கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?

செய்தி: கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,77,977 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,67,496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்

வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?

கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஊரடங்கு அறிவித்து 40 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், இப்போதுதான் சோதனைகளை அதிகரித்திருக்கிறது தமிழக அரசு. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும். இதனால்தான் சென்னையில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் உண்மை வெளியாகி வருகிறது. சமூகப் பரவல் என்ற கட்டத்தை தமிழகம் எட்டி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் பலரும் மீடியாக்களில் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல பிற மாவட்டப் பகுதிகளில் தீவிர பரிசோதனைகள் இன்னமும் தொடங்கப்படவே … கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கின் பின் மக்களின் பாடு

நடந்தே சென்றதால் வெடித்த பாதங்களுடன் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? … ஊரடங்கின் பின் மக்களின் பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய வெறுப்பு எனும் இரண்டாம் கொரானா

இந்துத்துவ காவி பாசிஸ்ட்டுகளால் அப்பாவி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போலியான செய்திகளும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் உருவாக்க முயலும் இஸ்லாமிய வெறுப்புணர்வு எவ்வாறு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்குகிறார் - உளவியல் ஆற்றுப்படுத்துனர், தோழர் வில்லவன் ராமதாஸ். Villavan Ramadoss பாருங்கள், பரப்புங்கள். https://www.youtube.com/watch?v=zB4dFfaeTXE

ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்

தொடரும் ஊரடங்கு, பரிதவிக்கும் மக்கள், அரசு கட்டமைப்பு செய்யத் தவறுவது என்ன? என்ற தலைப்பில் தோழர் வழக்குரைஞர் சுரேசு சக்தி முருகன், அவர்கள் மக்கள் அதிகாரம் சார்பில் முகநூல் வாயிலான இணையக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கேட்பொலி வடிவம். கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் விசயத்தில் அரசு பல இடங்களில் கோட்டை விட்டிருப்பது பலருக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் குறிப்பாக என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருந்தால் மக்களின் பரிதவிப்பை போக்கி இருக்கலாம். அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல … ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2

இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படித்து விட்டு இதை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அதை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்: கொரோனா: ஊரடங்கின் பிறகு? திருட்டு அதிகரித்து விட்டது அதானால் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். பிற நாட்டினர் இங்கு சட்ட விரோதமாக வசிக்கிறார்கள் அதனால் குடியுரிமை சட்டம் திருத்தப்படலாம். மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. முறைகேடு நடக்கிறது. அதனால், தேசிய அடையாள அட்டையை உருவாக்கி … கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: ஊரடங்கின் பிறகு?

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் அதிகரிக்குமோ எனும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு எனும் வீட்டுச் சிறைக்குள் மக்கள் தங்களைத் தாங்களே பிணைத்துக் கொண்டுள்ளார்கள். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் 200 கிமீ தூரம் கூட மக்கள் நடந்தே கடக்கிறார்கள் எனும் செய்திகளையும், ஊரடங்கு காலத்தில் இதுவரை பட்டினியால் 22 பேர் மரணமடைந்துள்ளார்கள் எனும் செய்தியையும், விளைந்தும் அறுவடை செய்ய முடியாத, கறந்த பாலை சாக்கடையில் கொட்டும் செய்திகளையும் காணும் போது, மழுங்கிய … கொரோனா: ஊரடங்கின் பிறகு?-ஐ படிப்பதைத் தொடரவும்.