிக்கல் நாட்டிய இடம் முசுலீம்களின் கல்லறைதான். இது 2010 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரியாதா?


மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒரு வாதம். செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல், மெக்காவின் க்பா, இந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின் கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாது. எனவே அயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.

அக்பர் தான் எழுதிய திவான் அக்பர் என்ற நூலில் தானே திண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇப தனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில் சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன் அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார். மற்றபடி அவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின் இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தை வித்தியாசங்களுடன்

பாபர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள் போராடி மடிந்தனராம்.
அதாவது 1528ல். ஆனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை 11,643. 

ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மசூதிக்கும் பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம் இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்) ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989) 

பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்ததை பாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362) பாபர்நாமா ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லை. இந்த கட்டத்தில்தான் பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள்

இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில் காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்து தான் உள்ளது. ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின் பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ரா வருகிறார். ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில் அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்ஃஆப்கானியர் மீதான வெற்றி மழையால் தள்ளிப் போனதை பற்றியும் குறிப்பு உள்ளது.

சு. சாமி மீது முட்டையடித்தால் சட்டம் ஒழுங்கு நாறும்.

          நீதிமன்றத்தின் மாட்சிமையும், புனிதமும் சில நாட்களாக வீதியில் விவாதப்பொருளாகியிருக்கிறது. அனைவரும் விவாதிக்கிறார்கள் இதுவரை இப்படி நடந்ததில்லை என்று. ஊடகங்கள் அப்படித்தன் சொல்லித்தருகின்றன மக்களுக்கு., ஒரு குண்டுவெடிப்பு என்றால் பயங்கரம், இத்தனை பேர் சாவு, இதற்கு முன் இப்படி நடந்ததேயில்லை என்கின்றன. யார் வருகையையும் முன்னிட்டு பாதுகாப்பை பலப்படுத்தினால் வரலாறு காணாத பாதுகாப்பு என்கின்றன. நடந்த நிகழ்வை அதிர்ச்சியாகவோ, ஆச்சரியமாகவோ பேசிவிட்டு கலைந்து செல், ஆழ நோக்காதே என்பது தான் ஊடகங்கள் மக்களுக்கு நடத்தவிரும்பும் பாடம். கடந்த வாரம் நடந்த சு. சாமியின் மீதான முட்டையடித்தாக்குதலும் அதனைத்தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் வழக்குறைஞர்கள், நீதிபதிகள் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட மிருகவெறிதாக்குதலும் இப்படித்தான் ஊடகங்களால் முன்வைக்கப்பட்டு, இன்னும் ஓரிரு நாட்களில் வேறொரு நிகழ்வின் துணையுடன் மறக்கடிக்கப்பட்டுவிடும். ஆனால் ஆட்சிமுறையும், மக்களால் நடத்தப்படும் ஆட்சி எனும் மாயையும் வெளிப்படையாக அம்மணமாகி நிற்பது மறப்பதற்கில்லை.

          தமிழ்நாட்டில் நடப்பது திமுக ஆட்சி, அதாவது பார்பனீயஎதிர்ப்பு இயக்கத்தில் வேர்கொண்ட இயக்கத்திலிருந்து கிளைத்துவந்த ஆட்சி. அதன் மூத்த அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்திலேயே அறிவிக்கிறார், ஒரு ஆசாமியின் மீது முட்டைவீசப்பட்ட சம்பவம் என்று. முட்டை வீசப்பட்ட ஆசாமியோ ஆட்சியிலிருப்பவர்களுக்கு எதிரானவர். ஆனாலும் அவர்களின் பொருப்பிலிருக்கும் அதிகாரம் தான் சில முட்டைகள் உடைந்ததற்காக பல மண்டைகளை உடைத்திருக்கிறது. இந்த முரண்பாடு ஆட்சியிலிருப்பவர்களால் ஏற்பட்டதா? காவல்துறையால் நடத்தப்பட்ட இக்கலவரத்தை விசாரிக்க பென்ச் அமைத்திருக்கும் நீதிமன்றம் தான் சு சாமி ராமாயணம் எனும் புராணக்குப்பையை காட்டியதும் மக்களின் வரிப்பணம் இரைக்கப்பட்டு கிட்டத்தட்ட முடியும் தருவாயிலிருந்த திட்டத்தை முடக்கச்சொல்லியது. ஈழத்தமிழர்களுக்காக மழையில் நனைந்தும், நனையாமலும் மனிதச்சங்கிலி, ராஜினாமா, இயக்கம், விளக்கக்கூட்டம் என்று தொடர்ச்சியாக எதையாவது நடத்தி ஈழத்தமிழர்களுக்காக போராடிக்கொண்டிருப்பதாக போக்குக்காட்டிக்கொண்டிருக்கும் திமுக அரசுதான், ஈழத்திற்காக உணர்வு பூர்வமாக போராடிக்கொண்டிருக்கும் வழக்குறைஞர்களை அடித்து நொருக்கியிருக்கிறது. இவைகளெல்லம் நேர்ந்துவிட்ட முரண்பாடுகளோ, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனி சம்பவங்களோ அல்ல.

          ஆட்சியிலிருப்பவர்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களது கொள்கைகளுக்கு ஏற்ப, த‌ங்கள் தீர்மானத்திற்கு ஏற்ப செயல்பட்டுவிட முடியாது என்பதைத்தான் இந்த முரண்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதோடு மட்டுமல்லாமல், அதிகாரவர்க்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியிலிருப்பவர்களின் கொள்கைகள் விருப்பங்களை துளியும் சட்டைசெய்யாமல் செயல்பட முடியும் என்பதையும் வெளிப்படுத்திக்காட்டுகின்றன. இயக்குனர் சீமானை கைது செய்ததை வேண்டுமானால் காங்கிரஸின் தயவில்லாமல் ஆட்சியில் நீடித்திருக்கமுடியாது என்ற நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம். நீதிமன்ற கலவரத்திற்கு நிர்ப்பந்தம் ஒன்றுமில்லையே. திட்டமிட்டு வெறியுடன் நடத்தப்பட்ட நீதிமன்ற தாக்குதலுக்கு காரணம், ஈழத்தமிழர்களுக்காக தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக வழக்குறைஞர்கள் போராடியதுதான். இயல்பாக உள்ள நீதித்துறையா, காவல்துறையா என்ற போட்டியும் சேர்ந்துகொள்ள , ஒரு கூமுட்டையின் மீது வீசப்பட்ட சில கூமுட்டைகள் உரசிவிட வெந்து தணிந்திருக்கிறது நீதிமன்றம்.

          பெரியாரின் சுயமரியாதை வேட்டியை பிடித்துக்கொண்டு வளர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்தாலும் பார்பனீயத்திற்கு எதிராக ஒன்றும் செய்துவிட முடியாது, அது அதிகாரவர்க்கமாய் இருக்கும் வரை. கோடிக்கணக்கான மக்களின் வறுமையையும் பசியையும் புறந்தள்ளிவிட்டு ‘காட்’ போன்ற ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஓரிரு அதிகாரிகள் போதும். விஞ்ஞானிகள், அறிவியலாளர்கள் எதிர்த்தாலும், மக்கள் கேள்வி கேட்டாலும், போலிகள் எகிரிக்குதித்தாலும் அணு ஒப்பந்தம் ஏற்படுவதை தடுக்கமுடியாது. தமிழர்கள் நாளுக்கொரு போராட்டம் நடத்தினாலும், தமிழர்களைக்கொல்ல தமிழ்நாட்டு வழியே கவச வாகனங்கள் அனுப்பப்படுவதை வேடிக்கை பார்க்கமட்டுமே முடியும். ஏனென்றால் இவைகளெல்லாம் அதிகாரவர்க்கத்தின், பார்ப்பனியத்தின் விருப்பமாக இருக்கிறது. ஓட்டுப்போட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களெல்லாம் பொம்மைகள் தான். அதைத்தான் முகத்தில் தெரித்து நமக்குச்சொல்கிறது வழக்குறைஞர்கள் மண்டை உடைந்து சிந்திய‌ ரத்தம். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் எனும் பழமொழியைப்போல் சு சாமியின் மேல் வீசப்பட்ட முட்டை உடைந்து சட்டம் ஒழுங்கில் நாறுகிறது.

          இன்னும் எத்தனை நிகழ்வுகள் வேண்டும் இந்த உண்மைகளை உணர்ந்து கொள்வதற்கு? இது தான் இன்று மக்கள் முன் எழுந்து நிற்கும் கேள்வி.

%d bloggers like this: