என்னவாகும் அண்ணாச்சிக் கடைகள்? உலகம் முழுவதும் விற்பனையாகும் சில்லறை வணிகத்தில் மதிப்பு 3.25 ட்ரில்லியன் டாலர்கள் (2017). இந்திய சில்லறை வணிகத்தின் மதிப்பு 2019 மதிப்பின்படி 700 பில்லியனாகவும், 2025க்குள் 1.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகவும் வளரும் என்றும் கணக்கிட்டு இருக்கிறார்கள். எனில், இந்திய சில்லறை வணிகத்தின் பரிமாணத்தை நாம் புரிந்துகொள்ளலாம். தற்போது இந்தியாவில் இந்த வணிகத்தில் ஈடுபடும் கடைகளின் எண்ணிக்கை 1.2. கோடி. இவர்களில் பாதி பேரை மட்டும் வெளியேற்றி அதை மூன்று பேர் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 8-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சந்தை
மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 7
கொரோனாவிடம் தோல்வி; சீன நிறுவனங்களை வெளியேற்றுவதில் வெற்றி! கொரோனா பெரும்தொற்று வந்து பொது முடக்கம் அறிவித்த பின்பு இந்திய இணைய வர்த்தகம் பெரும் எழுச்சி கண்டது. இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் அடிநாதமான சில்லறை வர்த்தக சந்தையைக் கைப்பற்ற அமேசான், வால்மார்ட், ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள் போட்டியில் இறங்கின. தமது பலகீனங்களை சில நிறுவனங்களுடன் இணைத்துக்கொண்டும், மற்ற நிறுவனங்களை வாங்கி இணைத்து பலப்படுத்திக்கொண்டும் களமிறங்கின. மிக சமீபத்தில் சந்தைக்கு வந்திருந்தாலும், ஜியோ தனது சொந்த இணையம், தரவுகளின் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 7-ஐ படிப்பதைத் தொடரவும்.
மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 6
ஆதார், அலைக்கற்றை போட்டியில் தொடங்கும் புதிய பொருளாதார முறையை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்பு இந்தப் போட்டியின் தொடர்ச்சியில் எதேச்சதிகார வகுப்புவாத சிந்தனை கொண்ட கட்சியை ஆட்சியில் அமர்த்துவதிலும், மக்களின் உரிமைகளை கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை உசுப்பிவிட்டு வாழ்வாதாரத்தை பறிக்கும் பணமதிப்பிழப்பாகவும், ஜனநாயகமறுப்பு வடிவம் பெறுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலங்களின் வரிவிதிக்கும் உரிமையை மறுத்து ஒன்றிய மாமன்னரின்கீழ் வாழும் குறுநில மன்னர்களாக மாற்றும் ஜிஎஸ்டி வரிவதிப்பு முறையைக் கொண்டுவந்து இந்தியாவைப் பின்னோக்கி நகர்த்துகிறது. இந்த நடவடிக்கைகள் மக்களை வஞ்சகமாக … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா?சாபமா? 6-ஐ படிப்பதைத் தொடரவும்.
மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 5
கூட்டுக்களவாணித்தனப் பொருளாதார முறையும் அதற்கு ஏற்ற அரசும் சந்தையில் தனது சொந்த உற்பத்தி தொழில்நுட்பத்தின் வலிமையில் சீன நிறுவனங்களுடன் போட்டியிட்டு வெல்ல முடியாத அமெரிக்க நிறுவனங்களுக்கும், இந்திய தொலைதொடர்பு துறையில் ஏற்கனவே வலிமையாக உள்ள ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வலிமையற்ற ஜியோவுக்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தையைக் கைப்பற்றுவதை தவிர வேறு வழி இருந்திருக்கவில்லை. ஆனால் தென் கொரியாவைப் போல கூட்டுக் களவாணித்தனப் பொருளாதாரத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த ராணுவ சர்வாதிகாரம் சாத்தியமற்றது மட்டுமல்ல, அவசியம் … மின்னணு பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா? 5-ஐ படிப்பதைத் தொடரவும்.
எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்
சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்று கூறிக் கொண்டு, பயன்பாடு தீர்ந்த அல்லது பயன்பாடு குறைந்த பொருட்களை ஒளிப்பதிவு கருவிகளின் முன் உடைத்துக் கொண்டிருக்கிறார்கள் சங்கிகள். அதாவது, அரசு சீனாவுக்கு எதிராக இருக்கிறது என்றும், சீனாவின் பொருளாதாரத்தை குலைக்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியிருக்கிறது என்றும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமாம். மெய்யாகவே, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைச் சிக்கலில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருக்கிறது என்றால், இந்தியாவுக்கான சீனத் தூதரை அழைத்து கண்டிக்கலாம், சீனாவுக்கான இந்தியத் தூதரை … எல்லைச் சிக்கலின் முரண்பாடுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?
கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு இரட்டிப்பாகி இருக்கிறது. ஊரடங்கு அறிவித்து 40 நாட்களைக் கடந்து விட்ட நிலையில், இப்போதுதான் சோதனைகளை அதிகரித்திருக்கிறது தமிழக அரசு. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும். இதனால்தான் சென்னையில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் உண்மை வெளியாகி வருகிறது. சமூகப் பரவல் என்ற கட்டத்தை தமிழகம் எட்டி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் பலரும் மீடியாக்களில் வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல பிற மாவட்டப் பகுதிகளில் தீவிர பரிசோதனைகள் இன்னமும் தொடங்கப்படவே … கொரோனா: தொற்று பரப்புவது அரசா? மக்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.