வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. ..   .. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் … வெகுஜனங்களிடையே கட்சியின் பணி-ஐ படிப்பதைத் தொடரவும்.

வலிக்கிறது தம்பீ

துபாய் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்து வந்த என் தம்பி சிந்தா மதார் கடந்த ஜூலை 11 திங்கட் கிழமை மாலையில் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று துபாய் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. சரியாகச் சொன்னால் மரணமடைந்த பிறகு ஏழு நாட்கள் கடந்து எட்டாவது நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் மரண அறிக்கை போதிய விவரங்களின்றி இதயம் செயலிழந்ததால் மரணம் நேர்ந்திருக்கிறது என பொதுவாக குறிப்பிடுகிறது. எங்களுக்கு தெரியவந்த … வலிக்கிறது தம்பீ-ஐ படிப்பதைத் தொடரவும்.

வீடு மாற்றும் சடங்கு

சடங்கு எனும் சொல்லுக்கும் வழமை எனும் சொல்லுக்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. இயல்பாக ஒரு செயலை மீண்டும் மீண்டும் செயல்படுத்த நேர்வதை வழமை என்று குறிப்பிடுகிறோம். சடங்கு எனும் போது அதில் ஒரு திணிப்பு ஏற்றப்படுகிறது. மதம் அல்லது வேறு ஏதோ ஒரு நம்பிக்கை சார்ந்த கட்டாயத்தினால் திரும்பத் திரும்ப செயல்படுத்த நேர்வதை சடங்கு எனக் குறிப்பிடலாம். ஆனால், கருத்து முதல் வாதம் சார்ந்த சடங்குகளில் இருக்கும் ஈர்ப்பு, வேறு வகைகளினால் ஏற்படும் சடங்குகளில் இருப்பதில்லை. … வீடு மாற்றும் சடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

நான் ஒரு பெண்

இந்த சமூகம் மிக நீண்ட காலமாக ஆணாதிக்க சமூகமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களும் ஆணாதிக்கத்திலேயே வேர் பிடித்து நிற்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பெண்ணியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வோரில் சிலர் பெண்ணியம் எனும் சொல்லையே கேலிக்குறியதாக்க்கி, ஆணின் பலதார வேட்கைக்கு பெண்ணை ஆயத்தப்படுத்துவதே பெண்ணியத்தின் உள்ளீடு என விளம்பித் திரிகின்றனர். இந்தப் போக்கிலிருந்து சமூகத்தை திசை மாற்றுவது என்பது இடையறாதும், உறுதியோடும், சமரசமின்றியும் செய்யப்பட வேண்டியதாகும். அதற்கு இந்த … நான் ஒரு பெண்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்களின் அந்தரங்கம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறுசில பள்ளிகளில் இதே குற்றச்சாட்டுகளால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகளின் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான மட்டுமீறல் என்பது இயல்பாகவே நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் வெளியில் தெரியவருவது மட்டும் ஒரு நாளுக்கு … பெண்களின் அந்தரங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை

பத்மா சேசாத்திரி பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் இவ்வாறான கொடுமைகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டே இருக்கின்றன. சில வெளியில் தெரிகிறது, பல தெரியாமல் மறைக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மட்டுமோ, அல்லது பள்ளிகளில் மட்டுமோ அல்ல, சமூகம் முழுவதுமே பெண்ணை தனக்கு கீழானவளாக, பாலியல் பண்டமாக, ஆணாதிக்கத்துடன் பார்க்கும் பார்வை நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த ஆணாதிக்கப் போக்கு சமூகத்தில் இருக்கும் வரை இது போன்ற … இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்ஸின்றி அமையாது உலகு

தெளிவான விஞ்ஞானபூர்வமான பொருள் புரிதலின்றிச் சமூக நீதி குறித்து மொந்தையாகப் பொதுப்பட பேசுவது என்பது இன்றைக்கு ஒரு நாகரீகமாகிவிட்டது.  சமூகச் சமத்தன்மை மற்றும் சமூக நீதி என்பது எப்போதும் மனிதர்களின் பெருமுயற்சியின் விளைவாக இருக்கிறது. தாங்கள் படும் துன்பங்களுக்குத் தீர்வு காண மனிதர்கள் உலகியல் வழியில் போராடவும் வானத்துத் தேவர்களிடம் வேண்டவும் செய்கிறார்கள். சமூக வரலாறு நெடுக அநீதிகளும், சமத்துவமின்மையும் பெரிதும் காணப்படுகின்றன. இன்று முரண்பாடுகள் முற்றி நிலைமையை மோசமாக்க, குறிப்பாக நமது தேசத்தில், சமூக நீதி … மார்க்ஸின்றி அமையாது உலகு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!

பலநூறு அரசுகளாக சிதறிக்கிடந்த இத்துணைக் கண்டத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலைமையில் பிரிட்டானியர்கள் ’இந்தியா’ என்று, தனது துப்பாக்கி முனையால் ஒருங்கிணைத்தார்கள். அது நாள் வரை இந்துக்கள் என்றழைக்கப்படும் நால்வர்ணத்தாரில் பார்ப்பனர்கள் வட இந்தியப் பகுதிகளில் தனது பார்ப்பனிய சித்தாந்தத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி தலைமை சக்தியாக திகழ்ந்து வந்தனர். தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடம், தமது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஆட்சியாளர்கள் மூலம் நிலை நாட்டியிருந்தனர். ஆனாலும் சித்தாந்த மற்றும் அரசியல் தலைமை சக்தியாக … இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கலையும் இலக்கியமும்

கலையும் இலக்கியமும் யாருக்கானது? எனும் கேள்வி கலை, இலக்கியத்தைப் போலவே பழமை வாய்ந்தது. அதேநேரம் மிகக் குழப்பமாகவும், நீர்த்துப் போன தன்மையிலும், தெளிவாகச் சொன்னால் அந்தக் கேள்வியின் உட்கிடையை இல்லாமல் ஆக்குவதாகவே அந்தக் கேள்விக்கான பதில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. என்றால் அந்தக் கேள்விக்கான சரியான, பொருத்தமான பதில் என்ன? இன்றைய சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. மக்கள் நிலையிலிருந்து கூட அல்ல, அவர்களே சொல்லிக் கொள்ளும் நடு நிலைமையிலிருந்து கூட அல்ல, அரசுக்கு ஆதரவான, வலதுசாரி நிலையிலிருந்து … கலையும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?

குறிப்பு 1 : சினிமாவில் அடிக்கடி நாம் பார்க்கும் விஷயம் facial recognizition. அதுவும் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விவேகம் மாதிரியான டெக்னாலஜி த்ரில்லர் படங்களில் அதிகம் பார்த்திருப்போம். சிசிடிவி ஃபுட்டேஜில் ஒருவரின் முகத்தை ஃப்ரீஸ் செய்து, அதை கணினியில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களின் டேட்டாபேஸில் பொருத்திப் பார்ப்பார்கள். சில விநாடிகளில், இவர்தான் அவர் என கணிணி குற்றவாளியைக் கண்டுபிடித்துவிடும். இந்த முறையில் கடந்த 15 ஆண்டுகளாக உலகில் பல்வேறு நபர்களைக் கைது செய்து நீதியை நிலைநாட்டி … டெக்னிக்கல் பிழைகளின் சோதனை எலிகளா நாம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.