சாத்திர, சம்பிரதாயங்கள் யாருக்காக?

தீண்டாமைக் கொடூரங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பொதுப்புத்தியோ, “இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?” என்றிருக்கிறது. அண்மையில் மனு சுமிரிதி குறித்து சச்சரவு எழுந்த போது அதே பொதுப்புத்தி, “மனு சுமிரிதி பழம் பஞ்சாங்கம் சார். யாரும் இப்ப அதெல்லாம் படிக்கிறதும் இல்லை, அதன்படி நடக்குறதும் இல்லை” என்று குழைகிறது. ஆனால் மக்களின் வாழ்வில் அவை எப்படி நுழைத்து சிந்தையை கைப்பற்றுகின்றன என விளக்குகிறார், பேரா. கருணானந்தன்.