சொல்லுளி டிச 22 இதழ்

டிசம்பர் மாதத்திற்கான சொல்லுளி மாத இதழ் வெளிவந்து விட்டது.  ஆண்டுக் கட்டணம் கட்டி உறுப்பினர்களாக இணைந்தவர்கள் அனைவருக்கும் இதழ் அனுப்பபட்டு விட்டது. யாரேனும் விடுபட்டு இதழ் கிடைக்கவில்லை என்றால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொருளடைவு: ஆசிரிய உரை இளையராசாவின் இசையில் இப்போதையை பா(ட்)டு - கட்டுரை - தமிழ்நாடு ஈர்ப்பு விசை: பேரண்டத்தின் மாய நடனம் - தொடர் கட்டுரை - அறிவியல் நகராட்சியும் வீட்டாட்சியும் - நாட்டு நடப்பு அரியவகை இடஒதுக்கீடு சில புரிதல்கள் - … சொல்லுளி டிச 22 இதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாருக்குள்ளே நல்ல நாடு

அவர்களைச் சிறையில் சந்தித்தேன். “என்ன குற்றம் செய்தீர்கள்” என்று கேட்டேன். ஒவ்வொருவராகச் சொன்னார்கள்.. எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான். “திருடன் திருடன்” என்று கத்தினேன். அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள். “என் வருமானத்தைக் கேட்டார்கள்” ‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன் வருமானத்தை மறைத்தாக வழக்குப் போட்டு விட்டார்கள். “நான் கரி மூட்டை தூக்கும் கூலி” கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில் கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்பு பணம் வைத்திருந்ததாகக் கைது செய்து … பாருக்குள்ளே நல்ல நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிரபலமான குசு

ஒரு பிரபல மனிதருக்குஎப்போதாவது தான்குசு விடவேண்டும் போலிருக்கிறதுஅப்போது அவர்எல்லோருக்கும் கேட்கும்படியாகஒரு குசு விடுகிறார்அது நகரத்திற்கு மேலாக‘டமாரெ’ன்று வெடிக்கிறதுபோன மாதம்இன்னொரு பிரபலமான மனிதர் விட்ட குசுவை விட’இந்தக் குசு பெரிதாக இருந்தது. நகரவாசிகள் அனைவரும்அந்த சத்தைக் கேட்கிறார்கள்அவர்கள் அந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள்அந்த குசு வெடித்த இடத்தில்ஒரே புகை மண்டலமாக இருக்கிறதுசத்தம் கேட்டு நிறையக் கேமிராக்கள்சில நொடிகளில் வந்துவிட்டனஒரு குசுவை படம் பிடிப்பதில்அங்கு ஒரே தள்ளு முள்ளு நடக்கிறது அவர் ஏன் இப்போதுகுசு விடுகிறார் என்று கேட்கப்படுகிறதுஇதற்கு முன் … பிரபலமான குசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தெய்வீகத் திருடர்கள்

மூத்த தேவியைமூதேவி ஆக்கினான். அடங்கா பிடாரியைதுஷ்ட தேவதையாக்கிஅடங்கும் புராணம் பாடிஇஷ்ட தேவியாக்கினான். அரசமரத்தடி எங்குமிருந்தபுத்தர் சிலைகளைஆட்டயப் போட்டான்.சத்தமில்லாமல் அங்கேவிநாயகர் சிலைகளை நட்டான். சமணப்பள்ளிகள் அழித்தான்சைவத் திருமுறை ஒழித்தான்.தமிழ்ஏடுகள் ஆற்றில் விடும்சடங்குகள் செய்தான்.சேயோன் மாயோன்கவிழ்த்தான்.சுரண்டும் வர்க்கக் கூட்டணிக்குமனுதர்மமாகப் புழுத்தான்! பார்வதி பக்கமிருக்கசிவன் தலையில்கங்காதேவி சேர்த்துவிட்டான்.உரிய வள்ளி இருக்கதிருமுருகனோடுதெய்வானை கோர்த்து விட்டான். சிறுதெய்வங்களை எல்லாம்ஆரிய அவதாரங்களின்அடிப்பொடியாக்கினான்.அறுவகைச் சமயமிருக்கஇல்லாத இந்துமதத்திற்குஎல்லாமும் படியாக்கினான். சொந்த முருகனைஆரியஸ்கந்தனாக்கினான். வேதக் கடவுளரைவீசி எறிந்துவிட்டுதமிழ்நிலபௌதீகக் கடவுளரைபார்ப்பன முலாம் பூசிகதையைக்கந்தலாக்கினான். கோயிலென்றும்இறையிலியென்றும்ஆளும் வர்க்ககூட்டுக் கொள்ளையில்கோயில் கருவறைதனதாக்கினான். தமிழ்மொழி குரல்வளைநெறித்தான்.சமஸ்கிருத … தெய்வீகத் திருடர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய வைரஸ்

உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது' கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து" நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு வெள்ளைக்கொடியுடன்வெளியே வந்துவிட்டேன் நான் பொறுப்புள்ள இந்தியன்நான் பொறுப்புள்ள இஸ்லாமியன்நான் பொறுப்புள்ளஒரு சந்தேகத்திற்குரிய குடிமகன் ஒரு இஸ்லாமியன்இவ்வளவுகாலம் பயங்கரவாதியாகஇருந்ததைவிட பயங்கரமானதுஅவன் ஒரு கொள்ளை நோயைக்கொண்டு வருபவனாக இருப்பது உலக வரலாற்றிலேயேஒரு கிருமி முதன் முதலாகமதம் மாறியிருக்கிறது சீனத்தில் பிறந்தால்கம்யூனிஸ கிருமியென்றுஅழைக்கப்பட்ட அதுஇந்தியாவிற்குள் நுழைந்ததும்இஸ்லாமியக் கிருமியாகபரிமாணம் அடைந்துவிட்டது முதலில் அதுஒரு சிறிய … இஸ்லாமிய வைரஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெருவெளியின் தூசு

பெருவெளியின் விரிவில் ஒரு தூசில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசு நான். பெருங்கடலின் பரப்பில் மழையின் இடையே பறந்து கொண்டிருக்கும் ஒரு கொசு நான். மலர்த் தோட்டத்தின் அண்மையில் கோடி மலர்களின் மணங்களூடே ஒற்றை மலரில் நிறைந்து போகும் ஒரு தேனீ நான். என்னை நான் எப்படிப் பார்ப்பது? எப்படிப் பார்க்க நான் அனுமதிப்பது? பேரண்டத்தின் நுணுக்கமே ஆனாலும் என் அடைவுக்கும் பொருள் உண்டென்று அறிவித்து விடட்டுமா? துளிகளிடையே புகுந்து பறந்தாலும் நனைந்து விட்டால் தலை துவட்டுங்களென்று கோரிக்கை … பெருவெளியின் தூசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?

  அவன் மானுடத்தின் வக்கீல் அன்று அவன் பெயரை எழுதக் கூட அனுமதிக்காமல் மொழி முடமாக்கப்பட்டது இன்றோ சூரியன் கூட அவன் பெயரை உச்சரிக்காமல் உதிக்க முடியவில்லை அவன் இருந்த போதோ தூசிக்கப்பட்டான் இன்று அவன் புதைகுழியின் புல்லும் கூட பூஜிக்கப்படுகிறது. அழகைப் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன் என்னை அறிவால் பிரமிக்கவைத்தவன் அவன் தான் அவன் கண்களில்… உலகின் இருட்டையெல்லாம் விரட்டியடிக்கும் வெளிச்சம் அவன் தான் மனிதகுலத்தின் இறந்த காலத்தையெல்லாம் ஜெயித்து முடித்த சிந்தனையாளன் கடவுளின் சிறைச்சாலையிலிருந்து … மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மரணத்திலிருந்தா மதிப்பிடுவது?

  கடந்த 75 நாட்களாக அப்பலோவை மையம் கொண்டிருந்த மர்மம் ஒன்று கரை கடந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது.   ஜெயலலிதா.   இவரை எப்படி மதிப்பிடுவது? மரணம் அவர் உடலைக் குடித்து விட்டது என்பதற்காக, அந்தக் கோப்பையில் நிரம்பியிருந்த வஞ்சக நஞ்சு அமுதமாக மாறிவிடுமா?   மரணத்தின் பொருட்டு தான் ஒருவரை மதிப்பிட வேண்டுமென்றால் யாரும் இங்கே அயோக்கியர்கள் அல்லர். அல்லது, மரணத்தை முன்வைத்து ஒருவரை புனிதராக்கிக் கொள்ள முடியுமென்றால் அற்பனென்றோ, அற்புதனென்றோ … மரணத்திலிருந்தா மதிப்பிடுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மூத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள்

தன் மேலடித்த ஒற்றச் செருப்பால் இருவருக்கும் பயனில்லை என இன்னொரு செருப்பையும் ஏசிப் பெற்ற பகலவனே! இதோ, உன் படத்தின் மீதே குறி நீட்டுகின்றனர் அடிமையா நீங்கள் என்று யாரைக் கேட்டு நீ விரல் நீட்டினாயோ அவர்கள் நான் அடிமை தான் என்று உன் படத்தின் மீதே குறி நீட்டுகின்றனர். எவருடைய அழுக்கை கழுவ நீ மூத்திரப்பை சுமந்தாயோ அவர்கள் தன் மூத்திரத்தை தந்திருக்கிறார்கள். நீ நீயாக இருக்கிறாய் அவர்கள் அவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் யாராக இருப்பது? … மூத்திரம் மட்டுமே தெரிந்தவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று

மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை….                                             18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் … விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.