அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவை என்ன? நாம் … அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சவால்
இஸ்லாம்: விவாத நேர்மை
விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி
மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம். இவை அனைத்தும் சுவனப்பிரியனிடம் ஒருங்கே குடி கொண்டிருக்கின்றன. இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்? அதிலிருந்து … சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫
இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௫ குரானின் சவாலுக்கு பதில் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு "குரானுக்கு சவாலுக்கு பதில்" எனும் கட்டுரையில் குரானில் பயன்படுத்தப்படும் அடைப்புக்குறிகளின் இலக்கு, குரானில் இருக்கும் ஒரு முரண்பாடு, குரானின் வசனங்களுக்கு நிகராக ஒரு குறள் என்று மூன்று குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்றையுமே நண்பர் மறுத்திருக்கிறார். அவைகளைப் பார்ப்போம். குரானில் இடம்பெற்றிருக்கும் அடைப்புக்குறிகள் மொழிபெயர்ப்புச் சிக்கல்களை தீர்ப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்கிறார். அப்படித்தான் சொல்லப்படுகிறது. ஆனால் அவை அதற்கானவையல்ல என்பதற்கு … செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் ௫-ஐ படிப்பதைத் தொடரவும்.