குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 18 கிரேக்க இனக்குழுக்களின், சிறு மக்களினங்களின் அதிகார அமைப்பு பின்வருமாறு: 1. நிரந்தரமான அதிகாரத்தைக் கொண்டது கவுன்சில் (bule). ஆதியில் அது அநேகமாக குலத் தலைவர்களைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும்; பின்னர் அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து விட்டபடியால் அவர்கள் பொறுக்கப்பட்டார்கள். இது பிரபுத்துவ அம்சத்தை வளர்க்கவும் பலப்படுத்தவும் ஒரு வாய்ப்பை உருவாக்கியது. வீர யுகத்தைச் சேர்ந்த கவுன்சில் பிரபுக்களை (kratistoi) கொண்டு அமைக்கப்பட்டிருந்தது என்று டியொனீசியஸ் திட்டமாகக் கூறுகிறார். … கிரேக்க குலம் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: குடும்ப உறவு
கிரேக்க குலம் 1
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 16 கிரேக்கர்களும் பெலாஸ்கியர்களும் அதே மூல இனக்குழுவிலிருந்து தோன்றிய மற்ற மக்களினங்களும் அமெரிக்கர்களைப் போலவே ஏடறியா வரலாற்றுக் காலத்திலிருந்தே குலம், பிராட்ரி, இனக்குழு, இனக்குழுக்களின் கூட்டு என்ற அதே அங்ககமான தொடர்வரிசை முறையைக் கொண்டிருந்தார்கள். பிராட்ரி இல்லாமற் போய் விடலாம்; உதாரணமாக, டோரியர்களிடையே அது இல்லை. இனக்குழுக்களின் கூட்டு எங்குமே இன்னும் முழு வளர்ச்சி பெறாதிருக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் குலம் அடிப்படை அலகாக இருந்தது. கிரேக்கர்கள் வரலாற்றில் … கிரேக்க குலம் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
இராகோஸ் குலம்
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 15 இப்பொழுது மார்கனுடைய மற்றொரு கண்டுபிடிப்புக்கு வருகிறோம். குறைந்தபட்சமாகச் சொல்வதென்றால், இரத்த உறவுமுறைகளிலிருந்து குடும்பத்தின் புராதன வடிவத்தைப் புனரமைத்ததைப் போன்ற முக்கியத்துவத்தைப் பெற்றது இது. அமெரிக்க செவ்விந்திய இனக்குழுவுக்குள் உள்ள குலக் குழுக்கள் – இவை மிருகங்களின் பெயர்களைக் கொண்டிருந்தன – கிரேக்கர்களின் genea உடனும் ரோமானியர்களின் gentes உடனும் ஒன்றானவை. இவற்றில் அமெரிக்க வடிவமே குலத்துக்குரிய ஆதி வடிவம்; கிரேக்க, ரோமானிய வடிவங்கள் பிற்காலத்தில் அதிலிருந்து தோன்றியவையே; … இராகோஸ் குலம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் 9
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 14 குட்ரூன் [13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மானிய மகாகாவியம்] நூலிலும் இதேதான் நடக்கிறது. அதில் அயர்லாந்தின் ஸிகெ பாண்ட் நார்வே நட்டைச் சேர்ந்த உட்டேயை மணக்கவும், ஹெகெலிங்கன் நாட்டைச் சேர்ந்த ஹெடல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹீல்தேயை மணக்கவும் முயல்கிறார்கள். கடைசியாக, மோர்லாந்து நாட்டு ஸிக்ஃபிரிடும் ஓர்மனியின் ஹார்ட்முதும் ஸீலாந்தின் ஹெர்விக்கும் குட்ரூனை மணக்க முயல்கின்றனர். இங்கேதான் முதல்தடவையாக, குட்ரூன் தன் சுயவிருப்பப்படி கடைசியாக சொல்லப்பட்ட நபரை … குடும்பம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் 8
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 13 சட்டங்கள் இயற்றுதல் முன்னேறுகின்ற பொழுது பெண் புகார் செய்வதற்குரிய எல்லாக் காரணங்களும் மேன்மேலும் நீக்கப்படுகின்றன என்று நமது சட்டவியல் நிபுனர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். நவீன கால நாகரீக சட்ட அமைப்புகள் இரண்டு விஷயங்களை மேன்மேலும் அங்கீகரிக்கின்றன; முதலாவதாக, திருமணம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது இரு தரப்பினரும் விருப்ப பூர்வமாகச் செய்து கொண்ட ஒப்பந்தமாக இருக்க வேண்டும்; இரண்டாவதாக, மண வாழ்க்கையில் உரிமைகள், கடைமைகள் விஷயத்தில் இரு … குடும்பம் 8-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் 7
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 12 குழந்தைகளுடைய உண்மையான தந்தை யார் என்பது முன்பு போலவே இப்பொழுதும், அதிகபட்சமாகப் பார்த்தால், ஒரு தார்மீக நம்பிக்கையை ஆதாரமாக்க் கொண்டிருக்கின்ற விஷயமாகி விட்டது. தீர்வு காண முடியாத இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக Code Napoleon இன் 312வது ஷரத்து பின்வருமாறு உத்தரவிட்டது: ”மண வாழ்க்கையில் கருவுற்ற குழந்தைகளுக்குக் கணவனே தந்தை ஆவார்”. மூவாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்ற ஒருதார மணத்தின் இறுதி விளைவு இதுதான். ஆக, தனிப்பட்ட … குடும்பம் 7-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் 5
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 10 இந்தப் புதிய செல்வம் யாருடைய உடைமையாக இருந்தது? சந்தேகமின்றி, ஆரம்பத்தில் அது குலத்தின் உடைமையாக இருந்த்து. ஆனால் மந்தைகளின் மீது தனியுடைமை என்பது மிகவும் ஆரம்பக் கட்ட்த்திலேயே வளர்ந்திருக்க வேண்டும். மோஸசின் முதல் நூல் என்று கூறப்படுகின்ற புத்தகத்தில் தந்தை ஆப்ரஹாம் ஒரு குடும்பச் சமூகத்தின் தலைவர் என்ற முறையில் கால்நடை மந்தைக்கு உடைமையாளராக இருந்தாரா அல்லது ஒரு குலத்தின் உண்மையான பரம்பரைத் தலைவர் என்ற அந்தஸ்தினால் … குடும்பம் 5-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் 4
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 9 3.இணைக் குடும்பம். குழு மணத்தின் போதோ அல்லது அதற்கு முன்னரோ நீண்ட காலத்துக்கோ, குறுகிய காலத்துக்கோ ஒரு வகையான இணை வாழ்க்கை இருந்தது. ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக (அவனுக்கு மிகப் பிடித்தமான மனைவி என்று அவளைக் கூறுவதற்கு அநேகமாக இடமில்லை) இருந்தாள். அதே போல், அவளுடையா பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருந்தான். இந்த நிலைமை கிறிஸ்துவ … குடும்பம் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் – 2
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 7 மனிதச் சமூகங்களைப் பற்றி முடிவுகள் எடுப்பதில் மிருகச் சமூகங்களுக்கும் சிறிதளவு மதிப்பு இருக்கிறது, ஆனால் அது எதிர்மறைப் பொருளில் இருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. நாம் தெரிந்து கொண்டுள்ள வரைக்கும் முதுகெலும்புள்ள மிருக இனத்தைச் சேர்ந்த உயர்தரப் பிராணிகளிடையே பலதார மணம், இணை மணம் ஆகிய இரண்டு குடும்ப வடிவங்கள் மட்டுமே இருந்து வருகின்றன. இவ்விரண்டு வடிவங்களிலும் ஒரே வயது வந்த ஆண்தான், ஒரே கணவர் தான் … குடும்பம் – 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம்
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் - பகுதி 6 மார்கன் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை இராகோஸ் மக்கள் மத்தியில் கழித்தார். அவர்கள் நியூயார்க் மாநிலத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் (செனீகா என்ற) ஒரு இனக் குழுவினர் அவரைச் சுவீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே இருந்த இரத்த உறவுமுறை அவர்களுடைய மெய்யான குடும்ப உறவுமுறைக்கு முரண்பட்டிருந்தது என்பதை அவர் கண்டார். திருமணம் ஒவ்வொரு ஜோடிக்கிடையே நடைபெற்றது. இரு தரப்பினரும் திருமண உறவைச் சுலபமாக ரத்து செய்து … குடும்பம்-ஐ படிப்பதைத் தொடரவும்.