ஊரடங்கு எனும் நிதித் தொற்று

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஊரடங்கு எனும் கரிய இருட்டு எளிய மக்களின் வாழ்வை கவ்விக் கொண்டு இருக்கிறது. கொரோனா தொற்று தொற்றிவிடாதிருக்க ஊரடங்கு தான் ஒரே வழி என்பது எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஊரடங்கு என்பது, இரண்டு வாரம் ஊரடங்கு இரண்டு நாள் தளர்வு மீண்டும் ஊரடங்கு என்று போய்க் கொண்டிருக்கிறது. அதாவது என்ன காரணத்துக்காக ஊரடங்கை நடைமுறைப் படுத்துகிறார்களோ அதற்கு நேர் எதிரான விதத்தில்…

நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,

“சித்தா வெறியர்ஸ்” பிரபல பதிவராக இருக்கும், எதையும் உளவியல் ரீதியாக அணுகும், கம்யூனிசத்தில் அக்கரை கொண்ட தோழர் ஒருவரின் சொற்கள் இவை. ஏன் இவ்வளவு வன்மம். தொடர்ந்து இப்படியான சொற்களும், முத்திரை குத்தல்களும் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ ஓரிரு எடுத்துக்காட்டுகள். “சித்தம், ஓமியோபதி, இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. கொஞ்சம் விஞ்ஞானத்தின் குரலை கொஞ்சம் கேளுங்கள்” இது இன்னொரு நண்பர். அதாவது அலோபதி தவிர வேறு…

தடுப்பூசியை காட்டி கொள்ளையிடலாமா?

தடுப்பூசி குறித்து ஏதேனும் கேள்வி எழுப்பி விட்டால் போதும், உடனேயே அது அறிவியலுக்கு எதிரான பார்வை என்று ஒரேயடியாக முத்திரை குத்திவிடும் போக்கு தற்போது பரவலாக இருக்கிறது. இந்த தடுப்பூசிக்கு பிரச்சார முகவர்களாக செயல்படும் அலோபதி மருத்துவர்கள், தடுப்பூசியை சுற்றி நிகழும் எது குறித்தும் நாங்கள் அக்கரைப்படமாட்டோம் என்று வாய் மூடி இருப்பார்களானால் தடுப்பூசி குறித்து பிரச்சாரம் செய்யும் உரிமை மட்டும் அவர்களுக்கு எங்கிருந்து வரும்? தடுப்பூசிகளின் பின்னுள்ள அரசியலையையும், கொள்ளையையும் விளக்குகிறார் தோழர் கலையரசன். பாருங்கள்…

கொரோனாவில் மே நாள்

கடந்த ஆண்டின் மே நாளில் வெளியான கட்டுரையின் மீள்பதிவே இது. சூழலும் தேவையும் மாறிவிடவில்லை என்பதால் .. கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும்…

இவ்வளவும் ஸ்டெர்லைட்டை திறக்கத்தானா?

ஆக்சிஜனை விலைக்கு வாங்குங்கள் அல்லது கடனுக்கு வாங்குங்கள், உற்பத்தி செய்யுங்கள் அல்லது இறக்குமதி செய்யுங்கள், திருடுங்கள், கொள்ளையடியுங்கள் அல்லது பிச்சை எடுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜனை வழங்கி விடுங்கள். என்று பதறுகிறார் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி. ஆக்சிஜன் கிடைப்பதற்கு தடையாக இருந்தால் அவரை தூக்கில் போடவும் தயங்க மாட்டோம் என ஆவேசப்படுகிறார் இன்னொரு நீதிபதி. இன்னும் சில மணி நேரத்துக்குத் தான் ஆக்சிஜன் இருப்பு தாக்குப்பிடிக்கும் என்று கதறுகின்றன மருத்துவமனைகள். ஆக்சிஜன் கிடைக்கவில்லையென்றால் தில்லியே…

காறித் துப்பும் உண்மைகள்

தெருவில் திரியும் அல்லது வலியுடன் உயிர்பிடித்து மூச்சுவிடமுடியாமல் இருக்கும் அத்தனை நோயாளிகள் சார்பாகவும், நோயாளிகள் சாவதை அருகில் நின்று கையறு நிலையில் வேடிக்கைப்பார்க்கும் அவர்களது நண்பர்கள் & உறவினர்கள் சார்பாகவே கேட்கிறேன். என் கேள்விகள் மத்திய அரசை பார்த்து மட்டும் அல்ல. அவர்களை ஆதரிக்கும் மூடர்களைப் பார்த்தும் தான். 1. நுரையீரல் தொற்றை ஓரளவிற்குச் சரி செய்யும் ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை 4500 ரூபாய்க்கு விற்கும் தருவாயில் , ஒரு மருந்து கம்பெனி தானாய் முன்வந்து 1500…

தடுப்பூசியா? கடுப்பூசியா?

செய்தி: கரோனா தடுப்பு மருந்துகள் 100 சதவீதம் பாதுகாப்பானவை என இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேயில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் கரோனா தடுப்பு மருந்துகளை அவசர காலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துக்…

2021 நாட்காட்டி

தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம். இந்த ஆண்டுக்கான நாட்காட்டி பதிவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, ஒரே கோப்பாக வேண்டுவோரும், தனித்தனியாக வேண்டுவோரும் விருப்பப்படி பதிவிறக்கிக் கொள்ள வாய்ப்பாக தனித்தனியே பதிவிடப்பட்டுள்ளது. வழக்கம் போல உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன். கடந்த ஆண்டு கொரோனா எனும் பெருந்தொற்று மக்களை வீட்டுக்குள் முடக்கிப் போட்டது. சாப்பாட்டுக்கு வெளியில் சென்றே ஆக வேண்டும் எனும் நிலையில் இருந்தோர் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டனர். ஆனாலும் கார்ப்பரேட்டுகளுக்கான கருப்புச் சட்டங்களுக்கு எந்த முடக்கமும் இல்லாமல் கொரோனாவைப் பயன்படுத்தி பயன்பாட்டுக்கு…

கொரோனா பாதிப்பு: ஏன் இந்த கொல வெறி?

செய்தி: கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 74,383 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 70,53,807 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 918 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,08,334 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,77,977 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 8,67,496 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?

செய்தி: கோவை ஹோப்காலேஜை சேர்தவர் இளவரசன். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, தட்டியால் அடைத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி நிர்வாகம் பேனர் வைத்தது. மாநகராட்சி பேனர் வைத்த பின்னர், இளவரசன் குடும்பத்தினர் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருப்பதாக கூறி, எங்களை அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என்று பேனர் வைத்திருந்தார். இதையடுத்து இளவரனுக்கு மாநகராட்சி…