இணையத்தால் என்ன சாதிக்கலாம்? #tnfisherman

இணைய தளம் டுவிட்டர் ஃபேஸ்புக் கடந்த சில நாட்களாகவே டுவிட்டர் பொங்கி குமுறிக் கொண்டிருக்கிறது, ப‌ல பத்தாயிரம் டுவிட்டுகளைக் கடந்துகொண்டிருக்கிறது. சற்றேறக்குறைய அனைத்து தமிழ் பதிவர்களும் சளைக்காமல் டுவிட்டர் தகவல்களை அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். தமிழ் இணைய உலகம் ஒருமுகமாக ஒன்றிணைந்து அரசுகளை எதிர்த்து குரல் கொடுப்பது இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன். மட்டுமல்லாது இணையப்பயன்பாடு இல்லாதவர்களுக்கும் கூட இது சென்று சேர்ந்து ஒரு அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இணையத்தால் என்ன சாதிக்கலாம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. … இணையத்தால் என்ன சாதிக்கலாம்? #tnfisherman-ஐ படிப்பதைத் தொடரவும்.

யானையை பார்த்த குருடன் போல் ஈழத்தைப்பார்க்கும் மூடங்கள்.

       உடனடி இட்லி, திடீர் சட்னி போல திடீர் உண்ணாவிரதம் இந்திய அரசியல் வட்டங்களை பரபரப்படையச்செய்தது. அல்லது, பரபரப்படைந்ததாக காட்டப்பட்டது. முதல்வர் கலைஞர் அதிகாலையில் அண்ணா சமாதியில் போய் அமர்ந்து கொண்டு "நான் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதமிருக்கிறேன். அவர்களுக்காக உயிரைக்கொடுக்கிறேன்". என்றெல்லாம் வசனம் பேசியதும், சோனியா காந்தி, மன்மோகன் போன்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை கைவிட வேண்டினர். தூதர்களை அனுப்பிவைத்தனர்.  தேர்தல்கால நெருக்கடியின் நிர்ப்பந்தத்தாலும், தேவையாலும் ஒரு மாற்று ஏற்பாடாக தற்காலிக போர் … யானையை பார்த்த குருடன் போல் ஈழத்தைப்பார்க்கும் மூடங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.