ஃபீலிங்கு

சிறிது காலத்துக்கு முன்பு நானும் கோவையைச் சேர்ந்த ஒரு தோழரும் இணைந்து அதிகளவாக பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவது போன்ற தலைப்புசார்ந்த காணொளிகளை எடுத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு சில வரையறைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம். அழகியல், திரைமொழி, காட்சிப்பாட்டை என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கம்யூனிசம் தான் கருவாக இருக்க வேண்டும், ஆனால் கம்யூனிச கலைச் சொற்கள் எதையும் பயன்படுத்தி விடக் கூடாது. எளிமையாக மக்கள் வாழ்வில் இருக்கும் கேள்விகளை எடுத்துக் கொண்டு, … ஃபீலிங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து மதம் என்றால் என்ன?

இந்து என்று தங்களை நம்பிக் கொண்டிருக்கும் பலருக்கு தாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் மதத்தின் வரலாறு தெரியாது. இஸ்லாமை போல், கிருஸ்துவத்தைப் போல் இந்து என்பதும் ஒரு மதம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறன்றி இந்து என்பது ஒரெ மதமே கிடையாது என்று விளக்குகிறார் தோழர் தியாகு. இந்து மதத்துக்கு ஏன் ஒற்றைக் கடவுள் இல்லை? என்பதில் தொடங்கி இந்து என்பது ஒரு மதமே கிடையாது என்பதை நிருவுகிறார். பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. … இந்து மதம் என்றால் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ராம நவமி: எங்கு திட்டமிடப்பட்டது?

ராம நவமி வன்முறை குறித்து பொதுவான கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்றால், 1. ஆர்.எஸ்.எஸ்ஸின் அகண்ட பாரத திட்டத்தின் படி இஸ்லாமியர்கலை இரண்டாம் தர குடி மக்களாக ஆக்க, இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய திட்டமிடுகிறார்கள். 2. நிர்வாகத் தோல்வி, விவசாயத்துக்கு எதிரான, தொழிலாளர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான திட்டங்களால் வாழ்வாதாரம் இழக்கும் மக்களை திசை திருப்புவதற்காக மதவெறியை தூண்டுகிறார்கள். ஆனால் இவைகளை விட முதன்மையான செய்தி என்னவென்றால், இஸ்லாமிய வெறுப்பை இன்னும் குறிப்பாகச் சொன்னால் சாதியப் படிநிலையின் … ராம நவமி: எங்கு திட்டமிடப்பட்டது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எதிரி யார்? நண்பன் யார்?

இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா? எனும் அசட்டுத்தனமான கேள்விக்கு இணையாக பயன்படுத்தப்படும் இன்னொரு கேள்விதான் பாப்பானாங்க சாதி பார்த்து இழிவுபடுத்துறது? எனும் கேள்வி. அதாவது சாதியக் கொடுங்கோண்மையில் பார்ப்பானை விலக்கி வைத்து விட்டு தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் எதிரெதிராக நிறுத்தும் நரித்தனம் அது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து கைதூக்கி விட்டு, எங்களை ஒதுக்கி விட்டார்கள் என்று பிற்படுத்தப்பட்டவர்கள் கொதிக்கிறார்கள். இது சரியா? தோழர் வாஞ்சிநாதன் கொடுக்கும் இந்த சிறிய காணொளியில் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் … எதிரி யார்? நண்பன் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜியோ கட்டண உயர்வு ஏன்?

அண்மையில் ஜியோ, ஏர்டெல், ஓடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன? ஏன் BSNL ஆல் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை? ஏன் BSNL ஆல் 4ஜி சேவை கொடுக்க முடியவில்லை? ஏன் BSNL சேவை மக்கள் ஏற்கும் அளவுக்கு இல்ல? இது போன்ற கேள்விகளுக்கான விடை, BSNL திட்டமிட்டு சீர்குலைக்கப்படும் வரலாற்றில் சென்று இணைகிறது. இது BSNL க்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இப்படித் … ஜியோ கட்டண உயர்வு ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?

தடுப்பூசி குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பி விட்டால் போதும், உடனேயே அது அறிவியலுக்கு எதிரான பார்வை என்று ஒரேயடியாக முத்திரை குத்திவிடும் போக்கு தற்போது பரவலாக இருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு பிரச்சார முகவர்களாக செயல்படும் அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசியை சுற்றி நிகழும் எது குறித்தும் நாங்கள் அக்கரைப்படமாட்டோம் என்று வாய் மூடி இருப்பார்களானால் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யும் உரிமை மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து வரும்? தடுப்பூசிகளின் பின்னுள்ள அரசியலையையும், கொள்ளையையும் விளக்குகிறார் தோழர் கலையரசன். பாருங்கள் … தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது

தில்லியில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக, கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளும், விவசாய அமைப்பினரும், இன்னும் பலரும் போராடி வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்குவதை தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்று உறுதியுடன் போராடி வருகிறார்கள். அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நாடகங்கள் எடுபடாமல் போய்க் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று அரசு சிந்திப்பதன் அடுத்த கட்டமாக நீதி மன்றம் களத்தில் குதித்திருக்கிறது. போராடும் மக்களை நேரடியாக மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நீதி … விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.

சாத்திர, சம்பிரதாயங்கள் யாருக்காக?

தீண்டாமைக் கொடூரங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பொதுப்புத்தியோ, “இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?” என்றிருக்கிறது. அண்மையில் மனு சுமிரிதி குறித்து சச்சரவு எழுந்த போது அதே பொதுப்புத்தி, “மனு சுமிரிதி பழம் பஞ்சாங்கம் சார். யாரும் இப்ப அதெல்லாம் படிக்கிறதும் இல்லை, அதன்படி நடக்குறதும் இல்லை” என்று குழைகிறது. ஆனால் மக்களின் வாழ்வில் அவை எப்படி நுழைத்து சிந்தையை கைப்பற்றுகின்றன என விளக்குகிறார், பேரா. கருணானந்தன்.

தீயது ஆரியமா? பிராமணியமா?

வால்கா முதல் கங்கை வரை நூலை அடிப்படையாகக் கொண்டு யோகேஷ் என்பவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் அளித்துள்ள பதில்கள் குலுக்கை வலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்தும் வரலாற்று உரை. இதை வால்கா முதல் கங்கை வரை எனும் ராகுல சங்கிருத்தியாயனின் நூலுக்கான விமர்சனம் என்றும் கொள்ளலாம். தவறவிட்டு விடாதீர்கள். இதன் தொடர்ச்சியாக இன்னும் சில காணொளிப் பதிவுகளும் உள்ளன. அவைகளையும் சேர்த்துப் பாருங்கள். எழுப்பப்பட்ட கேள்விகள், 1. ஆரியர்களிடையே ஏற்றத்தாழ்வுகள், பிரிவுகள் … தீயது ஆரியமா? பிராமணியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?

இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.