உலகின் எந்த ஒரு தலைவருக்குமே கிடைக்காத சிறப்பு பிரதமராக இருக்கும் மோடிக்கு உண்டு. மோடியின் பொய்கள் என்று அவர் கூறிய பொய்களை மட்டுமே தொகுத்து நூலாக கொண்டு வந்திருக்கிறார்கள். உலகின் எந்த தலைவருக்கு இது போன்ற சிறப்பு கிடைத்திருக்கிறது? மோடியின் பேச்சில் நஞ்சு கலந்திருக்கிறதா? அல்லது மோடியின் பேச்சே நஞ்சு தானா? இதை பட்டிமன்ற தலைப்பாக வைக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேச்சு நஞ்சூறிப் போய் இருக்கும். எடுத்துக் காட்டாக குஜராத் முதல்வராக இருந்த போது அவர் … மோடி பேச்சின் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: காவல்துறை
ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை
மாநில அரசாங்கங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிப்பதை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசாங்கம். மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காவல் துறையை ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்த நிகழ்வுகள் மூலம் சிந்திப்பவர்கள் கண்டுணரலாம். தமிழ்நாட்டில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. ஆளுனராக ரவி நியமிக்கப்பட்டவுடன் காவல்துறை உயரலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்தியதை அரசியல் உணர்வுள்ளவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அன்றிந்து இன்று வரை காவல்துறை அப்பட்டமான பக்கச் சார்புடன் … ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
ராம நவமி: வன்முறை வெறியாட்டம்
வினாயகர் ஊர்வலங்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் என்று பொருள். கடந்த கால வரலாறு இப்படி பொருள் கொள்ளும் படியான கட்டாயத்தைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ராம நவமியும் இணைந்துள்ளது. வெறுமனே இந்து எனும் மதத்தில் நம்பிக்கையுள்ள அதேநேரம் ஆர்.எஸ்.எஸ் உருவகிக்கும் இந்து எனும் சொல்லில் நம்பிக்கையில்லாத பலருக்கு வினாயகர், ராம நவமி போன்ற மதம் தொடர்பான பெயர்களை எதிர்மறையாக உச்சரிப்பது கோபத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், அந்தக் கோபம் யார் மீது ஏற்படுகிறது … ராம நவமி: வன்முறை வெறியாட்டம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அனீஸ் கைதை முன்னிட்டு .. ..
கடந்த திசம்பர் 29 ம் தேதி கோவையில், இஸ்லாமியராகப் பிறந்த நாத்திகரான அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாம் மதத்தை விமர்சித்து சமூக வலை தளங்களில் மீம்ஸ் போட்டது தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வரை பிணை மறுக்கப்பட்டு சிறையில் உள்ளார். கருத்துரிமைக்கு எதிரான கைதாக இதை பலரும் கண்டித்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் முஸ்லீம்கள் என்ற பெயரில் இயங்குவோர்கள் இந்த கைதுக்கு எதிராக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள். கருத்துரிமை என்பது இந்தியாவைப் பொருத்தவரை ஏட்டுச் … அனீஸ் கைதை முன்னிட்டு .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
ராம்குமார் கொலை வழக்கு
சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சுவாதி படுகொலை வழக்கு (இப்போது இந்தப் பெயர் பொருத்தமானதாக இருக்கவில்லை. எனவே சுவாதி கொலை வழக்கு என்பதை ராம்குமார் கொலை வழக்கு என்பதாக குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்) சுவாதி படுகொலை நிகழ்ந்ததிலிருந்து இன்றுவரை காவல்துறையின் நடவடிக்கைகளில் பல்வேறு ஐயங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அவை தீர்க்கப்படக் கூடாது என்பது மட்டுமல்லாமல் அவை எழுப்பப்பட்டிருக்கவே கூடாது என்பது போல் திட்டமிட்ட அலட்சியத்துடன் காவல்துறையின், ஊடகங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. தமிழகத்தில் காவி … ராம்குமார் கொலை வழக்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
காட்டுமிராண்டித் துறை
செய்தி: 8.2.2021 அன்று மாலை 4.30 மணியளவில் திருப்பதி மற்றும் அவரது நண்பர்கள் மூவர் பாண்டிகோவிலில் விழாவிற்கு டோல் அடிக்கும் பணி முடிந்து காரில் வீடு நோக்கி வந்துள்ளனர், அப்போது மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் அவர்களை வழிமறித்த போலீசார், அவர்களை மரியாதை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு அவர்கள் மரியாதையா பேசுங்க சார் என்று கேட்டுள்ளனர். இது போதாதா போலிசுக்கு, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அங்கிருந்த காவலர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாக … காட்டுமிராண்டித் துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேச துரோக வழக்கு போடவா?
செய்தி: கடந்த திங்கள் அன்று தி மீடியா ஃபவுண்டேசன், பிஜி வர்கீஸ் நினைவு கருத்தரங்கு 2020 என்ற காணொலி நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தது. உச்சநீதி மன்றத்தின் முன்னள் தலைமை நீதிபதி மதன் பி.லோக்கர் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ’பேச்சு மற்றும் கருத்து உரிமை, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உள்ளிட்ட நமது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார். ”சட்டத்தை முழுவதுவாக துஷ்பிரயோகம் செய்யாவிட்டலும் கூட, சட்டத்தை திரித்துக் கையாள்வதால் நம்முடைய பேச்சு உரிமை படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. வேறு … தேச துரோக வழக்கு போடவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?
செய்தி: பணியில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு உள்ள விதிகளில், அவர்கள் பொது வெளியில் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அரசியல் நோக்கம் கொண்டவையாக இருக்கக் கூடாது என்பதும் ஒன்றாகும். மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை பாதுகாப்பதே அவர்களுக்குள்ள கடமை. தமிழக அரசின் கீழ் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வரும் சந்தீப் மிட்டல் தனது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ச்சியாக மத்திய ஆளும் கட்சி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆளும் கட்சி சார்பு இயக்கங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். … ஐபிஎஸ் என்றால் ஆர்.எஸ்.எஸ் என்று பொருளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?
நேற்று இரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது, கடைகள், வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசியும் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மரணமடைந்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளது, என்றாலும் நகரின் பல இடங்களில் மக்கள் கூட தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் தில்லியில் சங்கிகள் வன்முறை செய்தார்கள். இப்போது பெங்களூருவில் முஸ்லீம்கள் வன்முறை செய்திருக்கிறார்கள். இரண்டுமே கண்டிக்கத் தக்கது என்று ஒப்பீட்டு … பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இ பாஸா? இ ஊழலா?
செய்தி: இ-பாஸை ரத்துசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பணம் அளிப்பவர்களுக்கும் தாராளமாக கிடைப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஊரடங்கில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால், இ-பாஸ் நடைமுறையை … இ பாஸா? இ ஊழலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.