இடிப்பை கொண்டாடுகிறதா இந்தியா

காயம் மிகவும் முற்றி, சீழ் பிடித்து அழுகத் தொடங்கி விட்டதற்கான அறிகுறி இது. காவல் துறை ஒரு போதும் மக்களின் காவலர்களாய், நண்பர்களாய் இருந்ததே இல்லை. அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டாலும் கூட. ஒவ்வொரு ‘என்கவுண்டர்’களின் பின்னாலும் ஒரு பகைவெறி இருக்கிறது. கொள்ளைகள், கலவரக் கொலைகள் எதுவும் காவல்துறைக்கு தெரியாமல் நடந்ததில்லை. ‘அடித்து’ விசாரிப்பது தொடங்கி கழிப்பறைகளில் வழுக்கி விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்வது வரை அத்தனையும் சட்ட விரோத, மனித விரோத செயல்களே. இத்தனையையும் எவ்வித … இடிப்பை கொண்டாடுகிறதா இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஹிஜாபும் பூனூலும்

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் கல்லூரிகளை மையமாகக் கொண்டு ஒரு சிக்கல், மத மோதலை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனும் உத்தரவு போட்ப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லீம் மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படாமல் படிக்கட்டுகளிலும் வெளியிலும் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தின. ராகுல் காந்தி தொடங்கி திமுக எம்பி ஊடாக காஷ்மீரின் மஹ்மூதா முப்தி … ஹிஜாபும் பூனூலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மயக்க பிஸ்கட்

தமிழக மக்க்களே, காவிகளைப் புரிந்து கொள்ளுங்கள்: சிந்திக்க சில கேள்விகள்! “தேசியம் காக்க - தமிழினம் காக்க புறப்படுவோரே, பதில் கூறுங்கள்!” மயக்க பிஸ்கெட்டுகள் ஓர் எச்சரிக்கை தெய்வீக தமிழக சங்கம் (திருச்சி) என்ற பெயரில் ஒரு வெளியீடு வீட்டுக்கு வீடு வழங்கப்படுகிறது. இரயில் பயணங்களில் மயக்க பிஸ்கெட்டுகள் கொடுத்து பயணிகளை மயங்கச் செய்து அவர்களின் உடமைகளை கொள்ளையடிப்பது போல, உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டு மூளைச் சலவை செய்து, காவிக் கட்சிக்கு ஆள் திரட்டும் தந்திரம் … மயக்க பிஸ்கட்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?

தேசபக்தி - அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் … இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?

சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுவது என்று கேலியாக பேசிக் கொள்வார்கள். ஆனால் சங்கிகள் விமானத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மோடி அரசாங்கமும், பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கும் இந்திய அரசும், அதன் மூலம் கிடைத்திருக்கும் அதிகாரமும், பொருளாதார பலமும் சங்கிகளை எல்லாவித சோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. எல்லா இடங்களிலும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. ஒப்பீட்டளவில் வட இந்தியாவை விட தெனிந்தியா குறிப்பாக தமிழ்நாடு பார்ப்பனியத்துக்கு எதிராகவே தன்னுடைய கலை, பண்பாட்டு, சமூக விழுமியங்களின் சிந்தனையை கொண்டிருக்கிறது. ஆனால், … தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத எல்லை கடந்து அனைத்து மக்களும் இந்திய உணர்வோடு போராடும் இந்தப் போராட்டத்தை ஒரு மதப் போராட்டம் போல் சித்தரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும் நின்று போகாமல் இடையறாது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கர்னாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 20ம் தேதி (20.02.2020) ஒவைசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒரு போராட்டத்தில் கலந்து … ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சிவாஜி யார்?

கோவிந்த் பன்சாரே. கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ம் தேதி காலை நடை பயிற்சியை மேற்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட மராட்டிய கம்யூனிச தலைவர்களில் ஒருவர். சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 20ம் தேதி மரணமடைந்தார். ஏன் அவர் கொல்லப்பட்டார்? பார்ப்பனியத்தை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர். கொல்லப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் கோட்சேவை ஆராதிக்கும் மனோநிலையின் ஆபத்து குறித்து உரையாற்றினார். அப்போது ஏபிவிபி குண்டர்களால் … சிவாஜி யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு

அப்சல் குரு கடந்த 12ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்பதற்காக காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருக்கும் தாவீந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண செய்தி போல கடந்து போகத் தோன்றும். ஏனென்றால், காஷ்மீரில் இராணுவமும் போலீசும் நடத்தி வரும் வெறியாட்டங்களை அறிந்திருப்பவர்களுக்கு, இது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாக இருக்காது. அதேநேரம், இந்திய அரசையும், காவி பயங்கரவாதிகளையும் புரிந்திருப்பவர்களுக்கு இதில் முக்கியமான செய்தி இருகிறது. தாவீந்தர் சிங்கை விசாரித்த அதிகாரிகள் கூட, … தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்

கடந்த ஒன்பதாம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்விக்கப்பட்டார். இது முதல் முறை அல்ல, கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அது உறுதியில்லை. ஏனென்றால் ஏகலைவனின் கட்டை விரலை துண்டித்த பார்ப்பனியம், பலப்பல உயிர்களை குடித்த பின்னும் உயிப்ர்புடன் நீடித்துக் கொண்டிருகிறது. தரம் குறித்து வெளியே கதை விடும் அம்பிகள், பாத்திமா லத்தீப் ஒவ்வொரு தேர்விலும் முதல் … IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல

தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் 70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் … இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.