ஃபீலிங்கு

சிறிது காலத்துக்கு முன்பு நானும் கோவையைச் சேர்ந்த ஒரு தோழரும் இணைந்து அதிகளவாக பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவது போன்ற தலைப்புசார்ந்த காணொளிகளை எடுத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு சில வரையறைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம். அழகியல், திரைமொழி, காட்சிப்பாட்டை என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கம்யூனிசம் தான் கருவாக இருக்க வேண்டும், ஆனால் கம்யூனிச கலைச் சொற்கள் எதையும் பயன்படுத்தி விடக் கூடாது. எளிமையாக மக்கள் வாழ்வில் இருக்கும் கேள்விகளை எடுத்துக் கொண்டு, … ஃபீலிங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெட்ரோல் குண்டில் சிக்சர் அடிப்பாரா ஸ்டாலின்?

கடந்த ஒரு வாரமாகவே கோவை கலவர பூமியாக திட்டமிட்டு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜக அலுவலகங்களிலும், பாஜகவினரின் வீடுகள் சிலவற்றிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில். வெடிகுண்டு வரலாற்றிலிருந்து பார்ப்பதாக இருந்தால் நட்டின் எந்த மூலையில் வெடிகுண்டு வெடித்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஐ தான் முதலில் ஐயப்பட வேண்டும். நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் கை இருக்கிறது என்பது மாலேகான் … பெட்ரோல் குண்டில் சிக்சர் அடிப்பாரா ஸ்டாலின்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்

கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து news laundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இது அதன் மொழிபெயர்ப்பு. கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும்போதெல்லாம், "இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?" என்று … ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலவர முயற்சியில் காவிக் குரங்குகள்

கோவை டவுண்ஹால் பகுதியில், பாஜக வானதியை ஆதரித்து பேச வருகிறார் யோகி என்பதை சாக்கிட்டு வானரக் கூட்டம் ஒரு வன்முறை வெறியாட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஈருருளி (இருசக்கர வண்டி) ஊர்வலம் என்ற பெயரில் அந்த விலங்காண்டிகள், கடைகளை மூடச் சொல்லி அடாவடி செய்ததுடன், கேள்வி எழுப்பியவர்களை தாக்கி, கல்லெறிந்து அச்சமூட்டி இருக்கிறது. பள்ளிவாசல்கள் முன்னின்று வெறிக்கூச்சல் இட்டிருக்கிறது. பள்ளிவாசல்களுக்கு முன்பு சாலையில் அமர்ந்து பேயாட்டம் ஆடியிருக்கிறது. இவை எதுவும் புதிய விதயங்கள் அல்ல. ஏற்கனவே வட மாநிலங்களில் … கலவர முயற்சியில் காவிக் குரங்குகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?

செய்தி: கோவை ஹோப்காலேஜை சேர்தவர் இளவரசன். மனைவி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி, தட்டியால் அடைத்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று மாநகராட்சி நிர்வாகம் பேனர் வைத்தது. மாநகராட்சி பேனர் வைத்த பின்னர், இளவரசன் குடும்பத்தினர் தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தங்கள் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருப்பதாக கூறி, எங்களை அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் என்று பேனர் வைத்திருந்தார். இதையடுத்து இளவரனுக்கு மாநகராட்சி … கேவலப்படுத்தாதீங்க என்று சொன்னதுக்கு கைதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிராம அளவில் நடக்கும் ஊழல்

அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலை எண்பத்தோறு குழந்தைகளுக்கு கொடுத்ததாக ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் கண்டோம். தோராயமாக ஒரு குழந்தைக்கு 200 மில்லி கொடுப்பதாக இருந்தால், ஒரு லிட்டர் பாலோடு 15 லிட்டர் தண்னீரை கலந்திருக்கிறார்கள். இவ்வளவு தண்ணீரை கலந்தால் அது பாலாக இருக்குமா? என்பது ஒரு பக்கம். அந்த 15 லிட்டர் பாலின் விலை யாரோ சிலரின் பைகளுக்குள் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான்  உண்மை. ஒரு நாளில், ஒரு வேளையில் … கிராம அளவில் நடக்கும் ஊழல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்

எங்கும் செம்மொழி, எதிலும் செம்மொழி. மன்னிக்கவும், எங்கும் செம்மொழி மாநாடு, எதிலும் செம்மொழி மாநாடு. அனைத்து வகை ஊடகங்களும் அரசின் கவனிப்பில் (அல்லது கண்காணிப்பில்) திக்குமுக்காடிப் போய் செம்மொழி மாநாடு என்றே தீர்க்கின்றன. திருவிழாக்கூட்டம் போல் கோவை நிறைந்திருக்கிறது. பல்நாட்டு அறிஞர்கள் ஆய்வேடுகள் சாற்றுகிறார்கள். கலைச்சொற்கள் காற்றில் பரவுகின்றன. அக்கால மன்னர்கள் பரிசில் வழங்கியது போல், அறிஞர்கள் பட்டமும் விருதும் பெறுகிறார்கள். மக்கள் அரங்க அமைப்பையும், ஆரவாரத்தையும் கண்டு பேருவகை அடைகிறார்கள். ஆனால் தமிழ்? ஆய்வேடுகள் ஒப்பிக்கப்பட்டு … செம்மொழி மாநாட்டின் ஆரவாரத்தில் அடங்கிப் போனது தமிழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.