அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு … இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: குர் ஆன்
இஸ்லாம்: விவாத நேர்மை
விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.
தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே .. பகுதி 52 தனக்குத் தானே முரண்படுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு அளவுகளில் ஏற்படுவது தான். கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்டான் அடிமை காலத்தில் வாழ்ந்த ஒரு முகம்மது இதற்கு விதிவிலக்காகிவிட முடியாது. ஆனால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனித இனம் நீடித்தாலும் அத்தனை கோடி ஆண்டுகளுக்கும் சேர்த்து மனிதனுக்கு இருக்கும் ஒரே முன்மாதிரி என்று கருதப்படும் குறிப்பிட்ட அந்த “முகம்மது” முரண்படலாமா? அதுவும் தான் மிகுந்த … தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகம்மது நல்லவரா? கெட்டவரா?
இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 51 அல்லாவின் தூதர்களில் இறுதியானவர் என்று கூறப்படும் முகம்மது எனும் தனி மனிதரின் குணநலன்கள் அவர் கூறிய கொள்கை குறித்தான சீர்தூக்கலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் கொண்டிருக்கும் கொள்கை நிலைப்பாடு என்பது அவர் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பொருத்தது. அதேநேரம் அதுகாறும் இல்லாத புதிய கொள்கை வடிவமைப்பை ஒருவர் செய்யும் போது அவரின் தனி மனித ஆளுமையும் அதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இஸ்லாம் எனும் மதத்தை … முகம்மது நல்லவரா? கெட்டவரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?
முகம்மது மதீனாவின் மன்னராக தம்மை முடிசூட்டிக் கொண்ட பிறகிலிருந்து மரணிக்கும் வரையிலான பத்து ஆண்டுகளில் தோராயமாக பத்தொன்பது போர்களை நடத்தியிருக்கிறார். முகம்மதின் சமகாலத்தில் உலகின் பிற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட போர்களோடு ஒப்பிட்டால் முகம்மது நடத்தியது போர்களல்ல, குழுச் சண்டைகள். ஆனாலும் ஒரு நிலப்பகுதியின் மன்னர் எனும் ஹோதாவில் நடத்தப்பட்டதால் அவைகள் போர்களாகவே குறிப்பிடப்படுகின்றன. போர்களோ, குழுச் சண்டைகளோ அவைகளின் நோக்கம் என்னவாக இருந்தது? அவை அரசியலை முன்னெடுத்து நடத்தப்பட்டவைகளா? அல்லது ஆன்மீகத்தை முன்வைத்து நடத்தப்பட்டவைகளா? என்பதே இன்றியமையாத … முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 23 சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: குகைவாசிகளும் குழப்பும் செங்கொடியும் எத்தனை தெளிவாக இருந்தாலும் குழப்பம் இருப்பதாய் கற்பித்துக் கொண்டால் தான் மதவாதம் நீடிக்க முடியும். இதற்கு தெளிவான சான்றாய் இருப்பது தான் நண்பர் இஹ்சாஸின் பதிவு. முதலில் குறிப்பிட்ட கட்டுரையில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம். குரானை மெய்ப்படுத்தும் திட ஆதாரங்களில் ஒன்றான ‘சாக்கடல் சாசனச் சுருள்கள்’ கிருஸ்தவர்களால் மறைக்கப்படுவது … குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2
முகம்மது தன்னுடைய தேவைகளுக்காக அவ்வப்போது மாற்றியும் திருத்தியும் தான் குரானை வடிவமைத்திருக்கிறார் என்பதற்கான ஒரு சோற்றுப் பதமாக சாத்தானிய வசனங்கள் இருக்கின்றன. ஆனால் மதவாதிகள் சாத்தானிய வசங்கள் என்று கருதப்படுவதற்கு ஏற்கனவே மறுப்பளித்திருக்கிறார்கள். அதாவது, அவை திருத்தப்படவில்லை. இப்போதிருந்ததைப் போலவே தான் முதலிலும் வசனங்கள் இருந்தன என்று விளக்கமளிக்கிறார்கள். முதலில் குரான் குறித்த அடிப்படைத் தகவல் ஒன்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அல்லாவிடம் தாய் ஏடு என்று ஒன்று இருக்கிறது. அதிலுள்ள விபரங்களைத்தான் தேவைக்கேற்ப … முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 22 நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: நூஹின் கப்பல்: புரானக்கதயல்ல! உண்மைக்கதை! நூஹின் கப்பல் புராணக் குப்பைதான் என்பதற்கு அந்தப் பதிவில் சில அம்சங்களைக் குறிப்பிட்டிருந்தேன். நங்கூரமாக காட்டப்படும் கல் குறித்த ஐயம், கப்பலின் அளவுகள் குறித்த ஐயம், ஆய்வாளர்களின் முடிவுகள், உலகம் முழுமைக்குமாக ஒரு ஊழிப் பெருவெள்ளம் உலகில் ஏற்பட்டதா எனும் ஐயம் போன்றவை. நூஹின் கப்பல் உண்ண்ண்ண்ண்ண்மைதான் என அழுத்தமாக கூற விரும்பும் நண்பர் இஹ்சாஸ் … நூஹின் கப்பல்: உண்மையல்ல புராணக் குப்பையே-ஐ படிப்பதைத் தொடரவும்.
முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1
சல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில் வைத்திருக்க முடிந்திருக்கிறதென்றால் அதற்கு “சத்தானிக் வெர்ஸஸ்” எனும் நூலே காரணம். அதற்காகவே ஈரானின் கொமேனியால் மரண தண்டனை விதிக்கப்பட்டு இன்றுவரை அரசுகளின் தயவிலும், வெளிப்படையாக உலவ முடியாமலும் இருந்து வருகிறார். அப்படி என்ன தான் எழுதிவிட்டார் அவர் அந்த நூலில்? இந்தியா உட்பட பல நாடுகள் அந்நூலுக்கு தடை விதித்திருப்பதால் … முகம்மது சொல்லிய சாத்தானின் வசனங்கள் 1-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21
பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை (https://senkodi.wordpress.com/2010/03/26/fir-awn/) எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: பிர் அவ்னும் பிதற்றும் செங்கொடியும் (http://ihsasonline.wordpress.com/2012/10/09/firawn_and_senkodi/) நான் பிதற்றியிருப்பதாக கூறியிருக்கும் நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய பதிவில் பிதற்றாமல் கூறியிருப்பது என்ன? இதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், பிர் அவ்னின் உடல் குறித்து நான் என்னுடைய கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்விகளை தெரிந்து கொள்வது அவசியம். 1) பிர் அவ்ன் என்பது தனியாக எந்த மன்னனையும் குறிக்காது. சோழ மன்னன் பாண்டிய மன்னன் என்பதுபோல் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21-ஐ படிப்பதைத் தொடரவும்.