எனதருமை இந்திய குடிமக்களே! அனைவருக்கும் வணக்கம். அப்போது எனக்கு வயது 19. திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. மேலும் இன்னொரு குழந்தையை நான் என் வயிற்றில் சுமந்து கொண்டிருந்தேன். என் தந்தையின் வீட்டுக்கு நான் வந்திருந்தேன். துயர்மிகுந்த 2002 பிப்ரவரி 27 அன்று என் வீட்டிற்கு முகத்தில் கலவரமும், பீதியும் சுமந்து என் உறவினர்கள் சிலர் வந்தார்கள். நான் அப்போது சமயலறையில் இருந்தேன். அவர்களது வீடுகள் எல்லாம் தீ வைத்து கொளுத்தப்பட்ட … பில்கிஸ் பானு பேசுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: குஜராத்
உள்ளதைச் சொன்னால் கைதா?
தீஸ்தா செதல்வாட், முகம்மது சுபைர் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைது ஐ.நா வரை பேசு பொருளாகி இருக்கிறது. அறிவுத் துறையினர் தொடங்கி முற்போக்காளர்கள் வரை அனைவரும் கண்டித்து விட்டனர். அரசு வாய் திறக்கவில்லை. பதில் கூறும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் இது முதல் முறையும் அல்ல. ஆனந்த் டெல்தும்ப்டே தொடங்கி வரவரராவ் ஊடாக ஸ்டென்சாமி வரை கைது செய்திருக்கிறார்கள். வரவரராவ் பிணையில் வெளி வருவதற்கு தலை கீழாக நின்று … உள்ளதைச் சொன்னால் கைதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கலவர முயற்சியில் காவிக் குரங்குகள்
கோவை டவுண்ஹால் பகுதியில், பாஜக வானதியை ஆதரித்து பேச வருகிறார் யோகி என்பதை சாக்கிட்டு வானரக் கூட்டம் ஒரு வன்முறை வெறியாட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஈருருளி (இருசக்கர வண்டி) ஊர்வலம் என்ற பெயரில் அந்த விலங்காண்டிகள், கடைகளை மூடச் சொல்லி அடாவடி செய்ததுடன், கேள்வி எழுப்பியவர்களை தாக்கி, கல்லெறிந்து அச்சமூட்டி இருக்கிறது. பள்ளிவாசல்கள் முன்னின்று வெறிக்கூச்சல் இட்டிருக்கிறது. பள்ளிவாசல்களுக்கு முன்பு சாலையில் அமர்ந்து பேயாட்டம் ஆடியிருக்கிறது. இவை எதுவும் புதிய விதயங்கள் அல்ல. ஏற்கனவே வட மாநிலங்களில் … கலவர முயற்சியில் காவிக் குரங்குகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்
சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியும், மக்களும், சமூக ஊடகங்களின் பங்களிப்புமே இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது என்பது மிகையல்ல. என்றாலும் இது மகிழ்வை பகிர்ந்து விட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காவலர்களை தவிர இந்தப் படுகொலைகளுக்கு உடந்தையாய் இருந்த மருத்துவர், நீதிமன்ற நடுவர் ஆகியோர் குறித்து எந்த விவாதமும் இல்லாமல், எந்தச் சாட்டும் இல்லாமல், அடக்கப்பட்டிருக்கிறது. இதை நீதி கிடைத்திருக்கிறது என்பதை விட … பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும்
ஜவஹர்லால் நேருவுடன் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஷேக் முகம்மது அப்துல்லா இரண்டாம் கட்டுரை : காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும் நாட்டுப் பிரிவினை என்பது நிகழ்ச்சி நிரலுக்கு வந்தபோது பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் தவிர, இங்கே ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. அவற்றுள் காஷ்மீரும் ஒன்று. இந்த சமஸ்தானங்கள் எல்லாம் யாரோடு சேர்வது என்ற கேள்வி எழுந்தது. இதற்காக அன்று இந்தியச் சுதந்திரச் சட்டம் 1947 (India Independence Act … காஷ்மீரிகளின் நம்பிக்கையும் இந்தியாவின் துரோகமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அண்டப் புழுகு .. ஆகாசப் புழுகு .. ஆர்.எஸ்.எஸ். புழுகு
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு மதிப்பை வழங்கும் 370 ஆவது சட்டப் பிரிவை நீக்கி ஒரு மாதம் ஆகிறது. இது எந்த அளவுக்கு பயங்கரமான முடிவோ அதற்கு இணையான அளவில் அதற்கான எதிர்ப்பு இல்லை. உலகளாவிய அளவில் பாகிஸ்தான் எதிர்ப்புகளைக் கிளப்ப முயல்கிறது. உள்நாட்டில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளுக்கு -தேசியக் கட்சிகளானாலும், மாநிலக் கட்சிகளானாலும்- இதன் விளைவுகள் குறித்த சரியான புரிதல் இல்லையோ எனத் தோன்றுகிறது. ஓரிரு அறிக்கைகளோடு, அடையாளப் போராட்டங்களோடு முடித்துக் கொண்டன. எல்லாம் ஒரு குட்டையில் … அண்டப் புழுகு .. ஆகாசப் புழுகு .. ஆர்.எஸ்.எஸ். புழுகு-ஐ படிப்பதைத் தொடரவும்.
போலி மோதல் கொலைகள் மற்றும் குஜராத், மோடி
மீண்டும் குஜராத் போலி மோதல் கொலைகள் இந்திய ஊடகங்களில் வலம் வருகிறது. ஒரு அலையைப் போல் சில நாட்கள் பேசப்படுவதும், அடங்கிவிடுவதும் பின் வேறொரு நாளில் மீண்டும் எழுவதும் என இதன் ஏற்றவற்றங்களினால் பெறப்படவேண்டிய உண்மை ஆழ்கடலில் மூழ்கிப் போயுள்ளது. தேர்தல் லாபத்திற்காக நடத்தப்பட்ட கொலைகள் என்று காங்கிரசும், நாட்டில் ஆயிரக்கணக்கில் போலி மோதல் கொலைகள் நடந்திருக்கும் போது குஜராத்தை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? என்று பாஜக வும் மெய்யான அதன் கிடக்கையை பேசுபொருளாக்குவதில் இருந்து … போலி மோதல் கொலைகள் மற்றும் குஜராத், மோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மோடி விசாரணை: நீதி வென்றுவிட்டதா?
2002ல் குஜராத்தில் நடத்தப்பட்ட கொலைவெறியாட்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் மறந்து போயிருக்காது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத்தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் குஜராத்தில் முஸ்லிம்களை குறிவைத்து அவர்களின் உயிரும் உடைமையும் நாசப்படுத்தப்பட்டன. இதில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த சம்பவத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஷன் ஜாப்ரி உட்பட 69பேர் எரித்து கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி ஜாஹியாவும், மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும் கலவரத்தை தூண்டியதாகவும், கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நின்றதாகவும் மோடி உட்பட 62பேர் … மோடி விசாரணை: நீதி வென்றுவிட்டதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!
சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது … உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.
குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது.
2002ல் குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய இனப்படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. அதை கலவரமாக காட்ட முயன்று வைக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணை கமிசன்களை கடந்து மீண்டும் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு குஜராத் மாநில குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானிக்கும், விஹெச்பி தலைவர் ஜெயதீப் பட்டேலுக்கும் (மட்டுமா?) தொடர்பு உள்ளதாகவும் விசாரணைக்கு வர மறுப்பதற்காக தலைமறைவுக்குற்றவாளிகள் எனவும் அறிவித்துள்ளது. நாட்டில் நடந்த பல்வேறு திட்டமிட்ட கலவரங்களுக்கு மத்தியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது வேறுபடுத்திக்காட்டப்பட்டது. … குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது.-ஐ படிப்பதைத் தொடரவும்.