முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?

இந்தியாவின் கொடுங்கோன்மையாக இருக்கும் சாதிப் பிரிவுகளாகட்டும், அதன் வழியிலான தீண்டாமையாகட்டும், ஆணவக் கொலை உள்ளிட்டவைகளாகட்டும், அனைத்துக்கும் தொடக்கப் புள்ளியாய் இருப்பது தான் இந்து எனும் உணர்வு. இந்து என்பது ஒரு மதமல்ல, பிறமதங்களுக்கு இருப்பது போன்ற வரலாறு இந்து மதத்துக்கு கிடையாது. வரலாறு பார்த்தால் இந்து எனும் மதமே கிடையாது. இந்து எனும் மதத்தின் விழுமியங்களாக இன்று கருதப்படும் அனைத்துக்கும் நேர் எதிராக முன்னர் இருந்திருக்கிறது என்பது தான் வரலாறு கூறும் உண்மை. அதன் ஒரு பகுதி … முருகக் கடவுளை மதம் மாற்றியது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?

சாதியப் பிரச்சனைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கரும் போதாது, மார்க்ஸ் அவசியத் தேவை எனும் நூல், ரங்கநாயகம்மா என்பவர் எழுதி கொற்றவை தமிழில் மொழி பெயர்த்து அண்மையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் மீதான விமர்சனம் எனும் பெயரில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிநிரல்கள் வரிசையாக வலம் வந்து கொண்டிருக்கிறதோ என்று ஐயுறும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அம்பேத்கர் மீதான விமர்சனம் மெல்ல மார்க்ஸுடனான ஒப்பீடாக மாறியது. பின் அம்பேத்கரா மார்க்ஸா என்று உருவெடுத்தது. தொடர்ந்து அது … அம்பேத்கர், குஹா, தமிழ் இந்து, சாதியம்: ஏதாவது புரிகிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.