கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்

ரஹ்மத்நிசா செந்தில் குமார் திருமணம் கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் … கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அழகுபடுத்தும் எங்களை அழிக்கிறது ஜாதி

கொலை செய்யப்பட்ட ஹரிஹரனும், கொலை செய்யப்பட்ட இடமான கரூர் பகவதீஸ்வரர் கோவிலும். செய்தி: கரூர் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெயராமனுடைய மகன் ஹரிஹரன் (வயது 23). சலூன் கடை நடத்தி வருகிறார். இவரின் கடை எதிரேயுள்ள தெற்குத் தெருவைச் சேர்ந்த வேலன், தேவி தம்பதியரின் மகள் மீரா. இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு இளம்பெண்ணின் … அழகுபடுத்தும் எங்களை அழிக்கிறது ஜாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 8

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 13 சட்டங்கள் இயற்றுதல் முன்னேறுகின்ற பொழுது பெண் புகார் செய்வதற்குரிய எல்லாக் காரணங்களும் மேன்மேலும் நீக்கப்படுகின்றன என்று நமது சட்டவியல் நிபுனர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். நவீன கால நாகரீக சட்ட அமைப்புகள் இரண்டு விஷயங்களை மேன்மேலும் அங்கீகரிக்கின்றன; முதலாவதாக, திருமணம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது இரு தரப்பினரும் விருப்ப பூர்வமாகச் செய்து கொண்ட ஒப்பந்தமாக இருக்க வேண்டும்; இரண்டாவதாக, மண வாழ்க்கையில் உரிமைகள், கடைமைகள் விஷயத்தில் இரு … குடும்பம் 8-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம் 6

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 11 4. ஒருதார மணக் குடும்பம். அநாகரிக நிலையின் இடைக் கட்டம் தலைக்கட்டத்துக்கு மாறிச் செல்லும் காலப் பகுதியில் இணைக் குடும்பத்திலிருந்து இது தோன்றுகிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். அதன் இறுதி வெற்றி நாகரிகம் தொடங்குவதற்குரிய அடையாளக் குறிகளில் ஒன்று. அது ஆணின் மேலாதிக்கத்தை அடிப்படையாக்க் கொண்டது. அதன் தெளிவான நோக்கம் விவாதத்திற்கு இடமில்லாத தந்தைமுறையுள்ள குழந்தைகளைப் பெறுவதுதான். இக்குழந்தைகள் உரிய காலத்தில் தமது தகப்பனாரின் இயற்கையான … குடும்பம் 6-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெருவெளியின் தூசு

பெருவெளியின் விரிவில் ஒரு தூசில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசு நான். பெருங்கடலின் பரப்பில் மழையின் இடையே பறந்து கொண்டிருக்கும் ஒரு கொசு நான். மலர்த் தோட்டத்தின் அண்மையில் கோடி மலர்களின் மணங்களூடே ஒற்றை மலரில் நிறைந்து போகும் ஒரு தேனீ நான். என்னை நான் எப்படிப் பார்ப்பது? எப்படிப் பார்க்க நான் அனுமதிப்பது? பேரண்டத்தின் நுணுக்கமே ஆனாலும் என் அடைவுக்கும் பொருள் உண்டென்று அறிவித்து விடட்டுமா? துளிகளிடையே புகுந்து பறந்தாலும் நனைந்து விட்டால் தலை துவட்டுங்களென்று கோரிக்கை … பெருவெளியின் தூசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்

  பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பெற்ற அன்னையையே கொண்டாட்டப் பொருளாக மாற்றி, நுகர்வுப் பண்பாட்டில் மூழ்கடித்து அன்னையர் தினமாக கொண்டாடும் மேற்குலகு காதலை, காதலர்களை மட்டும் விட்டு விடுமா என்ன? கொண்டாடுகிறது. அதாவது, கொண்டாடத் தூண்டுவதற்காக கொண்டாடுகிறது. இந்தியாவில் மூன்று விதங்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களால் கொண்டாடப்படுவது. இன்று மட்டும் என்றல்ல, என்றும், கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளவே விரும்புவார்கள். என்றாலும் இன்று ஒரு தனிவித … காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்

திவ்யா - இளவரசன் இவர்கள் மீண்டும் ஊடக வெளிசத்திற்கு வந்திருக்கிறார்கள். இளவரசன் தொடுத்திருந்த ஆட்கொணர்வு வழக்கில், தன் தாயாருடன் வாழ விரும்புவதாக திவ்யா கூறியதிலிருந்து செய்தி ஊடகங்கள் பேசித் தீர்த்துவிட்டன. திவ்யா தியாகம் செய்துவிட்டார் என்பதில் தொடங்கி அவர்களுக்கிடையே இருந்தது ஈர்ப்புக் கவர்ச்சி தானேயன்றிக் காதலல்ல என்று கண்டு பிடித்தது வரை கூறப்படுபவைகள் ஏராளம் ஏராளம். இப்படி பல வண்ணங்களில் கூறப்படுபவைகளை விட அவை திணிக்கும் கருத்தியல்களே கவனிக்க வேண்டியவை.   முதலில் திவ்யா இளவரசன் கலப்பு … திவ்யாவைச் சுற்றியும் அதற்கு வெளியிலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?

சூரியன் உதிப்பதைப்போல், காற்று வீசுவதைப்போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் என்று கம்யூனிசத்தின் மீதான அவதூறுகளைக் கூறலாம். அந்த அளவுக்கு குப்பை வீசியே மறைத்துவிடும் எத்தனத்தில் விதவிதமான புனைவுகளும், பொருளற்ற பொய்களும், பொருந்தா விளக்கங்களும் நாளும் பொழிந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அவதூறுகளுக்கு விளக்கமளிக்க முனைந்தால், வேறு எதையும் செய்யமுடியாத அளவுக்கு கம்யூனிஸ்டுகளின் நேரம் அவர்களுடையதாக இருக்காது. அதேநேரம் அத்தனை அவதூறுகளுக்கும் மறுக்கவியலா முறையில் தகர்ப்புகளும், தரவுகளும் தரப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவதூறுகளுக்கான தேவை குறைவதே இல்லை. … பேசுதற்கெளிய பண்டம் மட்டுமா பெண்ணியம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது … பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே-ஐ படிப்பதைத் தொடரவும்.