கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்

  அமெரிக்கவின் மூன்று மைல் தீவு, ரஷ்யாவின் சொர்னோபில், ஜப்பானின் புக்குஷிமா போன்ற விபத்துகள் அணு உலைகளின் கொடூர முகத்தை வெளிக்காட்டியதுடன் அணு உலைக்கு அதிராக போராடும் உத்வேகத்தையும் மக்களுக்கு தந்திருக்கிறது. அந்த அடிப்படையில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இடிந்தகரையில் ஓர் ஆண்டுக்கும் மேலாக வெகுமக்கள் திரண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டங்களை மத்திய மாநில அரசுகள் மயிரளவுக்கும் கூட மதிக்க மறுக்கின்றன. மறுபுறம் இணைய அறிவுஜீவிகள் தங்கள் மேதமையால் நாராயணசாமிகளாய் மாறிக் … கூடங்குளம் போராட்டம்: மயிலைக் கண்ட சில வான்கோழிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?

சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டு கொரில்லாக்களால் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களிடம் ஆத்திரத்தையும் வெறியையும் கிளப்பியிருக்கிறது. “அரசாங்கம் இனிமேலாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ளவேண்டும்” என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நரைத்த மீசைகளின் ஊடாக ஆங்கில சானல்களில் உருமுகிறார்கள். “தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையென்று மாவோயிஸ்டுகள் நிரூபித்துவிட்டதால், எதிரி நாட்டுப் படையாகக் கருதி மாவோயிஸ்டுகளை ஒடுக்கவேண்டும்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது தினமணி. இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருப்பதன் மூலம், உன்னதமான … மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த மே 1 உழைப்பாளர் தினத்திலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்றிலிருந்து ஐநூறு பெண்களையும் உள்ளடக்கி நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. மக்கள் எந்த சஞ்சலமும் அற்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். போராடும் மக்கள் மீது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, ராஜதுரோகம் செய்தது போன்ற கருப்புச் சட்டங்களை வீசி மிரட்டிப் பார்த்தது அரசு; ஐநூறு கோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று எலும்புத் … இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு

கடந்த ஏழு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.  இதில் அந்த பகுதிக்கு வெளியில் உள்ள மக்களில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம். கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் அணு உலை அமைவதை தீரத்துடன் எதிர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. 200 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. … கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்

  சென்னையில் இரண்டு மணிநேரமும் சங்கரன் கோவில் நீங்கலாக ஏனைய பகுதிகளில் எட்டு முதல் பத்து மணி நேரமும் மின்வெட்டு அமல்படுத்தப் படுகிறது.  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின்வெட்டை வெட்டிவிடுவோம் என்று அம்மா கூறியதன் பொருள் என்னவென்பது இப்போது தான் மக்களுக்கு விளங்குகிறது. கடந்த ஆட்சியில் மின்வெட்டு அமைச்சராக ஆர்காடு வீராசாமி புகழப்பட்டார், இப்போது நத்தம் விஸ்வநாதன். யார் மாறினாலும், யார் ஆண்டாலும் மின்வெட்டு மட்டும் மாறாது ஆளும் என்பது வெளிப்படையாகி இருக்கிறது. ஆனால் … மின்வெட்டு: இருட்டும் வெளிச்சமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்

அன்பார்ந்த பொது மக்களே, தமிழகத்தின் கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கன்யாகுமரி மாவட்டம் இடிந்த கரையில் நடத்திவரும் உறுதியான தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜப்பானின் புகுசிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் உணவு, குடிநீர், பால், காற்று, கடல்நீர் விசமாகி 2 லட்சம் மக்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். கதிர்வீச்சு தொடர்ந்து நீடித்து வருகிறது. புகுசிமா அணு உலை விபத்து ஏற்படுத்திய விழிப்புணர்வு, உலகம் முழுவதும் அணு … பன்னாட்டு முதலாளிகளின் லாபவெறிக்கான அணு உலைகளை மூடுவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?

கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜெயாவின் வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு வந்திருக்கிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே அரசுசாரா அமைப்புகள் அணு உலைகள் ஆபத்தானவை என்று கூடங்குளம் பகுதிகளில் மக்களிடையே செயல்பட்டு வந்திருக்கின்றன.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அதனைத் தொடந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதும் அந்த மக்களிடையே மிகுந்த பய உணர்வை தோற்றுவித்தது.  அதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் இங்கும் நடந்தால் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குக் கூட … கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.