பொதுக் கல்வி – லெனின்

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மக்களுக்கு எதிராக கல்வியை முழுக்க முழுக்க கார்ப்பரேட் பிடியில் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு, அதன் வரைவை வெளியிட்டபோதே பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஒரு கொடுந்தொற்று காலத்தில் தேசிய கல்விக் கொள்கை வரைவை இந்தியா முழுவதிலுமிருந்து அளிக்கப்பட்ட பரிந்துரைகள், எதிர்ப்புகள் என எதையும் கணக்கில் கொள்ளாமல் சட்டமாக்கியது. இன்று கொரோனாவின் இரண்டாவது அலையில் பிணக் குவியல்களுக்கு நடுவே அந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் … பொதுக் கல்வி – லெனின்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வங்கிகள் யாருக்காக?

முன்குறிப்பு 1: இது போன்ற சிக்கல்களில் தொடர்புடையவர்கள் ஏன் வங்கியின் பெயரை மறைக்கிறார்கள்? என்ன வங்கி என வெளிப்படையாக எழுத வேண்டியது தானே. முன்குறிப்பு 2: படித்து வேலையில் இருக்கும் நடுத்தர பிரிவினர்களே இப்படித்தான் நடத்தப்படுவார்கள் என்றால், ஒப்பீட்டளவில் அறியாமையில் இருக்கும் எளிய மக்கள் அன்றாடம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே. அவர்களின் நடப்புகளும் இவ்வாறு வெளிவர வேண்டும். ஒரு Nationalised bank ல கார் லோன் இரண்டரை லட்சம் வாங்கியிருந்தேன். ஐந்து வருசம் EMI கட்டனும். மாதாமாதம் கட்ட … வங்கிகள் யாருக்காக?-ஐ படிப்பதைத் தொடரவும்.

நீட் தேர்வு: சவால்களும் பயிற்று மொழிச் சிக்கல்களும்

நீட் தேர்வு, மாணவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டார்கள். சமூகத்தின் மீது அக்கரையுள்ள அனைவரையும் இந்தச் செய்தி கடுமையாகத்  தாக்கியுள்ளது. பலரும் இது குறித்து தங்கள் ஆற்றாமைகளை. கவலைகளை, கோபத்தை வெளிப் படுத்தியுள்ளனர், வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் தன்னுடைய கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். உடனே சங்கிகள் அவருக்கு எதிராக பல முனைப்புகளை செய்யத் தொடங்கி உள்ளனர். பொதுவாக திரைத் … நீட் தேர்வு: சவால்களும் பயிற்று மொழிச் சிக்கல்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கற்க கசடற விற்க அதற்குத் தக

பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்திருப்பதை தொடர்ந்து, எல்லோரும் தங்கள் உவகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொரோனா அச்சத்திலும் தேர்வை நடத்தியே தீர்வது என்று அரசு கடைசி வரை முயன்றது. இதற்கு மேலும் இழுத்துப் பிடித்தால் இருக்கும் கொஞ்ச மதிப்பையும் இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியின்றியே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி நிறுவனங்களின் வேட்டை எனும் காரணம் இருக்கிறது. மறுபக்கம், புதிய கல்விக் கொள்கை என்பதன் … கற்க கசடற விற்க அதற்குத் தக-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களியம்

உலகம் முழுவதிலும் உள்ள மக்களை கொரோனா எனும் நுண்ணுயிரி கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. முன் காலங்களிலும் பலமுறை இது போல கொள்ளை நோய் உருவாகி மக்களை வதைத்திருக்கிறது. ஆனாலும், கொரோனா போல முன் எப்போதும் அரசே மக்களை முடக்கும் நடவடிக்கைகள் எடுத்ததில்லை. கொரோனா அச்சம் அந்த அளவுக்கு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது அல்லது, ஆட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொற்று நோயினால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது இந்த நோயினால் … மக்களியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?

முன் குறிப்பு: இந்தக் கட்டுரை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் எழுதி சில காரணங்களுக்காக வெளியிடாமல் வைத்திருந்தேன். தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், மாணவர்கள், இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் குறித்த அடிப்படை புரிதலை இக் கட்டுரை வழங்கும். வியாபம் ஊழல் எப்படி கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி எனும் உழைப்பை மிகக் கொடூரமாக சுரண்டியதோ, அதே போலவே, தமிழ்நாட்டின் டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளும் கொடூரமான சுரண்டலே. ஆனால், மாணவர்கள் இளைஞர்களிடமிருந்து இதற்கு போதிய … விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி

கடந்த மாத தொடக்கத்தில் காஷ்மீருக்கான சிறப்பு உரிமையான 370, 35 A ஆகிய பிரிவுகள் அடாவடியாக நீக்கப்பட்டன. காஷ்மீருக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று வேறெங்கோ கொம்பு முளைத்ததைப் போல சங்கிகள் ஒரே குரலில் ஓலமிட்டார்கள். வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் இருக்கின்றன என்று அமைதியாக பதிலளிக்கப்பட்டாலும், அதில் போதிய அழுத்தம் இருந்திருக்கவில்லை. ஆனால் அதைவிட எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் வழங்கு எனும் கோரிக்கை முழங்கப் பட்டிருக்க வேண்டும். அதை உரத்து முழங்க வேண்டிய … ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியக் கல்வியின் இருண்ட காலம்

பார்ப்பனிய வர்ணாசிரம தர்மத்தை பள்ளிக் கல்வியிலிருந்தே குழந்தைகளிடம் திணிப்பதன் மூலம், ஒட்டுமொத்த சமூகத்தையும் ஈராயிரம் ஆண்டுகள் பின்னுக்கு இழுத்து பார்ப்பனிய மேலாதிக்கத்தை முற்றுமுழுதாக நிறுவுவது தான். இதை அனுமதிக்கக் முடியாது என்பதால் தான் பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மணமக்களை அழைக்காத திருமணம்

புதிய கல்விக் கொள்கையின் அவலங்களை பலரும் விளக்கி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசோ மக்களிடம் கருத்துக் கேட்பதாக படம் காட்டி தன் ஜனநாயகத் தன்மையை நிரூபிக்கப் பார்க்கிறது. எப்படி? மக்களை அழைக்காமல் மக்களிடம் தெரிவிக்காமல், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாமல் கைத்தடிகள் சிலரை வைத்துக் கொண்டு மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்துகிறார்களாம். இது ஒன்றே புதிய கல்விக் கொள்கை மக்களுக்கானது இல்லை என்பதை காட்டுவதற்கு. இவ்வாறான ஒரு கூட்டம் கோவையில் நடந்த போது தோழர் கு.இராமகிருட்டினன் இதை … மணமக்களை அழைக்காத திருமணம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா? தராதரமா?

  தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி இறுதி வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறையிலிருந்து சுற்றறிக்கை வந்ததாக கடந்த வாரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதில்,  மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. தனியார் பள்ளியில் பயிலும் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50,  8ஆம் … 5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா? தராதரமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.