இன்று தீபாவளித் திருநாளாம், வழக்கமான உற்சாகம் இல்லாமலும், வெடிச்சத்தம் குறைவாகவும் இருக்கிறது. இதற்கு சமூகம், பொருளாதரம் உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம். போகட்டும். தீபாவளி கொண்டடலாமா? கூடாதா? தமிழ்நாட்டில் பெரியாரியவாதிகள் தொடங்கி இடதுசாரிகள் வரை தீபாவளி கொண்டாடுவதில்லை. காரணம் அது பொங்கலைப் போலன்றி இந்து மதத்தின் திருநாளாக இருப்பதால் தான். இந்து மதத்தின் திருநாட்கள் கொண்டாட்டத்துக்கு உரியவைகள் அல்ல. ஏனென்றால் இந்து மதம் என்பதே பார்ப்பன மேலாதிக்கத்தின் திணிப்பு. ஆகவே, அவை கொண்டாட்டத்திற்கு உரியவையல்ல. இதையும் மீறி தீபாவளியின் … தீபாவளியை என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கொண்டாட்டம்
நமக்குள் நாமே கேட்போம்!
அன்பார்ந்த தோழர்களே, இன்று நவம்பர் 7. உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு - அவர்கள் அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும், - அதுவரையிலான வரலாற்றில் மக்களின் நல்வாழ்வுக்கான விதை ஊன்றப்பட்ட நாள். ரஷ்யப் புரட்சி நாளின் சிறப்பை இப்படி சொற்களுக்குள் சிறைப்படுத்தி விட முடியாது. என்றாலும், இந்த நாளை உணர்வு பொங்க கொண்டாடுவதற்கும், இங்கும் ஒரு புரட்சியைச் சமைப்போம் என்று சூளுரை ஏற்பதற்கும், இந்திய கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கிற நமக்கு தகுதி இருக்கிறதா? என்பது மிகப் பெரிய, பொருள் பொதிந்த, எதிர்கொள்ள … நமக்குள் நாமே கேட்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?
ஹெல்மெட் பிள்ளயாராக அவதாரமெடுக்கும் பிள்ளையார் மக்களைக் கொல்லும் திட்டங்களுக்கு எதிராக ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பிள்ளையார், எட்டுவழிச் சாலை எதிர்ப்பு பிள்ளையார், கெயில் எதிர்ப்பு பிள்ளையார், ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிள்ளையார் என்பன போன்று அவதாரமெடுப்பாரா? வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரம், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் என்று தான் பொருள். அந்த அளவுக்கு திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்டு, முனைப்பெடுத்து, தன் மறை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படுபவைகள் தாம் இவ் விழாக்கள். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் … விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தீபாவளியைக் கொண்டாடாதீர்
அன்பார்ந்த தொழிலாளர்களே! தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒரு அவதாரத்தின் போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்து மதம். யார் இந்த நரகாசுரன்? இரண்யாக்சன் என்றொரு ராட்சசன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழித்து வைத்து விட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை … தீபாவளியைக் கொண்டாடாதீர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
எது கொண்டாட்டம்?
நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் களைத்துப் போய் இருப்பீர்கள், இவ்வாண்டு செய்ய வேண்டிய வேலைகள், அது குறித்த திட்டங்கள், விட வேண்டிய பழக்க வழக்கங்கள், அது குறித்த வரம்புகள் உள்ளிட்ட விபரங்களை எழுதித் தொகுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் படித்துப் பார்த்து ஒருவித பரவச நிலையில் இருப்பீர்கள். நான் நினைப்பது சரியானால் கடந்த ஆண்டும் இதையே செய்திருந்திருப்பீர்கள். ஆனால் கடந்த ஆண்டு திட்டமிட்டதை செய்திருக்கிறோமா? எவ்வளவு விகிதம் நிறைவேற்றியிருக்கிறோம்? ஏன் முழுமையாக நிறைவேறவில்லை? என்ன காரணம்? எது தடையாக … எது கொண்டாட்டம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
விடியவில்லையா? விடிவே இல்லையா?
”நள்ளிரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை” என்றொரு பழங்கவிதை உலவுவதுண்டு. எதிர்மறையில் ஏற்கும் ஏக்கம் அது. கருப்புக் கொடி நாட்டி கருப்பு நாள் என்றறிவித்து எதிர்ப்பை பதிவு செய்யும் எதிர்வினைகளும் இங்குண்டு. எதிர்ப்பின் மூலமே இருப்பதாய் கட்டிக் கொள்ளும் பொருளும் வந்து விடுகிறது அதில். விடியவில்லை எனும் ஏக்கத்துக்கும் கருப்புதினம் எனும் துக்கத்துக்கும் எதிராய், விடுதலை எனும் சொல்லின் வீச்சு இந்த சுதந்திர நாளில்(!) எங்கேனும் ஒட்டியிருக்கிறதா? எனும் கேள்வியே மாற்று. சட்டையில் மூன்றுநிறக் … விடியவில்லையா? விடிவே இல்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாவீரர் நாள் எனும் சடங்கு
நவம்பர் மாத இறுதியில் ஒருவார காலத்திற்கு போரில் மடிந்த வீரர்களை நினைவுகூறும் பொருட்டு மாவீரர் நாள் கொண்டாட்டங்களை 1989 லிருந்து நடத்தி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். இதன் இறுதி நாளன்று புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவார். ஆனால் இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கப் பட்டதுடன் தலைமைப் பொருப்பில் இருந்தவர்களையும் அது நரவேட்டையாடியது. இதனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பிரபகரனோ வேறு புலித்தலைவர்களோ உரையேதும் நிகழ்த்தவில்லை. ஆனால் இந்த … மாவீரர் நாள் எனும் சடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.