தேசப் பாதுகாப்புச் சட்டம் (NSA), குண்டர் சட்டம் உள்ளிட்ட தடுப்புக் காவல் சட்டங்களுக்கான அறிவுரைக் கழகத்தில் (Advisory Board) நேர்நின்று வாதிடுவது எனக்குப் புதிதன்று. நேற்று கறுப்பர் கூட்டம் தோழர்கள் நாத்திகன் சுரேந்திரனுக்காகவும், செந்தில்வாசனுக்காகவும் வாதிடச் சென்றேன். அவர்களைப் புழல் சிறையிலிருந்து அழைத்து வருவார்கள் என்று வழக்கறிஞர் துரை அருண் சொல்லியிருந்தார். ஆனால் கொரோனா அச்சத்தைக் காட்டி அவர்களைக் கொண்டுவரவில்லை. காணொலி வாயிலாக அவர்கள் முறையிட்டிருக்கக் கூடும். சிறையில் அவர்களிடம் கடுமையான கெடுபிடி காட்டப்படுவதாகத் தெரிந்து கொண்டேன். … கறுப்பர் கூட்டமும் குண்டர் சட்டமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: சிறை
பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?
நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?
சுவாதி கொலை வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். மூன்று நாட்களுக்குப் முன்பு, கார்த்திக் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக அவரின் பெற்றோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து சரிக்கட்ட முயற்சித்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த வாரத்தில் நிகழ்ந்த இவை வெறும் தகவல்கள் அல்ல. மக்கள் மீது காவல்துறை கொண்டிருக்கும் மதிப்பீடு. காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற … ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்
தி.மு.க ஆட்சியின் நிறைவுக்காலம். பல்வேறு இலவசத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்திருக்கிறார்கள், ஆட்சியின் மீது பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு என்று ஒன்றுமில்லை, விலை வாசி உயர்வு, மின்சாரத்தட்டுப்பாடு ஆகியவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் டிசம்பரில் தேர்தலை நடத்தத் திட்டமிடுவதால் அப்போது மின் தட்டுப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்காது என்றும், விலைவாசி உயர்வு பிரச்சனையை பணபலம் சமாளிக்கும் என்றும், காங்கிரசுடன் கூட்டணி, பாமக சேரும் எனும் நம்பிக்கை இவற்றோடு அதிமுக விலிருந்து தொடர்ந்து தாவல்கள் நடைபெறுவது என்று எல்லாவற்றையும் … ஊழலை வெளிக்காட்டியவர்கள் வேட்டையாடப் படுகிறார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.