இந்த தலைப்பைப் பார்த்ததும், குடியரசு தினத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்றொரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அது அரசியல் நிலைப்பாடு சார்ந்தது. பன்னாட்டு ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டாய ஒப்பத்தங்களுக்கு ஏற்பவும், உள்நாட்டு தரகு முதலாளிகள் அல்லது வளர்ந்து வரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் வாய்ப்புகளுக்கு ஏற்பவும் மனப்பூர்வமாக உழைக்கும் ஒரு அரசை, இறையாண்மையுள்ள குடியரசு என்று ஏற்க முடியாது. அது ஒருபுறம் இருக்கட்டும். இது மாநில அரசுகளின் உரிமை சார்ந்தது. ஒன்றிய அரசின் அத்துமீறல் சார்ந்தது. எதிர்வரும் ஜனவரி … குடியரசு தினத்தை புறக்கணிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: குடியரசு தினம்
குடியரசு .. .. .. (!)
நீதிமன்றம் அனுமதி தந்த போராட்டம் என்றாலும் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) போராடும் விவசாயிகளை அடித்துத் துவைப்பது எங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) கண்டெய்னரை வைத்துக் கூட நாங்கள் தடுப்போம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) நடப்பவர்களின் மாடிப்பாதையில் நின்று கண்ணீர்புகை குண்டுகளை வீசுவோம். ஏனென்றால் நாங்கள் குடியரசு .. .. .. (!) போராட்டத்தை தடுக்க … குடியரசு .. .. .. (!)-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடியரசு தினமாம்
இன்று 71 வது குடியரசு தினம் நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். உற்சாகமாக யாரும் கொண்டாடுகிறார்களா? என்று கொண்டாடிக் கொண்டிருப்பவர்களைக் கேட்டால் தான் தெரியும். இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்களில் பெரும்பான்மையோர், ‘ஞாயிற்றுக் கிழமையில் வந்து விட்டதே, ஒரு நாள் விடுப்பு போய் விட்டதே’ எனும் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதன் பொருள், ஞாயிற்றுக் கிழமை விடுப்பை விட குடியரசு தினம் ஒன்றும் அவ்வளவு இன்றியமையாதது அல்ல என்பது தான். இதை அவர்கள் நேர்மறையில் பொருள் … குடியரசு தினமாம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை
கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடலின் கைகளில் இன்னும் காயவில்லை மலம் அள்ளிய ஈரம். ஒருமுறை கைதட்டிக் கொள்வோம் ஐந்து செயற்கைக் கோளுடன் வெற்றிரமாக ஏவப்பட்டது ராக்கெட். வெமுலாக்கள் சாதி வெறியால் மரணம் ஆனால் என்ன? தலித்தா இல்லையா ஆய்வு செய்வோம். கொஞ்சம் பாராட்டலாம் ஊனமுற்றோர்க்கு மோடி சக்கர நாற்காலி வழங்கினார். இடுகாட்டுக்கு பாதையில்லை போலீசே பிணம் திருடி புதைத்த கொடூரம். பெருமிதம் கொண்டால் என்ன? பன்னாட்டு தரத்தில் எட்டு வழி வழுக்கும் சாலைகள். … குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெயரில் குடியரசு செயலில் முடியரசு
வரிசையான பண்டிகை கொண்டாட்டங்களுக்கு மத்தியில் இன்னுமொரு பண்டிகையாக வந்திருக்கிறது குடியரசு தினம். ஆனால் ஏனைய பண்டிகைகளை விட இந்த பண்டிகைக்கு அரசு காட்டும் முனைப்பு மக்களிடையே பீதியூட்டுவதாக இருக்கும். தொடர்ந்து அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கான அரசு இது அதை குலைப்பதற்காக தீவிரவாதிகள் முயல்கிறார்கள், அவர்களிடமிருந்து மக்களை பாதுகாக்கவே இத்தகைய கெடுபிடிகள் என்பது வழக்கமாக அரசு கூறும் காரணம். சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களில் 800 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவெங்கும் பாதுகாப்பு … பெயரில் குடியரசு செயலில் முடியரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்
நாளை 61 வது குடியரசு தினமாம். பாதுகாப்பு ஏற்பாடுகள், பய பீதிகள் என கடந்த வாரம் முதலே பரபரப்பு காட்டப்படுகிறது. ஒரு கொண்டாட்ட மனோநிலைக்கு மக்கள் ஆயத்தப்படுத்தப்படுகிறார்கள். கொண்டாட்டங்களை நுகர்வைக்கொண்டே அளக்கமுடியும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் விழாக்கால தள்ளுபடியை குடியரசு தினத்திற்கும் நீட்டுகின்றன. தொலைக்காட்சி நிறுவனங்கள் 'தேசபக்த' நடிகைகளை "வந்தே மாட்றோம்" என்று கூறவைத்து நம்மை கொண்டாட தூண்டுகின்றன. இதையே இன்னும் விரிவான அளவில் யாராவது வெளிநாட்டு தலைவர்களை அழைத்துவந்து இராணுவ தளவாடங்களை ஓடவிட்டுக் காட்டி … கொடியேற்று, கொண்டாடு. குடியரசு தினம்-ஐ படிப்பதைத் தொடரவும்.