அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்

நெருப்புப் பாதை எனும் அக்னிபாத்தை அறிவிக்கும் போது, கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றச் சொன்ன அதே மனநிலையில் தான் மோடி அறிவித்திருப்பார் என எண்ணுகிறேன். எந்த எதிர்ப்பும் இன்றி அனைவரும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக விளக்கு ஏற்றுவதைப் போல் அக்னிபாத்தும் நடப்பு வந்து விடும் என மோடி எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் இந்த திட்டம் கடும் எதிர்ப்பை கண்டிருப்பதுடன், ரயில் எரிப்புப் போராட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டன. காவல் நிலையங்களும், பாஜக அலுவலகமும், ஒன்றிய அரசு … அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,

“சித்தா வெறியர்ஸ்” பிரபல பதிவராக இருக்கும், எதையும் உளவியல் ரீதியாக அணுகும், கம்யூனிசத்தில் அக்கரை கொண்ட தோழர் ஒருவரின் சொற்கள் இவை. ஏன் இவ்வளவு வன்மம். தொடர்ந்து இப்படியான சொற்களும், முத்திரை குத்தல்களும் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ ஓரிரு எடுத்துக்காட்டுகள். “சித்தம், ஓமியோபதி, இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. கொஞ்சம் விஞ்ஞானத்தின் குரலை கொஞ்சம் கேளுங்கள்” இது இன்னொரு நண்பர். அதாவது அலோபதி தவிர வேறு … நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 4

இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்துக்கான வாய்ப்பும் அடிப்படைகளை உருவாக்குதலும்! புதிய மின்னணு பொருளாதார முறையை பொறுத்தவரை தொழில்நுட்பத்திலும் உற்பத்தியிலும் இந்தியாவுக்குப் பெரிய குறிப்பிடும்படியான முக்கிய பாத்திரம் வகிக்க இடமில்லை. ஆனால் சந்தை என்ற அளவில் இது மிகப்பெரியது. ஆதலால் அமெரிக்க - சீன நிறுவனங்களுமே இந்த 130 கோடி மக்களை சந்தையைக் கைப்பற்ற போட்டியிட்டன. இதற்குள் செல்வதற்குமுன் இந்தப் பொருளாதாரத்துக்கு இந்தியாவில் உள்ள வாய்ப்பு என்ன என்று அறிந்துகொள்வது அவசியம். இந்தியாவில் மின்னணு பொருளாதாரத்துக்கான வாய்ப்பு: மற்ற வளர்ந்த … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 3

போட்டியை ஊக்குவித்து எழுச்சி பெற்ற சீனா! அமெரிக்காவில் தோன்றிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, பொருட்களை சந்தைபடுத்துவதிலும் விற்பனையிலும் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தி இந்த தொழில்நுட்பத்தைக் கைகொண்ட நிறுவனங்களை சிறு வணிகர்களை எல்லாம் ஒழித்துக்கட்டி முற்றுரிமை (Monopoly) கொண்ட பெருவணிக நிறுவனங்களாக (Wholesale) மாற்றியது. அது பொருட்களின் உற்பத்தி பெருக்கத்துக்கான முனைப்பைக் குறைத்து பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் வாங்கும் ஆற்றலைக் குறைத்து சந்தை சுருக்கத்துக்கு காரணமானதையும் அந்தச் சிக்கலைத் தீர்க்க அந்நிறுவனங்கள் கார் முதல் காய்கறிகள் வரையான … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 3-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 2

இணைய வர்த்தகம் எப்படி நடக்கிறது? இணைய வர்த்தகம் நடைமுறையில் எப்படி இயங்குகிறது என்பதை ஒரு குறிப்பிட்ட வடிவில் அடக்குவது கடினம். ஏனெனில் அது இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்து முதிர்ச்சி அடைந்த வடிவத்தை எட்டவில்லை. வளர்ந்துவரும் ஒரு கட்டமைப்பு. ஆதலால் இதில் ஈடுபட்டிருக்கும் பெருநிறுவனங்கள் வழி இது என்னென்ன வகைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயலலாம். அதன் அடிப்படையில் இது இந்தியாவில் எந்தவிதமாகச் செயல்படும் என்பதை ஓரளவு அனுமானிக்கலாம். அலிபாபா: இது மூன்று இணையத்தளங்களைக் கொண்டிருக்கிறது. … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா சாபமா? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா?

மின்னணுப் பொருளாதாரம், எதிர்வரும் உலகை ஆளப் போகும் சொல் இது. இதை திறன் பேசியில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பணம் அனுப்புவது என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இதனால் உலக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும், அவர்களின் பழக்க வழக்கங்களும், சிந்தனை முறையும் மாறும், மாற்றும் வாய்ப்பு இந்தச் சொல்லுக்கு இருக்கிறது. இதை புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்த அடிப்படையில் மின்னம்பலம் தளத்தில் பாஸ்கர் செல்வராஜ் எழுதும் இது குறித்து தொடராக எழுதி வருகிறார். மின்னணுப் பொருளாதாரம், … மின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை

உலகு தழுவிய அளவில் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் உடல் மெலிவுற்று, வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும், உயரத்துக்கு ஏற்ற எடையும் இன்றி நோஞ்சான்களாக உயிர் வாழும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அன்றாடம் ஊட்டமான உணவு கிடைக்காமல் வெந்ததைத் தின்று உயிர் வாழும் மக்களைக் கொண்ட நாடுகள் அடங்கிய தரவரிசைப் பட்டியல் உலகப் பட்டினிக் குறியீடு 2020 எனும் பெயரில் வெளியாகி இருக்கிறது. வழமை போலவே இந்தியா இந்தப் பட்டியலில் பிந்தங்கி இருப்பதோடு - 107 … முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை-ஐ படிப்பதைத் தொடரவும்.

லட்சுமி விலாஸ் அரிசியும், டிபிஎஸ் உமியும்

லட்சுமி விலாஸ் வங்கியின் சிக்கல் தனிப்பட்ட ஒன்றல்ல, எல்லா வங்கிகளும் வாராக்கடன் பிரச்சையில் சிக்கித் தவிப்பது போலவே லட்சுமி விலாஸ் வங்கியும் வாராக்கடன் சிக்கலில் சிக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் வாராக்கடனின் எல்லை உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த வாரக்கடன்களுக்கும் சேமவங்கியின் கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூற முடியுமா? எனவே, இந்த விதயத்தில், லட்சுமி விலாஸ் வங்கி தனிப்பட்ட முறையில் செய்த தவறுகளை சேமவங்கி தலையிட்டு சரி செய்ய முயல்கிறது எனும் புரிதலே பிழையானது.

பெய்ரூட் வெடிப்பு: சதியே காரணம்.

செய்தி: லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலுள்ள துறைமுகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த மாபெரும் வெடிப்பில் சிக்கி இதுவரை குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும், லெபனானில் இரண்டு வாரங்களுக்கு அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்த கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்த நாட்டு அதிபர் மைக்கேல் ஆன். செய்தியின் பின்னே: ஜப்பானில் வீசப்பட்ட அணு … பெய்ரூட் வெடிப்பு: சதியே காரணம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊடகங்களிலும் உரிமைப் போர்

தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான். பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலை பற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்.... … ஊடகங்களிலும் உரிமைப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.