தமிழ்நாட்டில் அதிமுகவின் இடம் என்ன?

அதிமுக தோற்றத்தின் அரசியல், அதற்கு காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளின் துணை,  எம்ஜிஆரின் நாயக பிம்பம், ஜெயலலிதாவின் ஆதிக்கம்,  பாஜக, கொடநாடு, ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அனைத்தையும் விளக்கும் காணொளி https://youtu.be/Zm7Zc7wK63g

பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா

ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உலகளாவிய பட்டினிக் குறியீடு உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இதில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பட்டினிக் குறியீடு 107 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 121 நாடுகளின் பட்டினி, ஊட்டக் குறைப்பாடு தொடர்பானபுள்ளி விவரங்களைத் தொகுத்துப் பார்த்ததில் இந்தியாவின் இடம் 107. இந்தியாவுக்கு முன்னால் 106 நாடுகளும், இந்தியாவுக்குப் பின்னால் 14 நாடுகளும் இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள் உள்ளிட்ட பல … பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

உள்ளதைச் சொன்னால் கைதா?

தீஸ்தா செதல்வாட், முகம்மது சுபைர் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைது ஐ.நா வரை பேசு பொருளாகி இருக்கிறது. அறிவுத் துறையினர் தொடங்கி முற்போக்காளர்கள் வரை அனைவரும் கண்டித்து விட்டனர். அரசு வாய் திறக்கவில்லை. பதில் கூறும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் இது முதல் முறையும் அல்ல. ஆனந்த் டெல்தும்ப்டே தொடங்கி வரவரராவ் ஊடாக ஸ்டென்சாமி வரை கைது செய்திருக்கிறார்கள். வரவரராவ் பிணையில் வெளி வருவதற்கு தலை கீழாக நின்று … உள்ளதைச் சொன்னால் கைதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 3 மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த விலைவாசி உயர்வு பிரச்சினையை உக்ரைன் போர் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையும் அதற்கு எதிரான ரஷ்ய - சீன நாடுகளின் சொந்த நாணய வர்த்தக மாற்று முன்னெடுப்பும் இதுவரையிலான உலக வர்த்தகக் கட்டமைப்பை உலுக்கி உடைக்க ஆரம்பித்திருக்கிறது. இது உலகம் முழுக்க விலைவாசி உயர்வு, டாலர் கடன் கொடுப்பனவுப் பற்றாக்குறை பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் குழப்பங்கள், போராட்டங்களை … இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை-ஐ படிப்பதைத் தொடரவும்.

எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்

பேரறிவாளன், சிறையிலிருந்து சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்கு விடுவிப்பு செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு அற்புதம்மாள் முதல்வருக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அவ்வப்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் எழுவர் விடுதலை என்பது பல முறை பேரறிவாளனின் விடுவிப்போடு முடிந்து போயிருக்கிறது. மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் எழுவர் விடுதலை பேசப்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழ அரசியலும் தவிர்க்க முடியாமல் மேலெழுகிறது. அதிலும் தற்போது திமுக, திக, நாம் தமிழர் கட்சி என ஒரு தனிச் சுற்று ஓடிக் கொண்டிருக்கிறது. அவைகளை விலக்கி எழுவர் விடுதலை குறித்து … எழுவர் விடுதலை: குரலை மாற்றுங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021, வழக்கமான தேர்தலைப் போலல்லாமல் தனிச் சிறப்பான ஒரு தேர்தலாக அமைந்து இருந்தது. தேர்தல் புறக்கணிப்பை நடைமுறையாக கொண்டிருந்த பல புரட்சிகர இடதுசாரி அமைப்புகள், வசதியான இடங்களில் எல்லையைக் கடந்து தேர்தல் அரசியலுக்குள் நுழைந்திருந்தன. அவை நேரடியாக பரப்புரை செய்தது தொடங்கி சமூக வலைதளங்களில் செய்த பரப்புரை வரை தங்களுக்கு உகந்த வழிகளில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது யாருக்கு வாக்களிக்கக் கூடாது என மக்களை வாக்களிக்கத் தூண்டின. இந்த … மே.2க்கு முன் ஏதேனும் நடக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிய்ந்த செருப்பு இருக்கிறதா?

ஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்தது என்கிறார். தமிழகத்தில் உள்ள கிறுத்துவர்களை ஒரு வாக்குவங்கியாக திரட்டி அவர்களிடம் பிரச்சாரம் பண்ணினால் 20 இடங்களை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர் தனக்கு மதசார்பற்ற அரசியலில் மட்டுமே நம்பிக்கை எனச் சொல்லி அதை மறுத்திருக்கிறார். பாஜகவினரின் சிறுபான்மை அரசியல் குறித்த ஒரு சரியான புரிதல் இதில் … பிய்ந்த செருப்பு இருக்கிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பீகார் தேர்தலில் வென்றது யார்?

நடந்து முடிந்த பீகார் மாநில தேர்தல் முடிவுகள் பல முரண்பாடுகளை உள்ளடக்கி வந்திருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் மீண்டிருக்கிறது. கடந்த முறை முதல்வராக இருந்த, இந்த முறையும் முதல்வராகப் போகின்ற நிதீஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை விட மிக அதிகமான இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் நிதீஷ் தான் முதல்வர் என அறிவித்திருக்கிறது. இந்த முரண்பாடுகளை இணைத்துப் பார்த்தால் … பீகார் தேர்தலில் வென்றது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அசுத்தம் வெளியேறுமா? வெளியேற்றுவோம்.

செய்தி: தேசிய தூய்மை மையத்தை டெல்லியில் இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடுகையில், மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முழு உலகமும் முன்வருகிறது. இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கடந்த சில ஆண்டுகளில், காந்திஜியால் ஈர்க்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், ‘ஸ்வச் பாரத் மிஷன்’ அவர்களின் வாழ்க்கையின் இலக்காக மாற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். செய்தியின் பின்னே: முதலில் வெள்ளையனே … அசுத்தம் வெளியேறுமா? வெளியேற்றுவோம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா ஓர் இந்துத்துவ கட்டமைப்பு

நானும் ஒரு காலத்தில் இந்தியத்தில் கரைந்து போன பாரத பக்தன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிர உறுப்பினன். சொல்லப் போனால் பாபர் மசூதி இடிக்கச் சென்ற சங் பரிவார் கூட்டத்துடன் பங்கேற்க விரும்பியவன் .. .. .. பெரியார் தான் என் நெஞ்சை விட்டு பார்ப்பனிய நஞ்சை உறிஞ்சி எடுத்தார்