கடந்த சித்திரை முதல் தேதியன்று ஆளுனர் தமிழ்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேனிர் விருந்து ஒன்றை அளித்தார். அந்தத் தேனீர் விருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கிடக்கையை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது. பொதுவாக ஆளுனர் எனும் பதவியின் அதிகார வரம்பு என்ன? என்பது இங்கு எப்போதும் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு? எனும் கேள்வி மக்களை ஈர்த்த கேள்வியாக இங்கு உலவியதுண்டு. அண்மையில் மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரியான சொல் … தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சட்டமன்றம்
தேர்தல் முடிவு: பின்வாயால் சிரிக்கும் மக்களாட்சி
உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இவைகளில் உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றது. பஞ்சாப்பில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும் அதிக இடங்களைப் பிடித்த கட்சியாக வந்துள்ளது. ஓட்டுக் கட்சிகள் தேர்தல்களை எப்படி எதிர் கொள்கின்றன என்பதற்கு புதிதாக விளக்கம் கூற வேண்டிய … தேர்தல் முடிவு: பின்வாயால் சிரிக்கும் மக்களாட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?
அடுத்தடுத்து கரையில் மோதும் அலைகளைப்போல், ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் தைத்து உறைந்து கிடக்கும் கோபத்தை உசுப்பிவிடும் தகுதியை ஊழல்கள் என்றோ இழந்துவிட்டன. காரணம், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே தமக்குள் ஊழல் வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்காக கட்சியோ, கட்சிக்காரர்களோ தண்டிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாது உள்ளுறையாக மக்களே ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சந்தர்ப்பவாதமாக ஓட்டுக்குப் பணம் தொடங்கி, சுயநலமாக, காரியவாதமாக தமக்கு என்ன லாபம்? எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். … ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?-ஐ படிப்பதைத் தொடரவும்.