கொரோனாவை முன்வைத்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 50 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லாமல் அல்லது வேறு வழி தெரியாமல் மக்கள் தங்களை வீடுகளுக்குள் முடக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே இந்த ஊரங்கு நேரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கைதட்டு, விளக்கணை, தீவட்டி ஏற்று, பூத்தூவு என்று மக்களை கேலி செய்வதை விடுத்து அரசு வேறு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஏற்கனவே கொரோனா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வதை நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போன்ற … நமக்கு ஊரடங்கு, அரசுக்கு விற்றடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கொள்முதல்
உணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா? பறிப்பதற்கா?
கடந்த வாரத்தில் அமைச்சரவை கூடி உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதிலுள்ள சிக்கல்களை களைவது குறித்து விவாதித்தது. வறிய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் கிடங்குகளில் சேமிக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்கள் வீணாய் கெட்டுப் போனாலும் போகலாமேயன்றி ஏழைகளுக்கு அதை வழங்க முடியாது என்று மண்மோகன் சிங் முழங்கியிருந்தார். அப்படியிருக்க திடீரென்று என்ன மாற்றம் எப்படி நேர்ந்தது? மாற்றமோ மாறுதலோ … உணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா? பறிப்பதற்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.