விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்

விடுதலைப் புலிகளையும் கம்யூனிஸ்டுகளையும் ஒப்பிட்டு பலரும், பல போதுகளில், பல்வேறு விதங்களில் பேசி வந்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பிறகும் கூட இந்த ஒப்பீடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்று இலங்கையின் நிலை வேறு. இன்று இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மக்களின் எழுச்சிக்கு பலரும் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்றளித்ததன் வினை என்று பொழிப்புரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதன் வழியே விடுதலைப் புலிகள் குறித்த பெருமிதம் மீண்டும் உருவாக்கப்படுகிறது. இந்த சூழலில் ஓரிரு ஆண்டுகள் பழமையான … விடுதலைப் புலிகளும் கம்யூனிஸ்டுகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?

  தோழர் செங்கொடி,   மதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.   கேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித … அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?

வணக்கம் தோழர், அறிவியலை நாம் அறிவியலாளர்கள் வாயிலாகவே அறிகிறோம்.அறிவியலாளர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே. அறிவியலையும், அறிவியலாளர்களையும் எப்படி பிரித்து புரிந்து கொள்வது ?  ராஜ்ரம்யா கேள்விபதில் பகுதியிலிருந்து  தோழரே, அரசியல் இஸ்லாம் மற்றும் ஆன்மீக இஸ்லாம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து விரிவாக அறிய விரும்புகிறேன். இதுகுறித்த தங்களின் விளக்கங்களுடன், அதுதொடர்பான ஏதேனும் புத்தகம் இருந்தாலும் அதை ஆன்லைனில் அனுப்பி வைத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி, தங்களுடைய துணிச்சலான அறிவுசார் சமூகப்பணி தொடர்வதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் … அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் புரட்சியாளரா? சீர்திருத்தவாதியா?

வணக்கம் தோழர் எது புரட்சி ? எது சீர்திருத்தம் ? புரட்சியாளருக்கும் சீர்திருத்தவாதிக்கும் என்ன வித்தியாசம் ? ராஜ்ரம்யா, கேள்வி பதில் பகுதியிலிருந்து ஜப்பான் ஒரு இரண்டாம் உலக போரில் அனைத்தும் இழந்து விட்டது.அதற்கு காரணம் அமெரிக்கா. பின் ஏன் அமெரிக்கா மூலதனம் அங்கு குவிக்கப்பட்டது அதனை எப்படி அந்த நாட்டு மக்கள் ஏற்று கொண்டர்கள் குமரன், கேள்வி பதில் பகுதியிலிருந்து 1937ம் ஆண்டின் இந்தி எதிர்ப்பு போரை முன்னின்று நடத்திய பெரியார், 1965ம் ஆண்டின் மாபெரும் … பெரியார் புரட்சியாளரா? சீர்திருத்தவாதியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதபண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா?

வணக்கம் தோழர் பொதுவுடமை வாதிகள் மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது சரியா ? தவறா ?  திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து நண்பர் ராஜ் ரம்யா,   தவறு என்று ஒற்றைச் சொல்லில் கூறிவிட முடியும். ஏன் தவறு என்பதையும் சேர்த்தால் தான் அது முழுமையடையும். முதலில் மதம் என்பது என்ன? இயங்கியல் அடிப்படையில் அதன் கருத்துமுதல்வாத தன்மையை விவரிப்பது ஒரு வகை. அதை விட, மக்களிடம் மதத்தின் பாத்திரம் என்ன என்பதை உள்வாங்கிக் கொள்வது … மதபண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்

பெரியாரியம் , அம்பேத்கரியம் , மார்க்சியம்  கொஞ்சம் எளிமையா தெளிவு படுத்துங்க தோழர். திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து நண்பர் ராஜ் ரம்யா, பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் இவை மூன்றும் தனித்தனியான, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இயங்களல்ல. நோக்கங்களால் ஒன்றியவை. தனித்தனியாக குறிப்பிடப்பட்டாலும் இவைகளை இணைக்கும் மையச் சரடு தலித்தியம். அந்த வகையில் முன்னிரண்டைக் காட்டிலும் மார்க்சியம் முழுமையானது. பெரியாரியம், அம்பேத்காரியம் என்பவை தலித்தியம் எனும் சொல்லின் பின்னுள்ள அரசியல் தொழிற்பாடுகளால் தனித்தனியானதாக உயர்த்தப்படுபவை. இங்கு … பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதிமுக வெற்றி மக்கள் முடிவா?

பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?  திரு. மணி கேள்வி பதில் பகுதியில் நண்பர் மணி, பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் … அதிமுக வெற்றி மக்கள் முடிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி

மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம். இவை அனைத்தும் சுவனப்பிரியனிடம் ஒருங்கே குடி கொண்டிருக்கின்றன. இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்? அதிலிருந்து … சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி-ஐ படிப்பதைத் தொடரவும்.

கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்

நேற்று கேள்வி பதில் பகுதியில் மணி எனும் நண்பர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கான பதில் சற்று நீளமாக வந்து விட்டதால், பதிவாக இட்டுவிட்டேன். பொருத்தருள்க.   நண்பரே,   சுவனப்பிரியன் என்பவர் நாத்திகர்களுக்கு நரக தண்டனை கொடுப்பது சரியானது தான் என்று கூறுகிறார். மனைவி எல்லோருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் சரியாகச் செய்து நல்ல பெயர் எடுத்து இருந்தாலும் பக்கத்து வீட்டு ஆடவருடன் உடலுறவு வைத்ததை எப்படி ஒரு கணவனால் ஏற்க முடியும்? அதேபோல் நாத்திகன் பல … கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வரட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வரட்டுத்தனம்

சில நாட்களுக்கு முன் சிறகுகள் வலைப்பக்கத்தை நடத்துபவர்களில் ஒருவரான நண்பர் முகம்மது ரஃபி கேள்வி ஒன்றை மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு பதில் எழுதிவிட்டு பார்த்தால் சற்று நீளமாக இருந்தது. எனவே, அதை இன்னும் சற்று விரிவுபடுத்தி பதிவாக இட்டால் என்ன எனும் எண்ணமே இந்த பதிவு. மட்டுமல்லாது, வழக்கமாக கேள்வி பதில் பகுதியில் கேள்விகளை கேட்கும் அவர் எனக்கு ஏதும் சங்கடம் நேரக் கூடும் எனும் எண்ணத்தில் இந்த முறை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கலாம் எனகருதுகிறேன். அவ்வாறான தயக்கமோ, … வரட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வரட்டுத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.