மக்களியம். பகுதி - 3 நாம் ஏன் இயற்கை, அறிதல், அறிவு, அறிவியல், சமூகம், தத்துவம் இவைகளை தெரிந்து கொள்ள வேண்டும்? ஏனென்றால் இதன் வழியாகத் தான் நாம் வளந்து வந்தோம். நாம் வளர்ந்து வந்த, கடந்து வந்த வழியில் ஏதோ பிழை இருக்கிறது என்பதையும், ஏதோ ஒரு விதத்தில் புரிந்து வைத்திருக்கிறோம். ஏதோ ஒரு விதத்தில் தான் அது பிழை என புரிந்து வைத்திருக்கிறோமே அல்லாது துல்லியமான விதத்தில் அந்தப் பிழையை நாம் புரிந்து கொண்டிருக்கவில்லை. … தத்துவம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சிந்தனை
பெருவெளியின் தூசு
பெருவெளியின் விரிவில் ஒரு தூசில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசு நான். பெருங்கடலின் பரப்பில் மழையின் இடையே பறந்து கொண்டிருக்கும் ஒரு கொசு நான். மலர்த் தோட்டத்தின் அண்மையில் கோடி மலர்களின் மணங்களூடே ஒற்றை மலரில் நிறைந்து போகும் ஒரு தேனீ நான். என்னை நான் எப்படிப் பார்ப்பது? எப்படிப் பார்க்க நான் அனுமதிப்பது? பேரண்டத்தின் நுணுக்கமே ஆனாலும் என் அடைவுக்கும் பொருள் உண்டென்று அறிவித்து விடட்டுமா? துளிகளிடையே புகுந்து பறந்தாலும் நனைந்து விட்டால் தலை துவட்டுங்களென்று கோரிக்கை … பெருவெளியின் தூசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3
நண்பர் விவேக், உங்களின் பல பின்னூட்டங்களுக்குப் பிறகு தாமதமாக பதிலளிக்க நேர்வதற்கு வருந்துகிறேன். எழுதுவதை விட வேறு அலுவல்களுக்கு முதன்மை அளிக்க வேண்டிய தேவை இருப்பதால் தவிர்க்க இயலவில்லை. உங்களின் பல பின்னூட்டங்களின் கருத்தை தொகுத்தால் அது அறிவியல் குறித்தும் தத்துவம் குறித்துமான குழப்பத்துக்கே இட்டுச் செல்கிறது. தத்துவம் என்பதை அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக புரிந்து கொள்வதில் இருந்து தான் மேடா பிசிக்சின் அடிப்படை தொடங்குகிறது. நீங்கள் கூறும் விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை என்ன அடிப்படையின் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
காக்கையும் கடவுளும்
பகுத்தறிவு, சிந்தனை என்பன போன்ற சிக்கலான செயல்களெல்லாம் மனிதனுக்கு கடவுள் தந்த கொடை. எத்தனை கோடி ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதனைப்போல் விலங்குகளால் சிந்திக்க முடியவில்லையே ஏன்? மனிதனின் இருப்பு சில லட்சம் ஆண்டுகள் தான் ஆனால் டினோசரஸ் போன்றவைகள் 300 கோடி ஆண்டுகள் பூமியில் இருந்தன. ஆனால் அவைகளால் சிந்தனைத்திறன் பெறமுடியவில்லை. என்றெல்லாம் கடவுட்கோட்பாட்டுவாதிகள் கேள்விகள் எழுப்புவதுண்டு. எத்தனை முறை அவற்றிற்கு அறிவியல் ரீதியில் விடையளித்தாலும், மீண்டும் மீண்டும் புறியாததுபோல் அதேகேள்வியை வேறு சொற்களில் கேட்டுக்கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு, … காக்கையும் கடவுளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.