ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்

வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?

கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஊரடங்கு அறிவித்து 40 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், இப்போதுதான் சோதனைகளை அதிகரித்திருக்கிறது தமிழக அரசு. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும். இதனால்தான் சென்னையில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் உண்மை வெளியாகி வருகிறது. சமூகப் பரவல் என்ற கட்டத்தை தமிழகம் எட்டி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் பலரும் மீடியாக்களில் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல பிற மாவட்டப் பகுதிகளில் தீவிர பரிசோதனைகள் இன்னமும் தொடங்கப்படவே … கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்

கடந்த இரண்டு நாட்களாக, ரேபிட் கிட் எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் நாளிதழ்களிலோ, காட்சி ஊடகங்களிலோ இவை குறித்து பெரிதாக எந்தவிதமான செய்திகளோ விவாதங்களோ நடைபெறவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டு நாளிதழ்கள் அனைத்தும் ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுள்ளன. மாறாக தலையங்கமாகவோ, கட்டுரையாகவோ, பொதுச் செய்தியாகவோ இதை வெளியிடவில்லை. இதன் பொருள் என்னவென்றால், எதிர்கட்ட்சிகள் தான் இதில் முறைகேடுகள் இருப்பதாக … கொரோனாவே வெட்கப்படும் ஊழல் கிருமிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கின் பின் மக்களின் பாடு

நடந்தே சென்றதால் வெடித்த பாதங்களுடன் கொரோனா பரவலை தடுக்கும் முகமாக இரண்டாவது ஊரடங்கு காலம் நடப்பில் இருக்கிறது. மக்கள் பெரும்பாலும் நோய்த் தொற்றின் அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். காய்கறி உள்ளிட்ட தள்ள முடியாத தேவைகளுக்கு மக்கள் வெளியில் வந்தாக வேண்டியதிருக்கிறது. மக்களின் இந்த தேவையை மதிக்காத அரசு, அவர்களின் தேவையை வீடுகளுக்கே சென்று தீர்த்து வைக்க முடியாத அரசு, மக்கள் மீது சமூக விலக்கலை மதிக்காமல் அலைகிறார்கள் என்று குற்றம் சுமத்துவதற்கு ஏதாவது அறுகதை இருக்கிறதா? … ஊரடங்கின் பின் மக்களின் பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்

எந்த வர்க்கத்தினரின் உயிரை கொரோனாவிடமிருந்து பாதுகாப்பதற்காக, எந்த வர்க்கத்தினர் சாக வேண்டும்? மும்பை – பாந்த்ராவில் நேற்று நடைபெற்றிருக்கும் தடியடி, சிதறிக் கிடக்கும் செருப்புகள், ஏழைத் தொழிலாளிகளின் கண்ணீர் – இவற்றைக் காணச் சகிக்கவில்லை. “யாரோ ஒருவர் சோறுபோடுவார் என்று நாங்கள் எப்படி கையேந்தி நிற்க முடியும்?” என்று கேட்கிறார் ஒரு தொழிலாளி. “சோறு போட வக்கில்லாத அரசுக்கு எங்களைத் தடுத்து வைக்க என்ன உரிமை இருக்கிறது?” என்று அந்த அப்பாவி மக்களுக்கு கேட்கத் தெரியவில்லை. எல்லோருக்கும் … பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா: அரசியல் செய்யலாமா?

“நாடு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யலாமா?” சமூகம் குறித்து, மக்களைக் குறித்து அக்கரை கொள்ளும் எவரும் இந்தக் கேள்வியை தவிர்த்திருக்க முடியாது. அரசை விமர்சித்து, அர்சின் செயல்பாடுகளை எதிர்த்து எப்போதெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவோ அப்போதெல்லாம்; எப்போதெல்லாம் அரசிடம் அல்லது அரசின் ஆதரவாளர்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லையோ அப்போதெல்லாம், இந்தக் கேள்விதான் முன்வைக்கப்படுகிறது. ஏன்? செய்தால் என்ன? அரசியல் செய்வதற்கு இடம், பொருள், ஏவல், காலம் எல்லாம் உண்டா? அரசுக்கு, மக்களுக்கு ஒரு நெருக்கடி … கொரோனா: அரசியல் செய்யலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாமிய வெறுப்பு எனும் இரண்டாம் கொரானா

இந்துத்துவ காவி பாசிஸ்ட்டுகளால் அப்பாவி இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக போலியான செய்திகளும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்துத்துவ பாசிஸ்ட்டுகள் உருவாக்க முயலும் இஸ்லாமிய வெறுப்புணர்வு எவ்வாறு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்குகிறார் - உளவியல் ஆற்றுப்படுத்துனர், தோழர் வில்லவன் ராமதாஸ். Villavan Ramadoss பாருங்கள், பரப்புங்கள். https://www.youtube.com/watch?v=zB4dFfaeTXE

ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்

தொடரும் ஊரடங்கு, பரிதவிக்கும் மக்கள், அரசு கட்டமைப்பு செய்யத் தவறுவது என்ன? என்ற தலைப்பில் தோழர் வழக்குரைஞர் சுரேசு சக்தி முருகன், அவர்கள் மக்கள் அதிகாரம் சார்பில் முகநூல் வாயிலான இணையக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கேட்பொலி வடிவம். கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் விசயத்தில் அரசு பல இடங்களில் கோட்டை விட்டிருப்பது பலருக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் குறிப்பாக என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருந்தால் மக்களின் பரிதவிப்பை போக்கி இருக்கலாம். அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல … ஊரடங்கு: பரிதவிக்கும் மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது

தோழர் இரயாகரன். மார்க்சியத்தோடு தொடர்பு கொண்டுள்ள தமிழர்கள் யாருக்கும் இவர் குறித்த அறிமுகம் தேவைப்படாது. ஃபிரான்சில் வசிக்கும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்லாது மனைவி, இரண்டு மகன்களுக்கும் அறிகுறி காணப்பட்டுள்ளது. தனக்கு ஏற்பட்டுள்ள தொற்று குறித்தும், அது ஏற்பட்ட விதம் குறித்தும் அவர் எழுதிய கட்டுரை இது. விரைவில் குணம் பெற்று மீண்டும் தனது அரசியல் பணிகளை தொடர வேண்டும், வழக்கம் போல் எழுத வேண்டும். எழுதுவார். அனைவரையும் போல அவரது அடுத்த கட்டுரையை … கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகின்றது-ஐ படிப்பதைத் தொடரவும்.