பெருமழை! கன மழை! மாதம் மும்மாரி பொழிகிறதா? கேள்வி மாறி விட்டது. ஏசி காரில், கண்ணாடியும் இறக்காமல் மூன்று மாத மழை மூன்று நாளில். கேள்வி மட்டுமா? மழையும் மாறிவிட்டது. அம்மா வந்த சாலையில் தேங்கவே இல்லையே மழை நீர். எல்லாருமே நடிகர்கள் தாம். முட்டிவரை ரப்பர் செருப்பில் ஒரு நடிகர் தொடைவரை மடித்துக் கட்டி ஒரு நடிகர் வாக்காளப் பெருங்குடி மக்களே என்றொரு நடிகர் இந்த துன்பியல் நாடகத்தில் மக்களுக்கு மட்டுமே சோகம். … அறுகதையற்றதை காட்டும் மழை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: கொள்ளை
கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்
அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவாலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காக அளிக்கலாம் எனும் நோட்டோ முறையும் விவாதத்தைக் கிளப்பி வரவேற்பை பெற்றிருகின்றன. தேர்தல் காலங்களில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்களிடம் இவை புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கின்றன. அரசும் கட்சிகளும் அப்படித்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகக் … கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான 150 கி.மீ. கிழக்குக் கடற்கரையில் கார்னெட், இல்மனேட் ருடைல், சிலிகான், மோனோசைட் ஆகிய விலைமதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கிறது. இக்கனிமங்கள் கடற்கரை மணலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனால் துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலான கடற்கரை முழுவதும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கனிமவளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறை சம்மந்தமான விதிகள் உட்பட எல்லா விதிகளையும் காலில் போட்டு … தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
வாழ்வையும், பண்பாட்டையும் ஆக்கிரமிக்கும் பயங்கரவாதி
மக்களின் ஆரோக்கியத்தின் மீதும், மனித வளத்தின் மீதும், தனி மனிதனின் ஆளுமையின் மீதும் மிகப்பெரிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு தாக்குதலை தொடுத்து வருகிறது தமிழக அரசு .. .. .. சாராய வியாபாரத்தின் மூலம். குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி, கொலை. குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை. குடிபோதையில் மனைவி குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி .. .. .. இப்படி அன்றாடம் மூன்று நான்கு செய்திகளை பத்திரிக்கைகளில் பார்க்கிறோம். அண்மைக்காலமாக நிகழும் குற்ற … வாழ்வையும், பண்பாட்டையும் ஆக்கிரமிக்கும் பயங்கரவாதி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மௌனகுரு: அழுத்தமில்லாமல், மௌனமாய் சொல்லும் யதார்த்தம்
தமிழ் திரைப்படங்கள் நடப்பு யதார்த்தங்களை களமாக கொண்டிருக்கின்றனவா என்றால் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால், இயக்குனர்களும் சமூகத்திலிருந்து வந்தவர்கள் தானே. அதனால், சில படங்களில் அவர்கள் அறியாமல் கதைப்போக்கில் அது ஊடுருவி விடுவதுண்டு. அந்த வகையில் அண்மையில் வெளிவந்த மங்காத்தாவில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகளே திட்டமிட்டு கொள்ளையடிக்கும் கதை வெளிவந்து பரவலாக வரவேற்பை பெற்றது, இப்போது மௌனகுரு. மங்காத்தாவுக்கும் மௌனகுருவுக்கும் இடையில் மிகுந்த வித்தியாசம் உண்டு. மங்காத்தாவில் அந்த யதார்த்தம் தான் கதைநாயகன், … மௌனகுரு: அழுத்தமில்லாமல், மௌனமாய் சொல்லும் யதார்த்தம்-ஐ படிப்பதைத் தொடரவும்.