செய்தி: அண்மையில் ஆடிப் பதினெட்டு விழா என்ற பெயரில் அறநிலையத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கொஞ்சமும் வெட்கமின்றி இந்து மத புராண கதைகளை அப்படியே வெளியிடப்பட்டிருந்தது. செய்தியின் பின்னே: அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? தொடக்க காலங்களில் கோவில்கள் வங்கிகளைப் போல் செயல்பட்டன, கருவூலங்களாக இருந்தன, நிலங்களை மையப்படுத்தியும், வரியைப் பெற்றும் மன்னனுக்கு வழங்கும் ஏற்பாடாக இருந்தன, கடவுளர்களோடு தொடர்புபடுத்தி மத வழிபாட்டு மையங்களாகவும் இருந்தன. காலப் போக்கில் மன்னர்களிடமிருந்த அதாவது அரசிடம் இருந்த … நோக்கம் மறக்கும் அறநிலையத் துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: காவிரி
தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!
மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது? நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது. இந்திய அரசு அவமதித்திருக்கிறது. குமுறிக் கொந்தளிக்கும் வண்ணம் தமிழகம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கலில் ஒருமுறை இருமுறையல்ல, நூறுமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதித் தீர்ப்பு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வஞ்சகத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கிறது மோடி அரசு. கர்நாடகத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் இதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் சில … தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இடையே பொங்கல் விடுப்பு விடுபட்டதும் வந்து போனது. ஆனால் இப்படி பொங்கி எழுந்து போராடும் அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு என்ன கனம் இருக்கிறது? வீர விளையாட்டு, நாட்டு மாடுகள், தமிழர் அடையாளம் இத்யாதி, இத்யாதிகளை.. .. .. கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு பார்ப்போம். மாட்டுக் கொம்பின் கூர்ப்பில் கண்டுபிடிக்கப்பட்ட வீரமா? கொத்துக் … ஜல்லிக்கட்டும் பொங்கலும் விவசாயிகளுக்கு உயிர் தருமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
காவிரி: தண்ணீரையும் தாண்டி .. .. ..
1991க்கு பிறகு காவிரி நீரை முன்வைத்து தற்போது மீண்டும் கும்பல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 60 பேரூந்துகள் வரை எரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். உடமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் காவிரி ஆற்று நீர் பாங்கீட்டு பிரச்சனையை முன்வைத்து நடக்கிறது என்பதைத் தவிர இவைகளுக்கும் காவிரி ஆற்று நீர் பங்கீட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. நீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கனத்த இதயத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட காவிரி நீர் தமிழகத்தை நோக்கி துள்ளலுடன் வந்து சேர்ந்தது. தண்ணீர் … காவிரி: தண்ணீரையும் தாண்டி .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..
காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு (ஆடு தாண்டும் காவிரி) எனும் இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. பெரும்பாலான இடங்களில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. என்றாலும், மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் நடந்தது என்று கூற முடியவில்லை. ஏன் இது உணர்வுபூர்வமான பிரச்சனை இல்லையா? தமிழகம் கடைமடை மாநிலமாக இருப்பதன் … ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்
சில ஆண்டுகளாக மேல்மட்டத்துக்கு வராமல் அடங்கியிருந்த காவிரிச் சிக்கல் இந்த ஆண்டு மீண்டு வந்திருக்கிறது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக திறக்க வேண்டிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும் எனும் விவசாயிகளின் குரல் எப்போதும் போல கன்னடத்தின் முறுக்கலாய் முடிந்திருக்கிறது. சில ஆண்டுகளாய் கூட்டப்படாமலிருந்த காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட வைப்பதற்கே நீதிமன்றத்தை நாட வேண்டிய அவலம் நேர்ந்தது. காவிரி … வறளும் காவிரி, வற்றாத சிக்கல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.