பிய்ந்த செருப்பு இருக்கிறதா?

ஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்தது என்கிறார். தமிழகத்தில் உள்ள கிறுத்துவர்களை ஒரு வாக்குவங்கியாக திரட்டி அவர்களிடம் பிரச்சாரம் பண்ணினால் 20 இடங்களை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர் தனக்கு மதசார்பற்ற அரசியலில் மட்டுமே நம்பிக்கை எனச் சொல்லி அதை மறுத்திருக்கிறார். பாஜகவினரின் சிறுபான்மை அரசியல் குறித்த ஒரு சரியான புரிதல் இதில் … பிய்ந்த செருப்பு இருக்கிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

நண்பரே … ! ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … ? உங்கள் பார்வையில் .. ! செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது … மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?

இந்தியா மூன்றுபுறம் கடலால் சூழப்பட்டிருக்கிறது, நான்கு புறமும் கடனால் சூழப்பட்டிருக்கிறது என்று வேடிக்கையாய் சொலவடை சொல்வார்கள். இப்போது எட்டுத் திக்கிலிருந்தும் பார்ப்பனியம் சூழ்ந்து கொண்டிருக்கிறது எனச் சொல்வது தகும். இந்தியாவில் அரசு இயந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பதை உணர்வதற்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பாக மோடி பிரதமரான பிறகு இது மிகுந்த விரைவுடன் செயலாற்றுகிறது. சமஸ்கிருதமயமாக்கம், உயர்கல்விக் கூடங்களில் ஆக்கிரமிப்பு, மாட்டுக்கறி, பகுத்தறிவுவாத அறிஞர்களின் படுகொலை என இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இவைகளுக்கு பலரும், … பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சகிப்பின்மையா? பயங்கரவாதமா?

இந்தியாவில் அரசு நிர்வாக எந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பது இந்திய ஆட்சிமுறை குறித்த அவதானிப்புடன் இருக்கும் யாருக்கும் தெரிந்த விசயம் தான். ஆனால் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற பிறகு இது அதீத வேகமெடுத்திருக்கிறது. திட்டமிட்ட வகையில் மேலேறிக் கொண்டிருக்கிறது. கல்புர்கி போன்ற அறிவுத்துறையினர் கொல்லப்படுவது ஒருபுறமென்றால் தாத்ரியில் தொடங்கி ஜனகனமன வுக்கு எழுந்து நிற்காதது வரை வெகுமக்களுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல்கள் இன்னொரு புறம். தற்போது இது தீவிரமான விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இப்படி விவாதிப்பவர்கள் … சகிப்பின்மையா? பயங்கரவாதமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.