செய்தி: சாவர்க்கர் பற்றி கர்நாடக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கர்நாடக மாநில 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அதில், சாவர்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால், அங்கு புல்புல் பறவைகள் தினமும் வந்து செல்லும். அந்தப் பறவையில் மீதேறி அன்றாடம் தாய்நாட்டிற்கு சாவர்க்கர் வந்து செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா … பறவை மீது சாவர்க்கர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: காந்தி
அசுத்தம் வெளியேறுமா? வெளியேற்றுவோம்.
செய்தி: தேசிய தூய்மை மையத்தை டெல்லியில் இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடுகையில், மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முழு உலகமும் முன்வருகிறது. இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கடந்த சில ஆண்டுகளில், காந்திஜியால் ஈர்க்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், ‘ஸ்வச் பாரத் மிஷன்’ அவர்களின் வாழ்க்கையின் இலக்காக மாற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். செய்தியின் பின்னே: முதலில் வெள்ளையனே … அசுத்தம் வெளியேறுமா? வெளியேற்றுவோம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
.. .. .. காந்தியடிகள் இந்திய மண்ணில் நிலவி வந்த சதுர்வர்ணத்தை எதிர்ப்பதில் தீவிரம் காட்டவில்லை. இந்தியாவில் மேல்ஜாதியினரால் ஒடுக்கப்பட்டு பொருளாதாரம் சமூக நீதி உள்ளிட்ட தளங்களில் போராடிக் கொண்டிருந்த மக்களின் மீது அவர் இரக்கம் காட்டவில்லை. ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் என்ற நிலைகளில் மட்டும், “சகோதரனுக்கு எதிராக அறப் போராட்டமா?” என வினவி காந்தி சிக்கலிலிருந்து விலகிச் செல்கிறாரே ஏன் என்பது டாக்டர் அம்பேத்கரின் வினா. இது போன்று டாக்டர் … தீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
காந்தி யார்?
இன்று அக்டோபர் இரண்டு, காந்தி ஜெயந்தி. மகாத்மா என்று கொண்டாடப்படும் பிம்பம். இன்று இது போன்ற கொண்டாட்டங்கள் மட்டுமே காட்சிப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1947 ல் நாம் பெற்றது சுதந்திரமா? எனும் முதன்மையான கேள்வியை ஒதுக்கி விட்டாலும் கூட அவரின் சமகால ஆளுமைகள் அவர் மீது வைத்த விமர்சனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அவர் மீதான பிம்பம் ஏகாதிபத்தியங்களுக்கு தேவைப்படுவதாக இருக்கிறது. ஒரு மாணவி அவருக்கு மகாத்மா எனும் அடைமொழி யாரால் எப்போது கொடுக்கப்பட்டது எனும் … காந்தி யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை
அந்த சிறுவன் நடந்து வருகிறான். சுற்றிலும் பிணங்கள் சிதறிக் கிடக்கின்றன. அந்த சூழலின் அழுத்தத்தை தாங்கும் வயதோ அல்லது உடல் பலமோ கொண்டவனாக அந்தச் சிறுவன் இல்லை. ஆயினும் அந்த சிறுவன் நடந்தான். அவனது கண்களில் குளமாய் தேங்கிய துக்க முத்துக்கள் சிதறி விழுகின்றன. சிதறிய முத்துக்கள் உள்ளக் கொதிப்பின் வெம்மையை படர விடுகின்றன. அதில், தோல்கள் கருகுகின்றனவோ என்று அய்யுறும் அளவு, ஆற்றாமையின் துயரம் அவனது முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.கரி மருந்தின் நாற்றமும், புதிய ரத்தத்தின் … பகத் சிங்: அந்த வீரன் இன்னும் சாகவில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று
மாவீரன் பகத்சிங் பிறந்த தினத்தில் உங்களை போராட அழைக்கிறது இந்த கட்டுரை…. 18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு, நிசாம்; மருது, தொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் … விடுதலைப் போரின் விடிவெள்ளி தோழர் பகத்சிங்கின் பிறந்த நாள் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்
ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம். 1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் … சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே
கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரதமர் மன்மோகன்சிங் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமரிடம் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட பழமைவாத இந்து அமைப்புகள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்திருந்தாராம். உலகில் பலருடைய, பல நாடுகளுடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருக்கும் விக்கிலீக்ஸ் இதையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் இரட்டை வேடம்தான் என்றாலும் அந்தக் … ஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே-ஐ படிப்பதைத் தொடரவும்.
காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.
அண்மையில் காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு என்ற தலைப்பில் இடப்பட்ட பதிவிற்கு மின்னஞ்சலில் வந்த எதிர்வினையையும் அதற்கான பதிலும் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. மஹாத்மா, தேசத்தந்தை எனும் விதந்தோதல்களெல்லாம் பிம்பங்களின் பின்னே ஒழிந்துகொள்வதை வெளிப்படுத்தவே இவை பதிவிடப்படுகிறது. நண்பர் செங்கொடி அவர்களுக்கு, வணக்கம். காந்தியாரைத் திறனாய்வு செய்யும் போது இந்தியாவின் உயர்ந்த மேதைகளான இரவீந்திர நாத் தாகூரையும், விவேகானந்தரையும், பண்டித நேருவையும் இகழ்ந்துள்ளது நியாயமாகத் தெரியவில்லை. காந்தியின் மீது நீங்கள் கூறிய 100 மேற்பட்ட குற்றங்கள் படித்த பின் ஒன்று கூட என் மனதில் ஒட்ட வில்லை. காரணம் உங்களுடைய தனிப்பட்ட தீர்ப்பான முழு வெறுப்பு உணர்ச்சியே. இரு தரப்பார் கருத்தின்றி ஒருவர் மட்டும் இகழ்ச்சியாக இப்படி எழுதுவது பொதுக் … காந்தி, பெரியார், அம்பேத்கார்: புனைவுகளும் புரிதல்களும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு
அண்மையில் காந்தி பயன்படுத்திய பொருட்களை சாராய மல்லையா ஏலத்தில் எடுத்ததை தொடர்ந்து காந்தியின் மகிமை மீண்டும் ஒருமுறை சுற்றுக்கு விடப்பட்டது. ஈழ இனப்படுகொலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் உணர்வை காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிப்பதாக மொழிபெயர்ப்பு செய்தனர் காங்கிரஸ் கயவர்கள். மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொண்டு சுவரொட்டி ஒட்டுவதற்கு காவல் துரையிடம் வாசகங்களை எழுதிக்கொடுத்து அனுமதி வாங்கவேண்டும் என்று உத்தரவு போடும் சுதந்திரம். காந்தி காங்கிரஸ் சுதந்திரம் இவைகள் போற்றுவதற்கு அறுகதையானவை அல்ல என நமக்கு தெளிவிக்கிறது … காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.