ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்

கடந்த 25 ம் தேதி இஸ்ரோ கடவுள்கள் ஏவிய ஜிஎஸ்எல்வி ராக்கெட் சிவகாசி ராக்கெட்டாகிப் போனதில் கடவுளர்களுக்கு மட்டுமல்லாது பக்தர்களுக்கும் ஏக வருத்தம். ஏனென்றால் முன்பு உள்ளூர் தயாரிப்பு என்று ஏழுமலையானையெல்லாம் ஏவலுக்கு கூப்பிட்ட பிறகும் அவன் அழுத்தமாக போட்ட கோவிந்தாவின் இழுப்பு ஏப்ரலிலிருந்து டிசம்பர் வரை நீண்டுவிட்டதே. ஒரு செயற்கைக்கோள் ஏவல் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படும்போது அது ஒரு செய்தியாக முடிந்துவிடுகிறது. ஆனால் அதுவே தோல்வியில் முடியும்போது அதனுடன் தேசபக்தியும் கலந்துவிடுவதால் அதன் பரப்பெல்லை … ராக்கெட் விட்டவர்களின் ராக்கெட்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்

இந்தியராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாள் ஒரு பொன்னாள் என்றும் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என்றும் இன்னும் பலவாறாக குறிப்பிடப்படும் சிறப்புமிக்க சந்திராயன்1 திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி காலை 6மணி22னிமிடத்திற்கு சந்திராயன்1 விண்கலம் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனம் பிஎஸ்எல்வி சி11 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு நிலவை நோக்கி பயணமாகிவிட்டது. அது குறைந்தது 250கிமி தூரத்திலும் அதிக அளவாக 23ஆயிரம் கிமி தூரத்திலும் நீள்வட்டப்பாதையில் பூமியை இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு … சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்-ஐ படிப்பதைத் தொடரவும்.