டி.என்.டி.ஜே வுக்கு தெரியுமா மாப்ளா கிளர்ச்சியின் வாசம்

300px-South_Malabar_1921

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 10

உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பத்தாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  10.1, 10.2

இந்தத் தொடரின் கடந்த பகுதியை இப்படி முடிக்க்கப்பட்டிருந்தது, \\\மார்க்ஸ் ஒரு யூதக் கைக்கூலி என்பதற்கு அல்லது இஸ்லாம் ஆறாம் நூற்றாண்டிலேயே நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்பதற்கு 630ல் நடந்த கேரள இஸ்லாமிய எழுச்சியில் என்ன ஆதாரம் இருக்கிறது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்/// அதாவது, ஆறாம் நூற்றாண்டில் அல்லது ஏழாம் நூற்றாண்டிலேயே இஸ்லாம் அடிமைமுறையையும், நிலப்பிரபுத்துவ முறையையும் ஒழித்து விட்டது. ஆனால், கார்ல் மார்க்ஸ் இதை மறைத்து 17,18 ம் நூற்றாண்டுகளில் தான் உலகில் நிலப்பிரபுத்துவ முறை ஒழிந்தது என்று பொய் சொல்கிறார். இஸ்லாமிய எழுச்சியை மறைத்து, பின்னாளில் தான் உலகில் நிலப்பிரபுத்துவ முறை ஒழிந்தது என்று கூறியதன் மூலம் மார்க்ஸ் யூதக் கைக்கூலியாகி விட்டார். இதற்கான ஆதாரம் கேரளாவில் கி.பி. 630 ல் நடந்த இஸ்லாமிய எழுச்சியில் இருக்கிறது. அது அடுத்த பகுதியில் வெளிவரும் என்பது ‘உணர்வு’ கும்பலின் அந்தத் தொடரின் ஒன்பதாவது பகுதியின் கடைசியில் கூறப்பட்டிருந்தது.

அப்படியானால், பத்தாவது பகுதியில் அந்த ஆதாரத்தை வெளியிட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் பத்தாவது பகுதியில் இல்லை. அதற்குப் பதிலாக 1800களில் நடந்த மாப்ளா கிளர்ச்சியைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். கூடவே, இஸ்ரேல் உருவாக்கம் குறித்தும் எழுதியிருக்கிறார்கள். அதிலும் மார்க்ஸ் யூதக் கைக்கூலி எனும் ஒப்பாரி. சரி, அதற்காவது ஆதாரம் கொடுத்திருக்கிறார்களா? என்றால், அதை அடுத்த பகுதியில் எழுதுவார்களாம். எருமை ஏரோப்பிளேன் ஓட்டுவது குறித்து வேடிக்கையாய் சிலர் கூறுவார்கள். அதற்கு நடைமுறை எடுத்துக்காட்டு ‘உணர்வு’ கும்பல் தான்.

கி.பி. 630 ல் கேரளாவில் இஸ்லாம் பரவியது என்பது எந்த ஆதாரமும் இல்லாத கட்டுக்கதை என்பது ஏற்கனவே நிருவப்பட்டிருக்கிறது. அதுபோலவே இஸ்லாம் அடிமை முறையை ஒழித்தது, நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்தது என்பதையும் பொய் என நிரூபித்திருக்கிறோம். இஸ்லாம் அடிமைமுறை, நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்தது என்பது பொய் என்பதை இன்னொரு கோணத்திலும் விளக்கலாம். அதற்கு குரானிலிருந்தே ஆதாரம் காட்ட முடியும். ஆகவே, அதை கவனித்து விட்டு பின்னர் மாப்ளா கிளர்ச்சி குறித்த ‘உணர்வு’ கும்பலின் அயோக்கியத்தனத்தை பார்க்கலாம்.

தமிழக முஸ்லீம்களைப் பொருத்தவரை, குறிப்பாக டி.என்.டி.ஜே வினரைப் பொருத்தவரை, எப்படி சிறுநீர் கழைக்க வேண்டும் என்பதற்குக் கூட இஸ்லாத்தில் வழிகாட்டுதல் இருக்கிறது என பெருமைப்பட்டுக் கொள்வார்கள். எந்த ஒன்றை செய்வதாக இருந்தாலும் அது குரானில் இருக்கிறதா? நபி வழியில் இருக்கிறதா? என ஆராய்ந்து விட்டே செய்வதாக பீற்றிக் கொள்வார்கள். அப்படிப்பட்ட அவர்கள் குரானில் தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒன்றை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள். டி.என்.டி.ஜே வின் அடி முதல் முடி வரை எவரும், ஒற்றை ஒருவர் கூட நடைமுறைப்படுத்தாத குரானின் கட்டளை ஒன்று இருக்கிறது என்றால் அது சொத்துகளை எப்படி பிரிக்க வேண்டும் என்பது குறித்த அல்லாவின் கட்டளை தான். ஏன் குரானின் கட்டளையை – குரானே எல்லாமும், அல்லாவின் கட்டளையே எக்காலத்துக்கும் பொருந்தும் என நீட்டி முழக்குபவர்களால் – பின்பற்ற முடியவில்லை? என்றால் குரான் குறிப்பிட்டிருக்கும் சொத்துடமை வடிவம் வேறு, நடப்பில் இருக்கும் சொத்துடமை வடிவம் வேறு.

இதுவரை உலகம் ஐந்து விதமான உற்பத்தி முறையை கண்டிருக்கிறது. புராதன பொதுவுடமை உற்பத்தி முறை, ஆண்டான் அடிமை உற்பத்தி முறை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை, சோசலிச உற்பத்தி முறை. ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் ஒவ்வொரு சொத்துடமை வடிவம் இருக்கும். ஒரு உற்பத்தி முறையின் சொத்துடமை வடிவம் இன்னொரு உற்பத்தி முறையின் சொத்துடமை வடிவத்துக்கு பொருந்தாது, மாற்றம் கண்டே ஆக வேண்டும். இந்த வகையில் குரான் குறிப்பிடும் சொத்துடமை வடிவம் என்பது ஆரம்ப கட்ட ஆண்டான் அடிமை உற்பத்தி முறையின் சொத்துடமை வடிவம். தெளிவாகச் சொன்னால் புராதன பொதுவுடமை சமுதாயம் என்பது சொத்துடமை இல்லாத சமுதாயம். அதாவது இருக்கும் எல்லாமும் எல்லாருக்கும் பொதுவானது. இது என்னுடையது, அது உன்னுடையது எனும் சிந்தனை முறையே அந்த காலகட்டத்தில் இல்லை. காரணம் சொத்து என்றால் என்னவென்றே அன்றைய மனிதனுக்கு தெரியாது. தெரிந்து கொள்ளும் தேவையும் அன்றைய சமூகத்தில் இல்லை. புராதன பொதுவுடமை சமுதாயத்தின் கடைசிக் காலகட்டத்தில் தான் தனிச் சொத்து முறையே தோன்றுகிறது. முகம்மது வாழ்ந்த காலம் அரேபியாவின் ஆண்டான் அடிமை காலகட்டத்தின் தொடக்க காலம். நில உற்பத்தியோ வேறு உற்பத்திகளோ பெருமளவில் இல்லாத பெரும்பாலை நிலப்பரப்பான அரேபிய பகுதியில் பெரும்பான்மை மக்களாக இருந்தது நாடோடிகள் அதாவது பதூ, பதவி என்று அழைக்கப்பட்ட பாலைவன உட்பகுதிகளில் வாழ்ந்த நாடோடிகள். ஆதிக்கம் செலுத்தியது மக்கா போன்ற பகுதிகளில் வாழ்ந்த பண்டமாற்று வணிகர்கள். இவர்களை இணைக்கும் விதமாகத்தான் குரான் குறிப்பிடும் சொத்துடமை வடிவம் என்பது பொதுவுடமை வடிவமும் விட்டுப் போகாத, தனிச் சொத்து வகைப்பட்டதான வடிவமாக சொந்தக்காரர்கள் அனைவரும்க்கும் பகிர்ந்து கொடுக்கும் படியான வடிவத்தை குரான் முன்னிருத்துகிறது.

குரான் சொத்துகளை எப்படி பிரிக்க வேண்டும் எனக் குறிப்பிடும் வசனங்களைப் படித்துப் பாருங்கள் மேற்கண்ட இந்த அம்சம் விளங்கும். ஆனால் இன்றைய நிலை என்ன? இந்தியாவைப் பொருத்தவரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை இன்னும் முழுமையாக அழிந்து போகாத நிலையில் இருக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறை காலகட்டம். இதில் சொந்தம் முழுமைக்கும் அல்ல தன்னுடைய இரத்த வாரிசுக்கு மட்டுமே தன்னுடைய சொத்து செல்ல வேண்டும் எனும் காலகட்டம். இது தான் குரானுக்கும் இன்றைய முஸ்லீம்களுக்குமான முரண்பாடு. அதனால் தான் முகம்மது பிடித்து சிறுநீர் கழித்துக் காட்டியபடி தான் நாங்களும் பிடித்து சிறுநீர் கழிப்போம் என்று கூறுபவர்கள் கூட, முகம்மது பிரித்துக் காட்டியபடி சொத்துக்களை பிரிக்க முடியாமல் தவிர்த்து விடுகிறார்கள்.

டி.என்.டி.ஜே உட்பட அனைத்து இஸ்லாமிய குழுக்களும் கூறுவது என்ன? குரானின் போதனைகள் எல்லாக் காலத்துக்கும் பொருந்துபவை. எல்லாக் காலத்திலும் அதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். அதன் பொருள் என்ன? ஆண்டான் அடிமைக் காலகட்டம் தான் நிலவில் இருக்க வேண்டும், அது மாறாமல் என்றென்றைக்கும் நிலைக்க வேண்டும் என்பது தானே. அப்படியென்றால் இஸ்லாம் அடிமை முறையை ஒழித்து விட்டது, நிலப்பிரபுத்துவ முறையை ஒழித்து விட்டது என்று கூறுவது அப்பட்டமான பொய் தானே. குரான் என்ன கூறியிருக்கிறது? அதன் பொருள் என்ன? அதன் அடிப்படை என்ன? என்பது தெரியாமல் தான் சகோ(!) பாசில் இதை எழுதுகிறாரா? இது தெரியாமல் தான் டி.என்.டி.ஜே வும் அதன் உலகமகா அறிஞர் ஒப்புதலுடன் தன் ‘உணர்வு’ வார இதழில் வெளியிடுகிறதா?

இனி ‘உணர்வு’ கும்பல் குறிப்பிடும் 630ல் நடந்த இஸ்லாமிய எழுச்சிக்கு வருவோம். 630ல் இந்தியாவில் இஸ்லாம் பரவவில்லை. பரவியதாக கூறப்படுவது கட்டுக்கதை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 630ல் ஏதோ ஒரு எழுச்சி நடந்திருந்து அதை சுட்டிக் காட்டினால் கூட 630ல் இங்கு இஸ்லாம் பரவியிருந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டு விடும். ஆனால் ‘உணர்வு’ கும்பல் என்ன சொல்லியிருக்கிறது? 630ல் நடந்த இஸ்லாமிய எழுச்சி என்று கூறிவிட்டு 1800 களில் நடந்த மாப்ளா எழுச்சியைப் பற்றி குறிப்பிடுகிறது. மாப்ளா எழுச்சி குறித்து ‘உணர்வு’ கும்பல் குறிப்பிடுவது என்ன? 630ல் கேரளாவில் இஸ்லாம் வேகமாக பரவியது. அந்த நேரத்தில் அங்கிருந்த பிராமண ஜென்மிகள் கொடூரமான தீண்டாமைக் கொடுமையை நடத்தினார்கள். பார்த்தால் குற்றம் நடந்தால் குற்றம் என கொடுமைகளுக்கு மத்தியில் ஆண்டாண்டு காலமாக பிராமணர்களுக்கும், நம்பூதிரிகளுக்கும், நாயர்களுக்கும், மேனன்களுக்கும் அடிமைகளாக வாழ்ந்து வந்தார்கள். இந்த காலகட்டத்தில் இஸ்லாம் பரவியதன் மூலம் குரானின் எந்த மனிதனும் இன்னொரு மனிதனுக்கு அடிமையில்லை அவனே உங்களை வாழவைத்தான் போன்ற வசனங்களில் கூறப்பட்டிருப்பதைக் கேட்டு இஸ்லாத்துக்கு மாறி அதுவரை அடிமையாய் இருந்தவர்கள் ஒருதாய் மக்களாக ஒன்றுபட்டனர். இதுவரை அடிமைகளாக இருந்து சேவகம் செய்தவர்கள் இன்று நம்மை எதிர்த்து நிற்கிறார்களே, அவர்களைத் தண்டித்தால் அனைத்து முஸ்லீம்களும் ஒன்று திரள்கிறார்களே என்று நம்பூதிரிகள் உள்ளிட்டவர்கள் திகைத்து நின்றார்களாம். இஸ்லாமியர்களுக்கு நம்பூதிரி உள்ளிட்ட பிராமணர்களுக்கும் இருந்த பகை தான் 1836 ல் மாப்ளா எழுச்சியாக மாறியது. இது தான் ‘உணர்வு’ கும்பல் கூறியிருப்பதன் சுருக்கம். மாப்ளா எழுச்சியில் எண்ணற்ற முஸ்லீம்கள் தங்கள் போராட்டங்களின் மூலம் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒருசேர கொச்சைப்படுத்துகிறது ‘உணர்வு’ கும்பல். இதைவிட அவர்களை வேறு எவரும் கேவலப்படுத்திவிட முடியாது.

முதலாவதாக, தீண்டாமை என்பது தனிமனிதக் குற்றமல்ல, அது ஒரு சமூகக் கொடுமை. ஒருவன் பிறப்பைச் சொல்லி இழிவுபடுத்தப்படுகிறான் என்றால் அதன் பொருள் அதற்கு ஆட்படுமாறு, ஆதிக்க வெறிக்கு கீழ்படியுமாறு சமூகமே அவனை நிர்ப்பந்திக்கிறது என்பதே. பல ஆயிரம் ஆண்டுகளாக அந்த சமூக அமைப்பை விட்டு வெளியேற முடியாமல் அழுந்திக் கிடக்கும் மக்கள் குரானின் ஓரிரு வசனங்களைக் கேட்டு விட்டு வீறு கொண்டு எழுந்தார்கள் என்று எழுதினால் அதை எப்படி புரிந்து கொள்வது? தீண்டாமை என்றால் என்னவென்றே எழுதியவருக்கு தெரியவில்லை என்று தான் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக, தீண்டாமை என்பதும் அடிமை முறை என்பதும் வேறு வேறு. அடிமை முறையின் எச்சமாக நிலவியது தான் தீண்டாமை. ஒப்பீட்டளவில் தீண்டாமையை விட கொடூரமானது அடிமை முறை. அடிமை முறையை இஸ்லாம் ஒழித்தது என்று கூறிவருவதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவில் தீண்டாமைக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை இஸ்லாம் விடுவித்தது என்று எழுதிக் கொண்டு செல்கிறது ‘உணர்வு’ கும்பல். அப்படி என்றால் ‘உணர்வு’ கும்பலின் கூற்றுப்படியே இந்தியாவில் இஸ்லாம் வருவதற்கு முன்பே அடிமை முறை ஒழிந்து விட்டது. அதனால் தான் இஸ்லாம் தீண்டாமையை ஒழித்ததா? என்ன எழுதுகிறோம் என்று தெரியாமல், எப்படி எழுதுகிறோம் என்று தெரியாமல் கீழ்த்தரமான முறையில் சென்று கொண்டிருக்கிறது ‘உணர்வு’ கும்பல் எழுதும் அந்தத் தொடர். ஏன் ‘கீழ்த்தரமான முறையில்’ என்று குறிப்பிடுகிறேன் என்றால், படிக்கப்போகும் வாசகர்களின் சிந்தனையை தூண்டும் விதமாக எழுதுவது தான் சரியான எழுத்து. மாறாக, படிக்கப் போகும் வாசகர்கள் அடிமுட்டாள்கள், எதை எழுதினாலும் அதை கேள்வியின்றி படித்து ரசிப்பார்கள் என எண்ணி எழுதினால் அதை கீழ்த்தரமான எழுத்து என்று கூறாமல் வேறு என்னவென்று கூறுவது? டி.என்.டி.ஜே விலிருக்கும் சிந்திக்கும் திறனுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

மூன்றாவதாக, 630 லிருந்தே முஸ்லீமாக மாறிய ஒடுக்கப்பட்டவர்கள் ‘உணர்வு’ கும்பல் குறிப்பிடும் இஸ்லாமிய எழுச்சியை நடத்த 1836 வரை காத்திருந்ததேன்? அல்லது 630 க்கும் 1836 க்கும் இடைப்பட்ட காலத்தில் இஸ்லாம் வேலை செய்ய வில்லையா? 630 லிருந்தே ஒடுக்கப்பட்டவர்கள் இஸ்லாமுக்கு வந்து விட்டார்கள் என்றால், 1836 வரை இஸ்லாமியர்களாக இருந்தும் ஏற்படாத எழுச்சி 1836 ல் ஏற்பட்டிருக்கிறது என்றால் 1200 ஆண்டுகளாக இல்லாத ஒன்று 1800 களில் ஏற்பட்டிருக்கிறது என்பது தானே சரியாக இருக்க முடியும்? ஆகவே, 1836ல் நடந்த எழுச்சிக்கு இஸ்லாம் காரணம் அல்ல.

ஆக, தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாமல், வாசகர்கள் குறித்த கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கும் சகோ(!) பாசில் தான் மாப்ளா எழுச்சியைக் குறித்து எழுதியிருக்கிறார். அது சரியான வரலாறாக இருக்க முடியுமா? மாப்ளா எழுச்சி என்பது இந்திய நிலப்பிரபுக்களுக்கு எதிராக, அவர்களை ஆதரிக்கும் வெள்ளை அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ஆயுதம் தாங்கிய எழுச்சி. அது தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடங்கியதல்ல. ஆனால், தன்னுடைய போக்கில் தீண்டாமைக்கு எதிராகவும் போராடியது. இதோ, 1836 முதல் 1921 வரை நடந்த மாப்ளா எழுச்சியின் வரலாறு.

கேரளாவின் மலபார் மாவட்டதில் ஜன்மி எனப்படும் ஜமீந்தார்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. பெரும்பாலான நிலங்கள் ஜமீந்தார்களுக்கு சொந்தமாக இருந்தன. அவைகளில் குத்தகை தாரர்களாக விவசாயிகள் இருந்தனர். ஜமீந்தார்களில் பெரும்பாலானோர் உயர்ஜாதி இந்துக்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும் நம்பூதிரிகள், நாயர்கள். விவசாயிகளில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். அதேநேரம் இஸ்லாமியர்களும் ஜமீந்தார்களாக இருந்தனர். அன்றைக்கு இருந்த 511 ஜமீந்தார்களில் 12 பேர் இஸ்லாமியர்கள்.

விளை நிலங்கள் நீண்டகால குத்தகை, குறுகிய கால குத்தகை என இருவகையாக குத்தகைக்கு விடப்பட்டன. விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விவசாயிக்கு சொந்தம். மீதமுள்ள இரண்டு பங்கில் ஒரு பங்கு ஜமீந்தாருக்கும், இன்னொரு பங்கு வெள்ளை அரசாங்கத்துக்கும் வரியாக செலுத்தப்பட்டது. வரி செலுத்தத தவறினாலோ அல்லது குறைந்தாலோ விவசாயிகள் வலுக்கட்டாயமாக நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்வாறு வரியை குறைத்து கட்டினார்கள் என்று காரணம் காட்டி 1813 ம் ஆண்டு நீதி மன்ற நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே 203 மாப்ளா விவசாயிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் உள்ள கணக்கு, நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு ஜமீந்தார்கள் நேரடியாக மிரட்டி பிடுங்கியது கணக்கில் அடங்காதது. 1813 லிருந்து 1821 க்குள் வரி கட்ட முடியாது, நம் சொத்து பறிபோய்விடும் என அஞ்சி தங்கள் நிலத்தை அடிமாட்டு விலைக்கு விற்றவர்களின் எண்ணிக்கை 1225. இதுவும் அரசாங்கக் கணக்கு மட்டும் தான். 1821ல் மட்டும் மலபார் மாவட்டத்தில் விவசாய வரியின் மூலம் கிடைத்த வருவாய் நாட்டிலேயே அதிக அளவாக 94,749 ரூபாய். ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவு தானே என எண்ணுபவர்கள் அது வசூலிக்கப்பட்ட ஆண்டு 1821 என்பதையும் இணைத்துப் பாருங்கள். அது எவ்வளவு பெரிய தொகை என்பது புரியும்.

இப்படி கொடூரமாக சுரண்டப்பட்ட நிலையில் தான் இதற்கு எதிராக குத்தகை விவசாயிகளான மாப்ளா விவசாயிகள் கொதித் தெழுந்தனர். பொதுவாக 1836 என்று சொல்லப்பட்டாலும், சரியாகச் சொன்னால் 1837 ஏப்ரல் 15ஆம் தேதி எரநாடு தாலுகாவிலுள்ள செங்கர ஜமீன்தாராய் இருந்த ஒரு நம்பூதிரிப் பார்ப்பனரைக் கொன்றதில் இருந்து தொடங்குகிறது மாப்ளா எழுச்சி. பார்ப்பன ஜமீந்தார்களை மட்டுமல்ல, மாப்ளா எழுச்சிக்கு எதிராக சட்டம் போட்ட, மாவட்ட நீதிபதியாக இருந்த ஹெச்.வி கனோல்லி எனும் வெள்ளைக்காரனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இவ்வாறான மோதல்களில் அடையப்போகும் மரணத்தை வீர மரணமாகவும், அவ்வாறு அந்தக் கொடூரர்களை அழித்து விட்டு மாண்டு போனால் அது தம் சொர்க்கத்தை உறுதி செய்யும் என்றும் மாப்ளா முஸ்லிம் விவசாயிகள் நம்பினர். அவ்வாறு முடிவு செய்து மோதலுக்குக் கிளம்பும் முன் தன்னைச் சார்ந்துள்ள மனைவியை மணவிலக்கம் செய்துவிட்டு, யாரைக் கொல்லப் போகிறோம் என்பதையும் பகிரங்கமாக அறிவித்து விட்டு கிளம்பிய அந்த நெஞ்சுறுதி ‘உணர்வு’ கும்பலைப் போன்ற மத வியாபாரிகளுக்கு தெரியாது, புரியவும் போவதில்லை.

தனி மனித அழித்தொழிப்பாக கிளம்பிய மாப்ளா எழுச்சி 1919 க்கு பிறகு வேறு வடிவத்தை எடுத்தது.

வரியங்குன்னத்து குன்ஹாமது ஹாஜி,

காலத்திங்ஙள் முகம்மது,

சித்திகோயா தங்ஙள் 

இம்பிச்சிக்கோயா தங்ஙள்

ஆகியோர் நிலப்பிரபுக்களிடம் இருந்தும், ஆங்கிலேயே அரசிலிருந்தும் விடுவிக்கப்பட்ட சுதந்திர நிலப்பரப்பை ஏற்படுத்தி, அதற்குத் தலைமை ஏற்று கட்டுப்பாடான நிர்வாகத்தை செய்யத் தொடங்கினர். வெள்ளை அரசிடம் இருந்து நாட்டை மீட்டு, மக்கள் அரசை கட்டி எழுப்ப மக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதனுடைய தொடர்ச்சியாகத் தான் கடையநல்லூர், மேலப்பாளையம் போன்ற முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இடங்களில் கேரள தங்கள் வழிபாட்டுமுறை தோன்றி, இன்றும் வழக்கில் இருந்து கொண்டிருக்கிறது. மாப்ளா எழுச்சியை நினைவு கூறும் வடிவம் மாறிய அந்த வழிபாட்டு முறையத் தான் இஸ்லாத்துக்கு விரோதமானது என்று கூறி ‘உணர்வு’ கும்பல் போன்ற இஸ்லாமிய மீட்டுருவாக்க குழுக்கள் துடைத்தழிக்க முயல்கின்றன.

Moplah_prisoners

இதன் பிறகு 1921 ல் வெள்ளை இராணுவம் மலபார் மாவட்ட வீதிகளில் இரத்த ஆற்றை ஓடவிட்டு மாப்ளா எழுச்சியை முடிவுக்கு கொண்டு வருகிறது. மாப்ளா எழுச்சியை புரட்சி எனும் அளவுக்கு உயர்த்த முடியாது என்றாலும், அது பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, ஆதிக்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆயுதம் தாங்கிய விவசாயிகள் போராட்டம். இந்த எழுச்சி மிக்க வீர வரலாற்றைத் தான் ‘உணர்வு’ கும்பல் மதவாத சகதிக்குள் அழுத்தி வைக்க முனைந்திருக்கிறது. என்ன ஒற்றுமை பாருங்கள். மாப்ளா எழுச்சியை ஆர்.எஸ்.எஸ் கும்பலும் அது மதவாத கலகம் என்று மதச்சாயம் பூசி கேவலப்படுத்த முயற்சிக்கிறது, அதே வேலையைத் தான் ‘உணர்வு’ கும்பலும் செய்கிறது. அவர்கள் பார்ப்பன மதத்தின் டி.என்.டி.ஜே என்றால், இவர்கள் இஸ்லாமிய மதத்தின் ஆர்.எஸ்.எஸ். வரலாற்றை திருத்தி தங்கள் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை இருவரும் தங்கள் வழிமுறையாக வைத்திருக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியுமா? முஸ்லீம்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

வெறும் தனிநபர் அழித்தொழிப்பாக இருந்த மாப்ளா எழுச்சி, 1919க்கு பிறகு ஒரு மக்கள் அரசை அமைக்கும் முயற்சியாக உருமாறியது எப்படி எனும் கேள்வி முக்கியமானது. 1917 ல் நடந்த ரஷ்யப் புரட்சி உலகெங்கிலும் பல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியது. பல நாடுகளில் மக்கள் நல அரசுகள் தோன்றின. கம்யூனிச இயக்கத்தை உலகெங்கிலும் பரவச் செய்தது. பலமாக இருந்த முதலாளித்துவ அரசுகள் கூட சீர்திருத்தங்களைச் செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. உலகெங்கிலும் நிகழ்ந்த இந்தப் போக்கு, நவம்பர் புரட்சியின் தாக்கம் மாப்ளா எழுச்சியிலும் இருந்ததா எனும் கேள்விக்கு ஆய்வாளர்கள் விடை காண முயல வேண்டும். என்றாலும் ‘உணர்வு’ கும்பல் மதவாதச் சகதியில் புரட்டியெடுத்து சித்தரிக்கும் மாப்ளா எழுச்சி அடிப்படையற்று கூறுப்படும் பொய் என்பது உறுதி. இதற்கு வரலாற்றின் பக்கங்களில் உறுதியான சான்று இருக்கிறது.

கான் பஹதூர் ஷேக் குட்டி,

இத்தூரு ஹாஜி,

அட்டன்

இஸ்மாயில்

கம்முண்ணி ஹாஜி

மம்மூ

குன்ஹம்மூ ஷேக்

கயிசேரி மொயிதீன்

காக்கப்ப வீரன் ஹாஜி

காரேத்து குஞ்ஞிகோயா

இந்தப் பட்டியல் மாப்ளா எழுச்சியில் தண்டிக்கப்பட்ட, கொல்லப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல். ‘உணர்வு’ கும்பலின் வரலாற்றுப் புரட்டு உண்மையானால் மேற்கண்ட முஸ்லீம்கள் ஏன் தண்டிக்கப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள்? பதில் கூறுமா ‘உணர்வு’ கும்பல்?

அவர்கள் பதில் கூறவோ, பரிசீலிக்கவோ மாட்டார்கள். தேவநாதன்கள் கோவில் கருவறைக்குள் கலவி செய்ய வெட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? ஆனால், முஸ்லீம்கள் பரிசீலிக்க வேண்டும். அடிப்படையற்று பொய்களையும், வரலாற்று புரட்டல்களையும் எழுதிக் குவிப்பதன் நோக்கம் என்ன என்பதை தமிழக முஸ்லீம்கள் பரிசீலிக்க வேண்டும். பார்ப்பனிய பயங்கரவாதத்துக்கும், முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கும் இடையே சிக்கி சிதைந்து கொண்டிருக்கும் மக்கள் இயல்பாகவே அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்று வருகிறார்கள். அதனூடாக கம்யூனிசம் அவர்களுக்குள் அறிமுகமாகிறது. இதைத் தடுத்து, அரசுக்கு எதிரான கோபங்களை மடைமாற்றி திருப்பி விடுவதைத் தவிர, – அமெரிக்கா பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தையான இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தைக் கைக் கொண்டிருக்கும் ‘உணர்வு’ கும்பல் போன்ற குழுக்களுக்கு – வேறென்ன நோக்கம் இருந்துவிட முடியும்?

பின்குறிப்பு 1: அவர்களின் தொடர் பத்தாவது பகுதியில் இஸ்ரேல் உருவாகிய வரலாறு குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. பதினோராவது பகுதியிலும் அது தொடர்ந்து இருப்பதால் அடுத்த பகுதியில் அதைக் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பின்குறிப்பு 2: ‘உணர்வு’ கும்பல் எழுதிவரும் அந்தத் தொடரின் பகுதிகள் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வருகிறது. என்னைத் தெரிந்த இஸ்லாமியர்கள் உணர்வின் பழைய இதழ்களை தர மறுக்கிறார்கள். உணர்வு இதழை இணையத்தில் வெளியிடும் தளத்திலோ அந்த தொடரின் சில பகுதிகள் இடம் பெறவில்லை. அதாவது உணர்வு இதழ் 30 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்கள் வெளியிடுவதோ 20 அல்லது 25 பக்கங்களைத்தான். எனவே, பிற்பகுதியில் இடம்பெறும் பகுதிகளை இணையத்திலிருந்து பெற முடியவில்லை. மற்றும், முகநூலில் இஸ்லாத்துக்கு வா தொடரின் ஆசிரியர் எனும் அறிமுகத்துடன் ஒரு முகநூல் பக்கம் காணக் கிடைத்தது. உடனே அந்த முகநூல் பக்கத்தில் அவருக்கு தொடர் கிடைப்பதின் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு நீங்கள் அதை அனுப்பித்தர இயலுமா? எனக் கேட்டேன். பதில் இல்லை. மீண்டும் தரவிருப்பமில்லை என்றால் விருப்பமில்லை என்றாவது பதில் அனுப்புங்கள் என்று மீண்டும் ஒரு செய்தி அனுப்பினேன். அதற்கும் இன்றுவரை பதிலில்லை. என்னே இவர்களின் நேர்மை.

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

2. கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

3.  பதில்சொல்ல முடியாத டி.என்.டி.ஜே

4. வளைகுடாவில் வேலை செய்யும் முஸ்லீம்கள்

5. எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்

6. துரோகி முகம்மதா மார்க்ஸா டி.என்.டி.ஜே பதில் சொல்லுமா?

7.  ‘உணர்வு’ கும்பலின் தரம் பொய்களும் அறியாமையும் தான்

8. உணர்வு கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?

9. மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

முல்லை பெரியாறு: கேரள அடாவடியும் தமிழகத்தில் எழுச்சியும்

நீறு பூத்து கனன்று கொண்டிருந்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை கேரளாவில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தல் விசிறிவிட்டு வெடித்துப் பரவச் செய்திருக்கிறது. எதிர்க்கட்சியும் ஆளும்கட்சியும் சம எண்ணிக்கையில் இருக்கும் கேரள சட்டமன்றத்தில் வரப்போகும் ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அவைகளுக்கான இழுபறியை வாழ்வா சாவா நிலைக்கு கொண்டு வந்து விட, இரண்டுக்குமே முல்லை பெரியாறு ஆயுதமாகி இருக்கிறது. ஓட்டுக்கட்சி பன்றித் தொழுவத்தில் களறியிடுவது என்று ஆனபின் கம்யூனிஸ்டுகள் என்று பெயரை மட்டும் தாங்கியிருப்பதால் கட்சி நிலைபாடு குறித்து பரிசீலனை ஏற்பட்டுவிட முடியுமா? தங்கள் பங்குக்கு அள்ளிப் பூசிக் கொண்டிருக்கிறார்கள்.

முல்லை பெரியாறு குறித்து கேரளா எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களும் உண்மைக்கு மாறானவை என்பதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தினால் முறியடிக்கவும் பட்டிருக்கின்றன. நீதிமன்ற தீர்ப்பு உட்பட தமிழகத்தின் முயற்சிகளையும், முன்னேற்றங்களையும் கேரளா அநீதியான முறையிலேயே மீறிவந்திருக்கிறது. என்றாலும் கூட இன்றைய நிலையில் முல்லை பெரியாறு குறித்து கேரள மக்களிடம் இருக்கும் உணர்வு தமிழக மக்களிடம் இல்லை. தேனி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே மக்கள் போராடி வருகிறார்கள், ஏனைய பகுதிகளில் இன்னமும் இது செய்தியாகவே பார்க்கப்படுகிறது. ஊடகங்களும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் கேரளாவில் செய்ததைப் போன்ற ஒருங்கிணைந்த பரப்புரையை தமிழக ஊடகங்களோ, இங்குள்ள ஓட்டுக்கட்சிகளோ செய்யவில்லை.

கொந்தளிப்பான இன்றைய நிலையிலும் கூட, கேரளா தண்ணீர் தர மறுக்கிறது என்பது போன்று தான் இங்கு பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மாறாக புதிய அணை கட்டி தண்ணீர் தருகிறோம் என்று தானே கூறுகிறோம் மறுக்கவில்லையே என்று கேரளாவிலும் பேசப்பட்டு விருகிறது. ஆனால் இது தண்ணீர் பற்றாக்குறை குறித்த பிரச்சனையல்ல, அணையின் உரிமை யாருக்கு எனும் பிரச்சனை. இது புரியவைக்கப்படாததால் தான் அவர்கள் தான் தண்ணீர் தருகிறோம் என்று கூறுகிறார்களே எனும் எண்ணம் தமிழகத்தின் பிறபகுதிகளில் நிலவுகிறது.

1979ல் தொடங்கிய இந்தப் பிரச்சனையில் அடாவடி செய்யும் கேரளத்திற்கு சாதகமாக பல்வேறு கட்டங்களில் தமிழக ஒட்டுக் கட்சிகளால் விட்டுக் கொடுப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் வசம் இருந்த இந்த அணையின் பாதுகாப்பு பணியை 1980ல் கேரள காவல்துறைக்கு மாற்ற அனுமதித்தார் எம்.ஜி.ஆர். தொடர்ந்து அணையை பலப்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு கட்டுமான ஊழியர்களை தாக்குவது, பொறியாளர்கள் மீது வழக்கு தொடுத்து கைது செய்வது, வாகனங்களை கைப்பற்றுவது என்று ஆண்டுக்கணக்கில் கேரள அரசுகள் செய்து வந்த இடையூறுகளுக்கு எதிராக தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி அரசுகள் சிறு முணுமுணுப்பைக் கூட காட்டியதில்லை. அவ்வளவு ஏன், ஒரு சட்டமன்ற தேர்தலின் போது கேரளாவில் போட்டியிட்ட ஜெயா தலைமையிலான அதிமுக தேர்தல் வாக்குறுதியில் முல்லை பெரியாறு அணையில் நீரை தேக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியே ஓட்டுக் கேட்டது. 2006ல் நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என நீதி மன்ற தீர்ப்பு வந்தபோது ஆட்சியில் இருந்த ஜெயா, அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீர்ப்புக்குப் பிறகு, கேரளா அளித்த வரைவுத் திட்டத்தை ஏற்று ஐவர் குழுவை நீதிமன்றம் ஏற்படுத்தியபோது அதை எதிர்த்திருக்க வேண்டிய கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அணையின் மீதான தமிழகத்தின் உரிமைகளை கேரளா கபளீகரம் செய்தபோது ஒற்றுமையாய் ஆதரித்த ஓட்டுக் கட்சிகள், இன்று கேரளத்திற்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நிற்பதாக படம் காட்டுகின்றன.

நீதிமன்றங்களும் பலமுறை நியாயமற்று கேரள சார்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. உச்சநீதி மன்றம் தான் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த மறுத்து, கேரளா செய்த மேல்முறையீட்டு மனுவை தானே விசாரித்தது எந்த சட்ட அடிப்படையில் வரும்? உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய சில நாட்களில் புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து தீர்ப்பை செல்லாக் காசாக்கியது கேரளா. இதை எதிர்த்து தமிழ்நாடு அந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கையும், அதாவது கேரள சட்டமன்றத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்தை ஏற்கலாமா? கூடாதா? என்று தீர்ப்பளிக்க வேண்டிய இந்த வழக்கையும், ஏற்கனவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்ப்பை எதிர்த்து கேரளா தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவையும் ஒன்றாக இணைத்து ஐந்து நீதிபதிகள் கொண்ட சட்ட அமர்வுக்கு மாற்றியது எந்த சட்ட அடிப்படையில் சரியானது? இரண்டு வேறு வேறு வழக்குகளை ஒன்றாக இணைத்ததன் மூலம் உச்சநீதி மன்றம் தான் வழங்கிய தீர்ப்பை தானே குப்பைக் கூடைக்கு அனுப்பியது. இத்தனைக்கும் மேலாக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, அந்த இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்குகிறார் காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். ஆக கேரள அரசு, உச்சநீதி மன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும் இணைந்து தான் முல்லை பெரியாறு பிரச்சனையை இன்று கொதி நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.

திமுக வழக்கம் போல உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று போராட்டங்களையும்(!) இந்த விசயத்தில் தமிழக அரசுடன் ஒத்துழைப்போம் என்று அரசியல் நாகரீகத்தையும்(?) காட்டிக் கொண்டிருக்கிறது. ஜெயாவோ தானே உண்ணாவிரதம் இருந்துவிடலாமா? அல்லது ஒரு நாள் பந்த் நடத்தலாமா? என்று சோதிடர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். தமிழ்வாதக் கட்சிகளோ மலையாளிகளை அடி, மலையாளக் கடைகளை நொறுக்கு என்று இனவாதத்தை தொடங்கி விட்டார்கள். வைரமுத்து போன்ற உலக மகா கவிஞர்களுக்கு சோவியத் யூனியன் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, போலிகள் மாநிலத்திற்கு ஏற்றார்ப் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் ’சவுண்டு’ மட்டுமே விடும் இளங்கோவன் இப்போதும் உம்மன் சாண்டியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இதை ஏன் அவர் சோனியா காந்தியிடம் கூறக் கூடாது? அணையை உடைக்க கம்பிகளுடன் வெறித்தனத்தைக் காட்டிய கேரள பாஜகவை தண்டிக்கக் கோரி பாஜக தலைமையிடம் தமிழக பாஜக வற்புறுத்தலாமே, இந்தப் பிரச்சனையை தோற்றுவித்து எண்ணெய் ஊற்றி வளர்த்து வரும் கேரள தோழர்(!)களிடம் இங்குள்ள சீபீஎம் மேடையில் சர்வதேசியம் பேசிக் கொண்டும் மக்களிடம் பிராந்திய இனவெறியை கிளப்பியும் கம்யூனிச வித்தை காட்டுவது குறித்து விமர்சனம் வைக்கலாமே. அதைவிட்டு கேரளாவில் அணையை உடை என்றும் தமிழ்நாட்டில் அணையை பாதுகாப்போம் என்றும் இந்தக் கட்சிகள் வசனம் பேசுவது அப்பட்டமான மோசடி அல்லவா?

இவைகளுக்கு மாறாக, தேனி பகுதியிலுள்ள விவசாயிகள் புதிய எழுச்சி மிகுந்த வரலாற்றை படைத்திருக்கிறார்கள். எழுபதாயிரம் விவசாயிகள் வரை திரண்டு, ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து அணையைக் கைப்பற்ற கிளம்பி விட்டார்கள். குமுளி வழியான கேரள எல்லையை அடைத்து போக்குவரத்தையும், கேரளாவுக்கு அனுப்பப்படும் பொருட்களையும் தடை செய்தது கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரளாவைப் பொருத்தவரை ஓட்டுக் கட்சிகளின் நச்சுப் பரப்புரைகள் ஊடக பலத்தினாலும், தொடர்ச்சியான முனைப்பினாலும் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்திருக்கிறது. மட்டுமல்லாது, அணை உடைந்து பல லட்சம் மக்கள் செத்து மடிவதைப் போன்ற குறுந்தகடுகள் வரைகலை உத்திகளுடன் தயாரிக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்பட்டதால் பீதியடைந்திருக்கும் மக்கள் இயல்பாகவே கேரள ஓட்டுப் பொறுக்கிகளின் கோரிக்கைகளுடன் ஒன்றிப் போய்விட்டார்கள். இந்த மக்கள் ஆதரவு எனும் பலம் இருப்பதுதான் கேரள ஓட்டுக் கட்சிகளின் சண்டித்தனங்களுக்கு தடமேற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால் அவர்களின் தேவையற்ற பயமும், புரிதலற்று ஓட்டுக் கட்சிகளின் பின்னே அணிவகுப்பதும், தமிழகத்தின் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட்டாக வேண்டும். அவ்வாறு உணர்த்துவதற்கும், கேரள ஓட்டுப் பொறுக்கிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கும் பயன்படுமாயின் குமுளி, களியக்காவிளை, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தை நிறுத்தி காய்கறி உள்ளிட்டு பொருட்களின் தடையை ஏற்படுத்தலாம். ஆனால், அது ஒருபோதும் இனவாத அடிப்படையில் பயன்படுத்தப்படக் கூடாது. கேரளாவுக்கு அனுப்பப்படும் பொருட்களை உற்பத்தி செய்வதற்கே 500 டி.எம்.சி க்கு மேல் தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

பிரச்சனை என்று வந்தால் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறுவதையும், கமிட்டி அமைத்து ஆறப் போடுவதையும் வழமையாக வைத்திருக்கும் மத்திய அரசு, அதை மீறிப்போகும் மாநிலத்தை வழிக்கு கொண்டுவர என்ன செய்திருக்கிறது இதுவரை? அதிகாரிகள் தொடங்கி கடைநிலை ஊழியர்கள் வரை பேச்சு வார்த்தை நடத்தி பின் வழக்கு தொடுத்து தீர்ப்பு வந்தபின் அதையும் செயல் படுத்தாமல் மீறும் மாநிலத்தை ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தால், பாதிக்கப்பட்ட மாநிலம் என்ன செய்வது? முன்னர் வந்த தீர்ப்பை கழிப்பறை காகிதமாக்கியது போல் கேரளா இனியும் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்? புவியியல் ரீதியாக கடைமாநிலத்தில் வாழும் மக்கள் தண்ணீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்த வேண்டுமா? மாநிலங்களிடையேயான பகிர்வில் பொது ஒழுங்கை மீறும் அரசுகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் கேரளாவைக் கண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கக் கூட தமிழ்நாட்டல் முடியவில்லையே ஏன்? ஏனென்றால், தேவையான உரிமைகள் மாநிலங்களுக்கு இல்லை. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது வெறுமனே பிரிந்து போகும் உரிமையல்ல. எந்த மாநிலமும் எல்லை மீறாதிருக்கவும் மீறும் போது அதை ஒழுங்கிற்குள் கொண்டுவர தேவையான ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் இருக்கும்.

தேனி பகுதியில் விவசாயிகளிடம் ஓட்டுக்கட்சிகளை புறந்தள்ளி ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவ வேண்டும். அது பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை நோக்கி நகர வேண்டும். இப்போதே பிற பகுதிகளில் வணிகர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கடையடைப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவைகளை ஆதரிப்பதும், அதை இலக்கு நோக்கி வளர்த்தெடுப்பதுமே நம்முன் உடனடிக் கடமையாக இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

முல்லைப் பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

முல்லை பெரியாறு அணை பிரச்சனையும் தீர்வும் – ஆவணப்படம்

நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி

அறிவியல் முன்னோக்கி பயணிக்க, பயணிக்க அதன் கடைக்கம்பியை பிடித்து தொத்திக்கொண்டு ஆன்மீகமும் நேர்மையற்று கூடவே வந்துவிடுகிறது. அறிவியலின் வேகத்தைவிட இப்படி ‘தொத்திக்கொண்டு’ பயணிப்பது ஒரு சாகசமாக பார்க்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் அடிக்கடி கிழித்துக்கொண்டு வெளிவந்துவிடுகின்றன. சாஸ்தா வாழவைப்பார் என்றும், மகர ஜோதி அதிசயம் என்றும் நம்பும் அப்பாவி பக்தர்களின் பாமரத்தனமான நம்பிக்கை அவர்களின் வாழ்வை அவநம்பிக்கையாக்கி விடுகிறது. இதை ஆண்டவனின் அருளில் ஏற்பட்ட பிழை என்பதா? ஆள்பவர்களின் அலட்சியம் என்பதா?

 

மகரஜோதி தரிசனம்(!) முடிந்து திரும்பியவர்கள் நெரிசலில் சிக்கி 109 பேர் இறந்துவிட்டிருக்கிறார்கள். உடனே ‘உள்ளேன் ஐயா’ வுக்காக பலர் அதிர்ச்சி தெரிவித்தார்கள், கவலைப்பட்டார்கள், ஆள்பவர்கள் இழப்பீடுகளை அறிவித்தார்கள். இனி வேறொரு மதத்தில், பிரிதொரு இடத்தில், மற்றுமோர் இழப்பு ஏற்படுவது வரை இந்தப் பேச்சுக்கள் மறைந்து போகும். ஆனாலும், மதங்களின் அதிசயங்கள், அற்புதங்கள் மட்டும் எந்தக் கேள்விக்கும் உட்படுத்தப்படாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். இதே சபரிமலையில் கூட 1952 ல் 66 பேரும் 1999 ல் 53 பேரும் பலியாகியுள்ளார்கள்.

 

எல்லா மதங்களிலும் அற்புதங்கள் நிறைந்தே காணப்படுகின்றன. இறையியலும், சட்டமுறைகளும் மட்டுமே பக்தர்களுக்கு எப்போதும் போதுமானதாகிவிடுவதில்லை. மக்களை தொடர்ந்து நம்பிக்கையில் நீட்டித்து வைத்திருக்க அதிசயங்களும் அற்புதங்களும் தேவைப்படுகின்றன. அந்த வகையில் ஐயப்ப பக்தர்களுக்கு மகரஜோதி. எந்த ஒருவரையும் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட ஒரு நாளில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில், குறிப்பிட்ட ஒரு நிகழ்சிக்குப் பிறகு தன்னிச்சையாக எந்த ஒரு புறத்தூண்டுதலும் இல்லாமல் நெருப்பு எரிந்து அடங்க முடியுமா எனக்கேட்டால் முடியாது என மிகத்தெளிவாக பதிலளிப்பர். இதற்கு எந்த அறிவியல் தெளிவும், கல்வியறிவும் அவசியமில்லை. ஆனால் அதுவே மகரஜோதி எனும் பெயரில் ஏமாற்றினால் லட்சக்கணக்கானவர்கள் எல்லாவித சிரமங்களையும் தாங்கிக்கொண்டு அதை கண்டுகளிக்க சித்தமாகி விடுகிறார்கள்.

 

1925 க்கு முன்னர் மகர விளக்கு காட்சியளித்ததாக யாரும் காணவும் இல்லை, கூறவும் இல்லை. 1940 களிலேயே இது பிரபலமாகி பரவத்தொடங்கியது, அதன் பிறகுதான் ஐயப்பனின் ஆண்டு வருமானமும் கூடியது. 70களின் பிறகு பலர் இது மனிதக்கரங்களால் ஏற்றப்படும் நெருப்புதான் என்பதை பலமுறை நிரூபித்தபின்னரும் மகர விளக்கு மகரஜோதியாய் சுடர் முடிந்திருக்கிறது என்றால், “இதயமில்லா உலகின் இதயமாக இருக்கிறது மதம்” எனும் மார்க்ஸின் கூற்று எத்தமை உண்மையாக இருக்கிறது. பகுத்தறிவாளர்கள் மகர ஜோதி ஏற்றப்படும் பொன்னம்பல மேட்டை நோக்கி உண்மை விளக்கப் பேரணியை நடத்தி மகர ஜோதியை தடுத்து நிறுத்துகிறோம், மக்களுக்கு அப்போது உண்மை விளங்கும் என புறப்பட்ட போது, “மகரஜோதியை தேவசம் போர்டுதான் ஏற்பாடு செய்கிறது என்று நான் அறிவிக்கிறேன். பகுத்தறிவாளர்கள் மகரஜோதியை தடுக்க வேண்டாம்” என்று பகுத்தறிவாளர்களை தடுத்த ஈகே நாயனாரும் தன்னை கம்மூனுஸ்ட் என்று தான் கூறிக்கொண்டார்.


 

மக்களின் மூட நம்பிக்கைகள் ஒருபுறமிருக்கட்டும்; இப்படி ஒரு நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் மரணமடையக் காரணம் மக்களின் தவறு தானாம். பக்தர்கள் வந்த ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் மோதி விபத்துக்குள்ளானனதும், மிரண்டு போன மக்கள் நடைபாதைக் கடைகளில் நுழைந்ததை கடை உரிமையாளர்கள் தடிகொண்டு அடித்து விரட்டியதுதான் நெரிசல் ஏற்படக் காரணம். இதை முறையாக விசாரித்து உரியவர்களுக்கு தண்டனை வாங்கித்தரவேண்டும் என நாளிதழ்கள் தீர்ப்பெழுதுகின்றன.

 

சபரிமலை சுற்றுலா ஆண்டுக்கு நூறு கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டித்தரும் இடமாகும். இதற்காக தேவசம் போர்டு என தனி அமைச்சரவையையே வைத்திருக்கும் கேரள அரசு மக்களின் வசதிக்காக செய்ததென்ன? முறையான போக்குவரத்து வசதிகளோ, தங்குமிடங்களோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ உரிய அளவில் ஏற்பாடு செய்யாதது யாருடைய குறை? முழுமையான மலைப்பகுதியாக இருப்பதால்தான் அதிகமான வசதிகளை செய்து கொடுக்க இயலவில்லை என அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். பணக்கார முதலாளிகளின் தனித்தனி ரிசார்ட்டுகளுக்கும், உல்லாச விடுதிகளுக்கும் அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்திருக்கும் போது மக்கள் கூடும் இடங்களுக்கு அது போன்ற வசதிகளை ஏன் செய்துகொடுக்க முடியாது?

 

ஒருபுறம் அரசே முன்னின்று காவல்துறை பாதுகாப்புடன் மக்களை ஏமாற்றுகிறது, அந்த ஏமாற்றத்தின் பலனை கோடிகளில் அறுவடை செய்கிறது. மறுபக்கம் அந்த மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்காமல் அதனால் அவர்கள் செத்து மடிவதை அலட்சியம் செய்கிறது. யாரிடம் பணத்தை வசூல் செய்கிறதோ அவர்களுக்கு வேண்டியதை செய்துகொடுக்க மறுப்பதுதான் அரசின் பொதுவான குணமாக இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வளைகுடாவில் இரத்தம் சிந்தி அனுப்பும் பணத்தில் செலவாணியை ஈட்டும் அரசு, அவர்களின் துயர்களை கண்டுகொள்ள மறுக்கும் அரசு, ஆஸ்திரேலியாவில் சிலர் இறந்ததற்காக கண்ணீர் விடுகிறது. நாட்டில் கோடிகணக்கான மக்கள் வறுமையில் வாடினாலும் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பலவிதங்களில் வரி வசூலிக்கும் அரசு, அவர்களுக்கு கொடுக்கும் அற்ப மானியங்களையும் வெட்டிக்குறைத்துவிட்டு கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்குகிறது. எதை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் இதுதான் அரசின் பொதுக்குணமாக இருக்கிறது.

 

எந்த ஒளிவுமறைவும் இன்றி முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசை ஜனநாயக அரசு, மக்களாட்சி என்று நம்புவது எந்த அளவுக்கு மடமையோ, அது போன்ற மடமை தான் கடவுள் என்ற ஒன்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்தபின்பும் அது மக்களைக் காக்கும், அற்புதங்கள் செய்து பிரமிக்க வைக்கும் என நம்புவதும். இரண்டுவித மடமைகளிலிருந்தும் மக்கள் வெளியேறும் போது தான் தங்களின் மெய்யான மதிப்பும், உயிரின் இழப்பும் என்னவென்று புரியும்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

முல்லைப்பெரியாற்றின் சிக்கல்களுக்கு அணை கட்டுவது எப்போது?

முல்லைப்பெரியாற்று அணைக்குப்பதிலாக வேறு புதிய அணை கட்டியே தீருவது என்று சாத்தியமுள்ள எந்த வழியையும் விட்டுவைக்காமல் கங்கணங்கட்டி செயல்படுகிறது கேரள அரசு. அமெரிக்கப்படங்களுக்கு இணையான வரைகலை உத்திகளுடன் மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதுபோல் குறுந்தகடுகளை வெளியிட்டு மக்களை ஏய்த்தது தொடங்கி இப்போதுஅணையில் நீர்கசிகிறது என்று குழு அமைத்து ஆராய அனுப்பியது வரை அடுக்கடுக்காக அக்கிரமங்கள் புரிந்துவருகிறது. ரப்பருக்கான விலை வீழ்ச்சியடைந்து தோட்டங்களில் வேலையிழந்து மக்கள் தவித்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை அலட்சியப்படுத்திய அரசு, விலை உயர்வு குறிட்ட போராட்டங்களின்போது போராடிய மக்களை குண்டாந்தடிகளைக்கொண்டு அடித்து நொருக்கிய அரசு, முல்லைப்பெரியாற்றில் மக்களுக்காக கவலைப்படுவதாக காட்டுவது அப்பட்டமான நடிப்பு. இதில் காங்கிரஸ் கயவாளிகளுக்கும், போலிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. அன்று நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தது காங்கிரஸ் அரசு, இன்று வழக்கை மேலும் தாமதப்படுத்துவதற்க்காக தனிப்பெஞ்சுக்கு அனுப்பியிருக்கிறது போலிகளின் அரசு.

 

அப்படி என்னதான் காரணம் அந்த அணையை முடக்க நினைப்பதற்கு? மெய்யாகவே அணை பலமிழந்து தான் இருக்கிறதா? அணை உடைந்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைவார்களா? இவர்கள் மக்களிடம் சொல்லும் காரணங்களைவிட வேறு காரணக்கள் இதன் பின்னால் இருக்கின்றன. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது முல்லைப்பெரியாற்று அணைப்பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளாவோடு இணைக்கப்பட்டன (இதை எதிர்த்து அபோது போராட்டங்களும் நடைபெற்றன) பின்னர் 1976 ல் பெரியாற்று அணைக்கு 40கிமீ கீழே இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் 800 மெகாவாட் மின் உற்பத்திக்காக கட்டியது கேரள அரசு. ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஒரு முறை கூட அந்த அணை முழுக்கொள்ளளவை எட்டவில்லை. இந்த அணை கட்டப்பட்ட பின்னர்தான் கேரள அரசு முழு மூச்சுடன் முல்லைப்பெரியாற்று அணை பழுதடைந்திருப்பதாக பரப்பத்தொடங்கியது. பெரியாற்று அணை இருக்கும்வரை இடுக்கி அணைக்கு நீர்கிடைக்காது என்று உணர்ந்த கேரள அரசு 1979 இல் பீர்மடு எம்.எல்.ஏவான கே.கே.தாமஸ் என்பவர் தலைமையில் அணை பலமின்றி இருப்பதாகவும் நீர்மட்டத்தின் அளவை குறைக்கவேண்டும் எனவும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய மைய அரசு அணை பலமாக இருப்பதாக அறிவித்தது. ஆனாலும் கேரள தமிழக அரசுகளிடையே அணையை பலப்படுத்துவது என்றும் அதுவரை அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைத்துக்கொள்வது என்றும் ஒப்பந்தமாகியது. தனடிப்படையில் 136 அடியாக நீர்மட்டம் குறைக்கப்பட்டது. அணை கேரளப்பகுதியில் இருந்தாலும் அணையின் நிர்வாகம் தமிழகத்திடம் இருந்தது. இதற்கு வாடகையையும் ஆண்டுதோறும் தமிழகம் கேரளாவுக்கு வழக்கிவருகிறது, இருந்தாலும் மூன்று ஆண்டுகளில் முடியவேண்டிய பலப்படுத்தும் பணி கேரளாவின் பல்வேறு முட்டுக்கட்டைகளால் 1985 வரை நீண்டது. பணி முடிவடைந்த பின்னும், மத்திய நீர்வள ஆணையம், மத்திய மண் விசையியல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை நீர்மட்டத்தை உயர்த்துவாதால் பாதிப்பு ஒன்றுமில்லை என சான்றிதழ் வழங்கிய பின்பும் நீர்மட்டத்தை உயர்த்த இதுவரை கேரளா அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்டவழக்கில் தான் உச்சநீதிமன்றம் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்த ஆணையிட்டது. அதை கேரள சட்டமன்றத்தில் சிறப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் முறியடித்தது. இப்போது 136 அடியில் இருக்கும் அணையின் நீர்மட்டம் கடந்த 1924, 1933, 1940, 1943, 1961, 1977 ஆகிய ஆண்டுகளில் முழுக்கொள்ளளவான 152 அடிவரை எந்தப்பாதிப்புமில்லாமல் நிரம்பியிருந்தது, இன்னும் சிற்ப்பாக 1943 ஆம் ஆண்டு கொள்ளளவை விட இரண்டு அடி அதிகமாக அதாவது 154 அடிவரை நிரம்பியிருந்தது. அணை பலமற்று இருப்பதாக கேரளா தொடர்ந்து கூறிவருவதற்கு ஒரே காரணம் அது நூற்றாண்டுப்பழமை வாய்ந்தது என்பது மட்டும்தான். நில நடுக்கம் வந்தால் தாங்காது என்பதெல்லாம் அதிக பட்சம். எந்த கட்டிடத்திற்கு நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கும் என்று உறுதியளிக்கமுடியும்? இந்தியாவின் எந்த அணைக்கு இத்தகைய உறுதியளிக்கப்பட்டுள்ளது? மாறாக தமிழகத்தின் கல்லணை இரண்டாயிரம் ஆண்டுகளை கடந்தும் சிறப்பாக இயங்கிக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா அணை உடைந்துவிடும் என்று பரப்பியிருப்பது திட்டமிட்ட பொய் என்றாலும், கேரள மக்கள் அணை உடைந்து தாங்கள் கடலில் கரைந்து விடுவதாய் நம்புகிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால் அதுவும் உண்மையல்ல என்பதுதான் உண்மை. முல்லைப்பெரியாற்று அணையின் உபரி நீர் பாய்ந்தோடும் பகுதிகளைனைத்தும் மக்கள் வசிக்காத அடர்ந்த காட்டுப்பகுதியாகும். இடுக்கி மாவட்டம் உட்பட அணை உடைந்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக குறிக்கப்படும் ஐந்து மாவட்ட மக்கள் வசிக்கும் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிமுதல் 4600 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன. ஆனால் முல்லைப்பெரியாற்று அணையோ கடல் மட்டத்திலிருந்து 2850 அடி உயரத்தில் இருக்கிறது. அதாவது 2850 அடி உயரத்தில் இருக்கும் அணை உடைந்து அதை விட சற்றேறக்குறைய ஆயிரம் அடி அதிக உயரத்திலிருக்கும் பகுதி மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படுவார்களாம். இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பது மட்டுமல்ல, அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டபோது வெளித்தெரிந்த பகுதிகளில் அவசரம் அவசரமாக ரப்பர் முதலாளிகளும் ஊடக முதலாளிகளும் விடுதிகளும், பொழுதுபோக்கு மையங்களும் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அணை உடைந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் முதலாளிகள் கல்லாக்கட்டும் விடுதிகளும் பொழுதுபோக்கு மையக்களும் மூழ்கிவிடும் என்பதே உண்மை. எதை வைத்து இவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லித்திரிகிறார்கள்?

 

தமிழ் தேசியவாதிகள் என்று சிலர் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்களை இந்தியா படுகொலை செய்வதையே இரண்டு மலையாள அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலே காரணம் என்று கூறுபவர்கள் இவர்கள். கன்னடம் ஆந்திரா கேரளம் ஆகியவை தமிழகத்தின் நீராதார உரிமையை மறுப்பது தேசிய இனச்சிக்கலினால் தான் என அடித்துக்கூறுகிறார்கள். ஆனால் தேசிய இனக்கூறுகள் வளராத கேரளாவில், பிராந்தியக்கட்சிகள் ஏதும் இல்லாத கேரளாவில் முல்லைப்பெரியாற்றுச் சிக்கலின் பலன் யாருக்குச் சேர்கிறது? கேரளாவிலிருக்கும் முதலாளித்துவ நலன் பாடும் அரசு இந்தச்சிக்கலை மேலும் மேலும் வளர்த்து புதிய அணையை கட்ட நினைப்பதன் காரணம கேரள தேசியமா? மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்வது போல் காட்டி மக்களை ஏமாற்றி காப்பாற்ற நினைப்பது மக்களையா? முதலாளிகளையா? அன்னிய முதலீட்டில் பின் தங்கி இருக்கும் கேரளாவில் மின் உற்பத்தியை அதிகரிப்பது ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கா? அன்னிய தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கா?

 

மைய மாநில அனைத்து அரசுகளுக்கும் திட்டமாக இருப்பது முதலாளிகளின் வளர்ச்சிதானேயன்றி ஒருபோதும் மக்களின் வளர்ச்சியல்ல. தமிழக அரசின் நோக்கமும் ராமனாதபுர மதுரை மாவட்ட விவசாயிகளின் நலனா? உள்நாட்டின் குறுந்தொழில்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தி வாரத்துக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடுங்கள் என அறிவுரை கூறும் அரசு, பன்னாட்டு நிருவனங்களுக்கு ஒரு நொடி நேரம் கூட நிறுத்தாமல் மின்சாரம் வழங்கிவருகிறது. விவசாயிகளை நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறை கூறும் அரசுகள் அதை ஒருபோதும் பாட்டிலில் அடைத்துவிற்கும் நிருவனங்களுக்கு சொல்வதில்லை. எல்லா இடங்களிலும் அந்ந்தந்த பகுதிமக்களைவிட எல்லாவிதத்திலும் பன்னாட்டு முதலாளிகள் தான் அனைத்து பலன்களையும் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இதில் தேசிய நலன்களைக்கூறி ஒரு மாநில மக்களை இன்னொரு மாநில மக்களுக்கு எதிரியாக காட்டுவது அந்த முதலாளிகளுக்குத்தான் சாதகமாக அமையுமேயன்றி எப்போதும் மக்களுக்கு சாதகமானதாக அமையாது. பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாக இதை மாற்றாதவரை எந்த ஆற்றுச்சிக்கலையும் தீர்க்கமுடியாது.

நெய்யாறு: கேரள அடாவடியும், சிபிஎம்மின் எடுபிடியும்.

தமிழகம் தன்னுடைய எல்லையிலுள்ள அண்டை மாநிலங்கள் அனைத்திலிருந்தும் விவசாயத்திற்கான தண்ணீர் குறித்து பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறது. காவிரி தண்ணீருக்காக கன்னடத்துடனான பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. நடுவர் மன்ற தீர்ப்பாணயம் தமிழகத்திற்கு இன்னின்ன மாதங்களில் இவ்வளவு டிஎம்சி தண்ணீர் விடவேண்டும் என்று தீர்ப்பாக தந்திருந்தும் கர்நாடகம் காவிரியை தன்னுடைய அணைகளின் வடிகாலாகவே இதுவரை கருதிவருகிறது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நீதிமன்றம் 142அடிவரை நீர்தேக்கிக்கொள்ள அனுமதித்தும்கூட கேரள அரசு அதை மறுத்து வரைகலை(கிராஃபிக்ஸ்)உத்திகளுடன் கேரளம் அழிவதைபோல படம் தயாரித்து காட்டி மக்களிடம் கேரள உணர்வை ஊட்டி வருகிறது. ஏற்கனவே ஆலைக்கழிவுகளாலும், ஆக்கிரமிப்பாலும் நாச்மாய்போயிருக்கும் பாலற்றின் குறுக்கே அணைகட்டப்போவதாக ஆந்திரா மிரட்டிவருகிறது. இந்தநிலையில் தான் நெய்யாறு குறித்த பிரச்சனை கிளம்பியிருக்கிறது.

நெய்யாறு குமரி மாவட்ட எல்லையை ஒட்டிய பகுதியில் உற்பத்தியாகி கேரளாவில் ஓடும் ஒரு ஆறு. இந்த ஆற்றில் குமரி மாவட்டத்தை ஒட்டிய அகத்தியமலையின் அடிவாரத்தில் நெய்யாற்று அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தமிழகத்தின் ஆறுகாணி, பத்துகாணி, பேணு, கற்றுவா போன்ற பகுதிகளை நீர்பிடிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது. கருப்பையாறு என்னும் சிற்றாறும் நெய்யாற்றில் கலக்கிறது இதன் காரணமாக காமராஜர் ஆட்ட்சியின் போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த ஐம்பது ஆண்டுகளாய் இடதுகரை, வலதுகரை என்னும் வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு வருகிறது. இதனைக்கொண்டு விளவங்கோடு வட்டத்திலுள்ள 9200ஏக்கர் நிலப்பரப்பு உட்பட(இடதுகரை கால்வாய்) மொத்தம் 25000ஏக்கர் நிலப்பரப்பு பாசனவசதி பெறுகிறது. இதில் கடந்த 2004 ஆண்டிலிருந்து இடதுகரை கால்வாயை அடைத்து தண்ணீர் தருவதை நிருத்திவிட்டது கேரள அரசு. இது குறித்து கடிதப்போக்குவரத்தும், நினைவூட்டல்களும் தொடர்ந்து நடைபெற்றபோதும் இதுவரை தண்ணீர் திற‌ந்துவிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2007 ஏப்ரலில் கேரள நீர்ப்பாசன அமைச்சர் பிரேமச்சந்திரன் தமிழக அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் உரிய கட்டணம் பெற்றுவிட்டுத்தான் த‌மிழ‌க‌த்திற்கு த‌ண்ணீர் த‌ருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முல்லைபெரியாறு அணையில் 144அடி த‌ண்ணீர் தேக்கினால் அத‌னால் கேர‌ளாவின் எந்த‌ ப‌குதிக‌ளெல்லாம் நீரில் மூழ்குமோ அந்த‌ப்ப‌குதிக‌ளையெல்லாம் க‌ண‌க்கெடுத்து அத‌ற்காக‌ இன்றுவ‌ரை த‌மிழ‌க‌த்திலிருந்து க‌ட்ட‌ண‌ம் பெற்றுவ‌ரும் கேர‌ளா, 142அடி வ‌ரை நீரைத்தேக்க‌ நீதிம‌ன்ற‌ம் அனும‌திய‌ளித்த‌ பின்பும் 136அடிக்கு மேல் த‌ண்ணீரை தேக்குவ‌தில்லை. அதோடு ம‌ட்டும‌ல்லாம‌ல் அவ்வ‌ப்போது பொறியாள‌ர்க‌ளை அனுப்பி சோத‌னை செய்வ‌தும், த‌மிழ‌க‌ அதிகாரிக‌ளின் அனும‌தி ம‌றுப்ப‌துமாக‌ அடாவ‌டி செய்துவ‌ருகிற‌து. த‌ற்போது நெய்யாற்று க‌ட்ட‌ண‌ம் குறித்த‌ ஒப்ப‌ந்த்த‌த்தில் ஒப்புத‌லைப்பெற்றுவிட்டால் பின்ன‌ர் அத‌னை முல்லைப்பெரியாறு ஆளியாறு ப‌ர‌ம்பிக்குள‌ம் என‌ ம‌ற்ற‌வ‌ற்றிக்கும் விரிவுப‌டுத்திக்கொள்ள‌லாம் என‌க்கேர‌ள‌ சிபிஎம் அர‌சு எண்ணுகிற‌து.

க‌ட‌ந்த‌ நான்கு ஆண்டுக‌ளாக‌ கும‌ரிமாவ‌ட்ட‌ விவ‌சாயிக‌ள் நெய்யாற்று த‌ண்ணீர் நிருத்த‌ப்ப‌ட்ட‌து குறித்து ப‌ல‌வித‌மான‌ க‌வ‌ன ஈர்ப்பு போராட்ட‌ங்க‌ள் சாலை ம‌றிய‌ல் உண்ணாவிர‌த‌ம் என‌ ந‌ட‌த்தியிருந்தும் க‌ண்டு கொள்ளாத‌ ஓட்டுப்பொறுக்கி அர‌சிய‌ல் க‌ழிச‌டைக‌ள் த‌ற்போது தேர்த‌ல் நெருங்குவ‌தைய‌டுத்து இதைக்கையிலெடுத்து போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ ஆர‌ம்பித்துள்ள‌ன‌ர். கிள்ளியூர் காங்கிர‌ஸ் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் ஜான் ஜேக்க‌ப் இளைஞ‌ர் காங்கிர‌ஸ் சார்பில் மார்த்தாண்ட‌த்தில் சாகும் வ‌ரை உண்ணாவிர‌த‌ம் என்று போராட‌த்தொட‌ங்கினார். இத‌னால் கும‌ரி மாவ‌ட்ட‌த்தில் குறிட்ட‌ அள‌வு வாக்குவ‌ங்கியை(!) வைத்திருக்கும் சிபிஎம் ப‌த‌றிப்போன‌து. இதைத்தொட‌ர்ந்து ஒரு அறிக்கை விட்ட‌து சிபிஎம் அதில் நெய்யாறு த‌ண்ணீர் பிர‌ச்ச‌னை தொட‌ர்பாக‌ பேச்சு ந‌ட‌த்த‌ வ‌ருமாறு ப‌ல‌முறை கேர‌ள‌ அர‌சு அழைத்த‌தாக‌வும், த‌மிழ‌க‌ அர‌சு அதை க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌க்க‌ணித்த‌தாக‌வும் கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதாவ‌து கேர‌ள‌ சிபிஎம் அர‌சு த‌ண்ணீர் த‌ர‌ த‌யாராக‌ இருப்ப‌த்தாக‌வும் ஆனால் த‌மிழ‌க‌ அர‌சின் அலட்சிய‌த்தினால்தான் த‌ண்ணீர் கிடைக்க‌வில்லை என்றும் கூறுகிற‌து. இதையே சிபிஎம்மின் மாநில‌ செய‌ற்குழு உறுப்பின‌ர் நூர் முக‌ம்ம‌து “கேர‌ள‌ அர‌சு த‌ண்ணீருக்கு க‌ட்ட‌ண‌ம் எதையும் கேட்க‌வில்லை. மாறாக‌ த‌ண்ணீர் விடும்போது அதைக்கையாளுவ‌த‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தைத்தான் கேர‌ள‌ அர‌சு கேட்கிற‌து. இந்த‌ சிறிய‌ அள‌விலான‌ க‌ட்ட‌ண‌த்தை கூட‌ தேவைப்ப‌ட்டால் பெச்சுவார்த்தையின் போது ம‌ற்றிக்கொள்ள‌லாம் என்று முத‌ல்வ‌ர் அச்சுதான‌ந்த‌ன் எங்க‌ளிட‌ம் உறுதியளித்துள்ளார் என‌வே சிபிஎம் அர‌சு த‌ண்ணீர்த‌ர‌ ம‌றுக்கிற‌து என்ற‌ பொய்பிர‌ச்சார‌த்தை முறிய‌டிக்கும் வித‌மாக‌ நாங்க‌ளும் போராட்ட‌த்தை அறிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளார். ஆனால் 1971ல் நெய்யாற்று நீர்ப்ப‌கிர்வு குறித்து த‌மிழ‌க‌ அர‌சு கேர‌ளாவிட‌ம் அளித்த‌ வ‌ரைவு ஒப்ப‌ந்த்த‌த்திலேயே ப‌ராம‌ரிப்பு, கையாளுத‌ல் குறித்த‌ செல‌வின‌ங்க‌ளின் ஒரு ப‌குதியை த‌மிழ‌க‌ம் ஏற்ப‌தாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. இதை வ‌ச‌தியாக‌ ம‌றைத்துவிட்ட‌ சிபிஎம் கேர‌ளாவிதிக்கும் க‌ட்ட‌ண‌த்தை தேவைப்ப‌ட்டால் குறைத்துக்கொள்ள‌லாம் என்று ஏற்றுக்கொள்ள‌ச்சொல்கிற‌து. அதும‌ட்டுமா? கேர‌ள‌ அர‌சு 1958ம் ஆண்டு வெளியிட்ட‌ அம்மாநிலத்தின் நீர் ஆதார‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அறிக்கையிலேயே நெய்யாறு இருமாநில‌ ஆறுதான் என‌க்குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌தை ம‌றைத்துவிட்டு அந்த ஆற்றில் த‌மிழ‌க‌த்திற்கும் உரிமையுண்டு என்று பேசி பிர‌ச்ச‌னையை சிக்க‌லாக்காம‌ல் சுமூக‌மாக‌ பேசி த‌ண்ணீர்கிடைக்க‌ த‌மிழ‌க‌ அர‌சு ஏற்பாடு செய்ய‌வேண்டுமென்றும் கூறியுள்ளார். அதாவ‌து கேர‌ள‌ சிபிஎம் அர‌சு விதிக்கும் அடாவ‌டியான‌ கெடுபிடிக‌ளை ம‌றுக்காம‌ல் ஏற்றுக்கொண்டு த‌ண்ணீர் கிடைப்ப‌தில் தான் க‌வ‌ன‌ம் செலுத்த‌வேண்டுமென்கிறார். இந்த‌ சிபிஎம் எடுபிடிக‌ளால் வேறு என்ன‌ சொல்ல‌முடியும்?

சேல‌த்தை த‌லைமையிட‌மாக‌க்கொண்டு த‌னி தொட‌ர்வ‌ண்டிக்கோட்ட‌ம் அமைப்ப‌தை கேர‌ள‌த்தின் வ‌ருமான‌ம் இழ‌ப்பை ச‌ந்திக்கும் என்ப‌த‌ற்காக‌ எதிர்த்த‌வ‌ர்க‌ளால் வேறு என்ன‌ சொல்ல‌முடியும்?

க‌ட‌ல்சார் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் க‌ல்க‌த்தாவில்தான் நிருவ‌ப்ப‌ட‌வேண்டும் சென்னையில் கூடாது என்று சொன்ன‌வ‌ர்க‌ளாயிற்றே. சென்னையில் க‌ட‌ல்சார் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் அமைப்ப‌து தொட‌ர்பான‌ ஆணை பாராளும‌ன்ற‌த்தில் வாக்கெடுப்புக்கு வ‌ந்த‌போது ஆத‌ரித்து வாக்க‌ளிக்க‌முடிய்ய‌து என்ற‌வ‌ர்தான் ம‌துரைத்தொகுதியின் சிபிஎம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் மோக‌ன். இவ‌ர்க‌ளால் வேறு என்ன‌ சொல்ல‌முடியும்?

அங்கு போராடும் விவசாயிக‌ள் இதுபோன்ற‌ ஓட்டுப்பொறுக்கிக‌ளின் அக்க‌ப்போர்க‌ளை ம‌றுத்து ம‌க்க‌ளிட‌ம் சென்று ம‌க்க‌ள‌ சார்ந்து போராட்ட‌ங்க‌ளை முன்னெடுக்க‌வேண்டும். ச‌ம‌ர‌ம‌ற்ற‌ அந்த‌ப்போராட்ட‌மே இப்போதைய‌ தேவை.

%d bloggers like this: