அண்மையில் இந்திய ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழுந்தன. இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி என்றன, அதாவது இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர் என்றன. போராட்டம் என்றாலே முகஞ்சுழிக்கும்; வாழ்வின் அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்கும் கணவான்களெல்லாம் மெழுகுதிரி ஏந்தி ஊழலுக்கு எதிரான தங்கள் பங்களிப்பை செய்தார்கள். இத்தனைக்கும் தொடக்கம் கதர் குல்லா அணிந்து காட்சியளிக்கும் அன்னா ஹசாரே. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சட்ட வரைவு நாடாளுமன்ற பரணில் முடங்கிக் கிடக்கிறது. உயர் பதவியில் … அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.