எல்லை தாண்டும் பொய்கள்

பாஜக எனும் பாசிசக் கூட்டத்துக்கும் பொய்களுக்கும் இடையிலான நெருக்கம் அவ்வளவு எளிதில் இற்று விடக் கூடியது அல்ல. இந்தியாவை மத அடிப்படையில் இரண்டாக பிரிக்க ஆவன செய்து விட்டு, ஜின்னா நாட்டை துண்டாடுகிறார் என பரப்பியதில் தொடங்கிய பொய்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். என்றாலும் தற்போது அது புதிய உச்சங்களை எட்டி வருகிறது என்பது கவனத்துக்கு உரியது. இந்தியாவில் ஊடகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும் எல்லோருக்கும் தெரிந்த கமுக்க(இரகசிய)ச் செய்தி … எல்லை தாண்டும் பொய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடி சொன்னால் உண்மை இருக்குமா?

ஜூலை 27 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, "கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் உள்ளது" என்று கூறினார், இது தனக்கு வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு அடிப்படையில் ஒப்பீடுகளைச் செய்யும் அவரது போக்கை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியான ஊரடங்குகள் COVID-19 பாதிப்பு வரைபடத்தை தட்டையாக்குவதற்கு பதிலாக வீங்கச் செய்திருக்கிறது. அரசாங்கத்தில் உள்ள மற்றவர்களைப் போலவே (தொற்றுநோயின் வளர்ச்சியைக் குறைப்பதில் இந்தியாவின் ஊரடங்கின் தாக்கம் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய நிதி ஆயோக் உறுப்பினர் … மோடி சொன்னால் உண்மை இருக்குமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்

வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிருமிகள் உலகில் மனிதர்கள்

கொரோனா .. .. .. 21 நாட்கள் ஊரடக்கின் இரண்டாவது நாள் இன்று. நாடெங்கும் ஏன் பாரெங்கும் ஒரு பாதையில் விரைந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான பாதையில் இயல்பாகவே ஒரு மாற்றுக் குறைவு ஏற்பட்டு விடுகிறது. என்றாலும் அதில் இருக்கும் நியாயங்கள் மறைக்கப்பட்டாக வேண்டுமா? விவாதிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன். நுண்ணுயிர் தேற்றம் (Germ theory) அதன் தொடக்க காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டிருக்கின்றன. அலோபதி மருத்துவத்தின் போதாமையும், அறிவியல் ஆய்வுகள் என்ற … கிருமிகள் உலகில் மனிதர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.