மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டு கொரில்லாக்களால் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களிடம் ஆத்திரத்தையும் வெறியையும் கிளப்பியிருக்கிறது. “அரசாங்கம் இனிமேலாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ளவேண்டும்” என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நரைத்த மீசைகளின் ஊடாக ஆங்கில சானல்களில் உருமுகிறார்கள். “தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையென்று மாவோயிஸ்டுகள் நிரூபித்துவிட்டதால், எதிரி நாட்டுப் படையாகக் கருதி மாவோயிஸ்டுகளை ஒடுக்கவேண்டும்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது தினமணி. இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருப்பதன் மூலம், உன்னதமான … மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொச்சை படுத்தப் பட்ட ராவணன்

வழக்கமாக பீஃப் சாப்பிடும் பாய் கடையில் நல்ல சுவையான மாட்டு வறுவலை நண்பர்களோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது பெரியார் தி.க. தோழர் ஒருவர் "ஏனுங் ராவணன் படம் பாத்திங்ளா படம் "நமக்கு' ஆதரவாக இருக்கிறது ,மணிரத்தனம் பரவாலிங் நல்ல ஆளாட்டந்தான் தெரியுதுங்" என்றார். ராவணன் என்ற டைட்டிலை வைத்து அதுவும் மணிரத்னம் எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருந்தது. ஏனென்றால் மணிரத்னம் ரோஜா படத்திலேயே தான் யார் என்பதை காட்டியவர் … கொச்சை படுத்தப் பட்ட ராவணன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.

இன்று ஜனவரி 26. குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்? 90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை … புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.