மோடி பேச்சின் நஞ்சு

உலகின் எந்த ஒரு தலைவருக்குமே கிடைக்காத சிறப்பு பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டு. மோடியின் பொய்கள் என்று அவர் கூறிய பொய்களை மட்டுமே தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். உலகின் எந்த தலைவருக்கு இது போன்ற சிறப்பு கிடைத்திருக்கிறது? மோடியின் பேச்சில் நஞ்சு கலந்திருக்கிறதா? அல்லது மோடியின் பேச்சே நஞ்சு தானா? இதை பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேச்சு நஞ்சூறிப் போய் இருக்கும். எடுத்துக் காட்டாக குஜராத் முதல்வராக இருந்த போது அவர் … மோடி பேச்சின் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இவர்களை எதால் அடிப்பது?

இவர்களை எதால் அடிப்பது என்று கேட்பதை விட நம்மை எதால் அடித்துக் கொள்வது என்று கேட்டுக் கொள்வது இன்னும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களின் கருத்தை நம்மிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. அதன் விளைவுகளை இன்று அறுவடை செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அவர்கள் எதை தீர்மானிக்கிறார்களோ அது மட்டுமே நமக்குச் செய்தி. விவசாயிகள் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம் குறித்து எந்த ஊடகமாவது … இவர்களை எதால் அடிப்பது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போர் தொடங்கி விட்டது

இனி எந்த ஒளிவு மறைவும் இல்லை. பிற வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் இந்தப் போர் தொடங்குவதில் சிக்கல் இருப்பதான தோற்றம் இருந்தது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எதையும், எதையும், .. எதையும் செய்யத் துணிந்த அந்தக் கூட்டம், தற்போது தமிழ்நாட்டில் தன் போரை மக்கள் மீது வெளிப்படையாக தொடுத்து விட்டது. மோடி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அச்சு, காட்சி ஊடகங்கள் எவ்வாறெல்லாம் முனைந்து வேலை செய்தன என்பது நாம் அறிந்தது தான். பொய் அது … போர் தொடங்கி விட்டது-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரானா காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு

எல்லா ஊடகங்களின் சின்னங்களிலும் தாம் நடுநிலையான செய்திகளை வழங்குவதான ஒரு குறியீடு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். எல்லாக் காலங்களிலும் செய்தி ஊடகங்கள் பக்கச் சார்போடு தான் இருந்தன, இருக்கின்றன, இருக்கும். ஆனால் அந்த பக்கச் சார்பு எந்தப் பக்கம் என்பது தான் பிரச்சனை. ஒருபோதும் அவை மக்கள் பக்கம் நின்றதே இல்லை. அதேநேரம் எந்தப் பக்கமும் சாயாமல் நேர்மையோடு செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பதாக நம்பவைக்க முயல்கின்றன. இதன் மறுபக்கமாக ஊடகங்கள் எந்தப் பக்கச் சார்போடு இருக்கின்றனவோ, அந்தப் … கொரானா காலத்தில் ஊடகங்களின் செயல்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமக்கான மாற்று ஊடகம்

கார்ப்பரேட் அடிமை ஊடகங்களும் நமக்கான மாற்று ஊடகங்களும். கம்யூனிச கல்வி இயக்கம் கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், “கருத்துப் பரப்பலில், அணி திரட்டலில் சமூக வலைத் தளங்களின் பங்கு” தோழர் கீற்று நந்தன் ஆற்றிய உரையின் நூல் வடிவம் இது. அச்சு காட்சி ஊடகங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளிலும், அவர்களின் அடிவருடிகளின் கைகளிலும் இருக்கின்றன. என்றாலும் அதே கார்ப்பரேட்களின் கைகளில் இருக்கின்ற சமூக ஊடகங்களை மக்கள் தங்கள் செய்திகளை கொண்டு செல்ல பரவலாக்க பயன்படுத்த முடியும். … நமக்கான மாற்று ஊடகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.