எதிர்வரும் நவம்பர் 20ம் தேதி திப்புவின் பிறந்த நாள். திப்பு என்றாலே பார்ப்பனியத்துக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் கர்நாடக மாநிலத்தில் அரசு தொலைக்காட்சியில் இராமாயணம் ஒளிபரப்பட்டுக் கொண்டிருந்த போது, திப்புவின் வரலாற்றுத் தொடரை ஒளிபரப்ப முன்வந்தது ஒரு தொலைகாட்சி நிறுவனம். அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாக, இது கற்பனைக் கதை எனும் முன்னொட்டுடன் திப்புவின் வரலாறு ஒளிபரப்பப்பட்டது. அதாவது, நடந்தது என்பதற்கு எந்தவித் சான்றும் இல்லாத, வெறும் புராணமான இராமாயணம் எந்த முன்னொட்டும் இல்லாமல் … திப்பு: விடுதலைப் போரின் முன்னோடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சங்கி
இந்து மதப் பண்டிகைகள்
இன்று விநாயகர் சதூர்தியாம். கொரோனாவால் இந்தக் கூத்துகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கடவுளை வைத்து வழிபடுவதற்கும், கடவுளை வைத்து அரசியல் செய்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. பிற மதத்தினர் செய்வதெல்லாம் கடவுளை வைத்து வழிபடுவது தொடர்பான திருவிழாக்கள், இந்து மதத்தில் செய்யப்படுவதெல்லாம் கடவுளை வைத்து அரசியல் செய்வது தொடர்பான விழாக்கள். ஆனால் இதில் சிக்கல்கள், தடைகளை எதிர் கொள்ளும் போதெல்லாம் கடவுளை இழிவுபடுத்துகிறார்கள், கடவுளை வழிபட தடை விதிக்கிறார்கள் என்றெல்லாம் கூப்பாடு போட்டு, அரசியல் கடவுளை, … இந்து மதப் பண்டிகைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்
கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் வலைக்காட்சியில், முன்னர் வெளியிடப்பட்டிருந்த கந்த சஷ்டி கவசத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துக் கொண்டு குதித்துக் கொண்டிருக்கிறது சங்கிகள் கூட்டம். காவல்துறையிடம் முறையீடு அளிக்கப்பட்டு அந்த வலைக்காட்சியின் பொறுப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது சங்கிகளே நமக்கு தங்கக் காம்பளத்தில் வைத்து அளித்திருக்கும் வாய்ப்பு. முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் இந்த வழக்கில் இணைந்து கொள்ள வேண்டும். தமிழ் மொழி பெயர்ப்பு ஆபாசம் என்றால், அதற்காக அந்த வலைக்காட்ட்சி தடை செய்யப்படலாம் என்றால், அதற்காக … இந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்
சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கூறிக் கொண்டு, பயன்பாடு தீர்ந்த அல்லது பயன்பாடு குறைந்த பொருட்களை ஒளிப்பதிவு கருவிகளின் முன் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். அதாவது, அரசு சீனாவுக்கு எதிராக இருக்கிறது என்றும், சீனாவின் பொருளாதாரத்தை குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். மெய்யாகவே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைச் சிக்கலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவுக்கான சீனத் தூதரை அழைத்து கண்டிக்கலாம், சீனாவுக்கான இந்தியத் தூதரை … எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: அரசியல் செய்யலாமா?
“நாடு இருக்கும் இந்த இக்கட்டான நிலையில் அரசியல் செய்யலாமா?” சமூகம் குறித்து, மக்களைக் குறித்து அக்கரை கொள்ளும் எவரும் இந்தக் கேள்வியை தவிர்த்திருக்க முடியாது. அரசை விமர்சித்து, அர்சின் செயல்பாடுகளை எதிர்த்து எப்போதெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றனவோ அப்போதெல்லாம்; எப்போதெல்லாம் அரசிடம் அல்லது அரசின் ஆதரவாளர்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் இல்லையோ அப்போதெல்லாம், இந்தக் கேள்விதான் முன்வைக்கப்படுகிறது. ஏன்? செய்தால் என்ன? அரசியல் செய்வதற்கு இடம், பொருள், ஏவல், காலம் எல்லாம் உண்டா? அரசுக்கு, மக்களுக்கு ஒரு நெருக்கடி … கொரோனா: அரசியல் செய்யலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.