எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சினிமா
எந்தப் பொன்மகள் வரவேண்டும்?
பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார். இது ஒரு வகையில் புதிய … எந்தப் பொன்மகள் வரவேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து
வழக்கமான ரஜினி பட அலம்பல்களைத் தாண்டி கபாலி எனும் புதிய படம் வேறொரு தளத்தில் ஆதரிக்கவும், எதிர்க்கவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் திரை உலகைப் பொருத்தவரை பல்வேறு விதங்களில் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. தொழில்நுட்பத்தை முதன்மையானதாக வைத்து, கலைஞர்களின் நடிப்புத்திறனை முதனமையானதாக வைத்து, கதையை, திரைக்கதையை, ஒளிப்பதிவை, இசையை, இயக்குனரை என பல அம்சங்களை முன்வைத்து திரைப்படங்கள் விமர்சிக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் கபாலி தாண்டியிருக்கிறது. ஒருவேளை இதுவும் கூட சாதனை தானோ, என்னவோ. பொதுவாக கலை என்பது, … கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?
‘டிராஃபிக்’ என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தின் மறுதயாரிப்பு ‘சென்னையில் ஒரு நாள்’ என்ற பெயரில் வெளிவந்து பரவலான கவனிப்பையும், இணைய உலகில் சமூக அக்கரையுள்ள படம் எனும் அடையையும் பெற்றிருக்கிறது. இந்தப் படத்திற்கு இணையப் பரப்பில் செய்யப்படும் விமர்சனங்களைப் படித்தபோது மறைந்த நாகேஷ் பேசிய ஒரு வசனம் தான் நினைவுக்கு வந்தது. “உடம்பை விட்டு விட்டு உயிரை மட்டும் தனியே உருவி எடுத்து விட்டாயே, எப்படி?” என்று ஏதோ ஒரு படத்தில் பேசியிருப்பார். அதேபோல் … சென்னையில் ஒரு நாள்: இப்படி ஒரு நாள் தேவையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்
மற்றொரு முறை நாட்டில் தேசபக்தி பொங்கி வழிந்தோடுகிறது. எல்லா ஓட்டுக்கட்சிகளும் இது குறித்து பேசுகின்றன. பாகிஸ்தானின் அட்டகாசம் எல்லை மீறிவிட்டதாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்த குரலில் சொல்கிறார்கள். இது கடினமான நேரம், பாகிஸ்தானுடனான உறவுகளை பரிசீலிக்கிறோம், அனைத்து சமாதான முயற்சிகளையும் நிருத்தி வைத்திருக்கிறோம் என்கிறது காங்கிரஸ். கார்கில் போல் இன்னொரு போரை நடத்தி பாகிஸ்தானை ஒடுக்குங்கள் என்பதோடு மட்டுமல்லாது ஆங்காங்கே சில போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது பாஜக. இராணுவ வீரரின் தலையை … தடியால் கனிய வைக்கப்படும் தேசபக்தி பழம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!
மதுரவாயல் ஏரிக்கரை பகுதியில் நேற்று (25.8.12) ஒருவர் கொலை செய்து வீசப்பட்டுயிருந்தார்.விசாரணைக்காக போலீசு வந்தது. கொலை சம்பவம் என்பதால் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் வேடிக்கை பார்த்த பகுதி இளைஞர்களை குறிவைத்த போலீசு அவர்களைத் தூக்க முடிவு செய்தது. வழக்கமாக குற்றவாளிகள் கிடைக்காமல் இப்படி அப்பாவிகள் மீது வழக்கு போடுவது போலீசின் உத்தி. அருகில் நின்று கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி தோழர்கள் திவாகரும், குமரேசனும் மாணவர்களுக்கே உரிய துணிவோடு கொலையில் … மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
வரட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வரட்டுத்தனம்
சில நாட்களுக்கு முன் சிறகுகள் வலைப்பக்கத்தை நடத்துபவர்களில் ஒருவரான நண்பர் முகம்மது ரஃபி கேள்வி ஒன்றை மின்னஞ்சலில் கேட்டிருந்தார். அதற்கு பதில் எழுதிவிட்டு பார்த்தால் சற்று நீளமாக இருந்தது. எனவே, அதை இன்னும் சற்று விரிவுபடுத்தி பதிவாக இட்டால் என்ன எனும் எண்ணமே இந்த பதிவு. மட்டுமல்லாது, வழக்கமாக கேள்வி பதில் பகுதியில் கேள்விகளை கேட்கும் அவர் எனக்கு ஏதும் சங்கடம் நேரக் கூடும் எனும் எண்ணத்தில் இந்த முறை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கலாம் எனகருதுகிறேன். அவ்வாறான தயக்கமோ, … வரட்டுத்தனம் என்று கூறப்படுவதிலுள்ள வரட்டுத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?
இன்றைய பொழுதுகளில் ஒரு திரைப்படத்தின் முதன்மையான கணம், அதற்கு செலவு செய்யப்படும் தொகையும், அது மடைமாற்றித் தரப்போகும் தொகையும் தான். கலை, சமூக விழிப்புணர்வு, பொழுதுபோக்கு உள்ளிட்ட ஏனைய பிறவெல்லாம் பின்னர் தான். இந்த வகையில் எல்லாவற்றையும் விட ஒரு திரைப்படத்திற்கு பார்வையாளர்களை ஈர்ப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. இதற்கு பலவாறான உத்திகள் ஒவ்வொரு திரைப்படத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழாம் அறிவில் இதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்தி தமிழர் பெருமை, தமிழ் தேசியம். கிபி ஆறாம் நூற்றாண்டில் … ஏழாம் அறிவா? ஏய்க்கும் அறிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!
சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து. பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது … உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.
சினிமா: திரை விலகும் போது
தமிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின் பால் கொண்டிருகும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது. 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக்கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்டது. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு தின, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலகக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் - சமூகச் செய்திகளைச் சினிமா … சினிமா: திரை விலகும் போது-ஐ படிப்பதைத் தொடரவும்.