கிராம அளவில் நடக்கும் ஊழல்

அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலை எண்பத்தோறு குழந்தைகளுக்கு கொடுத்ததாக ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் கண்டோம். தோராயமாக ஒரு குழந்தைக்கு 200 மில்லி கொடுப்பதாக இருந்தால், ஒரு லிட்டர் பாலோடு 15 லிட்டர் தண்னீரை கலந்திருக்கிறார்கள். இவ்வளவு தண்ணீரை கலந்தால் அது பாலாக இருக்குமா? என்பது ஒரு பக்கம். அந்த 15 லிட்டர் பாலின் விலை யாரோ சிலரின் பைகளுக்குள் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான்  உண்மை. ஒரு நாளில், ஒரு வேளையில்…

பொருளாதார மந்தம் – என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி எனும் சொல் தற்போது அனைவரும் உச்சரிக்கும் சொல்லாக இருக்கிறது. அந்த அளவுக்கு அது மக்களை கடுமையாக பாதித்திருக்கிறது. எந்த அளவுக்கு இது பரவலாக பேசு பொருளாக இருக்கிறதோ அந்த அளவுக்கு எளிய மக்களுக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது. இந்த சரியாக புரியாத தன்மையை வைத்துக் கொண்டு தான் சங்கிகள் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்றே இல்லை. இருப்பது சிறிய சிக்கல் தான் அதை மோடி ஊதித் தள்ளிவிடுவார் என்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்க:….

பார்ப்பனக் கொழுப்பு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்றான் வான்புகழ் வள்ளுவன். இங்கே ஓர் அதெள்ளுவன் பிறப்பில் சிறப்பு இருக்கிறது என்கிறான். மட்டுமல்லாமல், அதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம் என்று வேறு கூறுகிறான். வீட்டில் வளர்க்கும் நாயில் பிறப்பு வழி சிறப்பு இருக்கிறது. அரிசியில் பழங்களில் இருக்கிறது. மனிதர்கள் மட்டும் பிறப்பால் சமமாக முடியுமா? என்கிறான். அறிவு என்றால் என்ன? சமூகத்திற்கும் அறிவுக்கும் இருக்கும் தொடர்பு பிறப்போடு இருக்கிறதா? மரபணு மாற்றுப் பயிர் என்றால் என்ன?…

ஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா?

  ஸ்டெரிலைட் காப்பர் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அரசோ போராட்டங்களை எப்படியாவது சமாளித்து ஆலையை காப்பாற்றி விட வேண்டும் என துடிக்கிறது.   ஏற்கனவே உற்பத்தி செய்த அளவிலிருந்து இரண்டு மடங்குக்கும் அதிகமாக காப்பர் உற்பத்தி செய்து உலகிலேயே அதிக காப்பர் உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய ஆலை என தன்னை விரிவாக்கம் செய்து வருகிறது ஸ்டெரிலைட். மறுபக்கம், தமிழ்நாட்டிலேயே அதிக புற்றுநோய் பாதிப்படைந்தவர்கள் வசிக்கும் பகுதி, சிறுநீரக கோளாறுகளுக்காக அதிக…

கலவர (வி)நாயகன் = வில்லன்

இந்தியாவெங்கும் நகரங்களிலும், கிராமங்களிலும் விநாயக பொம்மைகளை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து கடலில் வீசி வருகின்றனர்(!). இதே விதமாக மதிமாறனும் விநாயக மதிப்பீட்டை அடித்து மிதித்து, வெட்டி, கூறு போட்டு துவம்சம் செய்து வீசி இருக்கிறார். கேட்டுப் பாருங்கள்.    

கோமியோ கேர்: காவிகளை காறித் துப்பும் நக்கலைட்ஸ்

‘நக்கலைட்ஸ்’ நண்பர்களின் அடுத்த அரசியல் நகைச்சுவை வீடியோ “கோமியோ கேர்”. ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் சர்வரோக நிவாரணியாக திணிக்கப்படும் மாட்டு மூத்திரத்தின் மணத்தை மரண மாஸாக நாறடிக்கிறது இந்தப் படம். புகையிலை பழக்கத்தால் புற்று நோயுடன் மும்பை மருத்துவமனையில் இறந்து போன முகேஷை நினைவிருக்கிறதா? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய புகையிலை அபாயத்தினை எச்சரிக்கும் அரசு விளம்பரம் அது. இங்கேயும் ஒரு முகேஷ். அதே போன்றொதொரு ஒடிசலான தேகத்துடன். உடல்நலமற்று மருத்துவரிடம் செல்லும் போது அங்கே…

மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?

ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார். இந்த அடக்குமுறை ஏன் ஏவிவிடப்பட்டது? இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரமான மற்ற பிரச்சினைகளோடு இணைந்து விடக்கூடாது என்று அரசு காட்டிய அவசரமான ஒடுக்குமுறையே இந்த அடக்குமுறை. ரவுடிகள் போல வன்முறை ஆட்டம் போட்ட போலீசார் தண்டிக்கப்படவேண்டும். தமிழக மக்கள் தமது போராட்டத்தை தொடர…

தமிழக மக்களின் மெரினா பிரகடனம்

ஆங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் 22.01.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  தோழர் ராஜூ அறிவித்து விட்டு, இதில் சேர்க்கை, திருத்தம், விமரிசனம் இருந்தால் கூறுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பிறகு அங்குள்ள மக்களால் இந்த பிரகடனம் பெரும் ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்…

சுவாதியை அறைஞ்சவன் எவண்டா.. .. .. ?

சுவாதி கொலை குறித்து தெரியாதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது எனும் அளவுக்கு ஊடகங்கள் மக்களிடம் இந்த படுகொலையை கொண்டு சென்று சேர்த்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக எத்தனையோ வன்புணர்வுக் குற்றங்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு படுகொடூரக் கொலைகள் நடந்திருந்த போதிலும் அவைகளெயெல்லாம் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்த ஊடகங்களும், அரசும் ஒரு நிர்பயாவுக்காக கொதித்தெழுந்தது. எத்தனையோ ஆவணக் கொலைகள் உட்பட கொடூரங்கள் நடந்திருந்தும் கூட அரசின், காவல்துறையின், ஊடகங்களின் அழுத்தத்தில் சுவாதி தமிழ்நாட்டின் நிர்பயாவாக…

கொழுப்பெடுத்து உலவும் விலங்குகள்

காணொளியில் புதியது 35 காவல் துறையை ஏவல் துறை என்பதெல்லாம் ரெம்ப பழைய வழக்கம். ரவுடிகள், வெறிநாய்கள், யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர்கள் என்று பலவாறாக அழைத்துப் பார்த்தும் போதவில்லை. ஒவ்வொரு கணமும் புதுப்புது சொல்லை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது அந்தத் துறை.   அண்மையில் நடந்த இவ்வாறான காவல் துறையின் மிருகத்தனமான சில நடவடிக்கைகளைத் தொகுத்து காணொளியாக்கி, காவல்துறை யாருக்கு நண்பன்? எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது ஆனந்த விகடனின் இந்த காணொளி.  …